விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024
திட்டத்திற்கான முன்மொழிவு
தொகுதமிழ் விக்கிப்பீடியர்களுக்கு வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்து பொதுமக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியதன் அவசியத்தை தொடர்பங்களிப்பாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனைக் கருத்திற்கொண்டு, 6 மாதத்திற்கான இத்திட்டம் முன்மொழிவு செய்யப்படுகிறது. பயனர்களின் கருத்துக்கள் / பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
முக்கியக் குறிப்பு: கல்லூரியைப் பரிந்துரைப்பது, கல்லூரியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு நிகழ்வை நடத்துவது ஆகியவற்றை எப்பயனரும் செய்யலாம். முறையான உரையாடல்கள் நடத்தப்பட்டு, இறுதி முடிவுகள் எடுக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:06, 19 மார்ச்சு 2024 (UTC)
@கி.மூர்த்தி, Balu1967, சத்திரத்தான், TNSE Mahalingam VNR, and Sridhar G: வணக்கம். உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான ஏதேனும் கல்வி நிலையத்துடன் ஒருங்கிணைந்து, நிகழ்வினை நடத்துவதற்கு உங்களால் இயலுமெனில் இங்கு குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதனடிப்படையில் மேற்கொண்டு நாம் திட்டமிட வசதியாக இருக்கும்; நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:53, 22 மார்ச்சு 2024 (UTC)
கல்லூரிகளுக்கான பயிற்சிகள்
தொகுதமிழ் நாடு முழுக்க உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் தமிழ் விக்கிப்பீடியாவுடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்த ஆர்வம் கொண்டுள்ளனர். இன்னும் சொல்லப் போனால் அவர்களில் நாக் மதிபீட்டிற்கு அது தேவை என்பதால் நம்மை அவர்கள் பயன்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புள்ளதாகவும் கருதுகிறேன். எனவே நமது தன்னார்வப் பணிகளை ஆக்கப்பூர்வமாகச் செலவிட இத்தகைய கூட்டுமுயற்சிகளில் கவனமாக இருக்க வேண்டுகிறேன். இயன்ற வரை கல்லூரி சார்பாகச் செலவுகளை ஏற்றுக் கொள்ளவோ அல்லது கனிசமான பங்களிப்புகளை உறுதி செய்வதோ போன்று பொறுப்புகளைக் கல்லூரி எடுத்துக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். கல்வி நிலையங்களைத் தவிர்த்து சமூக அமைப்புகள், இலக்கியக் குழுக்கள் போன்று பரந்துபட்ட பயனர்களுக்கும் பயிற்சிகளைத் திட்டமிடலாம். கண்காட்சிகள் புத்தகத் திருவிழா, மாநாடுகள் போன்ற இடங்களில் பரப்புரைக்கான வாய்ப்புகளையும் அடையாளம் காணலாம். தன்னார்வத்தில் பயிற்சியளிக்கும் பயனர்களாக அல்லாமல் திட்டமிட்டுப் பட்டறைகளைக் கல்லூரிகளில் நடத்தும் போது விளைவுகளை அளவிடுவதற்கான முறைகளையும் இணைத்துக் கொள்ளலாம். விக்கிச் சூழலில் https://outreachdashboard.wmflabs.org/ அளவிட்டுக் காட்டும். -நீச்சல்காரன் (பேச்சு) 11:19, 21 மார்ச்சு 2024 (UTC)
- @Neechalkaran: உங்களின் கருத்துக்களுக்கு நன்றி. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:51, 21 மார்ச்சு 2024 (UTC)
- விருப்பம்--இரவி (பேச்சு) 10:50, 27 நவம்பர் 2024 (UTC)
எடுக்கப்படும் முயற்சிகள்
தொகுசென்னையிலுள்ள பெயர்பெற்ற கல்லூரிகளின் தமிழ்த்துறைத் தலைவர்களுக்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்பி வருகிறேன். வாய்ப்பு தரும் கல்லூரிகளுடன் இணைந்து, அவர்களின் மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க முயற்சிகள் மேற்கோள்ளப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:05, 10 சூலை 2024 (UTC)
விருப்பம்--கி.மூர்த்தி (பேச்சு) 01:25, 11 சூலை 2024 (UTC)
திருச்சி (அல்லது) தஞ்சாவூர் நகரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை நிகழ்வு
தொகு- தொடக்க நிலை உரையாடல்: விக்கிப்பீடியா பேச்சு:அறிவுப் பகிர்வு
- நிகழ்வு குறித்து இங்கு தொடர்ந்து உரையாடுவோம்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:59, 15 அக்டோபர் 2024 (UTC)
திட்ட வடிவமைப்பு
தொகு- தமிழில் எழுதுதல் அல்லது பொதுவாக எழுதுவதில் ஆர்வமுள்ள, படைப்பாற்றல் திறனைக் கொண்டுள்ள மாணவர்களை கல்லூரியே தெரிவு செய்து தரவேண்டும்.
- 30 மாணவர்கள்.
- முதல் பயிலரங்கத்திற்குப் பிறகு, அடுத்த 3 வாரங்களுக்கு அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அதாவது ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை அவர்களுடன் இணையம் வழியே கூகுள் கூட்டம் வாயிலாகப் பேச வேண்டும். அவர்களின் ஐயங்களை தீர்க்க வேண்டும்.
- ஒரு மாதம் கழித்து முழுக்க முழுக்க தொகுத்தல் பணி செய்யும் பயிலரங்கத்தை அந்தக் கல்லூரிக்குச் சென்று நடத்த வேண்டும்.
- விரும்பத்தக்க வகையில் முன்னேற்றங்கள் தெரிந்தால், மாதம் ஒரு பயிலரங்கம் என 2 பயிலரங்குகளை (அடுத்தடுத்து) அந்தக் கல்லூரிக்குச் சென்று நடத்த வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:34, 15 அக்டோபர் 2024 (UTC)
இந்த உரையாடலின் தொடர்ச்சி: விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2025 - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:10, 4 நவம்பர் 2024 (UTC)
பட்டறைகளின் விளைவுகள்
தொகுஇந்த ஆண்டும் தொடர்ந்தும் பல காலமாக இது போன்ற பட்டறைகளை நடத்தி வருபவர்கள் தாங்கள் கண்ட விளைவுகள் பற்றி இங்கு பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும். என்னுடைய தனிப்பட்ட அனுபவத்திலும் தமிழ் விக்கிப்பீடியாவைக் கவனித்து வந்த முறையிலும் உலகளாவிய விக்கிச் சமூகங்களின் கற்றல்கள் மூலமும் தெரிந்து கொண்டது என்னவென்றால், இது போன்ற பட்டறைகளைப் பல இடங்களில் ஒரு முறை மட்டும் நிகழ்த்துவதை விட, ஆர்வமுள்ள ஒரு கல்லூரி மாணவர்களை இனங்கண்டு தொடர்ந்து அவர்களுடன் follow-up செய்வதன் மூலமே ஓரளவாவது பயன் கிடைக்கும். இல்லாவிட்டால், தொடர் பட்டறைகளால் அலைச்சல் மட்டுமே மிஞ்சும். ஒரே ஒரு பயன் என்னவென்றால், இது போன்ற பட்டறைகளை நடத்துவதன் மூலம் ஏற்கனவே முனைப்பாக உள்ள பயனர்கள் தங்கள் தொடர்பாடல் ஆளுமைத் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். அடுத்த ஆண்டும் இது போன்று பல பட்டறைகள், பரப்புரை முயற்சிகளைச் சிலர் தொடரக்கூடும் என்பதால், இதுவரை பெற்ற பயன்களை அலசிப் பார்ப்பது முக்கியம் என்று கருதுகிறேன். நன்றி. cc: @Selvasivagurunathan m and Neechalkaran: இரவி (பேச்சு) 10:55, 27 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams நான் பொதுவாகவே அறிமுகப் பட்டறைகளை விக்கிப்பீடியா சார்பாக நடத்துவதில்லை. பெண்ணியம் நாட்டார் மரபு, தொடர்தொகுப்பு போன்ற சில குறிப்பிட்ட திட்டங்களைப் பரப்புரை செய்யும் பொருட்டே சில பயிலரங்குகளை நடத்தியுள்ளேன். அதில் கலந்து கொள்பவர்கள் கற்றுக் கொண்டு அந்தத் திட்டங்களுக்குப் பங்களிக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து பங்களிக்க வைக்க ஏதாவது நிகழ்வுகள் தேவைப்படுகிறது. அவர்களைத் தொடர்பில் இருத்தத் தன்னார்வல நிலையில் முடிவதில்லை. கல்லூரிகளிலுள்ள கணித்தமிழ்ப் பேரவைகள் மூன்றாண்டுகளுக்கு முன்புபோல இப்போது சுறுசுறுப்பாக இல்லை. எனவே கல்லூரிகளில் அறிமுகப் பட்டறைகள் குறைவாகவே நடக்கின்றன. அவ்வாறு நிகழ்வு நடத்தும் கல்லூரியும் கணித்தமிழ் அறிமுகத்தில் ஒரு பகுதியாக விக்கித் திட்டங்களைக் கற்றுக்கொள்வதோடு சரி. தொடர்ந்து ஊக்கப்படுத்துவதில்லை. பள்ளிகளிலும் அண்மைக் காலமாகப் பயிற்சி நடத்த கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. எனவே மாணவர் பங்களிப்பு சவாலாகவே உள்ளது. பொதுவான பயனர்களென்றால் அவரவரின் ஆர்வத்திற்கேற்பக் கற்றுக் கொடுக்கும் போது அதில் பங்களிக்க முனைவதாக நினைக்கிறேன். முன்பு போல அரசு நிறுவனங்களின் ஒத்துழைப்பிருந்தால் பட்டறைகள் சிறக்கும் என நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 18:51, 27 நவம்பர் 2024 (UTC)
- @Ravidreams: மிகவும் அவசியமான உரையாடலை தொடங்கி வைத்தமைக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு புதியவர்களை கொண்டுவர வேண்டும் எனும் எண்ணத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட திட்டங்கள்: தொடர்-தொகுப்பு 2023, பயிலரங்குகள் 2023. இத்திட்டங்களைத் தீட்டுவதில் இருந்த முனைப்பினை, திட்டங்களின் உரையாடல் பக்கங்களை படித்து அறிந்துகொள்ளலாம். இந்த முன்னெடுப்பின் விளைவாக நடத்தப்பட்ட நிகழ்வு: பயிலரங்கு 2024 (திருநெல்வேலி). ஆனால் இந்த நிகழ்வினால் கிடைத்த பயன், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. 15 புதிய கட்டுரைகளை பெற்றதைத் தவிர, வேறு எதனையும் அறுவடை செய்ய இயலவில்லை. இதனை திட்டத்தின் தோல்வியாக நான் கருதவில்லை. இன்றைய 'உண்மை நிலவரம்' (reality) இதுதான். நீங்கள் இந்தத் துணைப்பின் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு, பயிலரங்கத்திற்குப் பிறகான செயல்பாடுகளை செய்தோம். நம்முடைய முயற்சிகளையும், அவற்றிற்குக் கிடைத்த பயன்களையும் இங்கு ஆவணப்படுத்தியிருக்கிறோம்:- பயிலரங்கு 2024 (திருநெல்வேலி)/இணையவழிக் கலந்துரையாடல்கள். இறுதியாக, சலிப்படைந்து திட்டத்தை முடித்துக்கொண்டோம்.
- திருநெல்வேலி பயிலரங்க திட்ட வடிவமைப்பின் மீது இன்னமும் எனக்கு பெரியளவில் நம்பிக்கை உள்ளது. அதனாலேயே, இந்தப் பேச்சுப் பக்கத்தில் "திருச்சி (அல்லது) தஞ்சாவூர் நகரில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை நிகழ்வு" எனும் பரிந்துரையை வைத்தேன். என்னுடைய இன்னொரு திடமான எண்ணம் யாதெனில் - எழுதுவதில் ஆர்வமுள்ள, படைப்பாற்றல் திறனைக் கொண்டுள்ள மனிதர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பயிலரங்கத்தை நடத்த வேண்டும். அவ்வாறான பயிலரங்கத்தை நடத்துவது சாத்தியம் என்று உறுதியாக நம்புகிறேன். ஒரு மாணவர் குழுவை அப்படியே வரவழைத்து அனைவரையும் எழுதச் சொல்வது நியாயம் இல்லை என்று கருதுகிறேன். வேட்கை (passion) மனிதருக்கு மனிதர் மாறுபடுகிறது. உடைத்துப் பேசுவதெனில், இங்கு முனைப்பாக செயல்படும் பங்களிப்பாளர்களின் குடும்பத்தார் எத்தனை பேர் இங்கு பங்களிக்கிறார்கள்? எவ்வளவோ முயற்சித்தும் என்னுடைய இரு குழந்தைகளையும் இங்கு பங்களிக்கவைக்க என்னால் இயலவில்லை. அவர்களின் விருப்பங்கள் வேறு விடயங்களில் உள்ளன. எனவே உரிய மக்களுக்கு பயிலரங்கத்தை நடத்திப் பார்க்கலாம் என்பது எனது பரிந்துரை.
- இந்தத் திட்டப் பக்கம் 'அறிமுகப் பட்டறைகள்' எனப் பெயரிடப்பட்டிருந்தாலும்... அறிமுக நிகழ்வு, பயிலரங்கம் என்பதாக வேறுபடுத்திப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அறிமுக நிகழ்வு என்பது ஒரு நாள் மட்டும் நடத்தப்பட்டு விக்கிப்பீடியா / விக்கிமீடியா திட்டங்கள் குறித்து மக்களை அறியச் செய்வது. பயிலரங்கம் என்பது இரண்டு அல்லது மூன்று நாட்கள் நடத்தப்பட்டு, கலந்துகொள்பவர்களை பங்களிப்பாளர்களாக மாற்றுவது. இந்தப் பகுதியை பார்ப்பதன் வாயிலாக எனது நோக்கத்தை நன்கு புரிந்துகொள்ள இயலும்:- வடிவமைப்பு.
- கல்லூரிகள் அல்லது பள்ளிகள் நம்மை அழைத்து, நாம் செல்வதென்றால் அறிமுக நிகழ்வு போன்று நடத்தலாம். அதற்கான நிதிச் செலவுகளை நிர்வாகங்கள் முழுமையாக ஏற்க வேண்டும். நாம் கல்லூரிகளை இனம் கண்டறிந்து சென்றால், பயிலரங்கம் போன்று நடத்தவேண்டும். அதற்கான நிதிச் செலவுகளை இணைவாக்க முறையில் இருதரப்பும் ஏற்கவேண்டும். இவையே எனது கருத்துக்களும், நிலைப்பாடும். மேற்கொண்டு உரையாடி, அடுத்தக்கட்டம் நோக்கி நகர்வதற்கு ஆர்வமாக உள்ளேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:18, 28 நவம்பர் 2024 (UTC)