பயனர்:Neechalkaran/துடுப்புகள்/தட்டச்சு


தமிழ்த் தட்டச்சு விக்கி நீட்சி என்பது தமிழில் தட்டச்சிட எளிமையான திரை விசைப்பலகை (on screen Keyboard) வசதியைப் பயனர்களுக்குத் தரும் நீட்சியாகும். Add-on, Extension என்றும் அழைத்துக் கொள்ளலாம்.

தேவை தொகு

  • பல விக்கி பயனர்கள் திரையில் விசைப்பலகை கொண்டு தட்டச்சிடும் முறையை விரும்புகிறார்கள்.
  • தமிழ்99 போன்ற முறைகளுக்கு விசைப்பலகை கண்ணெதிரே இருப்பது தட்டச்சிடும் பணியை இன்னமும் எளிமையாகும்.
  • சுட்டி மூலமும் எளிதில் தமிழில் எழுதும் முறையைப் பயன்படுத்தலாம்

நீட்சியின் பயன்பாடு தொகு

  • நிறுவிக் கொண்டப்பின், நீங்கள் தொகுக்கும் பக்கங்களின் தட்டச்சுப் பகுதியில் எல்லாம் கருவிப் பட்டையில் [Editor Tool bar] தட்டச்சுக் கருவி என்று ஒரு புதிய பட்டியல் காணப்படும்.
  • அந்த விரிபட்டியலில்(Menu) இரு விசைப்பலகைகள்(எழுத்துபெயர்ப்பு & தமிழ்99) உள்ளன. விரும்பிய விசைப்பலகையைத் தேர்வு செய்தவுடன், மிதக்கும் புது விசைப்பலகை வலது கீழோரத் திரையில் வந்துவிடும்.
  • அப்பலகையில் சுட்டிமூலம் அழுத்தியோ அல்லது நேரடியாகத் தட்டச்சிட்டோ தமிழில் எழுதலாம்.
  • மீண்டும் அந்த விரிபட்டியலில் உள்ள பலகையைச் சொடுக்குவதன் மூலம் விசைப்பலகை மறைந்துவிடும். இந்நேரத்தில் துரைமார்களாக ஆங்கிலத் தட்டச்சு செய்துகொள்ளலாம்.

எப்படி நிறுவுவது? தொகு

  • உங்கள் நீட்சிகான பக்கத்தில் தொகு சென்று கீழுள்ள வரியை இட்டு சேமிக்கவும் அவ்வளவே.

importScriptURI('//ta.wikipedia.org/w/index.php?title=User:Neechalkaran/keyboard.js&action=raw&ctype=text/javascript');

  • அந்தப் பக்கம் ஏற்கனவே இல்லாவிட்டாலும் புதியதாகத் தொடங்கலாம்.
  • விக்சனரியில் நிறுவ அதே வரியை இங்கு இட்டு சேமித்துக் கொண்டால் போதும்.
  • இந்த நீட்சி வேண்டாம் என்று நிறுவியப்பின் நினைத்தால் அதேப் பக்கத்தில் மேல் குறிப்பிட்டுள்ள வரியை நீக்கிவிடவும்.
  • மேற்கொண்டும் சந்தேகங்கமிருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
  • மேலும் சந்தேகமிருந்தால் எங்கள் வீட்டிற்கு வரவும்.