பயனர்:Neechalkaran/துடுப்புகள்

விக்கிப்பீடியாவில் மொழி பெயர்க்கவோ, புத்தாக்கம் தயாரிக்கவோ உதவ இப்பயனரால் வடிக்கப்பட்ட கருவிகள் இவையாகும். உங்களுக்கும் உதவுமானால் பயன்படுத்திக் கொள்ளவும்.

ஆப்ஸ்விக்கி இயக்கி

 • இந்தத் தானியங்கி இயக்கி மூலம் தானியங்கியைக் இயக்கு விக்கிப்பீடியாவில் திருத்தப் பணிகளைப் புரிகிறார்.

ஆப்ஸ்விக்கி விரிதாள்

 • இந்த விரிதாள் மூலம் ஒரேமாதிரியான புதிய பக்கங்களைத் தானியங்கி பதிவேற்றம் செய்கிறார்

விக்கி உருமாற்றி

 • நாடுகள், நகரங்கள், பெயர்சொற்கள் போன்ற பிறமொழிவிக்கி பக்கத்திற்கிணையான தமிழ்விக்கி பக்கங்களைப் பெற உதவுமிடம். - மொழிபெயர்ப்புகள் செய்யும் முன்னே அதன் மொத்த விக்கி கோடுகளை இந்தச் செயலியிலிட்டுச் சரியான தமிழ்விக்கி பக்கப்பெயரை எடுத்துக்கொள்கிறார்.

வாணி

 • தமிழ்ச் சொற்பிழை திருத்தியாகப் பயன்படுத்துகிறார்

நாவி

 • வலி மிகுமிடம் மிகாயிடம் பற்றிய ஐயங்களுக்கான சந்திப்பிழை திருத்தி

தமிழ்த் தட்டச்சு விசைப்பலகை

 • மிதக்கும் திரைவிசைப் பலகையைத் தட்டச்சிற்குப் பயன்படுத்துகிறார்.

விக்கி கணிப்பான்

 • பக்கப் பார்வை அடிப்படையில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டுரையை இக்கருவி மூலம் அடையாளம் காண்கிறார்.

தகவல் சட்டத் தரவுமீட்பான்

 • வேண்டிய பக்கங்களையும் எடுக்க வேண்டிய தகவல் சட்டத்தின்(Infobox) பெயரும் கொடுத்து ஏவிவிட்டால், கொஞ்ச நேரத்தில் அதன் தகவல்கள் எடுக்கப்பட்டு கூகிள் விரிதாள் வடிவில் உங்களுக்குக் கிடைக்கும்.

சொல் மாற்றி

 • உயிரியல் கலைச்சொற்கள், பிற கலைச்சொற்கள் போன்ற ஒரு சொல் ஒரு பொருள் கொண்ட வார்த்தைகளைத் தமிழில் மாற்றிக்கொள்ள இக்கருவியைப் பயன்படுத்துகிறார்

படவெழிதி

 • காமன்சில் உள்ள படங்களின் மேல் எழுதவேண்டுமென்றால் இக்கருவியைப் பயன்படுத்துகிறார்.

உபகருவிகள்

 • பட்டியல்களை(table) எக்ஸெல் கோப்புகளில் எளிதாக வடிவமைத்து இக்கருவி மூலம் விக்கிக் உரைகளாக மாற்றி பயன்படுத்துகிறார்.

பன்முக அகராதி

 • தெரியாத கலைச்சொற்களுக்கு மிகச்சரியான தமிழ்ப் பதங்கள் கிடைக்க நாடும் அகராதி