வாருங்கள்!

வாருங்கள், TNSE ruby tlr, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- மயூரநாதன் (பேச்சு) 07:43, 2 மே 2017 (UTC)Reply

வணக்கம், ஒரு கட்டுரையில் அதன் தலைப்பை மீண்டும் முதலாவது துணைத் தலைப்பாக இடத் தேவையில்லை. தேனீக்களின் நடனம் கட்டுரையில் தேனீக்களின் நடனம் எனும் துணைத் தலைப்பை நீக்கியுள்ளேன். மேலும், விக்கிபீடியாவில் கட்டுரையின் முதல் வரி அது என்ன என்று அதனது வரைவிலக்கணத்தை எழுதுவதேயாகும். அதன்படி தயவு செய்து தேனீக்களின் நடனம் கட்டுரையில் அதன் வரைவிலக்கணத்தை முதல்வரியில் எழுதுமாறு கேட்டுகொள்கின்றேன். இதில் தேனீக்களின் நடனம் தடித்த எழுத்தில் கொடுக்கப்படல் வேண்டும். தாங்கள் கொடுத்த விளக்கம் "தேனீக்களின் நடனம் என்பது அவைகளின் சமூக வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. " என்பது சரியான வரைவிலக்கணமாக இல்லை. இன்னும் விரிவாக விளக்கம் தரக்கூடியவாறு இருத்தல் கட்டுரையின் தரத்தைக் கூட்டும். உங்கள் கட்டுரை en:Waggle dance எனும் ஆங்கிலக் கட்டுரையை ஒத்ததா என்பதையும் அறியத் தாருங்கள்.

கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். உதவி தேவைப்படின் கேளுங்கள். நன்றி. --சி.செந்தி (உரையாடுக) 16:08, 5 மே 2017 (UTC) நன்றி ஐயா. மறுபடியும் எழுத ஆரம்பித்துள்ளேன் தயவு கூர்ந்து கவனித்து ஆலோசனை வழங்கவும்Reply


ஆலோசனைகள் தேவை

தொகு

இப்பயனர் தான் உருவாக்கிய கட்டுரைகள் குறித்து மற்ற விக்கிப்பீடியர்கள் கருத்து அறிந்து தன் பங்களிப்புகளை மேம்படுத்த ஆர்வமாக இருக்கிறார். சில கட்டுரைகளை உரை திருத்திக் காட்டி உதவுமாறு வேண்டுகிறேன். கவனிக்க: @Kanags, Nan, Balurbala, Booradleyp1, and Selvasivagurunathan m: . நன்றி.--இரவி (பேச்சு) 14:47, 19 சூலை 2017 (UTC)Reply


வணக்கம் பயனர்:TNSE ruby tlr, தாங்கள் எழுதிய சல்மான் மீன் கட்டுரையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மேம்பாட்டினைக் காண்க.நன்றி--இரா. பாலாபேச்சு 09:15, 20 சூலை 2017 (UTC)Reply

வேங்கைத் திட்டத்தில் பங்கு பெறுவதற்கு வாழ்த்துகள்

தொகு

வணக்கம் பயனர்:TNSE ruby tlr, வேங்கைத் திட்டத்தின் கீழ் தங்கள் பெயரைப் பதிவு செய்து நான்கு கட்டுரைகள் எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து தங்களுக்கு விருப்பமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து பங்களியுங்கள். இந்திய மொழிகளில் தமிழ் முன்னிலை பெற உங்களின் பங்களிப்பும் இருக்கட்டும். வாழ்த்துகள்.மகாலிங்கம் (பேச்சு) 16:34, 28 ஏப்ரல் 2018 (UTC)

ஐயம்

தொகு

வனக்கம் பயனர்:TNSE ruby tlr. ஐரோப்பிய காட்டெருமை கட்டுரையில் நான் இணைத்த தகவற்பெட்டியை நீக்கிவிட்டு பின்னர் நீங்களே அதனை இணைத்திருக்கிரீர்கள். கட்டுரையின் தொகுப்புகள் வேங்கைப் போட்டியில் உங்களது கணக்கில் வரவேண்டும் என்பதால் இம்மாற்றம் செய்யப்பட்டதா! வேறு எவரும் அக்கட்டுரையைத் தொகுக்க வேண்டாம் என நினைத்தீர்களென்றால் கட்டுரையில் தொகுக்கப்படுகிறது என்ற வார்ப்புருவை இணைத்து விடுங்கள். சிறிது காலத்திற்கு வேறு எவரும் அக்கட்டுரையைத் தொகுக்க மாட்டார்கள்.

ஆனால் அக்கட்டுரையில் எனது தொகுப்புகள் அனைத்தையும் நீங்கள் அழித்து விட்டதால், கட்டுரையின் விக்கி வடிவிற்காக நான் செய்திருந்த சில மாற்றங்களும் எழுத்துப்பிழைத் திருத்தங்களும் சேர்ந்தே காணமால் போய்விட்டன.

கட்டுரையை நீங்கள் சற்று நேரம் கழித்தோ அல்லது அடுத்த நாட்களிலோ விரிவாக்கும் எண்ணம் இருந்தால் மறக்காமல் தொகுக்கப்படுகிறது என்ற வார்ப்புருவை இணைத்து விடுமாறும், பிற பயனர்கள் செய்த மாற்றங்களை அழிக்க வேண்டாம் எனவும் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 07:29, 1 மே 2018 (UTC) நான் அப்படி எதுவும் செய்யவில்லையே. நான் மாற்றங்களைப் பதிப்பிடுக என்று குறிப்பிடும்போது அது some problem in editing என்று கூறியது. நான் my text என்று கொடுத்த போது அது நான் செய்த மொழி பெயர்ப்பை காண்பிக்கவில்லை எனவே மற்றொரு option ஐ தேர்வு செய்தேன். எனக்கு நன்கு மொழி பெயர்க்க தெரியும் மற்ற படி விக்கி தொழில் நுட்பத்தில் நான் மிகவும் பின் தங்கியவளே. அறியாமல் ஏற்பட்ட பிழை மன்னிக்கவும்.Reply

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கூடுதல் பங்களிக்க வேண்டுகோள்

தொகு

வணக்கம்.

வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் பதிவு செய்து ஆர்வம் காட்டியமைக்கு நன்றி. இது அனைத்துப் போட்டியாளர்களுக்கும் பொதுவாக விடுக்கப்படும் செய்தி. 2 மாதங்கள் போட்டி கடந்துள்ள நிலையில் தமிழ் விக்கிப்பீடியா 400+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மே மாதமே போட்டிக்கான இறுதிக் காலம். இந்த இறுதிக் கட்டத்தில் உங்கள் மேலான பங்களிப்பை எதிர்பார்க்கிறேன்.

வழக்கமாக நடைபெறும் போட்டி என்றால், தற்போது முதல் இடத்தில் இருக்கும் பஞ்சாபியை விஞ்சி தமிழை வெற்றி அடைவதற்காக ஆதரவைக் கேட்பேன். ஆனால், இது ஒரு தொலைநோக்கு முயற்சி என்பதால், நம்முடைய பங்களிப்பு என்பது நாளை நம்மைப் போன்று இணையத்தில் வளரும் நிலையில் இருக்கும் இந்திய, ஆசிய, ஆப்பிரிக்க, தென்னமெரிக்க மொழிகளுக்கும் புதிய வழிமுறைகளின் கீழ் விக்கிப்பீடியாக்களை வளர்க்க உதவும். எனவே, நம்மைப் போல் பங்களிக்க இயலாத மற்ற அனைத்து மொழிகளுக்காகவும் சேர்த்து உங்கள் பங்களிப்பைக் கோருகிறேன்.

இது தான் இத்திட்டம் குறித்து நீங்கள் முதல் முறை அறிவதாக இருக்கலாம் என்பதால் சற்று சுருக்கமாகச் சொல்கிறேன்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

எடுத்துக்காட்டுக்கு, சரியான திட்டத்தைத் தீட்டி, அதற்கான நிதியைப் பெற இயலும் எனில் ஒரே ஆண்டில் தமிழ் விக்கிமூலம் தளத்தில் மில்லியன் கணக்கிலான தமிழ் இலக்கிய, வரலாற்றுப் பக்கங்களை ஏற்றலாம். இல்லையேல், இப்போது உள்ளது போல் தன்னார்வலர்கள் மட்டுமே தான் பங்களிக்க வேண்டும் என்றால் 100 ஆண்டுகள் ஆனாலும் அவற்றைச் செயற்படுத்திட முடியாது.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை. இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

நாம் 50 பேர் ஒவ்வொரு நாளும் 2 கட்டுரைகள் எழுதினாலும் இந்த மாதம் மட்டும் 3000 கட்டுரைகள் சேர்க்கலாம். இன்று வரை நீங்கள் முதல் கட்டுரையைத் தொடங்கியிருக்காவிட்டால் இன்று ஒரு கட்டுரையைத் தொடங்க வேண்டுகிறேன். இது வரை ஓரிரு கட்டுரைகள் மட்டும் பங்களித்திருந்தால் இன்னும் சில கட்டுரைகள் கூடுதலாகத் தர வேண்டுகிறேன். 10000க்கும் மேற்பட்ட தலைப்புகளின் கீழ் நீங்கள் கட்டுரைகளை எழுதலாம். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள்.

நன்றி.

இரவி 11:59, 1 மே 2018 (UTC)Reply


வேங்கைத் திட்டம்

தொகு

தொடர்ந்து பங்களித்து வருவதற்கு எனது மனமார்ந்த நன்றிகள். கடினமான தலைப்புகளைத் தேர்வு செய்து எழுதுவதற்கு எனது பாராட்டுகள் . எளிமையான தலைப்புகளின் (அனைத்து நாடுகள், மாநிலங்கள், நகரங்கள், பிரதம மந்திரிகள், ஆளுநர்கள்) கீழ் எழுதினால் போட்டியில் தமிழ் விக்கிபீடியா வெற்றி பெற சுலபமாக இருக்கும்Dsesringp (பேச்சு) 09:29, 7 மே 2018 (UTC) வாழ்க வளமுடன்..Reply

Thank you for keeping Wikipedia thriving in India

தொகு

I wanted to drop in to express my gratitude for your participation in this important contest to increase articles in Indian languages. It’s been a joyful experience for me to see so many of you join this initiative. I’m writing to make it clear why it’s so important for us to succeed.

Almost one out of every five people on the planet lives in India. But there is a huge gap in coverage of Wikipedia articles in important languages across India.

This contest is a chance to show how serious we are about expanding access to knowledge across India, and the world. If we succeed at this, it will open doors for us to ensure that Wikipedia in India stays strong for years to come. I’m grateful for what you’re doing, and urge you to continue translating and writing missing articles.

Your efforts can change the future of Wikipedia in India.

You can find a list of articles to work on that are missing from Wikipedia right here:

https://meta.wikimedia.org/wiki/Supporting_Indian_Language_Wikipedias_Program/Contest/Topics

Thank you,

Jimmy Wales, Wikipedia Founder 18:18, 1 மே 2018 (UTC)

குறிப்பு

தொகு

பின்வரும் விடயங்களைக் கவனித்திற் கொண்டு, கட்டுரைகளில் திருத்தம் செய்யவும்:

முன்மையானவை
  • கட்டுரைகள் கட்டாயம் மேற்கோள் கொண்டிருக்க வேண்டும். வெளியிணைப்பு, மேலதிக வாசிப்பு போன்றவை மேற்கோள் ஆகாது.
  • சரியான பகுப்பு(க்கள்) இணைக்கப்பட்டிருத்தல் வேண்டும். சிவப்பு இணைப்பு பகுப்பு மாத்திரம் இருப்பது ஏற்புடையதல்ல. காண்க: en:Wikipedia:Categorization
  • பிறமொழி விக்கிப்பீடியாக்களில் இருந்து மொழிபெயர்க்கும்போது விக்கித்தரவில் இணைக்கப்பட்டல் வேண்டும்.
அடுத்தவை
  • உரிய தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்படல் வேண்டும். ஆங்கில ஒலிபெயர்ப்பைக் கொண்ட கட்டுரைகள் தரமுயத்தலுக்கு உள்ளாக வேண்டியவையாகும். எ.கா: பிரிட்டனின் ராயல் கப்பல் படை - இதில் பிரித்தானிய அரச கடற்படை என தெளிவான தமிழில் எழுதலாம். காண்க: விக்கிப்பீடியா:எழுத்துப்பெயர்ப்புக் கையேடு, விக்கிப்பீடியா:நடைக் கையேடு
  • மிகவும் எளிமையான தமிழ் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கலாம். எ.கா: போர்கப்பல் - இதில் போர்க்கப்பல் என்பதே சரி. மேலும், மொழிமுதல் எழுத்துக்கள் என்பதற்கேற்ப, குறைந்தது மெய்யெழுத்துக்களை முதலில் கொண்டு சொற்கள் அமைப்பதைத் தவிர்க்கலாம்.
  • முடிந்தவரை வடமொழிச் சொற்களை அல்லது பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து, நல்ல தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தலாம். எ.கா: தேனீக்களின் கூட்டில் ஆக்ரோஷமாக நுழைந்து.
  • கட்டுரைகள் {{விக்கியாக்கம்}}, {{Cleanup}} என்பவற்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதை கருத்திற்கொள்ளுங்கள். கட்டுரைகளின் எண்ணிக்கையைவிட, தரமே இங்கு முக்கியம்.
  • மேலதிக உதவி தேவைப்படின், விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம் உங்களுக்குப் பயன்படும்.

தயவுசெய்து வழிகாட்டல்களை அலட்சியம் செய்யாது, அவற்றுக்கேற்ப பங்களியுங்கள். நன்றி! --AntanO (பேச்சு) 02:04, 22 மே 2018 (UTC)Reply

தமிழ் வெல்லத் தோள் கொடுங்கள்!

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் பெயர் பதிந்த அனைவருக்கும் பொதுவாக விடுக்கும் செய்தி. இன்னும் சரியாக ஆறு நாட்களில், மே 31 ஆம் தேதியுடன் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி முடிவுபெறுகிறது. தமிழ் விக்கிப்பீடியா 920+ கட்டுரைகளுடன் இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. நம்மை முந்திச் செல்லும் பஞ்சாபி ஒவ்வொரு நாளும் சில கட்டுரைகள் முன்னணி வகித்து கடும் போட்டியைத் தருகிறது. இது வரை பல காரணங்களைச் சொல்லி உங்களிடம் இப்போட்டிக்கு ஆதரவு கேட்டிருக்கிறேன். இம்முறை ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். கடந்த மூன்று மாதமாக தமிழ் விக்கிப்பீடியர்கள் ஸ்ரீதர், மூர்த்தி, மகாலிங்கம், மயூரநாதன், செந்தமிழ்க்கோதை, நந்தினி, மணியன், அருளரசன், மணிவண்ணன், பூங்கோதை, சிவக்குமார், உமாசங்கர் என்று ஒரு பட்டாளமே பல மணிநேரங்களைச் செலவழித்து கட்டுரைகளை எழுதிக் குவித்து வருகிறார்கள். தமிழ் வெல்ல வேண்டும், அதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான வாய்ப்புகள் கூட வேண்டும் என்பதே அவர்களின் முதன்மையான நோக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். போட்டியின் இறுதி நேரத்தில் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தோள் கொடுத்தால் அவர்கள் உழைப்பு பயன் மிக்கதாக மாறும். 171 பேர் இப்போட்டிக்குப் பெயர் பதிந்துள்ளோம். அனைவரும் ஆளுக்கு ஒரு கட்டுரை எழுதினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் போட்டியை வென்று விடலாம். இவ்வளவு பேரால் இயலாவிட்டாலும் நம்மில் வரும் ஆறு நாட்களில் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் வெல்ல முடியும். ஏற்கனவே போட்டியில் பங்கெடுத்துவர்கள் இன்னும் தங்கள் தீவிரத்தைக் கூட்ட முனையலாம்.

போட்டியில் பங்கு கொள்ள இங்கு வாருங்கள். இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் போட்டியின் பேச்சுப் பக்கத்தில் தயங்காது கேளுங்கள். போட்டிக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளைக் கவனியுங்கள். அங்கு உங்கள் ஆர்வத்துக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் இருந்து தலைப்புகளைத் தேர்தெடுக்கலாம். போட்டியில் ஈடுபட்டு வரும் நண்பர்கள் ஒரு முகநூல் அரட்டைக் குழுவில் இணைந்துள்ளோம். இதில் நீங்களும் இணைந்து கொண்டால் ஒருவருக்கு ஒருவர் உற்சாகப்படுத்தலாம். உங்கள் முகநூல் முகவரியை என் பேச்சுப் பக்கத்தில் தெரிவிக்கலாம். நாளையும் மறுநாளும் சனி, ஞாயிறு நாம் கூடுதல் கட்டுரைகளைத் தந்து முந்திச் சென்றால் தான் வெற்றி உறுதி ஆகும். அடுத்த வாரம் உங்களைத் தொடர்பு கொள்ளும் போது நாம் வெற்றி என்ற மகிழ்ச்சியான செய்தியுடன் உங்களைத் தொடர்பு கொள்ள விரும்புகிறேன். வாருங்கள். வெல்வோம். அன்புடன் --இரவி (பேச்சு)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

தொகு

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

தொகு

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

தொகு

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

தொகு

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

June 2019

தொகு

  வணக்கம், உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. AntanO (பேச்சு) 17:58, 3 சூன் 2019 (UTC)Reply

Project Tiger 2.0

தொகு

Sorry for writing this message in English - feel free to help us translating it

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

தொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
 
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

வேங்கைத் திட்டம் 2.0 வாழ்த்துகள்

தொகு

வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் தொடர்ந்து பங்களித்து வருவதற்கு வாழ்த்துகள். போட்டி முடிய இன்னும் பதினைந்து தினங்களே உள்ள நிலையில் முனைப்புடன் பங்காற்றி இந்திய மொழிகளில் தமிழை வெல்லச் செய்வோம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 12:35, 24 திசம்பர் 2019 (UTC)Reply

வேங்கைத் திட்டம் வெற்றியை நோக்கி

தொகு

வணக்கம். வேங்கைத் திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் இறுக்கிறோம்.தமிழ்ச் சமூகம் வெற்றியை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறோம். ஆளுக்கு ஒரு கட்டுரை என்று இலக்கு வைத்தாலும் ஆறு நாட்களில் கட்டுரை எண்ணிக்கை மூவாயிரத்தை எட்டிவிடுவோம். எனவே தொடர்ந்து தங்களின் பங்களிப்பை இதே உற்சாகத்துடன் வழங்குங்கள். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:54, 4 சனவரி 2020 (UTC)Reply

விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020

தொகு

வணக்கம். விக்கி இந்தியப்பெண்களை நேசிக்கிறது- தெற்காசியா 2020 திட்டமானது, விக்கிப்பீடியாவில் பாலின வேறுபாட்டினைக் குறைப்பதற்காகவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரை எண்ணிக்கையை அதிகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டமாகும். இந்த 2020 ஆம் ஆண்டு விக்கி பெண்களை நேசிக்கிறது திட்டமானது விக்கி நேசிப்புத் திட்டத்துடன் கூட்டிணைந்து, நாட்டுப்புற கலாச்சாம் சார்ந்த கருப்பொருளுடன் பெண்ணியம், பெண்கள் தன்வரலாறு, பாலின இடைவெளி மற்றும் பாலினத்தை மையமாகக் கொண்ட தலைப்புகளில் கவனம் செலுத்துகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பெண்கள், பெண்ணியம், பாலினம் தொடர்பான திருவிழாக்கள் மற்றும் அன்புச் சடங்குகள் குறித்ததாக இருத்தல் வேண்டும். மேலதிக விவரங்களுக்கு இங்கு காணவும். எத்திட்டமாயினும் முதலிடத்தில் இருக்கும் தமிழ்ச்சமூகம் பெண்கள் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்துவதில் ஆதரவினையும், பங்களிப்பினையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:33, 17 சனவரி 2020 (UTC)Reply

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

தொகு
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. Nitesh Gill (talk) 15:57, 10 June 2020 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

வேங்கைத்திட்டப் பயிற்சி 2022

தொகு

வணக்கம்.

இந்த கருவியின் தரவுப்படி, நீங்கள் வேங்கைத்திட்டம் 2.0 போட்டியின் தமிழ்ப் பிரிவில் பங்கு பெற்றவரில் நீங்களும் ஒருவர். எனவே, விக்கிப்பீடியா பேச்சு:வேங்கைத் திட்டப் பயிற்சி 2022 என்ற பக்கத்தில், அப்போட்டியின் நடுவராக இருந்த காரணத்தால், உங்கள் வழிகாட்டல்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன். அடுத்து வரவிருக்கும் போட்டி சிறப்பாகத் திகழவும் உங்கள் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். --உழவன் (உரை) 11:08, 9 சூன் 2022 (UTC)Reply

தமிழ் விக்கிமேனியா 2022 - ஏற்பாடுகள் தொடர்பான கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

ஆகத்து 14, 2022 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கிமேனியா சந்திப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள். சந்திப்பில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் இப்பக்கத்தில் தமது விருப்பத்தைத் தெரிவிக்கலாம்; நன்றி!

- விழா ஏற்பாட்டுக் குழு

விக்கி மாரத்தான் 2022 தொடர்பாக கருத்திட அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பரில் நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் நிகழ்வு குறித்து கருத்திட தங்களை கேட்டுக் கொள்கிறோம். தங்களின் கருத்துகளை இங்கு பதிவு செய்யுங்கள்.

இணையத்தில் நடக்கும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பங்களிக்க விரும்புபவர்கள் தமது விருப்பத்தை இங்கு பதிவு செய்யலாம்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்

கூகுள் தமிழாக்கக் கட்டுரைகளை செம்மைப்படுத்தும் திட்டம்

தொகு

வணக்கம். சுமார் 530 கட்டுரைகள், 102 எண்ணிக்கையிலான பகுப்புகளுக்குள் அடங்கும்வகையில் வகைப்பிரித்தல் நடந்துள்ளது. இதனை பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் எனும் பக்கத்தில் காணலாம். மற்ற 480 கட்டுரைகள் பகுக்கப்பட்டு வருகின்றன. இப்பணியானது அடுத்த ஞாயிறன்று நிறைவடையும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:53, 18 செப்டம்பர் 2022 (UTC)

விக்கி மாரத்தான் 2022 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2022

வணக்கம்!

செப்டம்பர் 25, 2022 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2022 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

- ஒருங்கிணைப்பாளர்கள்


பங்கேற்க உள்ளேன். அழைப்பிற்கு நன்றி TNSE ruby tlr (பேச்சு) 16:54, 20 செப்டம்பர் 2022 (UTC)

வேங்கைத்திட்டப் பயிற்சியில் கலந்து கொள்ள அழைப்பு

தொகு
வணக்கம். வேங்கைத் திட்டம் 2.0 போட்டியில் இந்திய அளவில் தமிழ் விக்கிப்பீடியா சமூகம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அளிக்கப்படவுள்ள மூன்று நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சியானது பெரும்பான்மையோரின் கருத்துகளின் படி சனவரி 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கோவை அருகே உள்ள ஆனைக்கட்டியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள விரும்பும் பயனர்களுக்கான நிதிநல்கைப் படிவம் திறக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கெனவே வேங்கைத்திட்டம் கட்டுரைப் போட்டியில் பங்கு பெற்றதன் காரணமாக இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது. நிதிநல்கைப் படிவமானது நவம்பர் 15 முதல் நவம்பர் 30 வரை மட்டுமே திறந்திருக்கும். நீங்கள் இந்தப் பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள்

செம்மைப்படுத்துதலில் பங்கேற்க அழைப்பு

தொகு

வணக்கம், விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தும் விதமாக துப்புரவுப் பணிகள் நடப்பதை தாங்கள் அறிவீர்கள். அதன் ஒரு முயற்சியாக 2017ஆம் ஆண்டில் தமிழக ஆசிரியர்களால் தொடங்கப்பட்ட கட்டுரைகளை தற்போது செம்மைப்படுத்தி வருகிறோம். அதில் தாங்களும் பங்குபெற்று விக்கிப்பீடியாவின் தரத்தினை உயர்த்தவும், நினைவுப் பரிசினைப் பெறுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.திட்டப்பக்கம் :செம்மைப்படுத்துதல் பணிக்கான சிறப்புக் காலாண்டு நன்றி-- ஒருங்கிணைப்பாளர்கள் Selvasivagurunathan m,Sridhar G

தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடலுக்கான அழைப்பு

தொகு

வணக்கம்!

செப்டம்பர் 30 அன்று தமிழ் விக்கிப்பீடியாவின் 20ஆவது பிறந்தநாள் அமைகிறது. 20 ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடுவதற்காக தமிழ் விக்கிப்பீடியர்கள் சந்திக்கும் நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூடல் நிகழ்வில் கலந்துகொள்ள தங்களை அழைக்கிறோம்.

நிகழ்வில் கலந்துகொள்ளவும், பயணச் செலவுகளுக்கான நிதிநல்கையைப் பெறுவதற்கும் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இருபதாண்டுகள் நிறைவுக் கூடல் எனும் திட்டப் பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகத்து 27 (அன்றிரவு 12 மணி வரை)

- ஒருங்கிணைப்புக் குழு

தங்களின் கவனத்திற்கு

தொகு

வணக்கம். மொழிபெயர்ப்புக் கருவி மூலமாக உருவாக்கும் கட்டுரைகளை மேம்படுத்துங்கள். இல்லையெனில் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:43, 18 மார்ச்சு 2024 (UTC)Reply

நான் அவைகளை அப்படியே போடுவது இல்லையே. அவைகளை மறுபடி திருத்திதான் போடுகிறேன். ஓரிரு தவறுகளை சுட்டிக் காட்டினால் அதை வைத்து மேலும் என்னுடைய நடையை மேம்படுத்திக் கொள்வேன். நன்றி. TNSE ruby tlr (பேச்சு) 11:22, 19 மார்ச்சு 2024 (UTC)Reply

படே நாகஜோதி கட்டுரை

தொகு

[1] நாகஜோதி ஒரு சர்பஞ்சாக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், 2019 ஆம் ஆண்டில் தனது சொந்த கிராமமான கலாவப்பள்ளியில் உள்ளூர் மாவட்ட பரிஷத் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்றார். (இயந்திரம் தான் சில சமயங்களில் இப்படி மேற்கோளோடு கட்டுரையின் பத்தியை தொடங்கும்)

ஆனால் மனித உழைப்பு கீழ்கண்ட முறையில் அமையும்:

நாகஜோதி தனது அரசியல் வாழ்க்கையை ஒரு சர்பஞ்சாகத் தொடங்கினார். 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளூர் சில்லா பரிசத் தேர்தலில் தனது சொந்த கிராமமான கலவப்பள்ளியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

அஞ்சலி தமானியா கட்டுரையையும் கவனிக்கவும்.--கி.மூர்த்தி (பேச்சு) 11:39, 19 மார்ச்சு 2024 (UTC)Reply

தங்கள் உதவிக்கு நன்றி. தாங்கள் சுட்டிக் காட்டிய படி. மேற்கோள்கள் இடம் மாற்றியும் ஒரு சில திருத்தங்களும் செய்துள்ளேன் TNSE ruby tlr (பேச்சு) 05:23, 20 மார்ச்சு 2024 (UTC)Reply

--AntanO (பேச்சு) 18:44, 19 மார்ச்சு 2024 (UTC)Reply

  1. 1.0 1.1 Bade Nagajyothi about Her Family Background | Mulugu BRS | Bade Nagajyothi Biography | Mic TV News (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2023-12-12Bade Nagajyothi about Her Family Background | Mulugu BRS | Bade Nagajyothi Biography | Mic TV News, retrieved 2023-12-12
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_ruby_tlr&oldid=3913011" இலிருந்து மீள்விக்கப்பட்டது