விமலாதித்த மாமல்லன்

தமிழ் எழுத்தாளர்

விமலாதித்த மாமல்லன் (Vimaladhitha Maamallan) (பி. ஜூன் 19, 1960) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், குறுநாவல்கள், இலக்கிய விமர்சனம் என இதுவரை 6 அச்சு நூல்களும் 70க்கும் மேற்பட்ட மின்னூல்களும் வெளியாகியுள்ளன. மத்திய கலால், சரக்கு மற்றும் சேவைத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர் சென்னையில் வசிக்கிறார்.

விமலாதித்த மாமல்லன்

பிறப்பு நரசிம்மன்
19 ஜூன் 1960

(அகவை 61)
சென்னை

தொழில் தமிழ் எழுத்தாளர்
இனம் கன்னடம் - மராத்தி

(தாய் - தந்தை)

நாட்டுரிமை இந்தியா
கல்வி நிலையம் பச்சையப்பன் கல்லூரி
எழுதிய காலம் 1980-தற்காலம்
இலக்கிய வகை சிறுகதை, நெடுங்கதை, குறுநாவல், இலக்கிய விமர்சனம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
விமலாதித்த மாமல்லன் கதைகள், தவிப்பு, புனைவு எனும் புதிர்
துணைவர்(கள்) உமா நரசிம்மன்
பெற்றோர் சி. கே. சக்ரபாணி ராவ்

- சேது பாய்

maamallan.in

வாழ்க்கைக் குறிப்புதொகு

சி. நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராட்டியத் தாய் தந்தையருக்கு, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். பள்ளிப்பருவம் பாண்டிச்சேரியில். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனினும் பட்டதாரி அல்லர். கல்லூரி இறுதி ஆண்டுகளில் நவீன நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இந்தக் காலகட்டத்தில் நவீனத் தமிழ் இலக்கியச் சூழல் பரிச்சயப்பட, சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 1982-83ல் பரந்த அனுபவம் தேடிக் காவியுடுத்தித் தேசாந்திரம் புறப்பட்டவர், இரண்டு முறையும் பாதியிலேயே திரும்ப நேர்ந்தது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சமூக சேவகரான பாபா ஆம்தே தலைமையில், நிட் இந்தியா இயக்கத்தில் (KNIT-INDIA MOVEMENT) பங்கேற்றார். 1985 டிசம்பர் முதல் 1986 ஏப்ரல் வரை கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு, ஏறக்குறைய 5100 கிமீ சைக்கிளில் பயணம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2013 முதல் 2018 வரை சென்னை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை துறையில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து 2020ல் ஓய்வு பெற்றார்.

எழுத்து வாழ்க்கைதொகு

விமலாதித்த மாமல்லனின் எழுத்துலக அறிமுகம் 1981ல் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் ‘வலி’ கதை மூலம் ஆனது. அதே ஆண்டில் கணையாழியில் வெளியான ’இலை’ மற்றும் ’பெரியவர்கள்’ குறுநாவல் வழியே தமிழ் இலக்கியச் சூழலின் பரவலான கவனத்திற்கு வந்தார்.

இடையில் பல ஆண்டுகளாக எழுதாமல் இருந்த மாமல்லன் வலைதளம் துவக்கி இணையத்தில் எழுத ஆரம்பித்தபோது தொடர்ச்சியாகப் பல சர்ச்சைகளில் ஈடுபட்டார். பிரபல எழுத்தாளர்களான ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, மனுஷ்யபுத்திரன் ஆகியோரை கடுமையாக விமர்சித்து கட்டுரைகள் எழுதினார். பதிப்பாளரான மனுஷ்யபுத்திரனுடனும் ராயல்டி தொடர்பான உக்கிரமான மோதலை மேற்கொண்டார். காலச்சுவடு கண்ணனுடன் மின்னூல் உரிமை ஆசிரியருக்கே உரிதானது என்கிற உரிமை மோதலில் ஈடுபட்டார். அமேஸான் கிண்டிலில் மின்னூல் வெளியிடுவது பற்றி ஒரு மின்னூலையும் எழுதி வெளியிட்டார். வாசகர்களின் உதவியுடன் நிறைய எழுத்தாளர்களில் அச்சு நூல்களை மின்னூலாக்கி அமேஸான் கிண்டிலில் வெளியிட வகை செய்தார். அதன் விளைவாக கிண்டில் நேரடி பதிப்பில் ஏராளமான எழுத்தாளர்களின் மின்னூல்கள் இடம்பெற ஆரம்பித்தன.

விமர்சனம்தொகு

மிகக் கவனமாகக் கதைகளை உருவாக்குபவர் விமலாதித்த மாமல்லன். சிறுகதைக்கே உரித்தான தனித்தன்மையின் மரபில் ஊட்டம் பெற்றவர். வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியாத ஜீவன்களின் பரிதவிப்பு இவரது கதைகளின் மையம். - சுந்தர ராமசாமி (1985 - கலைகள், கதைகள், சிறுகதைகள் - ஆளுமைகள் மதிப்பீடுகள்)

நவீன சிறுகதையில், ஆணாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட, பாவப்பட்ட பெண்கள் துலக்கமாகத் தோன்றுவது இவர் கதைகளில்தான் என்று கூடச் சொல்லலாம். - விக்ரமாதித்யன் (தன்மை, படர்க்கை, முன்னிலை புத்தகத்தில்)

இவர் எடுத்துக் கொண்டுள்ள கருவெல்லாம் பெரும்பாலும் மனிதத்தின் வீழ்ச்சியை விவரித்து வாசகனையே இதற்கான முடிவுகளை கேட்கிறது. - ஆத்மாநாம் மீட்சி சிற்றிதழில்.[1]

சிறுகதை நூல்கள்தொகு

 1. அறியாத முகங்கள் (1983 - சத்ரபதி வெளியீடு)
 2. முடவன் வளர்த்த வெள்ளைப் புறாக்கள் (1986 - சத்ரபதி வெளியீடு)
 3. உயிர்த்தெழுதல் (1994 - சத்ரபதி வெளியீடு)
 4. விமலாதித்த மாமல்லன் கதைகள் (2010 உயிர்மை, 2017 - சத்ரபதி வெளியீடு)
 5. தவிப்பு (2017 - டிஸ்கவரி பேலஸ், 2018 சத்ரபதி வெளியீடு)

கட்டுரை நூல்கள்தொகு

 • சின்மயி விவகாரம் - மறுபக்கத்தின் குரல் (2012 - சத்ரபதி வெளியீடு)

இலக்கிய விமர்சன நூல்கள்தொகு

 1. புனைவு எனும் புதிர் (2017 - காலச்சுவடு, 2017 சத்ரபதி வெளியீடு)
 2. புனைவு எனும் புதிர் - ஷோபாசக்தியின் 12 கதைகள் (2018 - சத்ரபதி வெளியீடு)
 3. எழுத்துக் கலை (2019 - சத்ரபதி வெளியீடு)

அமேஸான் கிண்டில் மின்னூல்கள்தொகு

 • அமேஸானில் இ-புத்தகம் வெளியிடுவது எப்படி

கதைகள்தொகு

 1. விமலாதித்த மாமல்லன் கதைகள்
 2. தவிப்பு (சிறுகதைத் தொகுப்பு)
 3. ரோஸ்மில்க் - சிறுகதை: சக்கரம் நாவலின் ஒரு அத்தியாயம்
 4. அமன்: சிறுகதை (2020)
 5. மறைவு: சிறுகதை (2020)
 6. வலி கதையும் - அது கல்கியில் வெளியான கதையும்
 7. குல்லா கதையும் - அது குமுதம் குங்குமத்தில் வெளிவராமல் போன கதையும்

ரசனைதொகு

 1. புனைவு என்னும் புதிர்
 2. புனைவு என்னும் புதிர் – ஷோபாசக்தியின் 12 கதைகள்
 3. எழுத்துக் கலை
 4. புனைவு என்னும் புதிர் - புரிதலுக்கான சிறு வெளிச்சம்
 5. புனைவு என்னும் புதிர்: நூல் - 2
 6. காஞ்சனையின் பரிகாஸம்
 7. மொக்கு அவிழும் தருணம்
 8. நீரில் மிதக்கும் நிலவு

கடிதங்கள்தொகு

 • அன்பான சுந்தர ராமசாமிக்கு: கடிதங்கள்

கிண்டிலுக்குக் கொண்டுவந்தவைதொகு

 1. கவனம் - முழுத்தொகுப்பு
 2. ழ - முழுத்தொகுப்பு
 3. மொழிபெயர்ப்புக் கதைகள் (I - VIII) - ஆர். சிவகுமார்
 4. மீட்சி இதழ்கள்
 5. கவிஞர் விக்ரமாதித்யன் நூல்கள்
 6. கசடதபற இதழ்கள்

அனுபவங்கள்தொகு

 • நானும் நானறிந்த ஜேகேவும் அமியும்

இலக்கிய விமர்சனம் – ஜெயமோகன்தொகு

 1. ஜெயமோகனின் மாடன் மோட்சம் சிகரமா தகரமா
 2. ஜெயமோகனின் படுகை
 3. ஜெயமோகன் குழுமத்தில் விட்ட குமிழிகள்
 4. ஜெயமோகன் என்கிற பிறவி மொக்கை
 5. ஜெயமோகனின் கோத்திரம் என்ன?
 6. அயோக்கியத்தனமே ஜெயமோகனின் அறம்
 7. பின்தொடரும் நிழலின் குரலின் முன்னால் சென்ற உருவம்

இலக்கிய விமர்சனம் – சாரு நிவேதிதாதொகு

 1. என் வேலையும் சாருவின் லீலையும்
 2. பிணவறைக் காப்பாளன் - போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்
 3. சாரு எஸ்.ரா ஜெமோ பிறகொரு கொசு
 4. சாருவின் பாகவதர் பஜனை
 5. சுயகெளரவம்: சாட்டும் நோட்டும்

விமர்சனம் - மனுஷ்ய புத்திரன்தொகு

 1. ராயல்டி திருடன்
 2. கைய நீட்டு

இலக்கியத் திருட்டுதொகு

 • வைரமுத்துவின் திருட்டாற்றுப்படை: தேவராட்டமும் தலித்தாட்டமும்

உரிமைக்கான குரல்தொகு

 1. வெசா - சுரா மோதல்: கண்ணன் விட்ட வக்கீல் நோட்டீஸ்

சமூகநீதிதொகு

 1. சின்மயி விவகாரம் – மறுபக்கத்தின் குரல்
 2. ஓலா
 3. ஓலாவின் தூள் பக்கோடா

பொதுதொகு

 1. எமூர்
 2. எழுத்தும் பிழைப்பும்
 3. முகமும் நகமும்
 4. அது வேறு இது வேறு: கட்டுரைகளும் நடைச்சித்திரமும்
 5. நூறு செருப்படிகள்
 6. டிரைவ் இன் நண்பர்கள்
 7. அக்கப்போர்
 8. எலிகளின் பந்தயம்
 9. புத்தகக் கண்காட்சி 2020

சச்சரவுகள்தொகு

 1. ஷோபாசக்தியின் கப்டனுக்காக இலக்கிய சிப்பாய் போட்ட சண்டை
 2. எழுத்துக்கு இறப்பில்லை எழுத்தாளன் இறப்பதில்லை
 3. தொப்புள் திமுகவும் தொமுசி ரகுநாதனும்
 4. வாசகசாலை அருண் - ரேணு சதீஷ் : இணைந்து வழங்கும் 420

சமூக வலைத்தளம்தொகு

 1. என் குரல்: 2010 ட்விட்டுகள்
 2. என் குரல்: 2011 ட்விட்டுகள்
 3. என் குரல்: 2012 ட்விட்டுகள்
 4. என் குரல்: 2013 ட்விட்டுகள்
 5. என் குரல்: 2014 ட்விட்டுகள்
 6. என் குரல்: 2015 ட்விட்டுகள்
 7. என் குரல்: 2016 ட்விட்டுகள்
 8. என் குரல்: 2017 ட்விட்டுகள்
 9. என் குரல்: 2018 ட்விட்டுகள்
 10. என் குரல்: 2019 ட்விட்டுகள்

பேஸ்புக் பதிவுகள்தொகு

 1. பேட்டை பிஸ்தா
 2. குறிப்புகளும் தெறிப்புகளும்:பதிவுகள்- 1

திரைக்கதைதொகு

 • கி. ராவின் நிலை நிறுத்தல் – திரைக்கதை

சினிமாதொகு

 1. கிகுஜிரோ நந்தலாலா
 2. சென்னை உலகத் திரைப்படவிழா 2010
 3. சென்னை உலகத் திரைப்பட விழா 2011
 4. சென்னை உலகத் திரைப்படவிழா 2017
 5. கோவா உலகத் திரைப்படவிழா 2018
 6. கோவா உலகத் திரைப்படவிழா 2019

வெளி இணைப்புகள்தொகு

விமலாதித்த மாமல்லனின் சிறுகதைகள் (பற்றி..)-ஆத்மாநாம் (மீட்சி சிற்றிதழ்)

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விமலாதித்த_மாமல்லன்&oldid=3310086" இருந்து மீள்விக்கப்பட்டது