விக்கிப்பீடியா:மாதாந்திர இணையவழிக் கலந்துரையாடல்கள்/2024

சனவரி 2024

தொகு
  • நாள்: சனவரி 28, 2024
  • நேரம்: காலை 11 மணி (இந்திய நேரம்)
  • பங்குபெற்றவர்கள்: மா. செல்வசிவகுருநாதன், பிரயாணி, கி.மூர்த்தி, அருளரசன், தமிழ்ச்செல்வன், ஸ்வேதா, நீச்சல்காரன்.
  • உரையாடிய குறிப்புகள்:
  1. புதுப் பயனர்களுக்கான விக்கி அறிமுகம்
  2. விக்கிப்பீடியா:பெண்ணியமும் நாட்டார் மரபும் 2024
  3. meta:KaniTamil24
  4. விக்கிப்பீடியா:100விக்கிநாட்கள்

பெப்பிரவரி 2024

தொகு
  • நாள்: பெப்பிரவரி 18, 2024
  • நேரம்: இந்திய நேரம் காலை 11 மணி முதல் 12 மணி வரை
  • பங்குபெற்றவர்கள்: கி.மூர்த்தி, ஸ்ரீ. பாலசுப்ரமணியன், மா. செல்வசிவகுருநாதன், தமிழ்ச்செல்வன், கந்தசாமி
  • உரையாடிய குறிப்புகள்:
  1. பயனர் பெயர் குறித்து தமிழ்ச்செல்வன் அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கப்பட்டது.
  2. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பது குறித்தான அறிமுகம், கந்தசாமி அவர்களுக்கு தரப்பட்டது. தமிழ் விக்கிமூலத்தில் பங்களித்திருப்பதாகவும், விக்கிமூலம் குறித்து தனது ஐயங்களை அடுத்தக் கூட்டத்தில் கேட்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மார்ச்சு 2024

தொகு
  1. மேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள் - ஐயங்கள் தீர்க்கப்பட்டன. (அதன் பிறகு, சான்று எதுவும் தரப்படாத கட்டுரைகள் என்பதாக நகர்த்தப்பட்டன.)
  2. சிறப்புக் காலாண்டு - 'எளிய முறைக்கான பரிந்துரைகளுக்கு' வார்ப்புரு உருவாக்குமாறும் அதனை திட்டப் பக்கங்களில் இடுமாறும் பரிந்துரைக்கப்பட்டது.  Y ஆயிற்று
  3. உள்ளடக்க மொழிபெயர்ப்புக் கருவி - விரிவாக கலந்துரையாடப்பட்டது. தேவைப்படும் மேம்பாடுகளை செய்வதற்கு உதவி கேட்க வேண்டிய பக்கம் பற்றி தகவல் பெறப்பட்டது.
  4. தொடர்-தொகுப்பு 2024 - திட்டத்தின் நோக்கம் விளக்கப்பட்டது. பங்குகொள்வோருக்கு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும் என மூர்த்தி தெரிவித்தார்கள்.
  5. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறைகள் 2024 - திட்டத்தின் நோக்கம் விளக்கப்பட்டது.
  6. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை ஆழம் - விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேற்கொண்டு தகவல்களைத் திரட்டி, அடுத்த மாதாந்திரக் கூட்டத்தில் கலந்துரையாடுவதென முடிவெடுக்கப்பட்டது.
  7. இரண்டாவது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு (02-சூன்-2025, சென்னையில்) - முதற்கட்ட உரையாடல் நடத்தப்பட்டது.
  8. விக்கிப்பீடியா:நல்ல கட்டுரைகள் - ஸ்ரீதர். ஞா விளக்கினார்.
  9. இதழ்கள் கட்டுரைகளைப் பட்டியலிடல் - ஸ்ரீதர். ஞா விளக்கினார். தனது கருத்துக்களை பேச்சுப் பக்கத்தில் இடுவதாக நீச்சல்காரன் தெரிவித்தார்.
  10. மேற்கோள் இல்லாத கிரிக்கெட் குறித்த கட்டுரைகளில் மேற்கோள்கள் சேர்ப்பது குறித்து உரையாடப்பட்டது. கட்டணம் செலுத்தினால் மட்டுமே சேவை கிடைக்கக்கூடிய தளமாக cricketarchive.com ஆகியுள்ளதால், இதனைக் கையாள்வது எப்படி என்பது குறித்து உரையாடப்பட்டது. இது குறித்து விசாரிப்பதாக நீச்சல்காரன் தெரிவித்தார்.

ஏப்பிரல் 2024

தொகு
  1. கலந்துகொள்ள இருப்பவர்கள் மொத்தம் 25 பயனர்கள்; இதில் இந்தியப் பயனர்கள் 23 பேர், இலங்கைப் பயனர் ஒருவர், மலேசியப் பயனர் ஒருவர் என இறுதி செய்யப்பட்டது.
  2. தொடர் தொகுப்பு நடைபெறும் இரு நாட்கள், அதன் பிறகு நடக்கும் விக்கி மாரத்தான், தொடர்ந்து நடத்தப்படவிருக்கும் சிறப்புக் காலாண்டுத் திட்டங்கள் இவற்றிற்கான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
  • கட்டுரை ஆழம் குறித்து உரையாடப்பட்டது. தமிழ் மொழி, மலையாள மொழி விக்கிப்பீடியாக்களில் இருக்கும் பக்கங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகளை திரட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இத்தரவுகளின் அடிப்படையில் அடுத்தக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
  • 'பயிலகம்' அமைப்பின் வாயிலாக புதியவர்கள் பலர் கலந்துகொண்டனர். விக்கிப்பீடியா குறித்து சுருக்கமான முறையில் அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. அவர்களின் கேள்விகளுக்கு பதில் தரப்பட்டது. பயிலகம் அமைப்பின் நிர்வாகி / ஒருங்கிணைப்பாளர் மூலமாக பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டால், தொடர்பங்களிப்பாளர்கள் அதனை நடத்தித் தருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:56, 28 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

மே 2024

தொகு

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:20, 27 மே 2024 (UTC)[பதிலளி]

சூன் 2024

தொகு
  • நாள்: 30-சூன்-2024
  • நேரம்: இந்திய நேரம் காலை 11 மணி முதல் 12.30 மணி வரை
  • சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/bxh-jhny-ffk
  • உரையாடியவை:
  1. சூலை மாதத்தில் சென்னையில் நடைபெறவிருக்கும் தொடர்-தொகுப்பு நிகழ்வு - பதிவு செய்தலை தொடர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  2. செப்டம்பர் மாதத்தில் ஏற்காட்டில் நடைபெறவிருக்கும் தொடர்-தொகுப்பு நிகழ்வு - நிதிக் கோரிக்கை குறித்த இற்றை தரப்பட்டது.
  3. கட்டுரை ஆழம் அளவீடு குறித்து உரையாடப்பட்டது.
  4. தமிழ் விக்கிப்பீடியா - சி.ஐ.எஸ் இணைவாக்கம் தொடர்பான இற்றை தரப்பட்டது.
  5. திருநெல்வேலி பயிலரங்குத் திட்டத்தை நிறைவு செய்தல் குறித்தான இற்றை தரப்பட்டது.
  6. ஆகத்து மாதம்: சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில், 30 மாணவர்களுக்கு பயிற்சி வழங்குதல். (வாரம் 1 - விக்கிமீடியா திட்டங்கள் குறித்த அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியாவை பயன்படுத்துதல் குறித்த விளக்கம், பயனர் கணக்கு தொடங்குதல், தமிழ் விக்கிப்பீடியாவின் கூறுகள், தமிழ் விக்கிப்பீடியாவில் உலாவுதல். வாரம் 2 - தொகுத்தல் பயிற்சி, புதிய கட்டுரை எழுதுவதற்கான பயிற்சி).
  7. தமிழ்நாடு அறிவியல் இயக்க உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்குதல் குறித்து நா. ரெ. மகாலிங்கம் மேற்கொண்டு பணியாற்றுவார்.
  8. சி.ஐ.எஸ் நடத்தும் பயிற்சியாளர்களுக்கானப் பயிற்சி 20 செப்டம்பர் 2024 முதல் 22 செப்டம்பர் 2024 வரை நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. பயிற்சிகளை நடத்தும் தமிழ் விக்கிப்பீடியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:42, 30 சூன் 2024 (UTC)[பதிலளி]

சூலை 2024

தொகு
  1. நிகழ்வு நடக்கும் விடுதி அலுவலகத்துடனான ஒருங்கிணைப்பு: பாலு
  2. கலந்துகொள்பவர்களை தேர்ந்தெடுப்பதற்கான குழு: கி.மூர்த்தி, கு. அருளரசன், ஸ்ரீதர். ஞா, நீச்சல்
  3. கலந்துகொள்பவர்களுடனான தொடர்பாடல்: மகாலிங்கம் இரெத்தினவேலு
  4. நிகழ்வு வடிவமைப்பு: சத்திரத்தான்
  5. நிகழ்வு நடக்கும் இடத்தில் ஒருங்கிணைப்பு: நீச்சல்/பாலாஜி
  6. நிதி மேலாண்மை: மா. செல்வசிவகுருநாதன்
  • திசம்பர் மாதத்தில் நடத்துவதாக திட்டமிடப்பட்டு வரும் விக்கிப்பீடியா:அறிவுப் பகிர்வு 2024 நிகழ்வை 2 நாட்களுக்கு தொடர்ச்சியாக நடத்த பரிந்துரைக்கப்பட்டது.
  • தகவல் பரிமாற்றம்:
  1. Train The Trainer நிகழ்வினை அக்டோபர் மாதம் 18, 19, 20 ஆகிய நாட்களில் நடக்கிறது. இங்கு விண்ணப்பிக்கலாம்.
  2. சென்னையில் நடந்த சிறப்புத் தொடர்-தொகுப்பு நிகழ்வு குறித்து தெற்காசிய மாதாந்திரக் கூட்டத்தில் பயனர்:செல்வசிவகுருநாதன் விளக்கினார். விக்கிமீடியா நடத்தும் Diff வலைப்பூவில் இது குறித்து கட்டுரை ஒன்றினை வெளியிட, Rachit பரிந்துரைத்தார்.
  • மடிக்கணினி இல்லாத பயனர்களுக்கு அதனை வழங்கி உதவுவது குறித்து சிஐஎஸ் அமைப்பிடம் கோரிக்கை வைக்க பரிந்துரைக்கப்பட்டது.

- மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:54, 28 சூலை 2024 (UTC)[பதிலளி]

ஆகத்து 2024

தொகு
  • நாள்: 01-செப்டம்பர்-2024
  • நேரம்: இந்திய நேரம் காலை 11 மணி முதல் 12 மணி வரை
  • சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/jqp-keex-tqj
  • கலந்துகொள்பவர்கள்:
  • உரையாட வேண்டியவை:
  1. தொடர்-தொகுப்பு நிகழ்விற்கான ஏற்பாடுகள்.
  2. இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள விக்கிமூல மாநாடு பற்றி சில நிமிடங்கள் (பாலாஜி (பேசலாம் வாங்க!))

செப்டம்பர் 2024

தொகு

தொடர்-தொகுப்பு 2024 நேரடி நிகழ்வு செப்டம்பர் 28, 29 தேதிகளில் ஏற்காடு நகரில் நடைபெற்றது. எனவே, இந்த மாதத்தில் இணையவழிக் கலந்துரையாடல் நடைபெறவில்லை. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:07, 14 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

அக்டோபர் 2024

தொகு
  • நாள்: 27-அக்டோபர்-2024
  • நேரம்: இந்திய நேரம் காலை 11 மணி முதல் 12 மணி வரை
  • சந்திப்பிற்கான இணைப்பு: https://meet.google.com/vox-bwtz-tin
  • உரையாட வேண்டியவை:
  1. விக்கிப்பீடியா:சிறப்புத் தொடர்-தொகுப்பு 2025
  2. விக்கிப்பீடியா:மேம்பாடு/2025