விக்கிப்பீடியா பேச்சு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள்/செம்மைப்படுத்துதல்
கருத்துகள் தேவை
தொகுஇங்கு நடந்த உரையாடலின் அடிப்படையில், கீழ்க்காணும் பரிந்துரைகளை முன்வைக்கிறோம். பயனர்களின் கருத்துகளுக்கேற்ப அடுத்து நகரலாம்.
- மேம்படுத்தும்போது 100% உள்ளடக்கமும் மேம்படுத்தாது, 300 - 500 சொற்கள் கொண்ட கட்டுரையாக மேம்படுத்தினாலே போதும்.
- கட்டுரைகளை செம்மைப்படுத்த தனியாக 'ஒரு வாரம்' அல்லது 'ஒரு மாதம்' என சிறப்பாக அறிவித்து செய்யலாம்
--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:34, 28 ஆகத்து 2022 (UTC)
கு. அருளரசன்
தொகுகூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மையாக ஏதாவது 'ஒரு மாதம்' துப்புரவு திட்டத்தை ஏற்படுத்தி ஒரு மாதம் முழுவதும் செயல்பட்டு அக்கட்டுரைகளை முழுமையாக ஒழித்துகட்டவேண்டும்.
- கட்டுரைகளை மேம்படுத்த விரும்புவர்கள் தாங்கள் விரும்பும் ஓரிரு கட்டுரைகளை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்து அவற்றை மேம்படுத்தலாம்.
- மேம்படுத்துவதைவிட புதியதாக உருவாக்குவது இலகு என்று குறும்பன் போல கருதினால் புதியதாகவே அக்கட்டுரையை உருவாக்கிவிட்டு பழைய கட்டுரைக்கும் புதிய கட்டுரைக்கும் இணைப்பு வார்புருவை போட்டுவிடலாம். நிர்வாக அணுக்கமுள்ள பயனர் எனில் பழைய கட்டுரையையும், புதிய கட்டுரையையும் கையோடு இணைத்துவிடுவது நல்லது.
- கட்டுரைகளை மேம்படுத்துவதில் புதுப்பயனங்களை கூடுதலாக ஈடுபடுத்துவதில் கவனம் தேவை. பிறகு மறுபடியும் முதலிலிருந்தா என்று ஆகிவிடக்கூடாது.--கு. அருளரசன் (பேச்சு) 04:45, 28 ஆகத்து 2022 (UTC)
நா. ரெ. மகாலிங்கம்
தொகுகூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் மேம்பாடு செய்வது என்பது மிகப்பெரிய பணி. இயன்ற வரை முயற்சிப்போம். 300 - 500 சொற்கள் கொண்ட கட்டுரையாக மேம்படுத்தினால் போதும் என்ற நிலைப்பாடு ஆறுதலானது. மிகப்பெரும் கூட்டு முயற்சி தேவை. செய்யலாம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 13:53, 28 ஆகத்து 2022 (UTC)
மா. செல்வசிவகுருநாதன்
தொகுதமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரை எப்படி இருக்க வேண்டுமோ அதைப் போன்றே இக்கட்டுரைகளும் இருத்தல் போதுமானது. அதிக தகவல்கள் / பெரிய கட்டுரை/ முழுமை என்பது அவசியமன்று; நிறைவு என்பது போதுமானது.விக்கிப்பீடியா கட்டுரைகள் அனைத்துமே தொடர் முன்னேற்றத்திற்கு உரியவையே. 300-500 சொற்கள் கொண்ட கட்டுரைகள் எனும் பரிந்துரையை முழு மனதோடு வரவேற்கிறேன். இப்பணி நிறைவடைய இந்தக் கொள்கையானது பெரிதும் உதவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:01, 4 செப்டம்பர் 2022 (UTC)
ஞா. ஸ்ரீதர்
தொகுஎனது பரிந்துரைகள்
- குறைந்தபட்சம் 300 சொற்கள். அதிகபட்சம் பயனரின் விருப்பத்தினைப் பொறுத்தது.
- தகவற் பெட்டி இருத்தல் நல்லது.
- கூகுள் கட்டுரைகளைப் பொறுத்தமட்டில் சான்றுகள், பகுப்புகள், வெளியிணைப்புகள் போன்ற சிக்கல் இருக்காது.
- முன்பதிவு செய்வதை அவசியமாக்கலாம்.
- யார் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்பதால், புதிய பயனர்களின் பங்களிப்பினை சரிபார்ப்பது நல்லது.
- பங்குகொள்ளும் பயனர்களுக்கு சான்றிதழ், விக்கிப் பதக்கம் போன்றவை வழங்குவது.
- தேவை ஏற்படின் இது தொடர்பாக கூகுள் மீட்டில் கலந்தாலோசிப்பது.
ஸ்ரீதர். ஞா (✉) 15:02, 4 செப்டம்பர் 2022 (UTC)
குறும்பன்
தொகு- கூகுள் கட்டுரைகளை பிழை திருத்தி, செம்மைபடுத்த வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
- அந்த பெரிய கட்டுரைகளை படித்து பிழைதிருத்துவதை விட புதிய கட்டுரையே படைத்துவிடலாம். இதை முன்பே கூறியாகிவிட்டது.
- விக்கிப்பீடியா பயிலரங்கின் போது புதிய பயனர்களுக்கு விக்கி நடைமுறைளை சொல்லித்தரும்போது அவர்களை கூகுள் கட்டுரைகளை பிழை திருத்தம் செய்ய கூறலாம். அவர்களும் கற்றுக்கொண்டது போல் ஆனதுடன் சில கூகுள் கட்டுரைகளை துப்புரவு செய்தது போலும் ஆயிற்று.
- --குறும்பன் (பேச்சு) 19:06, 4 செப்டம்பர் 2022 (UTC)
- கருத்துகளுக்கு நன்றி, @Kurumban: 'இருக்கும் கட்டுரைகளை பிழைதிருத்துவதை விட, புதிய கட்டுரையை படைத்துவிடலாம்' எனும் கருத்தினை அண்மையில் நடைபெற்ற விக்கிமேனியா கருத்தரங்கத்தில் சில பயனர்கள் தெரிவித்தனர். இந்தக் கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கி, நெறிமுறைகள் / வழிகாட்டல்கள் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:46, 5 செப்டம்பர் 2022 (UTC)
இறுதி முடிவை நோக்கி...
தொகுகூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை மேம்படுத்துதல் முன்னெடுப்பு குறித்து தமது கருத்துகளைப் பகிர்ந்த @Arularasan. G, TNSE Mahalingam VNR, Sridhar G, and Kurumban: ஆகியோருக்கு நன்றி!
300 - 500 சொற்கள் கொண்ட கட்டுரையாக மேம்படுத்துதல், கட்டுரைகளை தேர்ந்தெடுத்து முன்பதிவு செய்தல் ஆகிய ஒத்தக் கருத்துகளை காண முடிகிறது. இவற்றை நடைமுறைப்படுத்துவதும் எளிதானதாகும்.
//பெரிய கட்டுரைகளை படித்து பிழைதிருத்துவதை விட புதிய கட்டுரையே படைத்துவிடலாம்// எனும் கருத்துகளை குறும்பன், கு. அருளரசன் அவர்கள் உள்ளிட்டோர் குறிப்பிடுகிறார்கள். இந்தக் கட்டுரைகளை வகைப்பிரிக்கும் பணியின்போது நானும் இதனை உணர்கிறேன். 2009 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கட்டுரைகள் என்பதால், ஏராளமான இற்றைகள் செய்யவேண்டியதாக இருக்கிறது. ஏற்கனவே இருக்கும் கட்டுரையின் உள்ளடக்கத்தை இற்றை செய்வது என்பது கடினமாக இருக்கும் என்பதாகவும், சலிப்பூட்டுவதாக அமைந்துவிடும் எனவும் கருதுகிறேன். எனவே, கீழ்க்காணும் பரிந்துரையை முன்வைக்கிறேன். பங்களிப்பாளர்கள் தரும் பின்னூட்டங்களின் அடிப்படையில் இறுதி முடிவினை எட்டுவோம்; நன்றி!
- கட்டுரையின் தலைப்பை முன்பதிவு செய்த பயனர், அக்கட்டுரையை தனது கணினியிலோ அல்லது தனது மணல்தொட்டி பக்கத்திலோ புதிதாக எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
- ஏற்கனவே இருக்கும் கட்டுரையைத் திறந்து, தொகு எனும் செயல்பாட்டினை இயக்கி, அங்கிருக்கும் உள்ளடக்கத்தை புதிய உள்ளடக்கத்தால் replace செய்துவிடல் வேண்டும். அதாவது - ஏற்கனவே இருக்கும் உள்ளடக்கத்தை முழுமையாக நீக்கிவிட்டு, புதிய உள்ளடக்கத்தை இட்டு சேமித்தல் (பதிப்பிடுதல்).
- இவ்விதம் செய்யும்போது, அனைத்து தொகுத்தல் வரலாறுகளும் அப்படியே இருக்கும்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:27, 17 செப்டம்பர் 2022 (UTC)
- நல்ல யோசனை தான். வரவேற்கிறேன்.--TNSE Mahalingam VNR (பேச்சு) 16:29, 17 செப்டம்பர் 2022 (UTC)
- நல்ல ஆலோசனை TNSE ruby tlr (பேச்சு) 16:40, 17 செப்டம்பர் 2022 (UTC)
- எழுதப்பட்ட கட்டுரைகள் தலைப்புகள் தனியே பிரிக்கப்பட்டு விட்டனவா? அது எழுதும் பணியை இலகுவாக்கும் TNSE ruby tlr (பேச்சு) 16:42, 17 செப்டம்பர் 2022 (UTC)
- @TNSE ruby tlr: இதுவரை சுமார் 550 கட்டுரைகள் துறைவாரியாக வகைப்பிரிக்கப்பட்டுள்ளன. இன்னமும் 480 கட்டுரைகள் பிரிக்கப்பட வேண்டும். வி்க்கி மாரத்தான் அன்று இந்தப் பணியானது முடிந்துவிடும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:42, 17 செப்டம்பர் 2022 (UTC)
- எழுதப்பட்ட கட்டுரைகள் தலைப்புகள் தனியே பிரிக்கப்பட்டு விட்டனவா? அது எழுதும் பணியை இலகுவாக்கும் TNSE ruby tlr (பேச்சு) 16:42, 17 செப்டம்பர் 2022 (UTC)
- ஆதரவுஸ்ரீதர். ஞா (✉) 17:09, 17 செப்டம்பர் 2022 (UTC)
- ஆதரவு--Kanags \உரையாடுக 22:35, 17 செப்டம்பர் 2022 (UTC)
- ஆதரவு--கு. அருளரசன் (பேச்சு) 00:03, 18 செப்டம்பர் 2022 (UTC)
- ஆதரவு --Balu1967 (பேச்சு) 16:06, 18 செப்டம்பர் 2022 (UTC)
- ஆதரவு ----குறும்பன் (பேச்சு) 00:06, 22 செப்டம்பர் 2022 (UTC)
செம்மைப்படுத்துதல் வழிமுறைக்கான பரிந்துரை மீது ஆதரவுக் கருத்துகள் பதிவாகியுள்ளன. கருத்துகளைப் பகிர்ந்தோர்க்கு நன்றி! மாற்றுக் கருத்துகள் எதுவும் பதிவாகவில்லை என்பதால் பரிந்துரை நெறிமுறையாக திட்டப் பக்கத்தில் இடப்படுகிறது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:28, 23 செப்டம்பர் 2022 (UTC)
அடுத்தப் பரிந்துரை
தொகு'ஆங்கிலத் திரைப்படம், ஆங்கில இசை ஆகிய பகுப்புகளின் கீழ் வரும் கட்டுரைகளின் மீது தமிழ்க் குமுகாயத்தைச் சேர்ந்த பயனர்கள் எந்தளவிற்கு ஆர்வம் கொள்வர்' என்பது குறித்து எனக்கு ஐயம் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை நீக்கலாம், அல்லது குறுங்கட்டுரைகளாக தக்க வைக்கலாம். மற்ற பயனர்களின் கருத்துகளை வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:35, 4 அக்டோபர் 2022 (UTC)
- முக்கியமான கட்டுரைகளையே துப்புரவு மேற்கொள்ள போதிய வளம் இல்லாத நிலையில், இந்தக் கட்டுரைகளை எவ்வளவு காலம் வைத்திருந்தாலும் அவை அப்படியேதான் இருக்கும். எனவே அவற்றின் அறிமுகப் பத்திகளாகளை மட்டும் புதியதாக உருவாக்கிவிட்டு கட்டுரைகளை நீக்காமல் தக்கவைத்துக் கொள்ள முயலலாம். அவற்றை குறுங்கட்டுரைகளாக செம்மைப் படுத்த இயலாவிட்டால் ஒரு குறிப்பிட்ட காலக் கெடுவுக்குப் பிறகு அவற்றை நீக்கிவிடுவதே நல்லது.--கு. அருளரசன் (பேச்சு) 15:47, 4 அக்டோபர் 2022 (UTC)
- @Arularasan. G: கருத்திட்டமைக்கு நன்றி --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:44, 7 அக்டோபர் 2022 (UTC)
அடுத்தக் கட்டம்
தொகுசிறப்பு மாதம் அறிவித்து செயல்பட்டால், மாதத்திற்கு 50 கட்டுரைகளை செம்மைப்படுத்த இயலும் என்பது உணரப்பட்ட உண்மை. அவ்வகையில் செயல்பட்டால், அனைத்துக் கட்டுரைகளையும் செம்மைப்படுத்த இன்னமும் 20 மாதங்கள் தேவைப்படலாம்.
இந்த வேலையை விரைந்து முடிப்பதற்கு எவ்வகையான strategy உதவும் என்பதற்கான பரிந்துரைகளை பயனர்கள் இங்கு முன்வைக்கலாம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:00, 6 நவம்பர் 2022 (UTC)
இந்தத் திட்டம் அடுத்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:34, 1 சனவரி 2023 (UTC)