விக்கிப்பீடியா பேச்சு:அறிவுப் பகிர்வு
நிகழிடம்
தொகுதிருச்சிராப்பள்ளி அல்லது தஞ்சாவூரில் நடத்திட விருப்பம். நிகழ்விற்கு முன்னதாக ஒரு நாள் பயிலரங்கு ஒன்றினையும் நடத்தலாம். சத்திரத்தான் (பேச்சு) 01:49, 9 சூலை 2024 (UTC)
- விருப்பம் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:58, 9 சூலை 2024 (UTC)
- விருப்பம்--கு. அருளரசன் (பேச்சு) 02:05, 9 சூலை 2024 (UTC)
- விருப்பம் - பாலசுப்ரமணியன்--Balu1967 (பேச்சு) 02:35, 9 சூலை 2024 (UTC)
- @சத்திரத்தான்: வெள்ளிக்கிழமை பயிலரங்கு, சனி & ஞாயிறு அறிவுப் பகிர்வு நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:31, 15 அக்டோபர் 2024 (UTC)
பயிற்சி பெறுபவர்கள்
தொகுஇந்த முறை, கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பது எனது பரிந்துரை ஆகும். தஞ்சாவூரில் நடத்திய அறிமுகப் பட்டறை, திருநெல்வேலியில் நடத்திய பயிலரங்கு ஆகியவற்றால் பலன்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனவே, இம்முறை மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கலாம் எனக் கருதுகிறேன்.
இது தொடர்பான கூடுதல் பரிந்துரைகள்:
- தமிழில் எழுதுதல் அல்லது பொதுவாக எழுதுவதில் ஆர்வமுள்ள, படைப்பாற்றல் திறனைக் கொண்டுள்ள மாணவர்களை கல்லூரியே தெரிவு செய்து தருமாறு கேட்கலாம்.
- 30 மாணவர்கள் போதுமானது. அப்போதே பயிற்றுவிப்பவர்களால் குவியம் செலுத்த இயலும்.
- முதல் பயிலரங்கத்திற்குப் பிறகு, அடுத்த 3 வாரங்களுக்கு அந்த மாணவர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும். அதாவது ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 7 மணி முதல் 8 மணி வரை அவர்களுடன் இணையம் வழியே கூகுள் கூட்டம் வாயிலாகப் பேச வேண்டும். அவர்களின் ஐயங்களை தீர்க்க வேண்டும்.
- ஒரு மாதம் கழித்து முழுக்க முழுக்க தொகுத்தல் பணி செய்யும் பயிலரங்கத்தை அந்தக் கல்லூரிக்குச் சென்று நடத்த வேண்டும்.
- விரும்பத்தக்க வகையில் முன்னேற்றங்கள் தெரிந்தால், மாதம் ஒரு பயிலரங்கம் என 2 பயிலரங்குகளை (அடுத்தடுத்து) அந்தக் கல்லூரிக்குச் சென்று நடத்த வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:45, 10 சூலை 2024 (UTC)
- நல்ல முயற்சி. திருச்சி அல்லது தஞ்சாவூரில் ஒரு கல்லூரிக்கு நான் பொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். பயிலரங்கு முடிவிற்கு பின் தொடர்ச்சியாக நடைபெறும் முன்னேற்றங்களையும் கவனித்துக்கொள்ள இயலும். --சத்திரத்தான் (பேச்சு) 07:51, 15 அக்டோபர் 2024 (UTC)
@சத்திரத்தான்: பொறுப்பு எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தமைக்கு நன்றி! ஏற்கனவே தொடர்ந்து பங்களித்து வருபவர்களுக்கான அறிவுப் பகிர்வு நிகழ்வினை 2 நாட்கள் நடத்துவது மிகுந்த பயனைத் தரும் என கருத்துள்ளது. எனவே தொடர்ச்சியாக 3 நாட்களுக்கு நிகழ்விடம் கிடைக்குமா என்பதனை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்கேற்ப நாம் திட்டமிடலைத் தொடரலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:29, 15 அக்டோபர் 2024 (UTC)
@சத்திரத்தான்: தொடர்ந்து இங்கு உரையாடுவோம். -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:11, 15 அக்டோபர் 2024 (UTC)
தலைப்புகள்
தொகு- பகுப்பாக்கத்தின் முக்கியத்துவமும், பகுப்பாக்கத்தின் கூறுகளும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:25, 24 நவம்பர் 2024 (UTC)