விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024
தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகளை மாதமொரு நிகழ்வாக நடத்துவதற்கான திட்டப் பக்கம்.
சூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை மொத்தமாக 6 நிகழ்வுகள் திட்டமிடப்படுகின்றன.
நோக்கம்
தொகுதிட்டமிடலுக்கு அதிக நேரத்தைச் செலவழிக்காது பரப்புரை செய்தல்.
வடிவமைப்பு
தொகு- பயிற்சி பெறுபவர்கள் - கல்லூரி மாணவர்கள் (அல்லது) கல்லூரி ஆசிரியர்கள் (அல்லது) பள்ளி ஆசிரியர்கள்
- பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை - ஒரு நிகழ்விற்கு 30 பேர்
- பயிற்சி பெறுபவர்களின் பாலின விகிதம் - 50% ஆண்கள்:50% பெண்கள்
- தமிழில் எழுத விரும்புபவர்களை நிகழ்விற்கு அழைக்குமாறு கல்வி நிலையங்களுக்கு வேண்டுகோள் வைக்க வேண்டும்.
- ஒரு நாள் அறிமுகப் பட்டறை (அல்லது) 2-நாள் பயிலரங்கு
- ஒரு நாள் நிகழ்வெனில் 2 பயிற்றுநர்கள்; இரண்டு நாள் நிகழ்வெனில் 4 பயிற்றுநர்கள்.
- நிகழ்வு நடைபெறும் ஊருக்கு அருகிலிருக்கும் பயிற்றுநர் அந்நிகழ்வில் கலந்துகொள்ளலாம்.
- பயிற்சி பெறுபவர்களுக்கு விக்கிப்பீடியா சார்பாக சான்றிதழ் வழங்கப்படும்.
ஒருங்கிணைப்பாளர்கள்
தொகு- திட்டத்திற்கான ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பு, சென்னை நகரில் நடக்கும் நிகழ்வுகளில் நிகழ்விட ஒருங்கிணைப்பு - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:29, 20 மார்ச்சு 2024 (UTC)