விக்கிப்பீடியா:ஒத்த கட்டுரைகள்/கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

வெவ்வேறு தலைப்புகளில் இருக்கும் ஒத்த கட்டுரைகளை ஒன்றிணைப்பதற்கான திட்டப் பக்கம்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:மேம்பாடு

உதவி

தொகு

இரு கட்டுரைகளை நிருவாக அணுக்கம் உள்ள ஒருவர் இணைக்கலாம்.

  1. A, B என்ற இரு கட்டுரைகளை இணைக்க வேண்டுமானால், முதலில் எந்தக் கட்டுரைத் தலைப்பை முதன்மைப்படுத்துவது என்று தீர்மானியுங்கள். எ+கா: A என்ற கட்டுரையை முதன்மைப்படுத்துவோம்.
  2. A கட்டுரையில் உள்ள மேலதிக தகவல்களை B கட்டுரையில் சேர்த்து சேமியுங்கள்.
  3. பின்னர் B கட்டுரையை A கட்டுரையின் தலைப்பிற்கு நகர்த்துங்கள். மாற்றும் போது A கட்டுரை ஏற்கனவே உள்ளது. அதனை நீக்க வேண்டுமா எனக் கேட்கும். ஆம், என்று தயங்காமல் கூறி நகர்த்துங்கள்.
  4. அதன் பிறகு, A கட்டுரையை நீக்குங்கள். பின்னர், அதே A கட்டுரையை மீள்விக்க வேண்டும். மீட்டமைக்க என்பதை அழுத்துங்கள்.
  5. இப்போது, கட்டுரைகள் ஒன்றிணைக்கப்பட்டுவிட்டன. முதலில் உருவாக்கப்பட்ட கட்டுரைக்குரிய வரலாற்றுடன், பின்னர் உருவாக்கப்பட்ட கட்டுரைக்குரிய வரலாறும் வரலாற்றைக் காட்டவும் பக்கத்தில் தெரியும்.
  6. இறுதியாக, இணைக்கப்பட்ட புதிய கட்டுரை விக்கித்தரவில் தானியங்கியாகச் சேர்க்கப்பட்டுள்ளதா எனப் பாருங்கள். இல்லையெனில், விக்கித்தரவில் சேர்த்துவிடுங்கள்.

மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:கட்டுரைகளை ஒன்றிணைத்தல் ஐப் பாருங்கள்.

செயலாக்கம்

தொகு
எண் தேதி ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ள கட்டுரைகள்
1 15-மே-2023 606
2 இன்று 464

அறிதல்கள்

தொகு
  • இரண்டு கட்டுரைகளை ஒன்றிணைத்தல் என்பது, ஒரு புதிய கட்டுரையை உருவாக்குவது போன்றதே. திட்டமிடலும், செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்க நேரத்தை எடுத்துக்கொள்கிறது.
  • ஒரு ஒன்றிணைப்பைச் செய்து முடிக்கும்போது, ஒழுங்கமைவு செய்யப்படவேண்டிய கட்டுரைகளின் மொத்த எண்ணிக்கையில் 2 எண்ணிக்கை குறைவது உவகை தரக்கூடியது!

பரிந்துரைகள் / வழிகாட்டல்கள்

தொகு
  1. சில கட்டுரைகள் சான்று எதுவும் சுட்டப்படாது, சொந்தக் கருத்துகளை கொண்டிருக்கின்றன. அத்தகையக் கட்டுரையை 'சான்றுகளைக் கொண்டிருக்கும் இன்னொரு கட்டுரையுடன்' ஒன்றிணைக்க வேண்டியதில்லை; மாறாக நீக்கவேண்டும். எடுத்துக்காட்டு: கம்பில் உள்ள சத்து விகிதங்கள்
  2. சில கட்டுரைகள் இரு வேறு கட்டுரைகளே. அவற்றை ஒன்றிணைப்பது தவறாகி விடும். எடுத்துக்காட்டு: நெமிலிச்சேரி, நெமிலிசேரி என இரு கட்டுரைகள் இருந்தன. ஒன்றிணைக்கப் பரிந்துரைத்து வார்ப்புரு இடப்பட்டிருந்தது. ஆனால் இக்கட்டுரைகள் திருவள்ளூர் மாவட்டத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் உள்ள நெமிலிச்சேரி எனும் ஊர்கள் பற்றியவை ஆகும். எனவே, ஒன்றிணைப்பு வார்ப்புருக்கள் நீக்கப்பட்டு, நெமிலிச்சேரி எனும் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம் உருவாக்கப்பட்டது.
  3. ஒரு சிற்றூரின் பெயரில் கட்டுரையும் (ஸ்ரீராமன், அரியலூர்), அதே பெயரில் ஊராட்சி எனும் தலைப்பில் கட்டுரையும் (ஸ்ரீராமன் ஊராட்சி) இருந்தால் அவற்றை ஒன்றிணைக்கக் கூடாது. ஏனெனில் அவை வெவ்வேறானவை. ஊராட்சி என்பது ஒரு கடைசி நிர்வாக அலகு. ஊராட்சிக்குள் பல சிற்றூர்கள் அடங்கும்.