விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்/2024
பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
தொகுஅனைவருக்கும் வணக்கம். இந்தப் பணியை 2025 ஆம் ஆண்டு நிறைவுபெறுவதற்கு உள்ளாக செய்து முடிக்க, பயனர்களின் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. ஏப்ரல், மே, சூன் மாதங்களை உள்ளடக்கிய அடுத்தக் காலாண்டை, இப்பணிக்கான சிறப்புக் காலாண்டாக அறிவிக்க இருக்கிறோம். இந்தத் தகவலையும் கருத்திற் கொள்ளுங்கள். நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:19, 11 மார்ச்சு 2024 (UTC)
- விருப்பம் - பல்வேறு திட்டங்களில் பயனர்கள் சிலர் ஈடுபட்டிருக்கக் கூடும் என்பதால் இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ள பயனர்கள் தங்கள் ஈடுபாடு எந்த அளவு இருக்கக்கூடும் என்பதை கருத்தில்க் கொண்டு ஒரு தற்காலிக மதிப்பீட்டின் அடிப்படையில் இத்திட்டத்துக்காக ஒதுக்கலாம் என்று தோன்றுகிறது. எப்படிப் பார்த்தாலும் தொடர்ந்து பங்களிப்பவர்களைத் தான் நாம் எதிர்பார்க்க இயலும். இத்திட்டம் துவங்கப்படும் நாள் முதல் தினமும் சில மணி நேரங்களை இதற்கு ஒதுக்க நான் தயாராக உள்ளேன். கட்டுரையைப் பொறுத்து நாள் ஒன்றுக்கு இரு சிறு கட்டுரைகளையோ ஒரு பெரிய கட்டுரையையோ இலக்காக வைத்து முயற்சியை மேற்கொள்ளலாம் என கருதுகிறேன்.
- ஸ்ரீகிருஷ்ணன் நாராயணன் (பேச்சு) 09:20, 13 மார்ச்சு 2024 (UTC)
- விருப்பம் --Balu1967 (பேச்சு) 10:05, 13 மார்ச்சு 2024 (UTC)
- பங்களிக்க உங்களின் பெயரை பதிவுசெய்தமைக்கு நன்றி. பெண்ணியமும் நாட்டார் மரபும் போட்டி முடிந்த பிறகு, ஏப்ரல் 1 முதல் பங்களிக்க ஆரம்பிப்போம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:42, 13 மார்ச்சு 2024 (UTC)
- முழுமையாக மொழிபெயர்க்காமல் 300- 500 சொற்கள் இருந்தால் போதுமானது.--AntanO (பேச்சு) 13:54, 13 மார்ச்சு 2024 (UTC)
- வழிகாட்டல் பகுதியில் இந்தப் பரிந்துரையை இட்டுள்ளேன்; மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:02, 15 மார்ச்சு 2024 (UTC)
பங்களிப்பாளர்களுடனான உரையாடல்கள்
தொகு- @Sridhar G: சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம் கட்டுரையில் செம்மையாக்கம் முடிந்துவிட்டது எனில், உரையாடல் பக்கத்தில் வார்ப்புரு இட்டு உதவுங்கள்.
- @Magentic Manifestations: எச்ஏஎல் தேசசு கட்டுரையில் செம்மையாக்கம் முடிந்துவிட்டது எனில், உரையாடல் பக்கத்தில் வார்ப்புரு இட்டு உதவுங்கள். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:36, 8 ஏப்பிரல் 2024 (UTC)
- ஆயிற்று - தாமதத்திற்கு எனது வருத்தம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:54, 8 ஏப்பிரல் 2024 (UTC)
- ஆயிற்று - முடிந்தது. இட்டாயிற்று. நன்றி! Magentic Manifestations (பேச்சு) 05:58, 9 ஏப்பிரல் 2024 (UTC)
- ஆயிற்று - தாமதத்திற்கு எனது வருத்தம். -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:54, 8 ஏப்பிரல் 2024 (UTC)
தமிழாக்கம்
தொகுஇரண்டு கூற்றுகள் தொடர்பாக பயனர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்து கேட்கிறேன்.
அ. கட்டுரையில் பெயர் வைக்கும் போது,
- அதில் வடமொழி எழுத்துக்கள் இருக்கலாமா? தவிர்ப்பது நலமா? (எடுத்துக்காட்டாக யுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ்)
- ஆங்கில பெயரை தமிழில் வைப்பது சிறந்தது? மேற்கூறிய எடுத்துக்காட்டில் ஃபிளாஷ் டிரைவ் என்பது தகவல் சேமிப்பான் என்று இருக்க வேண்டுமா?
- தலைப்புகளில் புள்ளிகள் தேவையா? எடுத்துக்காட்டாக IKEA என்ற அதிகாரபூர்வ பெயர் ஐ.கே.இ.ஏ என்று பெயரிடப்பட்டுள்ளது.
- இலத்தீன் பெயர்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டுமா (எடுத்துக்காட்டாக Panthera tigris )
- சம்பந்தப்பட்ட கட்டுரைகளின் பெயர்களில் ஒருமுகத்தன்மை இல்லை. எடுத்துக்காட்டாக:
- சுக்கோய் சு-24 (சுகோய் எழுத்துப்பிழை)
- சுகோய் எஸ்.யு-30எம்.கே.ஐ (புள்ளிகள் உள்ளது)
- சுகோய் எஸ்யு-30
இவை கூகுளை தமிழாக்கத்தை விளைவாக அல்லது எழுதிய பயனர்கள் தெரியாமல் இவாறு வைத்திருக்கலாம்.
இவை அனைத்தும் திருத்தப்படலாமா? இதற்கு ஏதேனும் சிறப்பு வழிமுறைகளை பின்பற்றவேண்டுமா?
ஆ. இரண்டாவது, வார்புருக்களில் (infobox)
- பல சொற்கள் தமிழில் மொழி பெயர்க்காமல் ஆங்கிலத்தில் உள்ளன. எடுத்துக்காட்டாக வார்ப்புரு:Aircraft specs
- ஆங்கிலத்தில் உள்ளதில் சில அளவுருக்கள் இல்லை. வார்ப்புரு:Company
- பொதுவான ஒரு கருத்து. convert வார்புருவில் சில அலகுகள் தமிழில் உள்ளன (எடுத்துக்காட்டாக அங்குலம், அடி) ஆனால் மற்ற பெரும்பாலான அலகுகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது பல கட்டுரைகளில் பயன்படுத்தப்படுவதினால், அலகுகளை ஒருமித்த தன்மைக்காக மற்றும் புரிதலுக்காக முழுவதும் தமிழில் இடலாமா?
நன்றி! Magentic Manifestations (பேச்சு) 06:21, 9 ஏப்பிரல் 2024 (UTC)
- @Kanags and AntanO: உங்களின் உதவியை வேண்டுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:35, 9 ஏப்பிரல் 2024 (UTC)
- பதில் அளிக்கும் முறையினைப் பார்த்தீர்களா? இவ்வாறான பதில்களுக்கு எவ்வாறு அமைதியாகப் பதில் அளிக்க முடியும்? (கிழேயுள்ள உரையாடலைக் குறிப்பிட்டேன்.) AntanO (பேச்சு) 07:29, 9 ஏப்பிரல் 2024 (UTC)
- கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் தொடர்பான இடத்தில் இது தேவையற்றது. விரும்பினால் ஒத்தாசைப்பக்கத்தில் தொடரலாம். --AntanO (பேச்சு) 06:43, 9 ஏப்பிரல் 2024 (UTC)
- இவை அனைத்துமே தமிழாக்கம் சம்பந்தப்பட்டவை. குறிப்பிடப்பட்ட கூகுள் தமிழாக்கம் செய்த கட்டுரைகளில் இந்த பிரச்சனைகள் உள்ளது, இதை தீர்க்காமல் எப்படி செம்மைப்படுத்துவது என தெரியவில்லை. எங்கு உரையாடல் நடக்கிறது என்பது பொருட்டு அல்ல என நினைக்கிறன். ஒத்தாசைப் பக்கத்திலும் இதே பதிவை இட்டிருக்கிறேன். தங்களுக்கு கருத்துக்கள் இருந்தால் கூறவும். Magentic Manifestations (பேச்சு) 07:21, 9 ஏப்பிரல் 2024 (UTC)