பகுப்பு பேச்சு:சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்

Latest comment: 26 நாட்களுக்கு முன் by Selvasivagurunathan m in topic பரிந்துரை

சந்தேகம்: இங்குள்ள கட்டுரைகளான யூரியா, மலேரியாவை எடுத்துப்பார்த்தபோது மேற்கோள்கள் இருக்கின்றனவே. ஆனால் மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் என்ற பகுப்பில் இவை உள்ளனவே. இப்பகுப்பைச் சரிசெய்ய இயலுமா?--Nan (பேச்சு) 09:03, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply

இக்கட்டுரைகள் இரண்டும் கூகுள் மொழிபெயர்ப்பாளர்களால் ஆங்கில விக்கியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டவை. ஆங்கில விக்கியில் சான்று தேவை எனக் குறிப்பிட்டிருப்பார்கள். அது இங்கேயும் வந்து விட்டது.--Kanags \உரையாடுக 09:23, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply
புரிந்து கொண்டேன் கனக்ஸ். நன்றி --Nan (பேச்சு) 13:12, 15 செப்டெம்பர் 2012 (UTC)Reply

துறை சார்ந்து பிரிப்பது எப்படி? தொகு

நான் உயிரியல் குறிப்பாக தாவரவியல் சாரந்த கட்டுரைகளில் மட்டும் மேற்கோள்களை இட விரும்புகிறேன். அது போல, பலர் ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் கவனம் செலுத்துவர். அவர்களுக்கு வசதியாக துறைசார்ந்து, வசதியாக பங்களிப்புகளைச் செய்ய, இப்பகுப்பில் உட்பகுப்புகளை ஏற்படுத்துவது எப்படி?--உழவன் (உரை) 05:51, 29 நவம்பர் 2015 (UTC)Reply

தானியக்க மேற்கோள் சேர்த்தல் தொகு

மேற்கோள்களே இல்லாத கட்டுரைகளின் பட்டியல் அதிகமாகவுள்ளதாக நினைக்கிறேன். பெரும்பாலான ஆங்கிலக் கட்டுரைகளை ஒட்டி எழுதப்பட்ட கட்டுரைகளுக்கு ஆங்கில மேற்கோள்களை வெட்டி ஒட்டலாம் என நினைக்கிறேன். அதாவது ஆ.வி.யின் முதல் மூன்று மேற்கோள்களை த.வி.யின் முதல் பத்திக்குக் கொண்டு வரலாம். கணிசமான கட்டுரைகளில் மேற்கோள்கள் கிடைக்கலாம் என நினைக்கிறேன். மாதிரி 1, 2, 3 இந்தப் பணிக்கு NeechalBOT கணக்கின் வழித் தானியக்கத்தை இயக்க இயலும். இதைச் செய்யலாமா? மற்றவர்களின் கருத்து/ஆதரிவினை அறிய விரும்புகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 13:48, 13 மே 2023 (UTC)Reply

  ஆதரவு மேற்கோள்களே இல்லாத கட்டுரைகளின் எண்ணிக்கை, மொத்தமுள்ள கட்டுரைகளில் 4.93% என்பதாக உள்ளது (7,585/1,53,927). எனவே, தரத்தினை உயர்த்துவதற்கு இப்பணி மிகவும் முக்கியமானதாகும். ஆங்கிலக் கட்டுரைகளில் காணப்படும் 3 மேற்கோள்களை இங்கு கொண்டுவருவது நன்று. இம்முறையில் செயல்பட்டு, கட்டுரைகளின் எண்ணிக்கை குறையும்போது, மீதமிருக்கும் கட்டுரைகளில் மேற்கோள் சேர்ப்பது எளிதாக இருக்கும். குறிப்பாக, மலைப்பு குறையும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:26, 13 மே 2023 (UTC)Reply
மாற்றுக் கருத்தில்லாததால், முதல் கட்டமாக சுமார் 150 கட்டுரைகளைத் தானியங்கி வாயிலாக மேற்கோள்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆ.வி. மேற்கோள் கடத்தல் என்ற குறிப்புரையுடன் திருத்தங்கள் சேமிக்கப்படுகின்றன. ஏதேனும் பரிந்துரைகள், சிக்கல்களைக் கண்டால் சுட்டிக் காட்டலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 10:24, 24 மே 2023 (UTC)Reply
இன்று மேலும் சுமார் 300 கட்டுரைகளில் இத்தானியக்கத்தை இயக்கியுள்ளேன். ஏதேனும் பரிந்துரைகள், சிக்கல்களைக் கண்டால் சுட்டிக் காட்டலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 06:13, 9 சூலை 2023 (UTC)Reply
இன்று மேலும் சுமார் 700 கட்டுரைகளில் இத்தானியக்கத்தால் மேற்கோள்கள் சேர்க்கப்பட்டு, கட்டுரை எண்ணிக்கை 6,540 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.-நீச்சல்காரன் (பேச்சு) 04:28, 5 ஆகத்து 2023 (UTC)Reply
  விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:41, 5 ஆகத்து 2023 (UTC)Reply
இன்று மேலும் சுமார் 800 கட்டுரைகளில் இத்தானியக்கத்தை இயக்கி, கட்டுரை எண்ணிக்கை 6,213 அகக் குறைக்கப்பட்டுள்ளது. பயனர்:Sridhar G கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அனைத்துக் கட்டுரைகளையும் அலசி மேற்கோள் இல்லாத சுமார் 25 ஆயிரம் கட்டுரைகளை இங்கே திரட்டியுள்ளேன். அவற்றில் இந்தப் பகுப்பினைத் தானியங்கி கொண்டு இடுவதால் துப்புரவுப் பணி அதிகரிக்கும் என எண்ணிப் பகுப்பிடாமல் பட்டியலாகக் கொடுத்துள்ளேன். ஒரு சில கட்டுரைகளில் கருவி நூல், வெளியிணைப்பு போன்ற வேறு வழியில் சான்றுகள் இணைக்கப்பட்டிருக்கலாம் எனவே வாய்ப்புள்ளவர்கள் சரிசெய்தோ தவிர்த்தோ பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைக்கிறேன். கட்டுரைப் பட்டியல் -நீச்சல்காரன் (பேச்சு) 14:44, 15 பெப்பிரவரி 2024 (UTC)Reply
நன்றி நீச்சல்காரன். எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகத் தோன்றினாலும் துப்புரவு செய்வதற்கு நமக்கு முழுமையான பட்டியல் கிடைத்துள்ளது. ஸ்ரீதர். ஞா (✉) 15:35, 15 பெப்பிரவரி 2024 (UTC)Reply

பரிந்துரை தொகு

இந்தப் பகுப்பினை 'சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்' என நகர்த்துவதற்குப் பரிந்துரைக்கிறேன். காரணம்: பொருத்தமான உசாத்துணை இருந்தால், அதனை சான்று உள்ள கட்டுரையாகக் கருதலாம். பொருத்தமான உசாத்துணை இருந்தாலும், மேற்கோள்கள் கண்டிப்பாக இருக்கவேண்டுமென சில நேரங்களில் தவறாக எண்ணப்படுகிறது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக பகுப்பின் பெயரை மாற்றப் பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:41, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

  விருப்பம் -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 09:43, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply
மாற்றலாம்.--Kanags \உரையாடுக 10:56, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

சான்றில்லை வார்ப்புருவில் மாற்றம் செய்துள்ளேன். கட்டுரைகளில் இற்றையாக நேரம் எடுக்கிறது போன்று தெரிகிறது. கண்காணித்துக் கொண்டிருக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:44, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

@Sridhar G and Kanags: உங்களின் உடனடியான ஒப்புதலுக்கு மிக்க நன்றி. இந்தப் பகுப்பானது சான்றில்லை வார்ப்புருவில் உள்ளடங்கியிருந்ததால், வார்ப்புருவில் மாற்றம் செய்ததும் சுமார் 6,000 கட்டுரைகள் தானாகவே இற்றையாகிக் கொண்டன. 35 கட்டுரைகளில் மட்டும் இப்பகுப்பானது நேரடியாக இடப்பட்டிருந்ததால் அவற்றை மட்டும் தனித்தனியே கையாண்டு துப்புரவு செய்தேன். குறிப்பு: இந்தப் பரிந்துரையை வைப்பது குறித்து ஒரு மாதமாக யோசித்து வந்தேன். எப்படி விளக்குவது என்பதிலேயே தயக்கம் இருந்து வந்தது. நீங்கள் இருவரும் துல்லியமாகப் புரிந்துகொண்டது நிம்மதியைத் தந்தது. வேலையும் எளிதில் முடிந்தது, கூடுதல் நிம்மதி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:40, 7 ஏப்பிரல் 2024 (UTC)Reply

Return to "சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள்" page.