வாருங்கள்!

வாருங்கள், Magentic Manifestations, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:27, 25 திசம்பர் 2012 (UTC)Reply

குறுங்கட்டுரை தொகு

வணக்கம், பத்தம்பாளையம் ஒரு பேரூராட்சி போன்ற ஒரே ஒரு வசனத்துடனும், வார்ப்புருவுடனும் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும். கட்டுரைகள் குறைந்தது மூன்று பொருள் பொதிந்த வரிகளாக இருக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 11:45, 6 சூன் 2015 (UTC)Reply

இல்லை, ஒரு வரிக் கட்டுரை stub ஆகாது.--Kanags \உரையாடுக 11:59, 6 சூன் 2015 (UTC)Reply

தாலுகா தொகு

தாலுகா என்பதற்கு பதில் வட்டம் என்பதை பயன்படுத்துங்கள். தாலுகா, ஜில்லா (மாவட்டம்) என்பவை பாரசீகம் என நினைக்கிறேன். பஞ்சாயத்து ( Panchayat Unions)என்பது ஊராட்சி ஒன்றியம், Panchayat என்பது ஊராட்சி ஆகும்.--குறும்பன் (பேச்சு) 23:12, 6 சூன் 2015 (UTC)Reply

இன்டிகோ தொகு

ஏற்கனவே உள்ள கட்டுரையை அழித்து விட்டு புதிய கட்டுரைக்கு வழிமாற்றுக் கொடுக்க முடியாது. இரண்டு கட்டுரைகளும் முறைப்படி வரலாறுகளுடன் இணைக்கப்ப வேண்டும். இணைப்பு வார்ப்புருவை சேர்த்து விட்டால் நிருவாகி ஒருவர் இரண்டு கட்டுரைகளையும் இணைத்து விடுவார்..--Kanags \உரையாடுக 12:34, 7 சூன் 2015 (UTC)Reply

உங்கள் கவனத்திற்கு தொகு

ஏற்கனவே உள்ள சில கட்டுரைகளுக்கு மீண்டும் புதிதாகக் கட்டுரைகளைத் தொடங்கியிருக்கிறீர்கள். (சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், பாரியூர் கொண்டத்துக்காளையம்மன் கோயில்) ஆங்கில விக்கிக் கட்டுரையின் இடப்புறமுள்ள ’மற்றைய மொழிகளில்’ -இதன் கீழ் ’தமிழ்’ உள்ளதா எனப் பார்த்து விட்டு இல்லையெனில் புதிதாகத் தொடங்குங்கள். ஏற்கனவே இருப்பின் அதனையே நீங்கள் மேம்படுத்தலாம். இனிவரும் காலத்தில் இதனைக் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 13:18, 7 சூன் 2015 (UTC)Reply

பதக்கம் தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
தங்களின் விக்கியார்வம் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை அளிக்கிறேன். மேலும் முனைப்போடு பங்களிக்க வாழ்த்துக்கள். -- Μ₳Ά₮Ή₳\/Ά₦  ( பேச்சு  ) 12:32, 9 சனவரி 2016 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது (பதிகை)

  விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 01:15, 10 சனவரி 2016 (UTC)Reply
மிக்க நன்றி!Magentic Manifestations (பேச்சு) 05:47, 10 சனவரி 2016 (UTC)Reply

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

மீண்டும் வருக தொகு

எட்டு ஆண்டுகளுக்கு பிறகு பங்களிக்க தொடங்கியிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.பிரயாணி (பேச்சு) 12:52, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply

நன்றி! பல வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் பங்களிக்க தொடங்கியுள்ளேன். Magentic Manifestations (பேச்சு) 12:58, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply
 

வணக்கம், Magentic Manifestations!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்கான வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 13:19, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply

February 2024 தொகு

  வணக்கம், காற்று இசைக்கருவி என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 05:30, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வணக்கம், நான் பல முறை பல்வேறு வடிவங்களில் தேடிவிட்டு கட்டுரையை இல்லாத பக்கங்களுக்கு வடிவமைக்க முயலும் பொது ஏற்கனவே அந்த பக்கம் வேறொரு பெயரில் உள்ளது. இதில் பிரச்னை என்னவென்றால், அந்த வேறொரு பெயரில் உள்ள பக்கம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளில் இணைக்கப்படவில்லை. எனவே, நான் அவ்வாறு கட்டுரைகளில் இணைக்க முயற்சி செய்கிறேன். மேலும் இவ்வாறு ஏற்கனவே கட்டுரை இருந்தால் தயவு செய்து முழுவதுமாக நீக்குவதற்க்கு பதிலாக புதுவாக உருவாக்கப்பட்ட பக்கத்தை அந்த பழைய பக்கத்துக்கு மாற்றம் செய்யுங்கள் (redirect). நன்றி!
Magentic Manifestations (பேச்சு) 05:47, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
கட்டுரை வேறு பெயரில் இருக்கலாம். அல்லது ஆங்கில விக்கியில் குறித்த கட்டுரையைத் தேடி அங்கு த.வி கட்டுரை உள்ளதா என்பதை அறிந்து பங்களிக்கலாம். வழிமாற்றம் தக்க காரணங்களுக்காகவே உருவாக்கப்படும். கட்டுரை நீக்கம் ஏற்புடையதாயிருந்தால் நீக்கப்படும். கட்டுரை உருவாக்குவதில் சிக்கல் இருந்தால் தயவுசெய்து மணல் தொட்டியில் மேற்கொள்ளவும். AntanO (பேச்சு) 05:54, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
நான் என்ன கூறுகிறேன் என்றால், நான் உருவாக்கிய பெயரில் தான் மற்ற சம்பந்தப்பட்ட கட்டுரைகளில் லிங்க் செய்யப்பட்டுள்ளது. அதனால் தான் நான் அந்த பெயரில் உருவாக்கவே விழைந்தேன். வேறொரு பெயரில் இந்த கட்டுரை இருந்தால் அதை சரியாக லிங்க் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஏற்கனவே இந்த பெயரில் பல கட்டுரைகளில் லிங்க் செய்யப்பட்டிருப்பதால், வழிமாற்றம் செய்தால் மற்ற கட்டுரைகளில் சரியாக இணைக்க பட்டிருக்கும். நான் இனிமேல் ஒன்றுக்கு இரண்டு முறை நீங்கள் சொல்லியது போல் சரி பார்த்து விட்டு பக்கத்தை உருவாக்குகிறேன் நன்றி!
Magentic Manifestations (பேச்சு) 06:02, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
இது தொடர்பில் வேறு பயனர்களும் முன்னர் அறிவிப்புச் செய்துள்ளனர். எனவே நீங்கள்தான் கவனமாக செயற்பட வேண்டும்.

உலக பாரம்பரிய மாநாடு என்ற கட்டுரை சரியான மொழிபெயர்ப்புடன் இல்லை. ஆகவே, சற்று கூடுதல் கவனமெடுத்து மொழியாக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். --மகாலிங்கம் இரெத்தினவேலு 12:39, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply

மீண்டும் ஒரு முறை சரி பார்த்து திருத்தங்கள் இருந்தால் சரி செய்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 13:43, 16 பெப்பிரவரி 2024 (UTC)Reply






























நீங்கள் மணல் தொட்டியில் பயிற்சி செய்வது சிறப்பு. AntanO (பேச்சு) 06:08, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply

  தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து தேவையற்ற கட்டுரைகளை உருவாக்கினால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 08:42, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply

கொஞ்சம் தெளிவாக கூறவும். எது தேவை அற்ற தொகுப்பு என கூறுகிறீர்கள். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:43, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
திராவிட கட்டிடக்கலை என்ற பெயரில் ஏன் கட்டுரையை உருவாக்கினீர்கள்? AntanO (பேச்சு) 08:45, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
திராவிடக் கட்டடக்கலை சம்பந்தமாக எந்த ஒரு கட்டுரையும் இல்லையே இங்கு. ஏற்கனவே இருந்தால் தயவு செய்து சுட்டி காட்டவும். நன்றி. Magentic Manifestations (பேச்சு) 08:47, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
திராவிடக் கட்டடக்கலை AntanO (பேச்சு) 08:48, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
என் தவறு தான், இந்த கட்டுரையை நான் தேடி பார்த்த பொது புலப்படட வில்லை. ஒரு சிறிய வேண்டுகோள், இந்த ஏற்கனவே இருக்கும் கட்டுரையில் எந்த ஒரு மேற்கோள்களும் இல்லை மற்றும் திராவிட கட்டிடக்கலையின் அம்சங்கள் பற்றியோ அல்லது வேறுபாடுகள் பற்றியோ எந்த ஒரு தகவலும் இல்லை. நான் எழுதி இருந்த பக்கத்தில் அவை அனைத்தும் இருந்தன. நீங்கள் அந்த தகவலை இதோடு சேர்த்து இருக்கலாம் இல்லையா? அது அந்த பக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கும். Magentic Manifestations (பேச்சு) 08:52, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
ஒரு கட்டுரை இருக்கும்போது இன்னொரு கட்டுரை உருவாக்குவது ஏற்புடையதல்ல. 2015 முதல் உங்களுக்கு இவ்வறிப்பு வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தவறை செய்ய வேண்டாம். நன்றி. AntanO (பேச்சு) 08:55, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
உங்கள் கூற்றை நான் ஒப்பு கொள்கிறேன். ஆனால் நான் கேட்ட வேண்டுகோளுக்கு இதில் பதில் இல்லையே. நீங்கள் தான் ஒரு புது தகவலும் இல்லை என அழிக்கும் பொது அதில் அறிவித்திருக்கிறீர்கள். விக்கிபீடியா வின் நோக்கமே தகவல் பரிமாற்றம் தான். இன்னொரு பக்கம் புதுவாக ஆரம்பிக்க பட்டது தவறு தான், அதை நான் ஒப்பு கொண்டுவிட்டேன். மன்னிக்கவும். ஆனால் அதில்கூர்ந்த தகவல்கள் சரியான மேற்கோள்கள் உடன் இருந்தன. அதை பயன்படுத்தி இருக்கலாம் என்பதே என்னுடைய வாதம். மீண்டும் என் வேண்டுகோள் என்ன வென்றால், நீங்கள் அட்மின் ஆக இருப்பதால், அந்த அழிக்கப்பட்ட பக்கத்தில் உள்ள தகவல்களை ஏற்கனவே இருக்கும் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி!! Magentic Manifestations (பேச்சு) 09:03, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
@AntanO இன்னொரு வேண்டுகோள்! எவ்வாறு ஏற்கனவே ஒரு பெயரில் பக்கம் இருக்கிறது என்ன கண்டுபிடிக்க? Search, செய்வதை தவிர வேறு ஏதேனும் வழிமுறை உள்ளதா? Magentic Manifestations (பேச்சு) 09:09, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
பகுப்பு:கட்டிடக்கலை என பகுப்பிலும் சென்று பார்க்கலாம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:12, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். தாங்கள் திராவிடக் கட்டடக்கலை கட்டுரை மேம்படுத்தலாம். --தாமோதரன் (பேச்சு) 09:14, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
நீங்கள் ஆங்கில விக்கியில் மொழிபெயர்த்து (en:Dravidian architecture) இங்கு எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். ஆங்குள்ள கட்டுரையில் பிற மொழிகளுக்கான இணைப்புள்ளது. இதில் தமிழ் விக்கிக்கட்டுரையின் இணைப்பும் உள்ளது. AntanO (பேச்சு) 09:22, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
திராவிடக் கட்டடக்கலை எனும் கட்டுரை ஒரு மேற்கோளுடன் கிட்டத்தட்ட நீங்கள் எழுதிய கட்டுரையின் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. "ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள்" என்பதில் சுமார் 470 கட்டுரைகள் உள்ளன. இதுபோன்ற நிர்வாக பணி நிலுவைகள் பல ஆயிரமாகவுள்ளன. ஆகவே இலகுவான நடைமுறையினை மேற்கொள்வது நல்லது. AntanO (பேச்சு) 09:19, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
அனைவரின் உதவிக்கும் நன்றி. நான் ஆங்கில கட்டுரைகளில் சென்று பிற மொழி இணைப்பு இருக்கிறதா மற்றும் அந்த பகுப்பிலும் இருக்கிறதா என பார்த்து எழுதுகிறேன். மிக்க நன்றி! Magentic Manifestations (பேச்சு) 09:27, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
@AntanO நான் மீண்டும் ஒரு தவறு செய்துளான். இப்போது தான் ஏற்கனவே இருந்த கட்டுரையை பார்தேன். இனிமேல் கவனமாக இங்கு கூறிய படி ஆங்கில கட்டுரையில் இருந்து லிங்க்-இ பார்த்து சரியாக செய்கிறேன். நன்றி! மன்னிக்கவும் Magentic Manifestations (பேச்சு) 09:28, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply
மன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை. இங்கு நாம் எல்லோரும் நல்ல ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கவே முயல்கிறோம். AntanO (பேச்சு) 09:31, 13 பெப்பிரவரி 2024 (UTC)Reply

மொழிமுதல் எழுத்து தொகு

மொழிமுதல் எழுத்துக்கள் - மொழிமுதல் எழுத்தாக மெய்யெழுத்துக்களும் ஆயுத எழுத்து வருவாது தவிர்க்கப்படல் வேண்டும். AntanO (பேச்சு) 18:17, 17 பெப்பிரவரி 2024 (UTC)Reply

கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 04:00, 18 பெப்பிரவரி 2024 (UTC)Reply

ஏற்கெனவே உள்ளவற்றை நீக்க வேண்டாம் தொகு

கட்டுரையை மேம்படுத்தும்போது ஏற்கெனவே உள்ளவற்றை நீக்க வேண்டாம். நரகம் கட்டுரையில் பகுப்புக்களும் நீக்கப்பட்டுள்ளது. ~AntanO4task (பேச்சு) 13:18, 19 பெப்பிரவரி 2024 (UTC)Reply

கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 03:46, 20 பெப்பிரவரி 2024 (UTC)Reply

விக்கித்தரவு தொகு

நீங்கள் உருவாக்கிய சில கட்டுரைகள் பிற மொழி விக்கித்தரவில் இணைக்கப்படாமல் இருக்கிறது. கவனித்து விக்கித்தரவில் இணையுங்கள். தானியங்கித் தமிழாக்கமும் வருகிறது. கவனியுங்கள். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 10:49, 21 பெப்பிரவரி 2024 (UTC)Reply

நான் எல்லா கட்டுரைகளையும் தரவில் இணைத்திருக்கிறேன். ஏதேனும் விடுபட்டிருந்தால் தயவு செய்து அதை சுட்டி கட்டவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 10:56, 21 பெப்பிரவரி 2024 (UTC)Reply

இயந்திர மொழிபெயர்ப்பைத் தவிர்க்கலாமா? தொகு

வணக்கம், தங்களது அண்மைய கட்டுரைகள் பெரும்பாலும் இயல்பானதாக இல்லாமால் இயந்திரமொழிபெயர்ப்பால் ஒரு சிதைந்த மொழிநடையில் இருப்பதாகத் தெரிகிறது. பழைய கட்டுரைகளை ஒரு முறை சீரமைக்க முடியுமா? இனி இயந்திர மொழிபெயர்ப்பைத் தவிர்த்து உங்கள் எழுத்தில் இயல்பாக மொழிபெயர்க்க இயலுமா? -16:14, 27 பெப்பிரவரி 2024 (UTC) நீச்சல்காரன் (பேச்சு) 16:14, 27 பெப்பிரவரி 2024 (UTC)Reply

வணக்கம்! நான் பெரும்பாலும் இயந்திர மொழிபெயர்ப்பை பயன்படுத்தி ஆங்கிலத்திலிருந்து கட்டுரையை எடுத்த பின்னர் அதை முழுவதும் கவனத்துடன் படித்து சரியான மொழிநடைக்கு மாற்றம் செய்தே பதிவிடுகிறேன். ஏதேனும் எடுத்துக்காட்டு இருந்தால் தயவு செய்து மேற்கோள் காட்டவும், அது எனக்கு எங்கே பிழை என்று அறிய உதவியாக இருக்கும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 04:25, 28 பெப்பிரவரி 2024 (UTC)Reply
கீழே வேறொரு உதாரணத்தைப் பார்த்தீர்கள். எனது இந்தத் திருத்தத்தையும் பாருங்கள். //வெட்டப்பட்ட சாகுபடி//உணரப்பட்ட ஒரு உணர்வைப் பெற்றன//மொழியியல் ரீதியாக//மக்களின் கூறு குழுக்கள்// எனப் பிழைகள் உள்ளன. நீங்கள் தானியக்க மொழிபெயர்ப்பைத் தவிர்க்கலாம். பழைய கட்டுரைகளின் வாக்கிய அமைப்பைச் சரிபார்த்துத் திருத்த வேண்டுகிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 11:34, 28 பெப்பிரவரி 2024 (UTC)Reply
திருத்தியமைக்கு நன்றி! நான் ஏற்கனவே பல கட்டுரைகளை இன்று மீண்டும் படித்து சிறு திருத்தங்கள் செய்துள்ளேன். கவனத்தில் கொள்கிறேன். நன்றி ! Magentic Manifestations (பேச்சு) 14:44, 28 பெப்பிரவரி 2024 (UTC)Reply

உதாரணம் தொகு

இயந்திரம்

ஜிங்போ மக்கள் என்பது கச்சின் மக்களின் மிகப்பெரிய துணைக்குழுவாக இருக்கும் ஒரு இனக்குழு ஆகும். அனைத்து கச்சின் மக்களுக்கும் அவர்களின் சொந்த ஜிங்போ மொழியில் ஜிங்பா ஆகும்.

நாம்

ஜிங்போ மக்கள் (Jingpo people) என்பவர்கள் சீனா, மியான்மர், இந்தியா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். கச்சின் மக்களின் ஒரு மிகப்பெரிய துணைக்குழுவாக இவர்கள் உள்ளனர். கச்சின் மக்களின் சொந்த ஜிங்போ மொழியில் இவர்களை ஜிங்பா என்று அழைக்கின்றனர். சைவா, இலீச்சு, இலிசு, மரு, இக்காக்கூ என்பவை ஜிங்போ மக்களை குறிக்கும் இதர புறப்பெயர்களாகும்.−முன்நிற்கும் கருத்து கி.மூர்த்தி (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. ஏற்க்கனவே சிறு மாற்றங்களை செய்திருக்கிறேன். நான் மீண்டும் ஒரு முறை அந்த கட்டுரைகளை படித்து ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் செய்து பதிவிடுகிறேன். நன்றி!−முன்நிற்கும் கருத்து Magentic Manifestations (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

தகவல்சட்டம் தொகு

வணக்கம், நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் தகவல்சட்டங்களையும் இணைத்து விடுங்கள்.--Kanags \உரையாடுக 08:45, 2 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம், இணைக்கிறேன், நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:55, 2 மார்ச்சு 2024 (UTC)Reply

நகர்த்தல் தொகு

கொரியர்கள் என்பதை கொரியர் என நகர்த்தியுள்ளீர்கள். காரணம் அறியலாமா? AntanO (பேச்சு) 07:47, 3 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம்! இனக்குழு சார்ந்த பக்கங்கள் பல பொதுவாக ஒருமையில் உள்ளன (எடுத்துக்காட்டு: மங்கோலியர், உஸ்பெக்கியர், வியட்நாமியர்). எனவே ஒருமைத்தனத்திற்காக அது நகர்த்தப்பட்டது. ஒரு கொள்கையாக அனைத்து இனக்குழுக்களை பன்மையில் பெயரிட விழைந்தால், இந்த பக்கங்களை (எடுத்துக்காட்டாக வியட்நாமிய மக்கள் அல்லது வியட்நாமியர்கள்) என மாற்றம் செய்யலாம். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:11, 3 மார்ச்சு 2024 (UTC)Reply
பக்கத்தை நகர்த்து முன் பேச்சுப்பக்கத்தில் உரையாடுவது நல்லது. எழுத்துப்பிழை போன்ற காரணங்களுக்காக உரையாடாது நகர்த்தினாலும், தொகுப்பு சுருக்கத்தில் குறிப்பிட வேண்டும். நிற்க, //இனக்குழு சார்ந்த பக்கங்கள் பல பொதுவாக ஒருமையில் உள்ளன.... எனவே ஒருமைத்தனத்திற்காக அது நகர்த்தப்பட்டது......// இவ்வாறான விடயங்களை பொதுவெளியில் உரையாடி, ஒப்புதல் பெற்றபிறகு நகர்த்துவது சிறப்பு. AntanO (பேச்சு) 08:16, 3 மார்ச்சு 2024 (UTC)Reply
@Magentic Manifestations and AntanO: ஒரு கொள்கையாக அனைத்து இனக்குழுக்களையும் மக்கள் என்ற பின்னொட்டுடன் தலைப்பிடுவதும் பொருத்தமாக இருக்கும். இதன்படி கொரிய மக்கள், மங்கோலிய மக்கள், உசுபெக்கிய மக்கள், வியட்நாமிய மக்கள் என்று தலைப்பிடலாம். இதுபற்றி மேலும் உரையாட விரும்பினால் விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (கொள்கை)யில் தொடரலாம்.--Kanags \உரையாடுக 08:26, 3 மார்ச்சு 2024 (UTC)Reply
  விருப்பம் AntanO (பேச்சு) 08:27, 3 மார்ச்சு 2024 (UTC)Reply
தொகுப்பு சுருக்கத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும், அதை என்னுடைய கவனக்குறையாக ஏற்று கொள்கிறேன். இந்த உரையாடலை ஆலமரத்தடியில் தொடரலாம். Magentic Manifestations (பேச்சு) 09:13, 3 மார்ச்சு 2024 (UTC)Reply

உக்ரைன் கொடி தொகு

வணக்கம், பல பயனர்களின் கருத்திற்கேற்ப திருத்தங்களைச் செய்வதனை மனமார வரவேற்கிறேன். உக்ரைன் கொடி கட்டுரையிலும் வாக்கியத் திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. சில உதாரணங்கள்

  • //ஒரு பேனர் போல தொங்கவிடப்படும்போது அல்லது போர்த்தப்பட்டிருக்கும் போது, நீல நிற பேண்ட் இடதுபுறத்தில் இருக்க வேண்டும். செங்குத்து கொடிமுனையிலிருந்து பறக்கும்போது, நீலப் பட்டை கம்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.//
  • //கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன.//
  • //தேசிய சின்னங்களின் வேர்கள் கிறிஸ்துவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து வந்துள்ளன//

இயன்றவரையில் ஒவ்வொரு பத்தியாக மொழிபெயர்ப்பு செய்து இற்றை செய்யக் கோருகிறேன், நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 07:10, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

வணக்கம், நான் ஒவ்வொரு வாக்கியமாக படித்து திருத்தி மொழி பெயர்க்கிரேன். இந்த மேற்கூறிய வாக்கியங்களில் என்ன திருத்தும் பரிந்துரை செய்கிறீர்கள் எனக்கூறினால் மேலும் உதவியாக இருக்கும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 08:10, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
திருத்தப்படாத தானியங்கித் தமிழாக்கம் செய்ய வேண்டாம். இவ்வாறான இடங்களில் மற்றவர்கள் பரிந்துரை கேட்பது ஏற்புடையதல்ல. AntanO (பேச்சு) 08:47, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
தானியங்கி மொழிபெயர்ப்பு கட்டுரைகளை மொழிபெயர்க்கவே கொடுக்க பட்டுள்ளது. அதை மொழி பெயர்த்த பின் அதை நான் ஒவ்வொரு வாக்கியமாக சரி பார்த்து பின்னர் வேண்டிய மாற்றங்களை செய்து பதிப்பிடுகிறேன். அப்படியே தானியங்கி மொழிபெயர்ப்பை பதிப்பித்த அனுமதியும் கிடையாது, அப்படி செய்யவும் முடியாது.
மேலும் இதில் ஏதேனும் எழுத்து அல்லது இலக்கண பிழை இருந்தால் சுட்டிக்காட்டினால் அதை சரிபடுத்திக்கொள்ளலாம். மேலே குறிப்பிட்ட இந்த வாக்கியங்களில் என்ன பிழை என்றே தெரியவில்லை, எனவே பதிப்பித்த அந்த நபரிடம் விளக்கம் கேட்டுள்ளேன், இதில் என்ன தவறு என்று எனக்கு விளங்கவில்லை. Magentic Manifestations (பேச்சு) 09:45, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
புரிதலுக்காக விளக்குகிறேன்...
  • //ஒரு பேனர் போல தொங்கவிடப்படும்போது அல்லது போர்த்தப்பட்டிருக்கும் போது, நீல நிற பேண்ட் இடதுபுறத்தில் இருக்க வேண்டும். செங்குத்து கொடிமுனையிலிருந்து பறக்கும்போது, நீலப் பட்டை கம்பத்தை எதிர்கொள்ள வேண்டும்.// - பேனரை பதாகை என தமிழ்ப்படுத்த வேண்டும். பேண்ட் என்பது pant எனும் ஐயத்தை ஏற்படுத்தும். அதற்கு கலைச்சொல்லை கண்டறிந்து பயன்படுத்த வேண்டும்.
  • //கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன.// - பொருள் விளங்கவில்லை.
  • //தேசிய சின்னங்களின் வேர்கள் கிறிஸ்துவத்திற்கு முந்தைய காலங்களிலிருந்து வந்துள்ளன// - இங்கு வேர்கள் என்பது எதனைக் குறிக்கிறது?
ஒவ்வொரு விசயத்தையும் இன்னொருவர் கவனித்து திருத்துவதோ, சுட்டிக்காட்டுவதோ நடைமுறையில் கடினம் என்பதனையே அண்டன் குறிப்பிடுகிறார். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:30, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
@AntanO வணக்கம்!
  1. முதலில் நான் கூகுளை மொழிபெயர்ப்புக்காக உபயோகப்படுவதில்லை. விக்கிப்பீடியாவில் இருக்கும் தானியங்கி மொழிபெயர்ப்பு கருவியை பயன்படுத்துகிறேன். அது கட்டுரைகளின் வரலாற்றை பார்த்தல் உங்களுக்கே புலப்படும். #தானியங்கி மொழி பெரியர்ப்பு கட்டுரைகளை அப்படியே பதிவாக்கம் செய்வது தான் தவறு, அதை செம்மைப்படுத்தி செய்யும் பொது எந்த விதிமீறல்களும் இல்லை என நினைக்கிறேன், அப்படி கட்டுரைகளை மொழிபெயர்ப்பதே தவறு என்றால் அந்த கருவிக்கு உபயோகமே இல்லை.
  2. நான் மேல கூறியதை போல அது அப்படியே மொழிபெயர்ப்பபை பதிவிடவும் அவை அனுமதிப்பதில்லை. செம்மை படுத்திய பின்னரே பதிப்பிட அனுமதிக்கின்றது. தானியங்கி மொழிபெயர்ப்பை தாங்கள் பயன்படுத்தி இருந்தால் அது உங்களுக்கே புரியும்.
  3. மேலும் தாங்கள் கூறியதை போல் நான் பல பெரிய கட்டுரைகளுக்கு என்னுடைய மனல்தொட்டியில் பதிவு செய்து பின்னர் பதிவிடுகிறேன் (என்னுடைய வரலாற்றை பார்த்தல் அது உங்களுக்கு புலப்படும்).
  4. நான் கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட சரியான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறேன். இதில் ஒன்று இரண்டு பிழைகள் இருந்தால் சுட்டி காட்டுதலின் பெயரில் அதை சரி செய்கிறேன். மேலும் மற்றவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு பாதி ஆங்கிலத்தில் இருக்கின்ற பல கட்டுரைகளை சரி செய்து வருகிறேன். எனவே ஓரிரு தவறுகள் அல்லது தவறான புரிந்துகொள்ளல்கள் வருவது இயல்பு. அதை புரிந்து கொள்வது மற்றும் திருத்துவதில் தவறேதும் இல்லை.
நன்றி!
@Selvasivagurunathan m வணக்கம்!
எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. நான் அந்த கட்டுரையில் விரிவான மாற்றங்கள் செய்து இருக்கிறன். முதல் கருத்தில் கூறியவாறு மாற்றம் செய்து இருக்கிறேன். மேலே கூறிய மற்ற கருத்துக்களில் வாக்கியங்களை முழு பதியுடன் படித்து பொருள் கொள்ள வேண்டும், வாக்கியங்களை படித்தால் சரியான பொருள் தராது. எடுத்துக்காட்டாக, "கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன." இந்த வரி இந்த பத்தியில் வருகிறது, "மரியாதை அல்லது துக்கத்தின் அடையாளமாக தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படுகிறது. ...கருப்பு ரிப்பன்கள் அரை கம்பத்தில் பறக்க விட முடியாத பதாகைகளில் துக்கத்தைக் குறிக்கின்றன." இதில் பொருள் விளங்குகின்றதாவே நான் நினைக்கிறன். மூன்றாவது வரியில் வேர் என்பது அதன் தோற்ற மூலத்தை குறிக்கிறது. எனவே, இதில் வெளிப்படியான தவறுகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. எனினும் புரிந்துகொள்வதற்காக விரிவாக மாற்றம் செய்து மறுபதிப்பு செய்து உள்ளேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 14:00, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
முறையாக திருத்தப்படாத தானியங்கிக் கட்டுரைகள் நீக்கப்படும். குறித்த பயனர் எச்சரிக்கையின் பின்னும் தொடர்ந்து அவ்வாறே செயற்பட்டால் தற்காலிக தடைக்கு உள்ளாக இடமுண்டு.இதைத்தவிர வேறு விளக்கங்கள் தேவையில்லை. நன்றி. AntanO (பேச்சு) 17:42, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
ஒரு சிக்கலை ஆராய்ந்து விளக்கங்களை கேட்டு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது. சில பயனர்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்றவாறு எச்சரிக்கைகளை வழங்குவதை தவிர்க்கலாம் ஏனெனில் எந்த வகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களும் இங்கே மீறப்படவில்லை. நீங்கள் பாரபட்சமின்றி சரியானதைச் செய்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி!
இங்கே சில பயனர்கள் எனக்கு மிகுந்த உதவி செய்திருக்கன்றனர். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்!
என்னுடைய என்ன ஓட்டத்தின் படி இங்கே பயனர்களை ஊக்குவிப்பதை விட எந்த இரு பயனர்களுக்கிடையே பேச்சுக்கள் நடந்தாலும் உதவி செய்வதை விட எச்சரிக்கை செய்வதே வாடிக்கையாக உள்ளதாக கருதுகிறேன். இது புதிய பங்களிப்பாளர்களுக்கு பெரும் தடையாக உள்ளது. இது நடைமுறைக்கு ஏற்புடையதும் அல்ல. இது என்னுடைய பொதுவான கருத்து, தயவு செய்து தனிப்பட்ட முறையில் தங்களுக்கு எதிரான கருத்து என எடுத்துக்கொள்ள வேண்டாம். தவறாக ஏதேனும் பதிவிற்றிருந்தால் மன்னிக்கவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 04:20, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
//எனினும் புரிந்துகொள்வதற்காக விரிவாக மாற்றம் செய்து மறுபதிப்பு செய்து உள்ளேன்// நன்றி..
ஒற்றுப் பிழைகளையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
//சில பயனர்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்றவாறு எச்சரிக்கைகளை வழங்குவதை தவிர்க்கலாம்// வெகு சிலர் மட்டுமே துப்புரவுப் பணியில் ஈடுபடுவதால் அவர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் அறிவுறுத்துவது போல் உங்களுக்குத் தோன்றலாம். அதில் தவறில்லை ஆனால், கற்பனையாக யார் கருத்திட்டார்கள் என்பது எனக்குப் புரியவில்லை விளக்கவும்.
மற்றும் எனும் சொல்லை இனி வரும் கட்டுரைகளில் தவிர்க்கலாம். காண்க
நன்றி -- ஸ்ரீதர். ஞா 💬உரையாடுக 15:28, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
துப்புரவுப் பணியில் ஈடுபடுபவர்கள் தவறுகளை சுட்டிகாற்றுவதில் தவறு எதுவும் இல்லை. தவறுகளை சுட்டிக்காட்டுதல் மாற்றும் நெறிமுறைப்படுத்தல் விக்கிபீடியாவின் செயலாற்றத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றன. தவறுகளை சுட்டி காட்டுதல் அந்த தவறுகளை மீண்டும் செய்யாமல் இருக்க பயனர்களுக்கு உதவியாக இருக்கும், மேலும் கட்டுரைகள் சிறப்பாக இருக்க உதவியாக இருக்கும். இதை நான் மறுக்கவும் இல்லை, மாறாக எனக்கு அதற்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி கூறுகிறேன். எந்த ஒரு கட்டுரையும் எழுதும் போது சிறு தவறுகள் நேரலாம், மற்றும் அதை சுட்டி காட்டுவதிலோ இல்லை திருத்துவதிலோ தவறேதும் இல்லை. எந்த ஒரு பயனரும் வேணும் என்றே எதையும் செய்ய மாட்டார்கள் என நினைக்கிறன்.
என்னுடைய பொதுவான வாதமே வேறு. இங்கு நான் கூகுளை பயன்படுத்தி மொழி மாற்றம் செய்வதாகவும், அதை அப்படியே பதிவிடுவதாகவும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தான் நான் பதிலளித்துள்ளேன். ஒன்று, நான் கூகுளை பயன்படுத்துவதும் இல்லை, மேலும் விக்கிபீடியாவில் உள்ள கருவியையே பயன்படுத்துகிறேன். இரண்டு, சிறு தவறுகள் இருப்பினும் நான் அனைத்து கட்டுரைகளையும் திருத்திய பிறகே பதிவிடுகிறேன். அந்த கருவியும் அப்படியே பதிவிட அனுமதிப்பது இல்லை. எனவே மொழி மாற்றம் செய்வதே தவறு என்ற பாணியில் இங்கு பல கருத்துக்கள் மற்றும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அப்படி எந்த ஒரு கொள்கையும் விக்கிப்பீடியாவில் இல்லை மற்றும் விக்கிப்பீடியாவே மொழி மாற்றம் செய்வதை ஊக்குவிக்கறது, அதற்காகவே மொழி மாற்ற கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பயனரின் பங்களிப்புகளில் ஏதேனும் மாற்று கருத்து இருப்பின் உரையாடலில் ஈடுபடுவது இயல்பான ஒன்றாகும், மேலும் அதை விக்கிப்பீடியாவும் ஊக்குவிக்கின்றது. ஆனால் இங்கு பல கருத்துகள் பயனர்களை எச்சரிப்பதிலும், அச்சுறுத்தும் நோக்கத்திலும் பதிவிடப்படுகின்றது.
தமிழ் விக்கிபீடியாவிற்கு பங்களிப்பதே அனைவரின் நோக்கமாக இருக்கும் போது, பயனர்களை ஊக்குவித்து, அரவணைத்து செல்வது நெறிமுறைப்படுத்துபவர்களின் நோக்கமாக இருக்க வேண்டும். ஏறத்தாழ 15 ஆண்டுகளாக பங்களித்து வரும் நான் விக்கிப்பீடியாவின் நோக்கங்கள் மற்றும் விதிமுறைகளை பற்றி ஓரளவு அறிவேன். எனவே மாறாக இங்கு எதோ ஒரு குற்றம் செய்தவரை கண்காணிக்கும் காவல்துறை போல செய்யும் அனைத்துமே தவறு என்ற நோக்கிலும் இங்கே கருத்துகள் மற்றும் எச்சரிக்கைகள் பதிவிடப்படுவதாகவும் நான் உணர்கிறேன். கிட்டத்தட்ட 200 கட்டுரைகள் எழுதியுள்ள போது, ஓரிரு கட்டுரைகளில் அவதானிப்புகள் இருப்பின், அது இயல்பே தவிர, இதில் குற்றமேதும் இல்லை. இதற்கு ஒரு ஒவ்வாத எச்சரிக்கை பதிவிடுவது ஏற்படுவது அல்ல என்பதே என் கருத்து. இது பங்களிப்பாளர்களுக்கு தடையாக இருக்குமே தவிர ஊக்கமளிப்பவையாக இருக்காது. நன்றி! Magentic Manifestations (பேச்சு) 16:20, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
//இங்கு நான் கூகுளை பயன்படுத்தி மொழி மாற்றம் செய்வதாகவும், அதை அப்படியே பதிவிடுவதாகவும்// எங்கு இடம்பெற்றது? AntanO (பேச்சு) 16:50, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
வணக்கம் @Magentic Manifestations: 'தானியங்கித் தமிழாக்க' அறிவிப்பு வார்ப்புருவை நீங்கள் பொறுமையாக படித்துப் பார்த்தால், அது உரைக்கும் விடயத்தை நன்கு புரிந்துகொள்ளலாம். கலைக்களஞ்சியத்திற்கு ஒவ்வாத கட்டுரைகள், திருத்தப்படாத இயந்திர மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் என பொறுப்பற்ற (அல்லது) பொறுப்பு குறைவான நடவடிக்கைகள் தமிழ் விக்கிப்பீடியாவிலும் அதிகளவில் இருந்தன. அவற்றையெல்லாம் தன்னார்வலர்கள் கட்டுப்படுத்தி, முறைப்படுத்தியிருக்கிறார்கள். இதனைத் தொடரும் பொருட்டே, மிகவும் விழிப்புடன் அனைவரும் வழிநடத்தப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பு வார்ப்புருக்களும் அவ்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இவ்வாறான வழிகாட்டல்களை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளாது, நேர்மறையாக, ஆக்கநோக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து சிறப்பான முறையில் பங்களிக்க வாழ்த்துகள்! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:12, 10 மார்ச்சு 2024 (UTC)Reply
@AntanO
  1. திருத்தப்படாத தானியங்கித் தமிழாக்கம் செய்ய வேண்டாம். இவ்வாறான இடங்களில் மற்றவர்கள் பரிந்துரை கேட்பது ஏற்புடையதல்ல."'
ஒருவர் ஒரு கருத்தை என்னுடைய பேச்சு பக்கத்தில் பதிவிடும் போது, அதன் பொருள் என்ன என்பதை கேட்காமல் எப்படி பதிலளிக்க அல்லது திருத்தங்கள் செய்ய இயலும். பயனர் பேச்சு பக்கமே பயனர்களிடையே பேச்சு நடத்தும் நோக்கத்தில் தானே உள்ளது. அவ்வாறு இருக்கும் போது இதில் என்ன குற்றம் என எனக்கு விளங்கவில்லை.
  1. முறையாக திருத்தப்படாத தானியங்கிக் கட்டுரைகள் நீக்கப்படும். குறித்த பயனர் எச்சரிக்கையின் பின்னும் தொடர்ந்து அவ்வாறே செயற்பட்டால் தற்காலிக தடைக்கு உள்ளாக இடமுண்டு.இதைத்தவிர வேறு விளக்கங்கள் தேவையில்லை. நன்றி.
விக்கிப்பீடியாவில் எச்சரிக்கை மற்றும் தடை செய்யும் அமைப்பு ஆக்கமில்லாத நோக்குடன் செய்யப்படும் செயல்களுக்காக இருக்கின்ற ஓர் அமைப்பாகும். இங்கு இந்த கருத்தை (குறிப்பாக இரண்டாவது வரி) கூற வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. முறைப்படுத்துபவர்கள் பயனரின் கூற்றுகளை கேட்டு ஆராய்ந்து பதிவிடுவதே நலம். நான் எந்த விளக்கத்தையும் கேட்க விரும்பவில்லை என்பது ஒரு முரணான கருத்து.
  1. இந்த எச்சரிக்கை பெட்டி உங்களுடைய முந்தைய பதிவிட்ட கருத்தையே வலியுறுத்துகிறது, அதை மீண்டும் ஆணித்தனமாக வலியுறுத்துவது போல் உள்ளது . "Tamil Wikipedia, as a policy, does not accept machine translated articles provided by services like Google translation...... Please do not attempt to breach the policy as it may warrant your user account block."
எந்த ஒரு கூற்றை எடுத்தாலும் அதில் தற்காலிக தடை மற்றும் தடை சம்பந்தமான எச்சரிக்கைகள் மட்டுமே உள்ளன. இவ்வாறு பேச்சு பக்கத்தில் வேறு எந்த பயனராலும் ஆரம்பிக்கப்படும் ஒவ்வொரு பேச்சுவார்த்தை பதிவுக்கும் தடை அச்சுறுத்தல் செய்து கொண்டே போனால், பங்காளிக்க பயனர்களே இருக்க மாட்டார்கள்.
@Selvasivagurunathan m
என்னுடைய கூற்றை நீங்கள் படித்து பார்த்தல், நான் துப்புரவுப் பணியில் ஈடுபவர்கள் மற்றும் தவறுகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டி திருத்த உதவி செய்பவர்கள் ஆகியோரின் செயலை குறை கூறவில்லை, மாறாக அது ஒரு கடினமான மற்றும் செம்மைபடுத்த உதவும் செயல் என்பதையும் நான் நன்கு அறிவேன். மேலும் இயந்திர மொழி பெயர்ப்பை அப்படியே வெளியிடுவதை நான் ஆதாரிக்கவும் இல்லை. அது ஆக்கப்பூர்வமான செயல்பாடும் அல்ல.
பங்களிக்கும் பயனர்களை மேலும் ஆக்கபூர்வமாக பங்களிக்க இவை உதவியாக மற்றும் உந்துகோலாக இருக்க வேண்டுமே தவிர, அது ஒரு பயமுறுத்தும் அல்லது அச்சுறுத்தும் நோக்கத்தில் இருக்க கூடாது என்பதே என்னுடைய கூற்று. தங்கள் வார்த்தைகளுக்கு நன்றி! Magentic Manifestations (பேச்சு) 06:57, 11 மார்ச்சு 2024 (UTC)Reply
பெப்பிரவரி 2024 அன்றே உங்களைத் தடை செய்ய போதுமான காரணம் இருந்தும் தடைசெய்யாமல் இருந்ததற்கு காரணம். ஒருவரால் கிடைக்கும் நன்மைக்கு இடம் அளித்தமையாகும். விக்கி வழிகாட்லின்படி செயற்பட ஒவ்வொரு பயனருக்கும் (நிர்வாகி உட்பட) இடமுள்ளது. AntanO (பேச்சு) 13:48, 13 மார்ச்சு 2024 (UTC)Reply
@AntanO
  1. முதலில் நான் விக்கி வழிகாட்டுதலின் பெயரில் செயல்படுவது தவறு என்று எங்குமே உரைக்கவில்லை. அந்த செயல்பாடுகளில் இவ்வாறு ஒரு விளக்கமே இல்லை. மேலும் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதே என் கூற்று.
  2. தடை செய்யவதாக அச்சுறுத்துவது தான் இங்கே வழக்கமாக உள்ளது என்பது தான் என்னுடைய முதன்மையான வாதாமே. உங்கள் கூற்று மீண்டும் அதையே உறுதிப்படுத்துகிறது. விக்கிபீடியாவில் பதிவிடுவது என்பது அவரவர் சொந்த ஆர்வம் மற்றும் முயற்சியில் செய்யும் ஒரு பங்கெடுப்பாகும். தடை செய்தால் ஒரு பங்களிப்பவரை விக்கிபீடியா இழக்குமே தவிர எனக்கும் உங்களுக்கும் இதனால் எந்த ஒரு இழப்பும் இருக்கப்போவதில்லை.
  3. எப்படியும் இந்த பேச்சை தொடர்வதில் எந்த ஒரு பயனும் இருக்கப்போவதில்லை என்பதை உணர்கிறேன். இதுவரை நல்கிய உதவி மற்றும் ஆதரவுக்கு நன்றி! வணக்கம்!
Magentic Manifestations (பேச்சு) 06:09, 14 மார்ச்சு 2024 (UTC)Reply

தானியங்கித் தமிழாக்கம் தொகு

Anne / Anna என்பதை ஆன்னே என்றா தமிழில் அழைப்பது? கீவின் ஆன்னே ஓர் இளவரசி. இதற்கு அரசர்கள் பகுப்பு சேர்க்கப்பட்டுள்ளது.--AntanO (பேச்சு) 08:52, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

Anne என்பதை ஆங்கிலத்தில் ஆண் அல்லது அன்னே அல்லது ஆன்னே என்று வெவ்வேறு விதமாக கூறலாம். தங்களுக்கு இதில் எதாவது பரிந்துரைகள் இருந்தால் கூறுங்கள்.
மேலும் ஆன்னே இவரது மகன் வயதுக்கு வரும் வரை அரசியாக இருந்தார், எனவே அரசர்கள் பகுப்பு சரி என நினைக்கிறன். அதில் எதாவது மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கவும். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 09:49, 9 மார்ச்சு 2024 (UTC)Reply
Anne - தமிழில் ஆன் (ஆன்னே அல்ல). உக்ரைனிய மொழியில் அன்னா. தலைப்பை "அன்னா யாரோசிலாவ்னா" என்றிடுவது நல்லது. அவ்வாறே உக்ரைனிய விக்கிக் கட்டுரையில் தலைப்பிடப்பட்டுள்ளது--Kanags \உரையாடுக 10:17, 9 மார்ச்சு 2024 (UTC)Reply

மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பு தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில், மேற்கோள்கள் எனும் துணைத் தலைப்பிற்குரிய வழிகாட்டலுக்கு இங்கு காணுங்கள்: துணைத் தலைப்பு -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:15, 15 மார்ச்சு 2024 (UTC)Reply

References என்பதனை மேற்கோள்கள் என மாற்றிவிடுங்கள். Reflist எனும் வார்ப்புருவையும் மறவாது இட்டுவிடுங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:43, 15 மார்ச்சு 2024 (UTC)Reply

@Selvasivagurunathan m சில கட்டுரைகளில் நான் குறிப்புகள் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளேன். மற்றவற்றில் பெரும்பாலும் நீங்கள் குறிப்பிட்டது போலவே உள்ளது. இனி கட்டுரைகள் உருவாக்கும் போது இதை நான் கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 05:26, 15 மார்ச்சு 2024 (UTC)Reply
  1. இரண்டு கட்டுரைகளில் Reference என ஆங்கிலத்திலேயே இருந்தது.
  2. இன்னொரு கட்டுரையில், Reflist எனும் வார்ப்புரு இடப்படாமல் இருந்தது. கட்டுரையில் மேற்கோள்கள் தான் கடைசி தலைப்பு எனில் பிரச்சினை இருக்காது. ஆனால் அதற்கும் கீழ் வேறு தலைப்புகள் இருப்பின், வடிவமைப்புச் சிக்கல் ஏற்படும்.
  3. இது போன்ற குறிப்புகளை அனைவருக்கும் நான் இடுவதில்லை. அதிகளவில் பங்களிக்கும் உஙகளைப் போன்றோருக்கு உதவிகரமாக இருக்கும் என்பதால் இடுகிறேன். மிக்க நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:34, 15 மார்ச்சு 2024 (UTC)Reply
குறிப்புகளுக்கு எடுத்துக்காட்டு: குறிப்புகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:41, 15 மார்ச்சு 2024 (UTC)Reply
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி! இனி கட்டுரைகள் உருவாக்கும் போது இதை நான் கவனத்தில் கொள்கிறேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 05:45, 15 மார்ச்சு 2024 (UTC)Reply

புதிய பகுப்புகள் தொகு

தேவைப்படும் புதிய பகுப்புகளை உருவாக்கலாம்:-கப்பல் வகைகள் - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:31, 16 மார்ச்சு 2024 (UTC)Reply

  விருப்பம் Magentic Manifestations (பேச்சு) 09:30, 16 மார்ச்சு 2024 (UTC)Reply

புதிய பாம்பன் பாலம் தொகு

புதிய பாம்பன் பாலம் கட்டுரைக்கு விக்கி மொழியிடை இணைப்பு தர உதவி தேவைப்படுகிறதா? அல்லது நீங்களே செய்துகொள்கிறீர்களா? - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:58, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

நானே தரவோடு இணைத்து விட்டேன். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 10:54, 18 மார்ச்சு 2024 (UTC)Reply
  விருப்பம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:00, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

பாம்பன்-இராமேசுவரம் புதிய இருப்புப் பாதை பாலம் எனும் கட்டுரை ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. எனவே இவ்விரு கட்டுரைகளையும் இணைக்குமாறு வார்ப்புரு இட்டுள்ளேன். அதற்கொரு வழிமுறை உள்ளது. அதன்படி, நிர்வாக அணுக்கம் உள்ள ஒருவர் இணைப்பார். கொஞ்சம் பொறுத்திருங்கள்; நன்றி! - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:21, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

இரு கட்டுரைகளின் தகவல்களில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இணைப்பவருக்கு கடினமான வேலையாக இருக்கக்கூடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:28, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

அந்த வழிமுறை. ஏற்கனவே கட்டுரையை உருவாக்கியவருக்கும் credit செல்லவேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:40, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

அந்த முதலில் எழுதப்பட்ட கட்டுரையை சரியான விக்கித்தரவில் இணைக்காததால் நான் புதிதாக ஒரு கட்டுரையை எழுத வேண்டியதாயிற்று. அதை விதிகளின் படி இணைத்துவிடலாம். நன்றி! Magentic Manifestations (பேச்சு) 11:45, 18 மார்ச்சு 2024 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Magentic_Manifestations&oldid=3911979" இலிருந்து மீள்விக்கப்பட்டது