அஞ்சலி தமானியா

அஞ்சலி அனிஷ் தமானியா (Anjali Anish Damania) ஒரு இந்திய ஊழல் தடுப்பு ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். [1]ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) மகாராஷ்டிரா மாநில பிரிவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார். 2011-12 இன் போது, கோந்தனே அணை திட்டத்தில் நடந்த ஊழலை அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். [2]பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்கரி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாருடன் வணிகக் கூட்டு வைத்திருப்பதாக குற்றம் சாட்டிய பின்னர் அவர் 2012 இல் வெளிச்சத்திற்கு வந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் நாக்பூர் தொகுதியில் கட்கரிக்கு எதிராக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை [3], மார்ச் 2015 இல், தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான குதிரை வர்த்தகம் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவர் ஆம் ஆத்மி கட்சியை விட்டு வெளியேறினார். சாகன் புஜ்பால் மற்றும் ஏக்நாத் கட்சே போன்ற சக்திவாய்ந்த அரசியல்வாதிகளுக்கு எதிராக அவர் பல பொதுநல மனுக்களை தாக்கல் செய்துள்ளார். [4][5] ஏக்நாத் கட்சே ராஜினாமா செய்யக் கோரி 2016 ஜூன் 2 அன்று அவர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார், இதன் விளைவாக கட்சே மகாராஷ்டிரா மாநில வருவாய் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

Anjali Damania
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்Indian
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி (2012—present)
துணைவர்Anish Damania
பிள்ளைகள்2
வேலைPolitician
தொழில்நோயியல்

ஊழல் எதிர்ப்பு இயக்கம்

தொகு

ஏக்நாத் கட்சே விவகாரம்

தொகு

தனது போசாரி எம்ஐடிசி நில அபகரிப்பு வழக்கில் கட்சே தனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஊழல் செய்ததாகவும் அஞ்சலி தமானியா குற்றம் சாட்டினார். அவர் கட்சேவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார், மேலும் விசாரணை கோரினார். அவர் மீது பிஐஎல் தாக்கல் செய்தார். [6]. கட்சே அதற்கு பதிலடியாக, தனக்கு எதிராக தவறான மற்றும் அவதூறான அறிக்கைகளை அளித்ததாகக் கூறி முக்தைநகர் காவல் நிலையத்தில் அஞ்சலி தமானியா மீது வழக்கு பதிவு செய்தார்.

கொண்டானே அணை பிரச்சினை

தொகு

நோயியல் நிபுணரான அஞ்சலி தமானியா, ராய்காட் மாவட்டத்தின் கொண்டிவடே கிராமத்தில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் பண்ணை ஒன்றை வைத்திருந்தார். 2011 ஆம் ஆண்டில், கோந்தனே அணை கட்டுவதற்காக அவரது நிலம் கையகப்படுத்தப்படும் என்று கூறி அரசாங்கம் அவருக்கு ஒரு அறிவிப்பை அனுப்பியது. ஜூன் 2011 இல், அவர் நீர்ப்பாசனத் துறைக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார், அணையின் இருப்பிடத்தைக் கேட்டு, தனது நிலம் நீரில் மூழ்குமா என்பதைச் சரிபார்க்க விரும்பினார்.[7] பின்னர் அவர் வெளிநாடு சென்றார். ஆகஸ்ட் மாதம் அவர் திரும்பி வந்தபோது, அணையின் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டிருப்பதைக் கண்டார். இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் அறிய அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளை தாக்கல் செய்தார். ஆரம்பத்தில், அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. தலைமை தகவல் ஆணையரிடம் (சிஐசி) புகார் அளித்த பிறகு, அவர் பதில்களைப் பெற்றார் மற்றும் பல முறைகேடுகளைக் கண்டறிந்தார். ஒப்பந்தம் வழங்கப்பட்ட ஒரு மாதத்தில் திட்டத்தின் செலவு ₹560 மில்லியனிலிருந்து (7 அமெரிக்க டாலர்கள்) ₹3.08 பில்லியனாக (41 மில்லியன் அமெரிக்க டாலர்களாக) உயர்ந்திருப்பதை அவர் கண்டறிந்தார். அணையின் உயரத்தை 39 மீட்டரிலிருந்து 71 மீட்டராக உயர்த்த வேண்டும் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதியின் கோரிக்கையின் விளைவாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டது. ஏப்ரல் 2012 இல், மற்றொரு நில உரிமையாளர் அஜய் மதங்கருடன் சேர்ந்து, அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் வழக்கை (பில்) தாக்கல் செய்தார். வழக்கு, இறுதியில் திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்ய அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது. [7] மாவட்டத்தில் உள்ள கலு அணை, ராய்காட் மாவட்டத்தில் உள்ள பால்கங்கா அணை மற்றும் தானே மாவட்டத்தில் உள்ள ஷாய் அணை போன்ற பிற திட்டங்களிலும் இதேபோன்ற செலவு அதிகரிப்புகளை அவர் கவனித்தார். [8]விஜய் பாண்டாரே அம்பலப்படுத்திய பெரிய மகாராஷ்டிரா நீர்ப்பாசன ஊழலின் ஒரு பகுதியாக இந்த முறைகேடுகள் கண்டறியப்பட்டன.

நிதின் கட்காரி மீது குற்றச்சாட்டு

தொகு

செப்டம்பர் 2012 இல், மகாராஷ்டிரா நீர்ப்பாசன ஊழலை விவரிக்கும் விஜய் பாண்டாரே கடிதம் ஊடகங்களுக்கு கசிந்தது, இது நீர்ப்பாசன அமைச்சர் அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மருமகன்) ராஜினாமா செய்ய வழிவகுத்தது. அதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி தலைவர் நிதின் கட்கரியை மூன்று முறை -2011 இல் இரண்டு முறையும் ஆகஸ்ட் 14,2012 அன்று - ஒரு முறையும் சந்தித்ததாக அஞ்சலி தமானியா கூறினார். பொது நலனுக்காக இதுபோன்ற வழக்குகளைத் தொடருமாறு கேட்டுக்கொண்டார். [9][10] பவாருடன் தனக்கு வணிக உறவு இருப்பதால் அவர் மீதான வழக்கை பின் தொடர முடியாது என்று கட்கரி தன்னிடம் கூறியதாக, அவர் குற்றம் சாட்டினார். கட்கரி குற்றச்சாட்டுகளை நிராகரித்தார், அவர் ஒருபோதும் தமனியாவை சந்தித்ததில்லை என்று கூறி, அவதூறு வழக்கு தொடர்ந்தார். [11] பவாருக்கும் கட்காரிக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று பாஜக மறுத்தது.

ஊழலுக்கு எதிராக பாஜக தலைவர் கிரிட் சோமையா பொதுநல மனுவை தாக்கல் செய்வதைத் தடுக்க கட்கரி முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அக்டோபர் 2012 இல், அவர் ஊடகங்களிடம், கட்கரி தனது அரசியல் தொடர்புகளை தவறாகப் பயன்படுத்தி குர்சாபூரில் உள்ள விவசாய நிலத்தை தனது நிறுவனமான புர்டி பவர் அண்ட் சுகர் லிமிடெட் (பிபிஎஸ்எல்) நிறுவனத்திற்காக அபகரித்ததாக கூறினார்.[7] அவரது குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா, கட்கரியின் நிறுவனத்தின் பங்குதாரர்களில் பலர் போலி நிறுவனங்கள் நிருவியதாக வெளிப்படுத்தியது. தொடர்ந்து, வருமான வரித்துறை கட்கரியின் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடத்தியது. யஷ்வந்த் சின்ஹா உட்பட பல கட்சித் தலைவர்கள் அவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, ஜனவரி 2013 இல் கட்கரி பாஜக தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. 2013 இல், அனைத்து விசாரணைகளும் ஊடகங்களின் மிகைப்படுத்தல்களும் இருந்தபோதிலும், தனக்கு எதிராக வைக்கப் பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கட்கரி கூறினார். கட்கரி மீதான தனது குற்றச்சாட்டுகளில் இருந்து பின்வாங்க தமனியா மறுத்துவிட்டார்.

கார்வண்டி நில சர்ச்சை

தொகு

ஏப்ரல் 2012 இல் கோந்தனே அணைக்கு எதிராக தமனியா பொதுநல மனுவை தாக்கல் செய்த பின்னர், கர்ஜத் வட்டத்தில் அவருக்குச் சொந்தமான அனைத்து நிலங்களும் குறித்து தாசில்தார் ஜகத்சிங் கிராஸ் விசாரணையைத் தொடங்கினார். நிலத்தை வாங்குவதற்கு தமனியா ஒரு விவசாயி என்பதற்கான போதுமான ஆதாரங்களை வழங்கவில்லை என்று கிராஸ் அறிவித்தார். இந்த நிலம் 2012இல் அரசாங்கத்தால் திரும்பப் பெறப்பட்டது. [12][13] பயன்பாட்டை மாற்றுவதற்குத் தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளையும் தான் பின்பற்றியதாகவும், அரசாங்க ஊழலை அம்பலப்படுத்தியதற்காக குறிவைக்கப்படுவதாகவும் தமானியா கூறினார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

2011 ஆம் ஆண்டில் அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான இந்தியா (ஐஏசி) இயக்கத்தில் சேர்ந்தார். அக்கட்சி பிரிந்த பிறகு, அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து, அதன் மகாராஷ்டிரா பிரிவின் ஒருங்கிணைப்பாளரானார்.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

தமானியாவின் கணவர் அனிஷ் தமானியா ஐடிஎப்சி பத்திரங்களில் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தமனி கூற்றுப்படி, அவரது தந்தை ஆர். எஸ். எஸ்ஸில் இருந்தார், எனவே அவர் ஊழல் எதிர்ப்பு சூழலில் வளர்க்கப்பட்டார். மும்பையின் பிரேம்லிலா வித்தல்தாஸ் பாலிடெக்னிக் நிறுவனத்தில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளோமா பட்டம் பெற்றார். பின்னர் அதே புலத்தில் புத்தாய்வு மாணவர் பட்டமும் பெற்றார் [சான்று தேவை][citation needed]

மேற்கோள்கள்

தொகு
  1. "Senior AAP Leader Anjali Damania quits the Party". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 5 June 2014.
  2. "Nifty crash raises political temperature". http://www.business-standard.com/article/economy-policy/nifty-crash-raises-political-temperature-112100702015_1.html. 
  3. "Anjali Damania quits AAP amid allegations of horse-trading against Arvind Kejriwal". TNN (timesofindia.indiatimes.com). http://timesofindia.indiatimes.com/india/Anjali-Damania-quits-AAP-amid-allegations-of-horse-trading-against-Arvind-Kejriwal/articleshow/46527691.cms. பார்த்த நாள்: 11 March 2015. 
  4. "As Eknath Khadse resigns, former AAP leader Anjali Damania ends hunger strike". The Indian Express (in Indian English). 2016-06-05. பார்க்கப்பட்ட நாள் 2019-08-22.
  5. "Ex-AAP leader Anjali Damania begins fast to seek Khadse's ouster". Business Standard India. https://www.business-standard.com/article/politics/ex-aap-leader-anjali-damania-begins-fast-to-seek-khadse-s-ouster-116060200466_1.html. பார்த்த நாள்: 2019-08-22. 
  6. "Now what exactly did BJP leader Khadse mean by boasting about his mangoes? - the New Indian Express".
  7. 7.0 7.1 7.2 Gadgil, Makarand (2012-09-27). "Anjali Damania: The lady who dug up an irrigation scam". Livemint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-22.
  8. "Reservoir of corruption". downtoearth.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-22.
  9. "BJP says Anjali Damania targeted Gadkari because of her own land issues" இம் மூலத்தில் இருந்து 2012-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121020234736/http://ibnlive.in.com/news/bjp-says-anjali-damania-targeted-gadkari-because-of-her-own-land-issues/301035-37-64.html. 
  10. . 
  11. "Anjali Damania accuses Nitin Gadkari of refusing to take up irrigation scam; BJP denies charge". http://indiatoday.intoday.in/story/anjali-damania-bjp-nitin-gadkari-irrigation-scam/1/222401.html. 
  12. "IAC activist Anjali Damania, who targeted Gadkari, faces heat over farm land deal". India Today/Headlines Today. 19 October 2012.
  13. "IAC member Anjali Damania bought farm land, then sold it after changing land use". 19 October 2012. http://archive.indianexpress.com/news/iac-member-anjali-damania-bought-farm-land-then-sold-it-after-changing-land-use/1018968/0. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_தமானியா&oldid=4108212" இலிருந்து மீள்விக்கப்பட்டது