க. பஞ்சாங்கம்

க. பஞ்சாங்கம் (பிறப்பு: பெப்ரவரி 4, 1949) கவிதை, புதினம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு என்று பன்முக ஆளுமை கொண்டவர். நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.[1]

க. பஞ்சாங்கம்
K. PANJANGAM.jpg
பிறப்புகனியப்பன் பஞ்சாங்கம்
4 பெப்ரவரி 1949 (1949-02-04) (அகவை 72)
புத்தூர், விருதுநகர் தமிழ்நாடு
இருப்பிடம்புதுச்சேரி
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்பஞ்சு
பணிபேராசிரியர்
அறியப்படுவதுதிறனாய்வாளர்
பெற்றோர்கனியப்பன், முத்தம்மாள்
வாழ்க்கைத்
துணை
பிரபாவதி
பிள்ளைகள்அன்புச்செல்வன், பாண்டியன்

வாழ்க்கைக் குறிப்புதொகு

பஞ்சு என்ற புனைப்பெயர் கொண்டவர் பேராசிரியர் க. பஞ்சாங்கம் விருதுநகர் மாவட்டம், இராசபாளையத்தை அடுத்துள்ள புத்தூரில் கனியப்பன், முத்தம்மாள் தம்பதிக்கு மகனாக 1949 பிப்ரவரி 4 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியை புத்தூர் சரசுவதி ஆரம்பப் பாடசாலையிலும், உயர்கல்வியை தளவாய்புரம் பு.மு.மா. மாரிமுத்து நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பின் விருதுநகர் செந்தில்குமார் நாடார் கல்லூரியில் புகுமுக வகுப்பை நிறைவு செய்தார்.

1970 இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும், 1972 இல் சென்னை மாநிலக் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். நெல்லை மாவட்டம் சங்கரநயினார்கோயில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் உரையாளர் பணியில் 1972 இல் இணைந்தார். 1973 இல் புதுவை அரசுப் பணியில் சேர்ந்து பல்வேறு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றியவர். முனைவர் ஔவை நடராசன் மேற்பார்வையில் சிலப்பதிகாரத் திறனாய்வுகள் என்ற ஆய்வை மேற்கொண்டு 1988 இல் முனைவர் பட்டம் பெற்றார்.

1988 முதல் 1991 வரை காரைக்கால் கல்லூரியிலும், 1991 முதல் 1993 வரை புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியிலும், 1993 முதல் 2011 வரை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் இணைப்பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கியப்படைப்புகள்தொகு

கவிதைத் தொகுப்புகள்தொகு

 • ஒட்டுப்புல் (1997)
 • நூற்றாண்டுக் கவலைகள் (1990)
 • பயணம் (2001)
 • ஒட்டுப்புல் (கவிதைகள், மொத்தத் தொகுப்பு), 2008

புதினங்கள்தொகு

 • மத்தியிலுள்ள மனிதர்கள் (1982)
 • ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம் (2005)
 • அக்கா (2016)

மொழிபெயர்ப்புகள்தொகு

 • இலக்கியத்தில் தொல்படிவம் Archetypes in literature written by Northrop Fry) (1988)
 • பெண்ணெனும் படைப்பு – சில மானுடவியல் குறிப்புகள் (Women’s Creation: Anthropological Perspective, Written by Elizabeth Tailor) (1994)
 • ஊடகமெனும் குருட்டு மகிழ்ச்சி (பல்வேறு மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு) (2010)
 • நான் எப்படி எழுதுகிறேன் (‘How I am write?’ Essays by Umberto Echo – translated through English), (2018)

திறனாய்வுகள்தொகு

 • தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு (1990)
 • சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு (1993)
 • மறுவாசிப்பில் கி.ராஜநாராயணன் (1995)
 • தமிழா! – பாரதியுடன் ஓர் உரையாடல் (1999)
 • பெண்-மொழி-புனைவு (1999)
 • மகாகவி பாரதியாரின் பெண்ணியல் கட்டுரைகள் (தொகுப்பாளர்), (2000)
 • இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும் (2000)
 • சிலப்பதிகாரம்: சில பயணங்கள் (2002)
 • பாரதி – பன்முகப்பட்ட ஆளுமை (தொகுப்பு) (2003)
 • கி.ரா - 80 (தொகுப்பு) (2003)
 • நவீனக் கவிதையியல்: எடுத்துரைப்பியல் (2003)
 • ஒரு விமர்சகனின் பார்வையில் (2004)
 • தலித்துகள் – பெண்கள் – தமிழர்கள் (2004)
 • தொன்மத் திறனாய்வு (2005)
 • ஹெலன் சீக்சு – புதிய பெண்ணியல் கோட்பாட்டாளர் (2006)
 • புனைவுகளும் உண்மைகளும் (2006)
 • பெண்-மொழி-படைப்பு (2007)
 • தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் (2008)
 • பாரதியாரின் கலை இலக்கியக் கோட்பாடுகள் (2008)
 • சங்க இலக்கியம் (2009)
 • க. பஞ்சாங்கம் கட்டுரைகள் – I & II, (2009)
 • சிலப்பதிகாரத் திறனாய்வு வரலாறு, (2010)
 • மொழி தரும் வலியும் விளையாட்டும், (2010)
 • பின் காலனித்துவ நோக்கில் மனோன்மணியம், (2010)
 • இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும், (2012)
 • கி.ரா.வின் புனைகதைகளும் இயற்கையை எழுதுதலும், (2012)
 • புதிய கோட்பாட்டு நோக்கில் சங்க இலக்கியம், (2013)
 • அழுததும் சிரித்ததும், (2014)
 • தமிழ்: ஒரு மொழி, ஒரு நிலம், ஒரு வாழ்வு (கட்டுரைத் தொகுப்பு)
 • இன்றைய இலக்கியம் என்பது தலித் இலக்கியமே, (2015)
 • தமிழில் திறனாய்வுப் பனுவல் (தொகுப்பு)
 • பின் காலனித்துவக் கோட்பாட்டு நோக்கில் ஒரு நூற்றாண்டுத் தமிழிலக்கியம், (2016)
 • புதிய வெளிச்சத்தில் தமிழிலக்கிய வரலாறு, (2017)
 • ஆய்வு நெறிமுறைகள், (2017)
 • கவிதைக் கனியால் உண்ணப்பட்டவர் கவிக்கோ அப்துல் ரகுமான், (2017)
 • சில நாவல்களும் என் வாசிப்புகளும், (2018)
 • நவீனக் கவிதைகளும் என் வாசிப்புகளும், (2019)
 • தமிழ்ச் சிறுகதைகளும் மனிதப் பெருவெளியும், (2019)
 • மொழியாக்கமெனும் படைப்புக்கலை
 • (மொழிபெயர்ப்பாளர்களுடன் நேர்காணல்), (2019)
 • இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரம் – இன்றைய உரைநடைத் தமிழில், (2019)

பெற்ற விருதுகள்தொகு

 • புதுச்சேரி அரசின் கம்பன் புகழ் விருது-2000 (இலக்கியத்தின் இருப்பியலும் திறனாய்வின் இயங்கியலும் என்ற நூலுக்காக)
 • திருப்பூர் தமிழ்ச் சங்க விருது- 2000. (பெண்-மொழி-புனைவு என்ற நூலுக்காக)
 • காசியூர் ரெங்கம்மாள் விருது - 2002 ("பயணம்" - கவிதைத்தொகுப்பிற்காக)
 • பேரா.கா.சிவத்தம்பி கணையாழி விருது-சிறந்த திறனாய்வாளர்-2012
 • சிறந்த திறனாய்வாளருக்கான" மேலும்" சிற்றிதழ் விருது- 2016.
 • அமெரிக்கத் தமிழர்கள் நடத்தும் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 24வது (2019) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகள் திறனாய்வு மற்றும் ஆய்வுக்கட்டுரைகளுக்காக[2][1][3][4]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._பஞ்சாங்கம்&oldid=3122650" இருந்து மீள்விக்கப்பட்டது