விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024
நிகழ்விற்கான முன்மொழிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம்.
கோவிட்-19 பெருந்தொற்று ஓய்ந்த பிறகு, பல்வேறு நேரடி நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக நடத்தி வருகிறோம். அந்த வரிசையில், தொடர்-தொகுப்பு நிகழ்வு ஒன்றினை இங்கு முன்மொழிவு செய்கிறேன். முன்வைக்கும் முக்கியக் கூறுகள்:
- கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்துதல், மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்த்தல் ஆகிய மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செய்வதற்கான செயல்வழிகளை (strategies) அடைதல். அவற்றின்படி, இப்பணிகளைத் தொடர்ந்து செய்து இலக்கினை எட்டுதல்.
- இந்த நிகழ்வினை பணியாற்றும் நிகழ்வாக (Working sessions) அமைப்பதால், பலன்களை நேரடியாகப் பெற இயலும்.
- நேரடியாக கூடி விவாதிக்கும்போது, வெளிப்படைத்தன்மை அதிகமாக இருக்கும். எனவே, சிறந்த செயல்வழிகளை விரைவாக அடைய இயலும்.
- அதிக பரபரப்பற்ற ஒரு ஊரில், தங்கும் விடுதி ஒன்றில் இந்த நிகழ்வினை நடத்தலாம். இரண்டு தொடர்ச்சியான நாட்களில் இந்நிகழ்வு நடக்க வேண்டும்.
- தமிழ் விக்கிப்பீடியாவின் தொடர்பங்களிப்பாளர்கள் 20 பேர், புதுப் பயனர்கள் 4 பேர், உள்ளூர் பயனர் ஒருவர் என மொத்தம் 25 பேர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு திட்டமிடலாம்.
- பெண்களுக்கு 50% எனும் முன்னுரிமையை வழங்கலாம்.
- நிகழ்வு நடத்துவதற்குத் தேவைப்படும் நிதியை விக்கிமீடியா அமைப்பிடமிருந்து நேரடியாக Rapid Funds மூலமாகவோ அல்லது இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (இந்தியா) அமைப்பிடமிருந்தோ பெற இயலும்.
- நிகழ்வின் வடிவம்:
- முதல் நாள்: கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை கையாளுவதற்கான செயல்வழியை அடைதல். நண்பகல் உணவிற்குப் பிறகு செம்மைப்படுத்துதல் பணியில் ஈடுபடுதல்.
- இரண்டாம் நாள்: மேற்கோள் இல்லாத கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்ப்பது குறித்தான செயல்வழிகளை அடைதல். நண்பகல் உணவிற்குப் பிறகு மேற்கோள்கள் சேர்க்கும் பணியில் ஈடுபடுதல்.
- நாட்களுக்கான பரிந்துரை:
- ஆகத்து 17, 18 தேதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். செப்டம்பரில் நாம் நடத்தும் விக்கி மாரத்தான் நிகழ்வில் மேம்பாட்டுப் பணிகளைச் செய்திட உதவிகரமாக இருக்கும்.
- செப்டம்பர் 28, 29 தேதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். விக்கி மாரத்தான் நிகழ்வை அக்டோபர் 2 (இந்தியாவில் விடுமுறை நாள்) அன்று நடத்தும்போது உதவிகரமாக இருக்கும்.
சிந்திக்கும்போது தோன்றிய அனைத்தையும் இங்கு தெரிவித்துள்ளேன். அனைவரின் கருத்துக்கள் / பரிந்துரைகள் அடிப்படையில் தொடர்ந்து விவாதித்து, சிறப்பானதொரு திட்டப்பணி வரைவை (project plan) அடைந்திடுவோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:58, 16 மார்ச்சு 2024 (UTC)
- இடத்திற்கான பரிந்துரை
இந்த தொடர்-தொகுப்பு நிகழ்வினை சேலம் ஏற்காடில் நடத்தலாம். என்னால் விடுதி மற்றும் பிற ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும். --Balu1967 (பேச்சு) 13:11, 17 மார்ச்சு 2024 (UTC)
- நிதி நல்கை பெறுவதற்கான பரிந்துரை
தமிழ் விக்கிப்பீடியா இவ்வாறான நிகழ்வுகளை நடாத்தும்போது இலங்கைப் பயனர்களும் கலந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குவதற்காக விக்கிமீடியா அறக்கட்டளையிடமிருந்து நிதி நல்கையைப் பெற முயல்வது நன்று. இணையம் மற்றும் சமூகத்துக்கான மையம் (இந்தியா) வெளிநாட்டவருக்கான செலவுகளுக்கு நிதி நல்கை வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிகழ்வுகளுக்கு இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பித்தும் நல்கை பெற முடியும் எனினும், நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் நல்கை கோரினால் அது இலகுவாக அமையும். இந்த நிகழ்வில் என்னால் பங்கேற்க முடியாது. பொதுவாக நிகழ்வுகளைத் திட்டமிடும்போது இதனைக் கருத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:13, 19 மார்ச்சு 2024 (UTC)
- @Sivakosaran கருத்திட்டமைக்கு நன்றி. இக்கருத்து கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:26, 19 மார்ச்சு 2024 (UTC)
நிகழ்வை நடத்துவதற்கான நாட்கள்
தொகுநிகழ்வை நடத்துவதற்கான நாட்கள் குறித்த பரிந்துரைகள் கிடைத்தால் திட்டமிட உதவியாக இருக்கும். முன்மொழிவில் வைக்கப்பட்டிருந்தவை: ஆகத்து 17, 18 தேதிகள் (அல்லது) செப்டம்பர் 28, 29.
மே மாத இறுதி அல்லது சூன் முதல் வாரத்தில் நடத்தவேண்டும் எனில், Rapid Fund கோரிக்கை மனுவை வைப்பதற்கான கடைசி தேதி: 01-ஏப்ரல்-2024 ஆகும். இது மிகுந்த நெருக்கடி தருவதாக இருக்கும். மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 24 மார்ச்சு 2024 (UTC)
நிகழ்வை நடத்துவதற்கு முன்மொழிவில் தெரிவிக்கப்பட்டிருந்த நாட்கள்: ஆகத்து 17, 18 தேதிகள் (அல்லது) செப்டம்பர் 28, 29 தேதிகள். பயனர்களின் கருத்துக்கள் / பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்கள் இறுதி செய்யப்படும். அதன் பிறகு, நிதிக்கான கோரிக்கை வைக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:17, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- செப்டம்பர் 28, 29 (காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்கள்) ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 14:16, 1 ஏப்பிரல் 2024 (UTC)
- விருப்பம்--சத்திரத்தான் (பேச்சு) 00:17, 2 ஏப்பிரல் 2024 (UTC)
- விருப்பம்--பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 02:41, 2 ஏப்பிரல் 2024 (UTC)
- விருப்பம்--மகாலிங்கம் இரெத்தினவேலு 04:18, 2 ஏப்பிரல் 2024 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 04:34, 2 ஏப்பிரல் 2024 (UTC)
@Sridhar G, சத்திரத்தான், Balu1967, TNSE Mahalingam VNR, and Arularasan. G: தேதிகள் குறித்து பரிந்துரை / விருப்பம் இட்டமைக்கு நன்றி. செப்டம்பர் 28, 29 தேதிகளை கருத்திற் கொண்டு திட்டமிடலை ஆரம்பிப்போம். வேறு பரிந்துரைகள் வருமெனில், அவற்றையும் கவனத்தில் கொள்வோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:01, 3 ஏப்பிரல் 2024 (UTC)
- விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 06:20, 3 ஏப்பிரல் 2024 (UTC)
நிகழ்வை நடத்துவதற்கான ஊர்
தொகுநிகழ்வினை சேலம் அருகிலுள்ள ஏற்காட்டில் நடத்தலாம் எனவும், தன்னால் விடுதி ஏற்பாடு உள்ளிட்ட ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் எனவும் பயனர் @Balu1967: அவர்கள் தெரிவித்திருந்தார்கள். இது குறித்து, மற்ற பயனர்களின் கருத்துக்கள் / பரிந்துரைகளை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:12, 3 ஏப்பிரல் 2024 (UTC)
@சத்திரத்தான், Sridhar G, TNSE Mahalingam VNR, Arularasan. G, and கி.மூர்த்தி: ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி. நிகழ்வை நடத்துவதற்கான ஊராக ஏற்காட்டை கருதி, முதற்கட்ட திட்டமிடலை ஆரம்பிப்போம். முதற்கட்ட திட்டமிடலுக்கான கூட்டம் நாளை (ஏப்ரல் 6) நடைபெறுகிறது. வாய்ப்பு இருப்பின், கலந்துகொண்டு திட்டமிடலுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:51, 5 ஏப்பிரல் 2024 (UTC)
ஏற்பாடுகள்
தொகு- தேவைப்படும் நிதியைப் பெறுதல்:
- நிதிநல்கைக்கான கோரிக்கை சூன் 1 அன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்தக் கோரிக்கையை சூலை 5 அன்று, விக்கிமீடியா அறக்கட்டளை ஏற்றுக்கொண்டது. காண்க: Grants:Programs/Wikimedia Community Fund/Rapid Fund/In-person Edit-a-thon in Tamil Wikipedia and Strategic Meet (ID: 22680236)
- கலந்துகொள்ளும் பயனர்களை ஒருங்கிணைத்தல்
- நிகழ்வில் கலந்துகொள்வதற்கான பதிவு செய்தல், கூகுள் படிவம் உதவிகொண்டு செய்யப்படும்.
- உகந்த விடுதியை தெரிவு செய்தல்:
- 4 விடுதிகள் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளன. உகந்த விடுதியை தெரிவு செய்ய வேண்டும்.
- விடுதியை முன்பதிவு செய்தல்
- விடுதி தெரிவு செய்யப்பட்ட பிறகு, முன்பதிவு செய்யப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 20:22, 20 சூலை 2024 (UTC)