விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் (பிறப்பு: செப்டம்பர் 25, 1947) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். திருநெல்வேலி நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் குற்றாலம், தென்காசி, சென்னை மேற்கு மாம்பலம், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் ஆகிய இடங்களிலும் வாழ்ந்துள்ளார்.

கவிஞர் விக்ரமாதித்யன்

எழுத்தும் வாழ்வும்தொகு

தன் வாழ்நாளில் பல்வேறு தொழில்களைப் பார்த்துள்ள இவர் முதன் முதலில் கவியரசு நா.காமராசன் அவர்கள் நடத்திய இலக்கிய பத்திரிகையான "சோதனை"என்னும் பத்திரிக்கையில் பணிபுரிந்தார் பின்னர் விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளிலும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.

”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்` உடபட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைகாரர் வேடத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.


இவர் எழுதிய புகழ் பெற்ற வரிகள்,

படைப்புகள்தொகு

கவிதைத் தொகுப்புகள்

 • ஆகாசம் நீலநிறம் (1982)
 • ஊரும் காலம் (1984)
 • உள்வாங்கும் உலகம் (1987)
 • எழுத்து சொல் பொருள் (1988)
 • திருஉத்தரகோசமங்கை (1991)
 • கிரகயுத்தம் (1993)
 • ஆதி (1997)
 • கல் தூங்கும் நேரம் (2001)
 • நூறு எண்ணுவதற்குள் (2001)
 • வீடுதிரும்புதல் (2001)
 • விக்ரமாதித்யன் கவிதைகள் (2001)
 • பாதி இருட்டு பாதி வெளிச்சம் (2002)
 • சுடலைமாடன் வரை (2003)
 • தேவதைகள்-பெருந்தேவி-மோகினிப்பிசாசு (2004)
 • சேகர் சைக்கிள் ஷாப் (2007)
 • விக்ரமாதித்யன் கவிதைகள் - II

சிறுகதைத் தொகுப்பு

 • திரிபு (1993)
 • அவன்-அவள் (2003)

கட்டுரைத் தொகுப்பு

 • கவிமூலம் (1999)
 • கவிதைரசனை (2001)
 • இருவேறு உலகம் (2001)
 • தமிழ்கவிதை- மரபும் நவீனமும் (2004)
 • தன்மை-முன்னிலை-படர்க்கை (2005)
 • எனக்கும் என் தெய்வத்துக்குமிடையேயான வழக்கு (2007)
 • எல்லாச் சொல்லும் (2008)
 • தற்காலச் சிறந்த கவிதைகள்
 • கங்கோத்ரி
 • சொல்லிடில் எல்லை இல்லை
 • சாயல் எனப்படுவது யாதெனின்
 • சும்மா இருக்கவிடாத காற்று
 • கவிதையும் கத்தரிக்காயும்
 • ஊழ்
 • மஹாகவிகள் ரதோற்சவம்

விருதுகள்தொகு

மேற்கோள்கள்தொகு

 1. "விக்கிரமாதித்யனுக்கு விளக்கு | எழுத்தாளர் ஜெயமோகன்". www.jeyamohan.in. 14 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 2. "கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு சாரல் விருது". https://tamil.filmibeat.com. 29 January 2014. External link in |website= (உதவி)
 3. http://www.jeyamohan.in/?p=45202
 4. "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - விருதுகள்". tamilonline.com. 14 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 5. https://www.jeyamohan.in/152054/
 6. "2021-12: விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா – விக்கிரமாதித்யன் – விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்". Vishnupuram Ilakkiya Vattam. 14 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Cong leader Jairam Ramesh to felicitate Vishnupuram awardee on December 26 | Entertainment". MyNews 24x7. 20 December 2021.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரமாதித்யன்&oldid=3344368" இருந்து மீள்விக்கப்பட்டது