விளக்கு விருது
விளக்கு விருது அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகாரமும், கவனமும் பெறவேண்டும் என்பதுதான் இந்த விருதின் நோக்கம். விருதுடன் ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படுகிறது.
விருது பெற்றவர்கள்
தொகு- சி. சு. செல்லப்பா
- பிரமிள்
- கோவை ஞானி
- நகுலன்
- ஹப்சிபா ஜேசுதாசன்
- பூமணி
- சி. மணி
- சே. இராமனுஜம் (நாடகக் கலைஞர், 2003)
- ஞானக்கூத்தன்
- அம்பை
- தேவதேவன்
- வைத்தீஸ்வரன்
- விக்ரமாதித்யன் (2008)
- திலிப்குமார்
- தேவதச்சன்
- எம். ஏ. நுஃமான் (2011)
- பெருமாள் முருகன் (2012)
- கோணங்கி (2013)
- சி. மோகன் (2014)
- க.சமயவேல்(2016) 2016 முதல் இருவருக்கு தலா ஒரு லட்சம் பரிசு
- ராஜ்கௌதமன்(2016)
- பாவண்ணன் (2018)
- பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்(2018)
- கவிஞர் கலாப்ரியா (2019)
- பேராசிரியர் க. பஞ்சாங்கம் (2019)
- ஸ்டாலின் ராஜாங்கம் (2020)
- சுகிர்தராணி (2020)
உசாத்துணை
தொகு- காலச்சுவடு இதழ் பிப்ரவரி 2013
- திண்ணை இணைய இதழ் பரணிடப்பட்டது 2016-03-06 at the வந்தவழி இயந்திரம்
- பேராசிரியர் எம். எ. எம். நுஃமான் விளக்கு விருது பெறுகிறார், திண்ணை, சனவரி 17, 2013