விக்கிப்பீடியா பேச்சு:தொடர்-தொகுப்பு 2024/விரிவான திட்டமிடல்

திட்டமிடலுக்கான கூட்டம் 1

தொகு

முதல் கூட்டம் 06-ஏப்ரல்-2024 (சனிக்கிழமை) அன்று, இந்திய நேரம் இரவு 7 முதல் 8 மணி வரை நடைபெறும். கலந்துகொண்டு உங்களின் பரிந்துரைகளை வழங்கி, நிதி நல்கைக்கான முன்மொழிவை உருவாக்க உதவுங்கள். கூட்டத்தில் இணைவதற்கான இணைப்பு: https://meet.google.com/yox-pnih-mdt - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:04, 3 ஏப்பிரல் 2024 (UTC)Reply

உரையாடல் 1

தொகு

28-ஏப்பிரல்-2024 அன்று நடந்த மாதாந்திர இணையவழி கலந்துரையாடல்களின் போது இந்த நிகழ்வு குறித்தும் பேசப்பட்டது. தொடர்பங்களிப்பாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டு, இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன. நிதி நல்கைக்கான விண்ணப்பத்தில் இந்த இலக்குகள் குறிப்பிடப்படும். இந்த நிகழ்வில் பங்குபெறுபவர்களுக்கும் இந்த இலக்குகள் தெரிவிக்கப்படும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:09, 28 ஏப்பிரல் 2024 (UTC)Reply

சி.ஐ.எஸ் அமைப்பினருடன் இணையவழிக் கலந்துரையாடல் 1

தொகு
  • நாள்: 09-மே-2024
  • நேரம்: மாலை 5 மணி முதல் 6 மணி வரை
  • கலந்துகொண்டோர்:
  • சி.ஐ.எஸ் அமைப்பினருக்கு திட்டம் குறித்து PowerPoint slides மூலமாக விளக்கப்பட்டது.
  • திட்டத்திற்கான நிதிநல்கையை தங்களாலும் அளிக்க இயலும் என பவன் சந்தோசு தெரிவித்தார். மே 23 அன்று இதனை உறுதிப்படுத்துவதாக தெரிவித்தார்.
  • கூடுதலாக, Rapid Fund-க்குரிய விண்ணப்பத்தின் வரைவையும் தயாராக வைத்திருக்குமாறு முடிவெடுக்கப்பட்டது. விண்ணப்பத்தின் வரைவை மேம்படுத்த நிதேசு உதவுவார் என பவன் சந்தோசு தெரிவித்தார்.
  • இலங்கைப் பயனர் கலந்துகொள்வதற்குரிய ஏற்பாடுகள் குறித்து திட்டமிடுவதற்கும் சி.ஐ.எஸ் உதவும் என பவன் சந்தோசு தெரிவித்தார்.

@Balu1967 and TNSE Mahalingam VNR: ஆகியோரின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:57, 10 மே 2024 (UTC)Reply

சி.ஐ.எஸ் அமைப்பினருடன் மின்னஞ்சல் வழியான உரையாடல்கள்

தொகு

09-மே-2024 அன்று நடந்த கலந்துரையாடலின் அடிப்படையில், 24-மே-2024 அன்று சி.ஐ.எஸ் அமைப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. தற்போதுள்ள சூழ்நிலையில், Rapid Fund-க்கு விண்ணப்பிக்குமாறு Pavan Santhosh.S பதில் மின்னஞ்சல் அனுப்பினார். விண்ணப்பத்தைத் தயாரிப்பதற்கு Nitesh Gill, நிவாஸ் ஆகியோர் உதவி செய்வார்கள் என்று பவன் சந்தோசு அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வை தமிழ் விக்கிப்பீடியர்களுடன் ஒன்றிணைந்து நடத்த சி.ஐ.எஸ் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:39, 24 மே 2024 (UTC)Reply

  ஆதரவு --சத்திரத்தான் (பேச்சு) 15:36, 24 மே 2024 (UTC)Reply

நிதி உதவி கோரிக்கை குறித்தான இற்றைகள்

தொகு

01-சூன்-2024: நிதிக்கான விண்ணப்பத்தை சி.ஐ.எஸ் அமைப்பின் திட்ட அலுவலர் Nitesh Gill திறனாய்வு செய்தார். அவரின் பரிந்துரைகள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்யப்பட்டன. மேம்படுத்தப்பட்ட விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தகவல் பகிர்வு: @Balu1967, கி.மூர்த்தி, சத்திரத்தான், Sridhar G, TNSE Mahalingam VNR, Arularasan. G, Balajijagadesh, and Neechalkaran: - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:44, 1 சூன் 2024 (UTC)Reply

மிகச்சிறப்பு. தங்களின் முன்னெடுப்பிற்கும் தொடர் முயற்சிகளுக்கும் பாராட்டுகள். மகாலிங்கம் இரெத்தினவேலு 03:00, 2 சூன் 2024 (UTC)Reply
விரைவில் ஒப்புதல் பெற வாழ்த்துகள். -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 09:23, 3 சூன் 2024 (UTC)Reply

04-சூன்-2024: தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் தற்போது மேல்-விக்கியில் பதிப்பிடப்பட்டுள்ளது. தகவல் பகிர்வு: @Balu1967, கி.மூர்த்தி, சத்திரத்தான், Sridhar G, TNSE Mahalingam VNR, Arularasan. G, Balajijagadesh, and Neechalkaran: - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:02, 4 சூன் 2024 (UTC)Reply

Return to the project page "தொடர்-தொகுப்பு 2024/விரிவான திட்டமிடல்".