ஒரு வேண்டுகோள்:

தொகு

சண்முகம், வணக்கம்! 'வண்டி' எனும் முக்கியக் கட்டுரையைத் தொடங்கியுள்ளேன். உங்களுக்கு போதிய நேரமிருப்பின்... ஆங்கிலக் கட்டுரையிலுள்ள 'Locomotion' எனும் பகுதியை தமிழாக்கம் செய்து இக்கட்டுரையில் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முன்பு உங்களிடம் கூறியபடிக்கு... இந்த வேண்டுகோளை இப்போது வைத்துள்ளேன். சிரமம் வேண்டாம், முடிந்தால் செய்யவும். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:12, 3 ஏப்ரல் 2012 (UTC)

வணக்கம் செல்வகுருநாதன்.. நாளையுடன் model exam முடிகிறது... நாளை இரவுக்குள் கண்டிப்பாக மொழிபெயர்த்து சேர்த்து விடுகிறேன் சரிதானே...--shanmugam (பேச்சு) 16:32, 3 ஏப்ரல் 2012 (UTC)
நன்றி சண்முகம்! படிப்பிற்கு முதலிடம் தரவும்; 'Locomotion' பகுதியை நீங்கள் முடிக்க 1 வாரம் அவகாசம் உள்ளது. பொறுமையாக செய்யலாம்.ஏனெனில் இது பெரிய பகுதியாகும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:07, 3 ஏப்ரல் 2012 (UTC)

பதக்கம்

தொகு
  சிறப்புப் பதக்கம்
ஆட்கேட் மூலம் கட்டுரைகளுக்குப் பகுப்புகளை இணைத்துத் தொடர்ச்சியாகப் பங்களித்து வருவதற்காக இப்பதக்கம் வழங்கப்படுகின்றது. மதனாஹரன் (பேச்சு) 14:05, 19 ஏப்ரல் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது


நன்றி மதனாஹரன் :)--shanmugam (பேச்சு) 14:08, 19 ஏப்ரல் 2012 (UTC)

Talk back

தொகு
Hello Shanmugam, You've a message at my talk page. Regards, Lovysinghal (பேச்சு) 04:34, 9 மே 2012 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா திட்டம்

தொகு



நிருவாக அணுக்கம்

தொகு

தங்களைத் தமிழ் விக்கிப்பீடியாவில் நிருவாகியாக்கும்படி விக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள் எனும் பக்கத்தில் பரிந்துரைப்பதற்கு உங்கள் ஒப்புதலை வேண்டுகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 10:50, 18 மே 2012 (UTC)Reply

நன்றி மதனாகரன். விக்கியில் தளப் பாரமரிப்பு பணிகளுக்கு இது உதவும் என்பதால் எனக்கு ஒப்பமே.--shanmugam (பேச்சு) 10:56, 18 மே 2012 (UTC)Reply

விக்கி மாற்றி

தொகு

பட்டியல் பக்கங்களை இலகுவில் தமிழாக்க விக்கி மாற்றி உதவலாம்--இரவி (பேச்சு) 10:39, 21 மே 2012 (UTC)Reply

நன்றி இரவி. முயன்று பார்க்கிறேன்--சண்முகம் (பேச்சு) 10:47, 21 மே 2012 (UTC)Reply

நிருவாக அணுக்கம்

தொகு

உங்களுக்கு நிருவாக அணுக்கம் தரப்பட்டுள்ளது , உங்களுடைய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:42, 26 மே 2012 (UTC)Reply

நன்றி தினேஷ்--சண்முகம் (பேச்சு) 07:02, 26 மே 2012 (UTC)   விருப்பம் -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:18, 26 மே 2012 (UTC)Reply

வாழ்த்துகள்! --மதனாகரன் (பேச்சு) 07:09, 26 மே 2012 (UTC)Reply

நன்றி மதன்--சண்முகம் (பேச்சு) 07:14, 26 மே 2012 (UTC)Reply

வாழ்த்துக்கள் சண்முகம்!--கலை (பேச்சு) 10:42, 26 மே 2012 (UTC)Reply

மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 10:45, 26 மே 2012 (UTC)Reply

வாழ்த்துகள் சண்முகம். தங்களுக்கு நிருவாக அணுக்கம் தரப்பட்டது சரியான தேர்வு-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:08, 26 மே 2012 (UTC)Reply

மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 11:57, 26 மே 2012 (UTC)Reply

வாழ்த்துக்கள் ஐயா..! அப்படியே கொஞ்சம் இந்த பக்கத்தையும், இந்த பக்கத்தையும் கவனிக்க. நான் வார்ப்புரு இட்டு பல நாட்களாகியுள. நீங்களும் பயிற்சி எடுத்தது போலிருக்கும். நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:49, 26 மே 2012 (UTC)Reply

மிக்க நன்றி தென்காசியாரே .. (ஐயாவா? :) ) கண்டிப்பாக கவனிக்கிறேன்.. ஏற்கனவே ரோஜா (திரைப்படம்) கட்டுரையை ஒன்றிணைத்து விட்டேன்--சண்முகம் (பேச்சு) 11:57, 26 மே 2012 (UTC)Reply
வாழ்த்துகள் சண்முகம்.--Kanags \உரையாடுக 12:23, 26 மே 2012 (UTC)Reply
நன்றி kanags--சண்முகம் (பேச்சு) 12:25, 26 மே 2012 (UTC)Reply
பட்டம் பெற்ற கையுடன் புதிய பொறுப்பையும் ஏற்கும் தங்களுக்கு வாழ்த்துகள் சண்முகம் ! உங்களது விக்கிப்பணி மென்மேலும் சிறந்திட இவ்வணுக்கம் துணை புரியும் என்பதில் ஐயமில்லை.--மணியன் (பேச்சு) 18:23, 26 மே 2012 (UTC)Reply
மிக்க நன்றி மணியன் :)--சண்முகம் (பேச்சு) 03:10, 27 மே 2012 (UTC)Reply
நல்வாழ்த்துகள் சண்முகம்!--செல்வா (பேச்சு) 17:25, 28 மே 2012 (UTC)Reply
நன்றி செல்வா--சண்முகம் (பேச்சு) 17:28, 28 மே 2012 (UTC)Reply
வாழ்த்துகள்! (நிர்வாகிகள் பட்டியல் தொகுப்பில் தங்கள் பெயரைச் சேர்த்த நான் பின்னர் வாழ்த்து தெரிவிக்க மறந்து போயிருக்கிறேன்.) --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 17:32, 28 மே 2012 (UTC)Reply
இருவருக்கும் மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 01:34, 29 மே 2012 (UTC)Reply
நிர்வாகி அணுக்கம் உங்கள் பணியை மேலும் சிறப்பாக்கும் என்பது எனது நம்பிக்கை. வாழ்த்துக்கள் சண்முகம். --- மயூரநாதன் (பேச்சு) 18:33, 30 மே 2012 (UTC)Reply
மிக்க நன்றி -சண்முகம் (பேச்சு) 01:53, 31 மே 2012 (UTC)Reply

பலரது நம்பிக்கைக்கு ஏற்ப, நீங்கள் மிகச் சிறப்பாக நிருவாகப் பொறுப்பு ஆற்றி வருவதையும் பல பயனர்களுக்கு உதவியாக இருப்பதையும் கண்டு மகிழ்கிறேன். தொடர்க உங்கள் பங்களிப்பு ! நன்றி--இரவி (பேச்சு) 13:45, 24 சூன் 2012 (UTC)Reply

நன்றி இரவி--சண்முகம்ப7 (பேச்சு) 13:48, 24 சூன் 2012 (UTC)Reply

நன்றி

தொகு
 
நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 11:08, 26 மே 2012 (UTC) +1 ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:08, 30 மே 2012 (UTC)Reply

நிருவாகி வார்ப்புரு

தொகு

உங்கள் பயனர் பக்கத்தில் {{User wikipedia/Administrator}} என்ற வார்ப்புருவை இணைத்து விட்டால் நீங்கள் ஒரு நிருவாகி என்பதை ஏனைய பயனர்கள் அறிந்து கொள்வார்கள். அவ்வார்ப்புருவை இணைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். --மதனாகரன் (பேச்சு) 12:03, 26 மே 2012 (UTC)  Y ஆயிற்று--சண்முகம் (பேச்சு) 12:07, 26 மே 2012 (UTC)Reply

உங்களுக்கான பதில்

தொகு

விக்கிமூலத்தில் பதலளித்துள்ளேன். பார்க்கவும். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:52, 31 மே 2012 (UTC) +1-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:58, 5 சூன் 2012 (UTC)Reply

கட்டுரைகளை ஒன்றிணைத்தல்

தொகு

வணக்கம் சண்முகம். அன்னம், அன்னப்புள் கட்டுரையை ஒன்றிணைத்தலில் ஏதோ குழப்பம் செய்துவிட்டேன். என நினைக்கிறேன். உதவவும்... -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 13:31, 31 மே 2012 (UTC)Reply

வணக்கம். நானும் பார்த்தேன்.. உங்கள் பேச்சுப்பக்கத்திற்கு சென்று புதிய தலைப்பை சேர் பொத்தானை அழுத்தினேன் அதற்குள் தாங்களே கேட்டுவிட்டீர்கள் :).. முதலில் திருத்திய சரியான (அன்னம்) கட்டுரையை மற்றொரு தலைப்பிற்கு (அன்னப்புள்) நகர்த்தி விடுங்கள். அப்போது நீக்கிவிட்டு நகர்த்தவா என கேட்கும்.. ஆம் நீக்கிவிட்டு நகர்த்து எனும் பொத்தனை அழுத்துங்கள். பிறகு இரண்டாவது (அன்னப்புள்) கட்டுரையையும் நீக்கி விடுங்கள்.. பிறகு நீக்கப் பட்ட தொகுப்புகளைப் பார்க்கவா? மீள்விக்கவா? என்றொரு தேர்வு வரும். அல்லது நீக்கல் பதிவில் அன்னப்புள் கட்டுரையைச் சொடுக்கி பார்க்க அல்லது மீட்டெடு தேர்வை சொடுக்கவும் .. இப்போது இரண்டு நீக்கல் பதிவும் தெரியும். எதையும் தேர்வு செய்யாமல் மீட்டெடு தேர்வை சொடுக்கவும்.. பிறகு அன்னப்புள் கட்டுரையை முதன்மைத் தலைப்பிற்கு (அன்னம்) கட்டுரைக்கு நகர்த்தி விடுங்கள் .. அவ்வளவுதான் :)--சண்முகம் (பேச்சு) 13:40, 31 மே 2012 (UTC)Reply
சரியாகவெ செய்துள்ளீர்கள்.. பக்க வரலாறை பார்ப்பதன் மூலம் இதனை சரிபார்க்கலாம்.. இரண்டு கட்டுரையின் பக்க வரலாறும் இணைத்திருக்கும்--சண்முகம் (பேச்சு) 14:31, 31 மே 2012 (UTC)Reply

வார்ப்புரு:பயனர் தகவல் பெட்டி

தொகு
 
உங்களுக்காக புதிய தகவல்கள் உள்ளன
வணக்கம், Shanmugamp7. உங்களுக்கான புதிய தகவல்கள் Anton இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.


படிமங்கள் & பதிப்புரிமை

தொகு

காலபந்து தொடர்பான கட்டுரைகளை மொழிபெயர்த்தபோது ஆங்கில விக்கியில் இருந்த படிமங்களை எடுத்து அவ்வாறே பதிவேற்றிவிட்டேன். Non-free logo என்ற டேகை இணைத்துள்ளீர்கள். அவை பதிப்புரிமைச் சிக்கல் கொண்ட படிமங்களா? அவ்வாறாயின் அவற்றை நீக்கிவிடுங்கள்.--Senthilvel32 (பேச்சு) 12:47, 20 சூன் 2012 (UTC)Reply

அவற்றை நீக்கத் தேவையில்லை செந்தில். விக்கிப்பீடியாவில் கடுமையான பதிப்புரிமை விதிகள் பின்பற்றப்படுகின்றன. எனவே ஒவ்வொரு கோப்பிற்கும் சரியான காப்புரிமை விவரங்கள் இணைக்கப்பட வேண்டும். பார்க்க விக்கிப்பீடியா:நியாயமான பயன்பாடு.. எனவே இனி பதிவேற்றும் போது ஆங்கில விக்கியில் edit செய்து அதில் உள்ள விவரங்களை (காப்புரிமை வார்ப்புரு மட்டுமாவது) இங்கேயும் இணைத்து விடுங்கள். இது பற்றி தங்களிடம் நானே கூறலாம் என்றிருந்தேன் :).--சண்முகம்ப7 (பேச்சு) 12:55, 20 சூன் 2012 (UTC)Reply
சரியாகக் கவனிக்காமல் அவ்வாறு சேரத்துவிட்டேன். இனி, நீங்கள் கூறியதுபோல இணைத்துவிடுகிறேன். தகவலுக்கு நன்றி!!!--Senthilvel32 (பேச்சு) 13:03, 20 சூன் 2012 (UTC)Reply

பகுப்பு

தொகு

வணக்கம். பகுப்பு:கணிதவியளாலர்கள். இப்பகுப்புக்குள் துணைப்பகுப்புகளாக:

  • இங்கிலாந்து கணிதவியலாளர்கள்‎
  • இந்தியக் கணிதவியலாளர்‎
  • தமிழ் கணிதவியலாளர்கள்‎
  • நாடு வாரியாகக் கணிதவியலாளர்கள்‎
  • பிரெஞ்சு கணிதவியலாளர்கள்‎

உள்ளன. நாடுவாரியான பகுப்புக்குள் முதல் இரண்டு மற்றும் கடைசி துணைப் பகுப்புகளும் அடங்கி விடாதா? எனது சந்தேகம் சரியானதாக இருந்தால் அதற்குத் தேவையான மாற்றங்களைச் செய்துதர வேண்டும். நன்றி.--Booradleyp (பேச்சு) 15:30, 28 சூன் 2012 (UTC)Reply

 Y ஆயிற்று.. உங்கள் சந்தேகம் சரியே :)--சண்முகம்ப7 (பேச்சு) 15:38, 28 சூன் 2012 (UTC)Reply

நன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 16:02, 28 சூன் 2012 (UTC)Reply

உதவி வேண்டும்

தொகு

வணக்கம் சண்முகம். நீள்வட்டம் கட்டுரையில் நீள்வட்டம் வரைதல் தலைப்பின் கீழ் ஒரு படிமம் தோன்றவில்லை. en:ellipse கட்டுரையில் அப்படம் உள்ளது. தமிழ்க் கட்டுரையில் அப்படிமத்தைத் சரி செய்து தர வேண்டும்.நன்றி.--Booradleyp (பேச்சு) 06:09, 3 சூலை 2012 (UTC)Reply

 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 06:20, 3 சூலை 2012 (UTC)Reply
உதவிக்கு நன்றி, சண்முகம்.--Booradleyp (பேச்சு) 14:43, 3 சூலை 2012 (UTC)Reply

உதவி

தொகு

எனது தமிழ் விக்கிப்பீடியா பக்கத்தில் இருந்து ஆங்கில விக்கிப்பிடியா பக்கத்துக்கு செல்வதற்கு வேறு கணக்கு உருவாக்க வேண்டுமா? அவ்வறில்லாவிட்டால் நான் எவ்வாறு ஆங்கில விக்கியில் பங்களிக்கலாம்?--Fasly (பேச்சு) 05:53, 4 சூலை 2012 (UTC)Reply

இதே பயனர் கணக்கு விவரங்களுடன் விக்கிமீடியா நிறுவனத் திட்டங்களின் அனைத்து மொழிப் பதிப்புகளிலும் பங்களிக்கலாம். பார்க்க: http://en.wikipedia.org/wiki/Wikipedia:Unified_login --இரவி (பேச்சு) 06:15, 4 சூலை 2012 (UTC)Reply

நீக்கவும்

தொகு

அழகே உன்னை ஆரதிக்கிறேன் பக்கத்தை நீக்கவும்!−முன்நிற்கும் கருத்து தமிழ்க்குரிசில் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஒன்றிணைக்க வேண்டும் தமிழ்க்குரிசில்..  Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:32, 7 சூலை 2012 (UTC)Reply

படிமப் பதிப்புரிமை

தொகு

[1] என்ற இப் படிமத்தை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்தே தரவிறக்கிப் பதிவேற்றினேன். மேலும் படிமங்களுக்கு பதிப்புரிமைத் தகவல்கள் வழங்குவது பற்றி அவ்வளவாகத் தெரியாது. முடிந்தால் இவ்விடயத்தில் உதவவும். படிமத்தின் தொடுப்பு [2]--Prash (பேச்சு) 04:40, 8 சூலை 2012 (UTC)Reply

 Y ஆயிற்று..ஆங்கில விக்கியில் இருந்து பதிவேற்றும் போது அங்குள்ள பதிப்புரிமை தகவல்களை தொகுத்து இங்கேயும் சேர்த்து விடுங்கள். அந்த படிமம் பொது உரிமையில் இருந்ததால் காமன்சுக்கு நகர்த்தியுள்ளேன்.--சண்முகம்ப7 (பேச்சு) 04:57, 8 சூலை 2012 (UTC)Reply

ஓர் வேண்டுகோள்

தொகு

வணக்கம் சண்முகம். பரமஹம்சதாசன் கட்டுரையைத் தொடங்கியுள்ள பயனர் ‎Sethupathi நன்றாக எழுதியுள்ளார். ஆனால் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. தொகுக்கப்பட்ட கட்டுரை சரியாக அமையவில்லை. நான் அதனை ஓரளவு சரி செய்து விட்டேன். ஆனால் என்னால் என்ன தவறு என்று அடையாளம் காட்ட முடியவில்லை. கட்டுரையின் வரலாற்றில் பார்த்து சரியான காரணத்தினைச் சுட்டி அவருக்கு வழிகாட்டினால் எதிர்காலத்தில் அவருக்கு உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். ஆவன செய்ய வேண்டுகிறேன்.நன்றி.--Booradleyp (பேச்சு) 15:54, 8 சூலை 2012 (UTC)Reply

 Y ஆயிற்று.. அவர் கட்டுரைகளின் வெளித்தோற்றத்தை பார்த்து அதில் உள்ளவாறே உருவாக்கி சேமிப்பார் போல் தெரிகிறது, இல்லையெனில் வேறு மொழி விக்கி கட்டுரையை தொகுக்காமல் அப்படியே நகலெடுத்து மொழிபெயர்த்தாலும் இப்படி வரும்--சண்முகம்ப7 (பேச்சு) 16:36, 8 சூலை 2012 (UTC)Reply

:படிமம்:Kadvit.jpg

தொகு

நீங்கள் இந்தபடிமம்:Kadvit.jpg மற்றும் படிமம்:முள்ளங்கி.jpg படிமங்களை நீக்குவது பற்றி எனக்கு ஆட்சேபனையில்லை. நீங்கள் விரும்பினால் நீக்கி விடவும்.--Fasly (பேச்சு) 03:56, 10 சூலை 2012 (UTC)Reply

நீக்குவது ஒரு பொருட்டல்ல fasly. காப்புரிமை அறியப்படாத, காப்புரிமை மீறிய படிமங்கள் நிறைய உள்ளன. அது ஒரு நிலுவையில் உள்ள பணி. இணையத்தில் இருந்து எடுப்பதற்கு பதிலாக commons: காமன்சில் 13,250,370 கோப்புகள் உள்ளன. அவற்றை உபயோகப்படுத்தலாம். அல்லது நீங்களே எடுத்த படம் எனில் தாராளமாக உபயோகப்படுத்தலாம் அல்லது படத்தை வெளியிட்ட தளம் அதை இலவச பதிப்புரிமையில் வெளியிட்டால் தராளமாக உபயோகிக்கலாம். விக்கிப்பீடியா:நியாயமான பயன்பாடு பக்கத்தை ஒரு முறை படித்தீர்கள் எனில் எவற்றை நியாயப்பயன்பாடாக பயன்படுத்தலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். நன்றி (குறிப்பு:log நீங்கள் இணையத்தில் இருந்து பதிவேற்றியுள்ள பல படங்களுக்கு மாற்றான நல்ல படங்கள் காமன்சில் உள்ளதாலேயே உங்களுக்கு இதை மீண்டும் மீண்டும் கூறுகிறோம்) --சண்முகம்ப7 (பேச்சு) 09:06, 10 சூலை 2012 (UTC)Reply

வேறொருவர் இவ்விக்கியில் பதிவேற்றிய படிமத்தை வேறு மொழியில் பயன்படுத்த என்ன செய்வது? பயனரின் அனுமதி பெற வேண்டுமா? விக்கி காமன்சில் உள்ள படிமத்தை அனைத்து விக்கிகளிலும் பயன்படுத்த முடியும் என்றும் கேள்விப்பட்டேன். அப்படியெனில் அப்படத்தை விக்கி காமன்சில் நான் பதிவேற்ற முடியுமா? விளக்கிக் கூறவும். நன்றி!--தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:31, 10 சூலை 2012 (UTC)Reply

நீங்கள் எடுத்த படிமமென்றாலோ பொது உரிமத்தில் உள்ள படிமமென்றாலோ காப்புரிமைக் காலம் முடிந்த படிமமென்றாலோ பொதுவில் பதிவேற்றலாம். --மதனாகரன் (பேச்சு) 14:51, 10 சூலை 2012 (UTC)Reply
வேறொருவர் இங்கு பதிவேற்றிய படம் கட்டற்ற உரிமையின் கீழ் உள்ளதெனில் காமன்சுக்கு நகர்த்தலாம் தமிழ்க்குரிசில் (அப்போது இங்கு பதிவேற்றிய பயனர் பெயரும் வரும், அதனால் பயனரிடம் அனுமதி பெறத் தேவையில்லை). நகர்த்தியபிறகு எந்த திட்டத்தில் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். NON FREE கோப்புகளை மற்ற திட்டங்களில் தனியாக பதிவேற்ற வேண்டும்.--சண்முகம்ப7 (பேச்சு) 04:31, 11 சூலை 2012 (UTC)Reply

மனம்விட்டு சில செய்திகள்…

தொகு

உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகின்றது. உங்களைப் போலவே பலரும் (நான் உட்பட) இவ்வித மனவுழைச்சலுக்கு உள்ளாயிருப்பர் என்பதும் ‘இதெல்லாம் எனக்குத் தேவையா? ஒதுங்கிக் கொள்ளலாம்’ என முனைவதும் மனித உள நடத்தைக் கோலம். ஒரு இடத்தில் சிக்கலா? ஆயிரம் வழிகள் திறந்து இருக்கிறது சாதனை படைக்க.

உங்களுக்கு ஒர் எடுத்துக் காட்டுக்காக: நான் ஒரு முறை தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்ற இக்கட்டுரையினை நீக்கிவிடுமாறு கோரியிருந்தேன். சற்று நிதானித்ததும், நீக்குவதில்லை நிவர்த்தி செய்வது என்ற முடிவுக்கு வந்தேன். விளைவு: பலரின் உதவியோடும், குறைகளோடும் இன்று முதற்பக்கத்தில். முதற்பக்க கட்டுரையாக வரவேண்டுமென்று நான் கருதவில்லை. முயற்சி திருவினையாக்கும்! அவ்வளவுதான்.

உங்கள் மீது குற்றச்சாட்டா? உங்கள் மனச்சாட்சி உங்களை நல்லவர் என்கிறதா? அதுபோதும்! பின்வாங்குவது நல்லதுதான். பின்வாங்குவதே தொடர்ந்தால் விளைவு? உறங்கிக் கிடப்பது புயல்களுக்கு அழகல்ல என்று எங்கோ படித்த ஞாபகம். தொடர்ந்து உங்கள் பணியினை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன். --Anton (பேச்சு) 09:36, 12 சூலை 2012 (UTC)Reply

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி அன்டன். அவரே கூறுகிறார் மற்றவர்கள் கருத்து சொன்னால் பரவாயில்லை நீ சொல்லக்கூடாது என, அவர்களிருவரையும் அங்கு ஒரு நடுநிலையான கருத்தை கூறுமாறு வேண்டியவனே நான்தான் என்பதை அவர் அறியார். இது போன்ற சில சம்பவங்கள் மற்ற பயனர்கள் தொடங்கிய பக்கங்களை தொகுக்கவும், பதிலளிக்கவும் சற்று தயக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி விடுங்கள் அதைப்பற்றி பேசினால் மேலும் மனவருத்தம் தான் மிஞ்சும். ஒரு சில நாட்கள் போகட்டும். கவலைப்படாதீர்கள் விக்கியில் பங்களிப்பதை நிறுத்திவிடமாட்டேன். ஒரு சில நாட்கள் கழித்து மீண்டும் திரும்பி வருகிறேன் :). அதுவரை வேறு எதாவது விக்கிமீடியா திட்டத்தில் தான் உலாத்திக்கொண்டிருப்பேன். தமிழ் விக்கிக்கு வராமல் இருக்க முடியுமா எனபதும் சந்தேகமே. இரவி கூறியது போல அந்த மாந்த இயல்பால் என்னால் என் தரப்பு நியாயத்தை கூறாமல் இருக்க இயலாது. சில நாட்கள் போனால் சரியாகிவிடும்--சண்முகம்ப7 (பேச்சு) 11:20, 12 சூலை 2012 (UTC)Reply
எது எப்படியோ திரும்பவும், தமிழ் விக்கிக்கு விரைந்து வந்தால் நலம். -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:33, 12 சூலை 2012 (UTC)Reply
நன்றி சண்முகம்! புத்துணர்வோடு செயற்பட வாழ்த்துக்கள்! அந்த வயதான முதாட்டியுடனான செய்தியை நீக்கிவிடலாமே? :) --Anton (பேச்சு) 12:34, 12 சூலை 2012 (UTC)Reply
 Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 13:29, 12 சூலை 2012 (UTC)Reply
Return to the user page of "Shanmugamp7/தொகுப்பு 2".