சுகோய் எஸ்யு-57

சுகோய் உருவாக்கிய இரட்டை எஞ்சின் ஸ்டெல்த் மல்டிரோல் போர் விமானம்

சுகோய் எஸ்யு-57 என்பது ஒரு மீயொலிவேக பன்முகச் சண்டை வானூர்தியாகும்.[3] இது உருசிய நாட்டின் சுகோய் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்ற இரட்டைப் பொறி கொண்ட ஐந்தாம் தலைமுறை சண்டை வானூர்தியாகும்.[4] பன்முகச் சண்டை வானூர்தியான இது வான் மேலாதிக்கம், தரைத்தாக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.[5]

எஸ்யு-57
Su-57
வகை கரவு பன்முகச் சண்டை வானூர்தி
உருவாக்கிய நாடு உருசியா
உற்பத்தியாளர் ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம் (யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன்)
வடிவமைப்பாளர் சுகோய்
முதல் பயணம் 29 சனவரி 2010; 14 ஆண்டுகள் முன்னர் (2010-01-29)
அறிமுகம் 25 திசம்பர் 2020; 4 ஆண்டுகள் முன்னர் (2020-12-25)
தற்போதைய நிலை பயன்பாட்டில் உள்ளது[1]
முக்கிய பயன்பாட்டாளர் உருசிய வான் படை
உற்பத்தி 2019–தற்போது
தயாரிப்பு எண்ணிக்கை 32[2]
மாறுபாடுகள் சுகோய்/எச்ஏஎல் எஃப்ஜிஎஃப்ஏ

இது உருசிய இராணுவ சேவைக்காக கரவு தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்ட முதல் வானூர்தியாகும். இந்த வானூர்தியானது உருசிய வான்படையில் மிக்-29 மற்றும் சுகோய் எஸ்யு-27 ஆகிய வானூர்திகள் ஓய்வு பெறும் போது அதிகளவில் சேர்க்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் முன்மாதிரி 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.[6]

விவரக்குறிப்புகள்

தொகு
 
வரைபடம்

தரவு எடுக்கப்பட்டது: [7]

பொது இயல்புகள்

  • குழு: 1
  • நீளம்: 20.1 m (65 அடி 11 அங்)
  • இறக்கை விரிப்பு: 14.1 m (46 அடி 3 அங்)
  • உயரம்: 4.6 m (15 அடி 1 அங்)
  • இறக்கைப் பரப்பு: 78.8 m2 (848 sq ft)
  • வெற்றுப் பாரம்: 18,000 kg (39,683 lb)
  • மொத்தப் பாரம்: 25,000 kg (55,116 lb)
  • தரையிலிருந்து தூக்கக் கூடிய பாரம்: 35,000 kg (77,162 lb)
  • எரிபொருள் கொள்ளவு: 10,300 kg (22,700 lb)
  • சக்தித்தொகுதி: 2 × சாட்டர்ன் ஏஎல்41எப்1 தாரை பொறி (பின்னெரியுடன்), 88.3 kN (19,900 lbf) உந்துதல் தலா

செயற்பாடுகள்

  • அதிகபட்ச வேகம்: மாக் 2
  • வரம்பு: 3,500 km (2,175 mi; 1,890 nmi)
  • உச்சவரம்பு 20,000 m (65,617 அடி)
  • ஈர்ப்பு விசை வரம்பு: +9.0
  • சிறகு சுமையளவு: 371 kg/m2 (76 lb/sq ft)
  • தள்ளுதல்/பாரம்: 1.16

மேற்கோள்கள்

தொகு
  1. "The first production Su-57 fighter entered the air regiment of the Southern Military District". TACC. பார்க்கப்பட்ட நாள் 22 May 2023.
  2. "Su 57production". Military Watch Magazine.
  3. "Rafale". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
    "Gust of wind". WordReference. Archived from the original on 26 November 2015. பார்க்கப்பட்ட நாள் 26 November 2015.
  4. O'Keeffe, Niall (17 June 2009). "Sukhoi secretive on PAK-FA programmes". Flightglobal. பார்க்கப்பட்ட நாள் 15 June 2014.
  5. Sukhoi(21 February 2014). "Т-50-2 fighter aircraft made the flight to Akhtubinsk". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 5 March 2014.
  6. Sukhoi(29 January 2010). "Sukhoi Company launches flight tests of PAK FA advanced tactical frontline fighter". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 26 January 2011. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-05-01. பார்க்கப்பட்ட நாள் 2015-01-13.
  7. "Sukhoi T-50 Shows Flight-Control Innovations". Aviation Week & Space Technology. Archived from the original on 27 March 2014. பார்க்கப்பட்ட நாள் 14 November 2014.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
PAK FA
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுகோய்_எஸ்யு-57&oldid=4179751" இலிருந்து மீள்விக்கப்பட்டது