வாருங்கள், Fasly!

வாருங்கள் Fasly, உங்களை வரவேற்கிறோம் ! :D
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.

--ரவி 08:26, 31 மே 2009 (UTC)

வணக்கம் பாஸ்லி, உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தாருங்கள். விக்கிப்பீடியாவில் உள்ள இலங்கை தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தித் தருமாறு உங்களை அழைக்கிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 10:46, 10 ஆகஸ்ட் 2010 (UTC)

வணக்கம்தொகு

ஒரு வானொலி அறிவிப்பாளரை விக்கியில் சந்திப்பதில் மகிழ்ச்சி. இலங்கை வானோலியுடன் தொடர்புடைய கட்டுரைகளை எழுதலாமே?? புகழ் பூத்த அறிவிப்பாளர்களைப் பற்றிய கட்டுரைகளையும் எழுதலாமே??

இலங்கை பற்றிய உங்கள் பங்களிப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம். --ஜெ.மயூரேசன் 07:19, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

உங்களை வரவேற்கிறோம். உங்கள் நடவடிக்கைகள் பற்றி பின்வரும் கருவிகள் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

பங்களிப்புகள்தொகு

தொடங்கிய கட்டுரைகள்

பங்களிப்புகள்

உங்களை வரவேற்கிறோம். உங்கள் நடவடிக்கைகள் பற்றி பின்வரும் கருவிகள் மூலம் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.

பங்களிப்புகள்தொகு

தொடங்கிய கட்டுரைகள்

பங்களிப்புகள்


--Shameermbm 10:26, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

குறிப்புதொகு

அன்பு நண்பரே, உங்களின் பங்களிப்பு கண்டு மிக்க மகிழ்ச்சி. தாங்கள் எழுதும் கட்டுரைகளின் தலைப்பை தமிழில் ஆக்கவும்; ஆங்கிலத்தில் அன்று! உங்களுக்கு சரியான தமிழ் தலைப்பில் சந்தேகம் இருப்பின் ஆலமரத்தடியில் உரையாடவும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் என் பேச்சு பக்கத்தில் செய்தி இடவும். தங்களின் பங்களிப்பு மென்மேலும் வளர வாழ்த்துகள். நன்றி--கார்த்திக் 09:16, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

கையெழுத்துதொகு

தாங்கள் எழுதும் கட்டுரைகளுக்கு கீழ் கையெழுத்து இட வேண்டாம்! கட்டுரையின் வரலாறு பகுதியில் கட்டுரைக்கு பங்களித்தவர்களும், அவர்களது பங்களிப்பு ஆவணப்படுத்தப்படுகிறது. கையெழுத்து பேச்சு பக்கம் மற்றும் ஆலமரத்தடியில் மட்டும் பயன்படுத்த வேண்டும். நன்றி.--கார்த்திக் 09:19, 17 ஆகஸ்ட் 2010 (UTC)

வெலிகம முஸ்லிம் இளைஞர் மன்றம்தொகு

நண்பரே உங்கள் கருத்துக்கு நன்றி. வெலிகமை_முஸ்லிம்_இளையோர்_மன்றம் என்பதை வெலிகம முஸ்லிம் இளைஞர் மன்றம் என்று மாற்றவும்.

இதை நீங்களே மாற்ற முடியும். கட்டுரையின் மேலே இருக்கும் நகர்த்துக இணைப்பை சொடுக்குவதன் மூலம் நீங்கள் விரும்பியது போல் மாற்றலாம். முயன்று பார்க்கவும். --அராபத்* عرفات 07:46, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

சுல்தான் ஸலாஹுதீன் ஐயூபிதொகு

வணக்கம் Fasly, சுல்தான் ஸலாஹுதீன் ஐயூபி பற்றிய கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கியில் உள்ளது. பார்க்க சலாகுத்தீன். எனவே நீங்கள் உருவாக்கிய கட்டுரையை நீக்கியுள்ளேன். புதிய கட்டுரைகளை உருவாக்கும் முன் ஆங்கில விக்கியின் குறிப்பிட்ட பக்கத்தில் சென்று பார்த்தால் அதற்கு தமிழில் கட்டுரை உள்ளதா இல்லையா என்பது தெரிந்துவிடும். தொடர்ந்து பங்களிக்கவும். ஏதேனும் ஐயம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும். நன்றி. --அராபத்* عرفات 07:35, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்தொகு

இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்துக்கள். இறைவன் உங்கள் மீது சாந்தியையும் சமாதானத்தையும் உண்டாக்குவானாக. --அராபத்* عرفات 02:23, 10 செப்டெம்பர் 2010 (UTC)

உங்களுக்கு புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.--Kanags \உரையாடுக 08:24, 10 செப்டெம்பர் 2010 (UTC)
உங்களுக்கு எனது ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். -- மயூரநாதன் 10:08, 10 செப்டெம்பர் 2010 (UTC)

உங்கள் அனைவர்களினதும் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.--<fa_dj> 06:34, 13 செப்டெம்பர் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்தொகு

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:02, 21 சூலை 2011 (UTC)

முதலில் உங்கள் கருத்துக்கு நன்றி.கடந்த சில நாட்களாக விக்கிப்பீடியாவுக்கு பங்களிபபுச் செய்ய முடியாமைக்கு வருந்துகிறேன். என்னறாலும் நிச்சயமாக என்னால் முடிந்த பங்களிப்புகளை தொடர்ந்து வழங்க முயற்சிக்கின்றேன். --dj fa 11:33, 2 செப்டெம்பர் 2011 (UTC)

வாழ்த்துக்கள்தொகு

வாழ்த்துக்கள் பஸ்லி. தொடர்ந்து எழுதுங்கள்.

ஒருவரிக் கட்டுரைகள்தொகு

வணக்கம் பஸ்லி, ஒருவரிக் கட்டுரைகள்தமிழ் விக்கியில் எழுதப்படுவது பொதுவாக வரவேற்கப்படுவதில்லை. குறுங்கட்டுரையானாலும் கட்டுரைத் தரத்தைப் பொறுத்து குறைந்தது 3-4 வரிகளாவது இருப்பது நல்லது.--Kanags \உரையாடுக 05:54, 19 மே 2012 (UTC)

உங்கள் கருத்துக்கு நன்றி. இந்த இரு கட்டுரைகளையும் எழுதுவதற்கு ஆரம்பித்தவுடனேயே முக்கிய அலுவல் ஒன்று ஏற்பட்டதனால் தொடர முடியவில்லை. அதனால் ஆரம்பித்த கட்டுரைகளை இன்ஷாஅல்லாஹ் திங்கட்கிழமை தொடருவேன் என்ற நோக்கில் இடைநிறுத்தியுள்ளேன்.--dj fa (பேச்சு) 06:46, 19 மே 2012 (UTC)

ஜெர்ரி யேங்தொகு

வணக்கம். உங்களால் ஆரம்பிக்கப்பட்ட ஜெர்ரி யேங் கட்டுரை ஏற்கனவே ஜெர்ரி யாங் என்ற பெயரில் உள்ளது. அக்கட்டுரையுடன் உங்களுடையதை இணைத்து விடுதல் நன்று.--Booradleyp (பேச்சு) 08:01, 23 மே 2012 (UTC)

உங்கள் கருத்துக்கு நன்றி. தயவு செய்து உங்களால் முடிந்தால் ஒன்றிணைத்து விடுங்கள்.--dj fa (பேச்சு) 08:11, 23 மே 2012 (UTC)

பஸ்லி, ஆங்கிலப் பெயர்களை கட்டுரைகளுக்குத் தலைப்பாகக் கொடுக்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 08:52, 23 மே 2012 (UTC)

தவறாக கொடுத்துவிட்டேன். இனி அவ்வாறு அமையாமல் கவனிக்கின்றேன்.--dj fa (பேச்சு) 10:27, 23 மே 2012 (UTC)

நன்றிதொகு

நிர்வாகித் தேர்தலில் எனக்கு ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி Fasly--சண்முகம் (பேச்சு) 12:00, 26 மே 2012 (UTC)

அதிமதுரம்தொகு

அதிமதுரம் கட்டுரையில் நீங்கள் பல மருத்துவப்பயன்பாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். மிகக் கவனமாக மேற்கோள்களுடன் நாம் இத் தகவல்களை இணைக்க வேண்டும். தகுந்த மதிக்கத் தக்க மேற்கோள்கள் சேர்க்கப்பட வேண்டும். எ.கா அறிவியல் ஆய்வேடுகளில் இருந்து. நன்றி. --Natkeeran (பேச்சு) 12:16, 20 சூன் 2012 (UTC)

:படிமம்:முள்ளங்கி.jpg இன் பதிப்புரிமை என்ன?தொகு

படிமம்:முள்ளங்கி.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். சண்முகம்ப7 (பேச்சு) 06:17, 21 சூன் 2012 (UTC)

கட்டுரைகளில் ஆங்கில விக்கி இடை இணைப்புகள்தொகு

பஸ்லி, நீங்கள் உருவாக்கும் கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு இணையான ஆங்கில விக்கிக் கட்டுரையின் இணைப்பையும் தவறாது தாருங்கள். எ+கா: கட்டுரையின் அடியில் [[en:Olivia Shakespear]] என்பதைத் தவறாமல் சேருங்கள்.--Kanags \உரையாடுக 10:22, 29 சூன் 2012 (UTC)

படிமங்கள்தொகு

வணக்கம் Fasly, பொது உரிமை படங்கள் இல்லாத போதுதான் இணையத்தில் இருந்து எடுத்த நியாயமான பயன்பாட்டு படிமங்களை உபயோகப்படுத்த வேண்டும். commons: இங்கு தேடினால் பொது உரிமைப்படங்கள் கிடைக்கும். ஆங்கில விக்கியில் உள்ள படங்களை சொடுக்கி பார்த்தால் அது commonsல் உள்ளதா? இல்லையா? எனத் தெரியும். commonsல் உள்ள படிமம் எனில் இங்கு அப்படியே உபயோகிக்கலாம் --சண்முகம்ப7 (பேச்சு) 10:51, 29 சூன் 2012 (UTC)

பயனர் கணக்கில் கட்டுரைகள்தொகு

தாங்கள் புகுபதிகை செய்யாமல் காவிக் காசோலை மற்றும் கட்டளைக் காசோலை ஆகியவற்றை உருவாக்கி விட்டதாகக் குறிப்பிட்ட உரையாடல் பக்கங்களில் தெரிவித்திருந்தமையால் தங்கள் பயனர் கணக்குடன் உருவாக்கிக் கொள்வதற்காக இக்கட்டுரைகள் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இக்கட்டுரைகளை மீண்டும் உருவாக்கிக் கொள்ளவும். தாங்கள் கட்டுரையை உருவாக்கிச் சேமிக்கும் முன்பாக மேல்பகுதியில் புகுபதிகை செய்யப்பட்டு தங்கள் பயனர் கணக்குக்கான பெயர், பேசு, விருப்பத்தேர்வுகள், கவனிப்புப்பட்டியல், பங்களிப்புகள் போன்ற குறிப்புகள் இடம் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நன்றி.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 08:29, 2 சூலை 2012 (UTC)

உங்கள் கருத்துக்கு நன்றி. திடீரென்று ஏற்பட்ட மின்தடையின் பின் மீண்டும் புகுப்திகை செய்ய மறந்துவிட்டேன்.--AAMFasly (பேச்சு) 08:37, 2 சூலை 2012 (UTC)

ஒத்தாசைப் பக்கம்தொகு

உங்கள் ஐயங்களுக்கான பதில் அறிய ஒத்தாசைப் பக்கத்தைப் பயன்படுத்தலாம். ஒரே கேள்வியைப் பல இடங்கள், பயனர்களிடம் கேட்பதைத் தவிர்க்கலாம். நன்றி--இரவி (பேச்சு) 09:42, 4 சூலை 2012 (UTC)

செய்திக் கட்டுரைதொகு

பஸ்லி, உங்கள் ஷகாப்-3 என்ற கட்டுரை செய்திக் கட்டுரையாக உள்ளது. தகவல் கட்டுரையாகவே விக்கியில் எழுதப்பட வேண்டும். உசாத்துணைக்கு en:Shahab-3 கட்டுரையைப் பாருங்கள்.--Kanags \உரையாடுக 09:36, 5 சூலை 2012 (UTC)

பஸ்லி, உங்களுக்கு இங்கு ஒரு செய்தி உள்ளது.--Kanags \உரையாடுக 11:12, 9 சூலை 2012 (UTC)

பறவைகள் பற்றிய கட்டுரைகள்தொகு

வணக்கம் பஸ்லி, நீங்கள் பறவைகள் பற்றிய கட்டுரைகள் எழுதுவது கண்டு மகிழ்ச்சி. சில தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் பகிர்ந்து கொள்கிறேன்.

  • பறவைகளின் தமிழ்ப் பெயர்களை இங்கு காணலாம்.
  • பறவைகள் பற்றிய எழுதும்போது மறக்காமல் அதன் ஆங்கில பெயர் (மற்றும் விலங்கியல் பெயர்களை) கொடுக்க மறக்க வேண்டாம். {{Taxobox}} வார்ப்புரு பாவிப்பது சிறப்பு. ஆங்கில (மற்றும் பிறமொழி) கட்டுரைக்கான இணைப்பினையும் கொடுக்கத் தவறாதீர்கள். எ.கா: நீர்க்காகம்
  • ஆங்கில கட்டுரைகள் ஊடாக தமிழ் விக்கிக்கான இணைப்பு உள்ளதா எனவும், தமிழ் விக்கியிலும் தேடிவிட்டு கட்டுரையினைத் தொடங்கினால் நகலாக தொகுப்பதை தவிர்க்கலாம். எ.கா: மாம்பழத்தான் குருவி

--Anton (பேச்சு) 14:01, 9 சூலை 2012 (UTC)

:படிமம்:Kadvit.jpg இன் பதிப்புரிமை என்ன?தொகு

படிமம்:Kadvit.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. எனினும், இப்படிமத்துக்கான பதிப்புரிமைத் தகவல்கள் வழங்கப்படவில்லை. விக்கிப்பீடியா பதிப்புரிமைத் தொடர்பில் மிகவும் கவனத்தில் உள்ளது. பதிப்புரிமைத் தகவலும் படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்ற தகவலும் இணைக்கப்படாவிட்டால் படிமம் வெகுவிரைவில் நீக்கப்படும். உங்களுக்கு இத்தகவல்கள் தெரிந்திருப்பின் பதிப்புரிமை வார்ப்புரு ஒன்றைப் படிமப் பக்கத்தில் இணைத்து மூலத்தையும் குறிப்பிடவும்.

இது தொடர்பான வினாக்கள் இருப்பின் பதிப்புரிமை வினாக்கள் பக்கத்தில் கேட்கவும். சண்முகம்ப7 (பேச்சு) 14:24, 9 சூலை 2012 (UTC)

தகவலுக்காக: விக்கிபொதுவில் பல சிறந்த கோப்புக்கள் உள்ளன. அவற்றையே பாவிக்கலாமே? எ.கா:Anhingidae

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anhingidae
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


--Anton (பேச்சு) 17:33, 9 சூலை 2012 (UTC)

அன்டன் கூற்றுக்கேற்ப #படிமங்கள் இந்தக் கருத்தை மீண்டும் ஒருமுறை கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். இணையத்தில் இருந்து எடுத்தவை பெரும்பாலும் காப்புரிமை உள்ளவையே. மேலும் அதற்கு இணையான இலவச படிமம் இல்லாத போதுதான் நியாயப்பயன்பாடு படிமங்களை பயன்படுத்த இயலும்--சண்முகம்ப7 (பேச்சு) 01:50, 10 சூலை 2012 (UTC)

படிமம்:Kadvit.jpgதொகு

வணக்கம், Fasly. உங்களுக்கான புதிய தகவல்கள் Shanmugamp7 இன் பேச்சு பக்கத்தில் உள்ளன.
நீங்கள் இந்த அறிவிப்பை {{பேச்சு}} வார்ப்புருவை நீக்குவதன் மூலம் நீக்கலாம்.

--சண்முகம்ப7 (பேச்சு) 09:12, 10 சூலை 2012 (UTC)

பறவைகளின் பெயர்தொகு

பறவை ஒன்றின் பெயருக்குப் பின் ஏன் "பறவை" என்பதைச் சேர்க்கிறீர்கள்? ஆங்கிலத் தலைப்பு மற்றும் பொருத்தமற்ற தலைப்புக்களையே பறவைகளின் பெயராக இடுகிறீர்கள்! மற்றும் அவற்றுக்கான உசாத்துணையும் சேர்க்கப்படாமல் உள்ளது. தயவுசெய்து இவற்றைக் கருத்திலெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். --Anton (பேச்சு) 12:55, 10 சூலை 2012 (UTC)

  • இனி அவ்வாறே செய்கின்றேன்.--Fasly (பேச்சு) 04:35, 11 சூலை 2012 (UTC)

முனியாதொகு

வணக்கம். Munia என்பதற்கு விக்சனரியில் தினைக்குருவி எனத் தரப்பட்டுள்ளது. முனியா பறவை என்பதற்குப் பதில் தினைக்குருவி என மாற்றிவிடுங்கள். நன்றி.--Booradleyp (பேச்சு) 16:13, 10 சூலை 2012 (UTC)

  • நன்றி அவ்வாறே செய்கின்றேன்.--Fasly (பேச்சு) 04:33, 11 சூலை 2012 (UTC)

பதில்தொகு

வணக்கம் Fasly , மதனாஹரனின் பேச்சுப் பக்கத்தில் நான் நீக்குவதில் மட்டுமே குறியாக இருப்பதாக கூறியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இங்கு அனைவரும் விக்கிப்பீடியா கொள்கைகளை பின்பற்றியே பங்களிக்கிறோம். கட்டுரை மூன்று வரிகளுக்கு மேல் இருக்க வேண்டும் என்பதும், பதிப்புரிமை மீறிய படங்களை பதிவேற்றக் கூடாது என்பதும் நமது கொள்கை.அவற்றை சுட்டிக்காட்டினால் நான் நீக்குவதிலேயே குறியாக இருப்பதாக குற்றம் சுமத்துவது நற்பண்பாக எனக்கு தோன்றவில்லை. மேலும் என்னுடைய நீக்கல்களில் இதுவரை இரண்டு கட்டுரைகளை மட்டுமே விரைந்து நீக்க வேண்டப்பட்ட பக்கங்களை நீக்கியிருக்கிறேன், அவையும் என்னால் மேம்படுத்த இயலாத, நீக்கல் வேண்டுகோள் விடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனவையே. இனியாவது சுட்டிக் காட்டப்படும் கொள்கைகளைப் புரிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள் என நம்புகிறேன். நன்றி--சண்முகம்ப7 (பேச்சு) 04:09, 11 சூலை 2012 (UTC)

நீங்கள் கூறியது போல நானும் அதே விக்கிப்பீடியா கொள்கைகளை பின்பற்றியே பங்களிக்கின்றேன். நன்றி.--Fasly (பேச்சு) 04:32, 11 சூலை 2012 (UTC)

மனம்விட்டு சில செய்திகள்…தொகு

மனச்சோர்வுக்குள்ளாவது, உங்கள் பக்க நியாயங்களை எடுத்துரைப்பது போன்ற பேச்சுக்களில் ஈடுபடுவதை விட்டுவிடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து ஈடுபடுவது உங்களுக்கும் மற்றவர்களுக்கும் ஒருவித மனச் சிக்கலை ஏற்படுத்தும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் விவாதத்தில் விடாப்பிடியாக இருப்பது எவருக்குமே நல்லதல்ல.

உங்களை நியாயப்படுத்த விவாதங்கள்தான் தீர்வு என்பதற்கல்ல. உங்கள் செயல்களால் அதை நிரூபித்துக் காட்டுங்கள். நீங்கள் தொடங்கிய ஒரு கட்டுரை அழிக்கப்படுகிறதென்றால், 10 கட்டுரைகளை முதற் பக்கத்தில் காட்சிப்படுத்த ஏன் உங்களால் முடியாது. உங்களால் முடியாதென்று நினைக்கிறீர்களா? வாழ்க்கை எலுமிச்சை போல் புளிப்பாக இருக்கின்றதா? அதை வைத்து எலுமிச்சம் சாறு செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு நல்ல பொதுவான ஒர் தலைப்பை எடுங்கள். நீங்களும் நானுமாகச் சேர்ந்து முதற் பக்கம் வரைக்கும் கொண்டு செல்வோம். இதை நகைச்சுவையாகச் சொல்லவில்லை. ஒரு தெளிவோடுதான் சொல்கிறேன். உங்கள் புதுத் தலைப்பினை என் பேச்சுப் பக்கத்தில் எதிர்பாக்கிறேன். --Anton (பேச்சு) 09:15, 12 சூலை 2012 (UTC)

அன்டன் உங்களுடைய கருத்தில்தெளிவான உண்மை இருக்கின்றது. உண்மையில் அன்டன் நான் அவ்வளவு வாதிட்ட காரணத்தை அந்த உரையாடல் முழுவதையும் வாசிப்பதால் புரிந்து கொள்ளலாம். அதோடு இந்தபடிமம்:Wro.JPGயும் படிமத்திலுள்ள கட்டுரைகளையும் சற்று பாருங்கள். அடுத்தது இதுவரைக்கும் உங்களைப்போல் நான் விக்கியில் அதிக நேரத்தை செலவுசெய்து பங்களிக்கவில்லை. நேரம் கிடைக்கும் போதுதான் பங்களிக்கின்றேன். நான் தெரிந்தவற்றை மற்றவர்களும் தெரிந்து கெதள்ள வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காகதான் நான் பங்களிக்கின்றேன். அதேபோல எனது அறிவை மெலும் வளர்க்க பயன்படுத்துகின்றேன். தவிர வேறு எந்த நோக்கமும் எனக்கு இல்லை (முதற்பக்க கட்டுரை அல்லது நிர்வாகி). நீங்களே சிந்தித்துப் பாருங்கள் நான் இணைந்து 2 வருடங்கள் தாண்டிவிட்டன. அவ்வாறான நோக்கங்கள் என்னிடம் இருந்திருந்தால் எவ்வளவு பங்களிப்பு செய்திருக்கலாம். நீண்ட இடைவெளி விட்டிருந்தேன். அலுவலக வேலைகள் மற்றும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுவது போன்றவற்றில் சுருங்கி கிடக்கின்றேன். இன்னொரு விடயம் நான் தொடங்கி இருக்கின்ற பல கட்டுரைகள் முதற்பக்கத்திற்கு தகுதியானவையே அவற்றை மேம்படுத்தினால். அதேபோல என்னிடம் மரங்கள், பறவைகள் சம்பந்தமாகவும் வணிகக்கல்வி சம்பந்தமாகவும் சில கட்டுரைகள் கைவசம் இருக்கின்றன. ஒன்றிணைவோம். நன்றி அன்டன்.--Fasly (பேச்சு) 09:55, 12 சூலை 2012 (UTC)

நன்றி பஸ்லி, பறவைகள் பற்றிய ஆய்விலும், ஒளிப்படமெடுப்பதிலும் எனக்கு ஆர்வமுண்டு. அதனால்தான், நீங்கள் தொடங்கிய பறவைகள் பற்றி கட்டுரையில் ஆர்வம் காட்டினேன். பறவைகளின் தமிழ்ப் பெயர்களை எங்கிருந்து பெறுகின்றீர்கள்? பகிர முடியுமான படிமங்கள் என்றால் பகிர்ந்து கொள்ளுங்கள். பிறகு, உங்களுடன் பறவைகள் சம்பந்தமான தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்கு en:Influenza A virus subtype H5N1 பற்றிய ஆர்வம் உண்டா? அப்படியானால், ஆரம்பியுங்கள். ஒரு நல்ல கட்டுரையாக உருவாக்கிவிடலாம். அல்லது வேறு ஏதும் பலருக்கும் படிக்க ஏற்றது என்றாலும் என்னால் உதவ முடியும். --Anton (பேச்சு) 10:18, 12 சூலை 2012 (UTC)

நீங்கள் தந்துள்ள ஆங்கில இணைப்பின் தமிழ் என்ன?--Fasly (பேச்சு) 11:10, 12 சூலை 2012 (UTC)

இன்புலுவன்சா ஏ வைரஸ் (எச்5என்1) என்று அழைக்கலாம். இதனை முற்று முழுதாகத் தமிழ்ப்படுத்தலாமெனக் கருதவில்லை. இலங்கை சுவரொட்டிகளிலும் இவ்வாறுதான் பார்த்தேன் --Anton (பேச்சு) 12:44, 12 சூலை 2012 (UTC)

உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புதொகு
விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:49, 13 மார்ச் 2013 (UTC)

எச்சரிக்கைதொகு

பராமரிப்பு வார்ப்புருக்களை தேவையில்லாது நீக்க வேண்டாம்.--Kanags \உரையாடுக 12:04, 25 மார்ச் 2016 (UTC)

August 2016தொகு

  Welcome to Wikipedia and thank you for your contributions. I am glad to see that you are discussing a topic. However, as a general rule, talk pages are for discussion related to improving the article, not general discussion about the topic or unrelated topics. If you have specific questions about certain topics, consider visiting our reference desk and asking them there instead of on article talk pages. Thank you. AntanO 11:46, 9 ஆகத்து 2016 (UTC)

பயனர் கணக்கு தடைதொகு

வணக்கம். [[விக்கிப்பீடியா:தனிநபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தல் கொள்கை\தனிநபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல், தணிக்கை அச்சுறுத்தல் கொள்கையின் அடிப்படையில்]] தங்கள் கணக்கு 20 ஆகத்து 2017 வரை முடக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையை விக்கிமீடியா அறக்கட்டளையின் கவனத்துக்கு உட்பட்டு பன்னாட்டு விக்கிமீடியா மேலாளர்கள் மேற்கொண்டுள்ளனர். நன்றி. --இரவி (பேச்சு) 12:08, 9 செப்டம்பர் 2016 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fasly&oldid=2115855" இருந்து மீள்விக்கப்பட்டது