விக்கிப்பீடியா பேச்சு:விக்கி மாரத்தான் 2015

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும் எனும் நம்பிக்கையில் திட்டப் பக்கத்தினை துவக்கியுள்ளேன். இங்கு உரையாடி முடிவுக்கு வருவோம்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:14, 26 சூன் 2015 (UTC)Reply

கண்டிப்பாக நான் திட்டத்தில் பங்கெடுக்கிறேன் , சென்னையில் முதல் கட்டமாக சோதைனையின் இறங்கலாமா ? --Commons sibi (பேச்சு) 03:01, 27 சூன் 2015 (UTC)Reply
நல்லது. விக்கியில் பங்களிப்பதில் தொய்வுநிலை கவலைதருகின்றது. பல்வேறு அகப்புறக் காரணங்களை முன்னிறுத்தி வாரத்தில் ஒருசில பதிவுகளோடு மாயமானாக நழுவிக்கொள்பவர்களில் நானும் சில காலமாக உள்ளடங்கியிருக்கின்றேன். மீண்டும் உழைப்போம்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 17:19, 27 சூன் 2015 (UTC)Reply
இந்தத் தவணை எனக்கு இழுத்தடிப்புத்தான். இந்தத்திட்டத்துடன் பணியாற்றுவேன். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 18:18, 27 சூன் 2015 (UTC)Reply

கால அளவு குறித்தான பரிந்துரைகள் தொகு

வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்களுக்கு நடத்தலாம். ஏனெனில் சிலருக்கு வெள்ளி விடுமுறை நாளாகும். சில மாணவர்கள், வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து பங்களிக்க இயலும். சிலருக்கு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இரண்டு நாட்களும் பங்களிக்க இயலும்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:37, 29 சூன் 2015 (UTC)Reply

தங்களுடைய நோக்கம் புரிகிறது. அதன் காரணமாகவே விடுமுறை நாளன்று வைத்துக்கொள்ளலாம் என யோசனை கூறியுள்ளேன். வழக்கமாக மூன்று நாட்கள் என்று சொன்னால், ஏதாவது ஒரு நாள் பங்களித்தால் போதும் என்ற மனப்பான்மை என்னைப்போன்றோருக்கு வந்துவிடும். கடைசி நாள் பார்த்துக்கொள்ளலாம் என முதலிரண்டு நாட்கள் தள்ளிப்போட்ட பிறகு கடைசி நாளும் பங்கெடுக்க முடியாமல போன தருணங்கள் பல உள்ளன. ஒரு நாள் (24 மணி நேரம்) என குறிப்பிட்டால் அந்த ஒரு நாள் விக்கிக்காக எப்பாடுபட்டாவது ஒதுக்கிவிட வேண்டும். இது ஒரு திருப்புமுனை திட்டமே. இதன் பிறகு 3 விக்கி நாட்கள், விக்கி வாரம் (7 நாட்கள்), இரவி கூறியது போல 100 விக்கி நாட்கள் போன்றவைகளையும் செயல்படுத்தலாம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:25, 2 சூலை 201உ5 (UTC)
செல்வா எடுத்துக்காட்டியது சரிதான். இங்கே துபாயில் வெள்ளி, சனி விடுமுறை நாட்கள் அதனால், இதற்கு முன்னர் இடம்பெற்ற விக்கி மரத்தானிலும் நான் பங்குபெற இயலவில்லை. ஒரு நாள் (24 மணிநேரம்) வைப்பதாக இருந்தால் சனிக்கிழமை பொருத்தமாக இருக்குமா என்று யோசிக்கலாம். சிலருக்கு சனிக்கிழமையும் வேலை நாளாக இருக்கக்கூடும். ஞாயிற்றுக் கிழமை என்றால் பாதிக்கப்படுபவர்கள் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது. -- மயூரநாதன் (பேச்சு) 08:39, 3 சூலை 2015 (UTC)Reply
அமீரகத்தில் எனக்கு 19 ஆம் தேதி விடுமுறைதான். நானும் கலந்துகொள்ளலாம். --- மயூரநாதன் (பேச்சு) 14:17, 7 சூலை 2015 (UTC)Reply

நாள் குறித்தான பரிந்துரைகள் தொகு

ரம்ஜான் திருநாளையொட்டி (ஈத் அல் பித்ர்) வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை (சூலை 19). --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 13:32, 5 சூலை 2015 (UTC)Reply

  1.   விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 13:49, 5 சூலை 2015 (UTC)Reply
  2.   விருப்பம் சுந்தர் \பேச்சு 16:54, 5 சூலை 2015 (UTC)Reply
  3.   விருப்பம்Commons sibi (பேச்சு) 08:41, 6 சூலை 2015 (UTC)Reply
  4.   விருப்பம் --மயூரநாதன் (பேச்சு) 14:15, 7 சூலை 2015 (UTC)Reply
  5.   விருப்பம் --Yokishivam (பேச்சு) 06:09, 12 சூலை 2015 (UTC)Reply

ஆவலும் எதிர்பார்ப்பும்... தொகு

  1. 100 பயனர்கள், சராசரியாக 100 பயனுள்ள தொகுப்புகளை தமது 24 மணி நேரத்தில் செய்தால்... 10,000 தொகுப்புகள் தமிழ் விக்கியில் சேர்ந்துவிடும் என்பது எனது தனிப்பட்ட ஆவல், எதிர்பார்ப்பு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:35, 8 சூலை 2015 (UTC)Reply
எட்டியது 2550 தொகுப்புகள் --மணியன் (பேச்சு) 04:44, 20 சூலை 2015 (UTC)Reply
5-10 புதிய கட்டுரைகளை 50 பயனர்கள் உருவாக்கினார், 500 கட்டுரைகள் கிடைக்கும் :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:02, 11 சூலை 2015 (UTC)Reply
எட்டியது 155 கட்டுரைகள் --மணியன் (பேச்சு) 04:44, 20 சூலை 2015 (UTC)Reply

பயனர்களின் தனிப்பட்ட திட்டம் தொகு

இந்த மாரத்தான் நிகழ்வுக்கான தமது திட்டங்களை பயனர்கள் இங்கு பட்டியலிடலாம்:

திருத்தம் தேவை தொகு

இப் பக்கத்தின் இடது பக்கத்தில் உள்ள பகிர்க என்பதில் உள்ள டுவிட்டர் #tawp தமிழ் விக்கிபீடியாவிற்கு சொந்தமில்லை. எனவே, இது விரைவில் திருத்தப்பட வேண்டும். எங்கு திருத்த வேண்டும் என்ற வழி எனக்கு தெரியவில்லை. தெரிந்தவர்கள் உதவவும். முதலில் நான் பகிர்ந்த டுவிட்டர் செய்தியை நீக்கிவிட்டு புதிதாக தற்பொழுது கொடுத்துள்ளேன். இதனால்தான் இந்த விவரம் எனக்கு தெரிய வந்தது. நன்றி! --நந்தகுமார் (பேச்சு) 18:56, 8 சூலை 2015 (UTC)Reply

# பயன்படுத்துவதற்கும் அலுவல் முறைக் கணக்குக்கும் தொடர்பில்லையே. Tawiki என்ற கணக்கை இரவிசங்கர் நடத்தி வருகின்றார் என நினைக்கிறேன். --மதனாகரன் (பேச்சு) 02:57, 9 சூலை 2015 (UTC)Reply
நான் குறிப்பிடுவது டுவிட்டர் கணக்கு குறித்தல்ல. இந்தப் பக்கத்தை டுவிட்டரில் பகிரும்போது தானாக வரும் #tawp என்னும் சுட்டியைப்பற்றியதே. இப்பக்கத்தைப் பகிரும்போது வரும் செய்தி கீழேயுள்ளது:

தமிழ் விக்கிப்பீடியாவில் படித்தேன்,பிடித்தது: விக்கி மாரத்தான் 2015 ta.wikipedia.org/s/4jhv #tawp @tawiki

--நந்தகுமார் (பேச்சு) 05:01, 9 சூலை 2015 (UTC)Reply

# குறியீட்டுடன் இருப்பது கணக்குக்கான அடையாளமன்று. பார்க்க: en:Hashtag --மதனாகரன் (பேச்சு) 05:49, 9 சூலை 2015 (UTC)Reply

நந்தகுமார், இந்தத் துவிட்டர் கணக்குக்கான அணுக்கம் என்னிடம் இல்லை. யார், யாரிடம் உள்ளது என்று இங்கு வினவியுள்ளேன். நந்தக்குமார் சுட்டியபடி #tawp என்ற குறியீட்டில் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தொடர்பற்ற பல விசயங்கள் வருவதால் தனித்துவமான ஒரு குறியீடு தேவை. #tawiki குறியீடும் தனித்துவமாக இல்லை. #tamilwiki என்பதும் புழக்கத்தில் உள்ளது. #tamilwikilinks என்று தந்தால் இவ்வாறான பகிர்வுகளை மட்டும் பின்தொடர் ஏதுவாக இருக்கும். உரிய முடிவு எடுத்தால் இங்கு மாற்றிவிடலாம். --இரவி (பேச்சு) 12:13, 11 சூலை 2015 (UTC)Reply

இரவி, கீழ்வரும் சுட்டிகள் உபயோகப்படுமா? கருத்து தெரிவியுங்கள்--நந்தகுமார் (பேச்சு) 12:21, 11 சூலை 2015 (UTC)Reply
  • #tawik
  • #tamilarwiki
  • #wikitamil

@Nan:, #tawik முழுமையாக இல்லை. #tamilarwiki என்பது சரியான பொருளைச் சுட்டவில்லை. பேசாமல் #tawikipedia என்று தருவோமா?--இரவி (பேச்சு) 17:49, 15 சூலை 2015 (UTC)Reply

@Ravidreams:   விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 17:52, 15 சூலை 2015 (UTC)Reply
tawikipedia பொருத்தமாகப் படுவதால் மாற்றியுள்ளேன். @Ravidreams: துவிட்டர்க் கணக்கை நடத்தி வருபவர் யாரெனத் தெரிய வந்ததா? --மதனாகரன் (பேச்சு) 03:57, 16 சூலை 2015 (UTC)Reply

பயிற்சி பட்டறைகள் தொகு

இந்த விக்கிமாரத்தானில் பங்கேற்க ஏதேனும் சிறப்பு பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்ய இயலுமா? ஏற்கனவே பயிற்சிபட்டறைகள் நடந்த பள்ளி, கல்லூரிகளில் வேண்டுகோள் விடுக்கலாம்? ஊடகங்களில் இதுகுறித்த தகவல் தெரிவிக்க வேண்டும். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:32, 9 சூலை 2015 (UTC)Reply

15 பயனர்கள் அமர்ந்து தொகுக்க வசதியாக கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை, தமிழ் நாடு அலுவலகம் இருக்கும் . விக்கி மாரத்தான் , பயிற்சி பட்டறை நடத்த அதை பயன் படுத்திக்கொள்ளலாம் . --Commons sibi (பேச்சு) 09:14, 10 சூலை 2015 (UTC)Reply
@Commons sibi, இதனை ஒருங்கிணைக்க தங்களால் இயலுமென்றால், செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:44, 10 சூலை 2015 (UTC)Reply
@ Selvasivagurunathan m , கண்டிப்பாக முயல்கிறேன் . 10 பயனர்கள் பங்குபெறலாம் . --Commons sibi (பேச்சு) 03:27, 17 சூலை 2015 (UTC)Reply
@Commons sibi, (1) மகனுக்குக் கற்றுத்தர வேண்டும் (50 பங்களிப்புகள்). (2) சில நிருவாக வேலைகளைச் செய்ய வேண்டும். (3) நான் 250 பங்களிப்புகள் செய்ய வேண்டும். (4) ஓய்வும் தேவைப்படும். - இந்தக் காரணங்களால் நான் இல்லத்திலிருந்தே பங்களிக்க எண்ணியுள்ளேன். தங்களின் முயற்சிகளுக்கு உளங்கனிந்த நன்றிகள்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:53, 18 சூலை 2015 (UTC)Reply

ஆவலாக இருந்தாலும்... தொகு

உண்மையில் இதில் கலந்து கொள்ளும் விருப்பம் எனக்கிருக்கிறது. ஆனால் நான் யூலை 19 ஆம் திகதி வடக்கு சுமாத்திராவின் சில கிராமப் புறங்களுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளேன். நாங்கள் போகத் திட்டமிட்டுள்ள இடத்துக்கு இங்கே ஜகார்த்தாவிலிருந்து மேடானுக்கு இரண்டு மணித்தியால விமானப் பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து பதின் மூன்று மணி நேரம் சீருந்திற் செல்ல வேண்டும். அங்கிருந்து ஏதாவது தகவல் திரட்டி எழுத முடியுமானால் எழுதுவேன்.--பாஹிம் (பேச்சு) 16:04, 10 சூலை 2015 (UTC)Reply

பாகிம், திருமணத்துக்கு வர முடியாதவர்கள் வரவேற்புக்கு வந்தும் மொய் எழுதுவது தமிழர் பண்பாடன்றோ :) தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பாளர்களின் உற்சாகத்தைத் தூண்டுவது தான் நோக்கம் என்பதால் ஓரிரு நாள் முன்போ பின்போ பங்களிக்க இயன்றாலும் சரி. நன்றி.--இரவி (பேச்சு) 12:17, 11 சூலை 2015 (UTC)Reply

விக்கி துணைத்திட்டங்கள் தொகு

விக்கி மூலம், காமன்ஸ் இல் இந்த நாளில் பங்களிக்கலாமா? அல்லது விக்கிப்பீடியா மட்டும்தானா?--−முன்நிற்கும் கருத்து Tshrinivasan (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

ஏனைய விக்கித்திட்டங்களில் வழமை போன்று நீங்கள் பங்களிக்கலாம்.--Kanags \உரையாடுக 23:14, 10 சூலை 2015 (UTC)Reply
பிற விக்கித்திட்டங்களுக்கு தனியாக இதுபோன்ற ஒரு நிகழ்வை நடத்தலாம் ஸ்ரீனி. 19-ம் தேதி தமிழ் விக்கிப்பீடியா மட்டும் கருத்தில் கொள்ளப்படுகிறது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:00, 11 சூலை 2015 (UTC)Reply

விக்கிமீடியா பக்கங்களில் தொகு

விக்கிமீடியா பக்கங்களில் விக்கி மாரத்தான் 2015 குறித்த பதாகைகளை இட முடியுமா @ சண்முகம்? முடியுமென்றால் பதாகையின் அளவு தேவை. ஒன்று உருவாக்கித்தருகிறேன். தமிழ் விக்கியின் அனைத்து திட்டங்களிலும் திங்கள் முதல் இது வந்தால் 19-ம் தேதிக்குள் நல்ல வரவேற்பு பெரும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:56, 11 சூலை 2015 (UTC)Reply

தமிழ் விக்கிமீடியா திட்டங்களில் மட்டும் இட ஒவ்வொரு திட்டத்திலும் மீடியாவிக்கி:Sitenotice பக்கத்தைத் தொகுத்தால் போதுமானது. இதனை அனைத்து நிருவாகிகளும் செய்யலாம். பதாகையைத் தாருங்கள். சேர்த்து விடுவோம்.--இரவி (பேச்சு) 12:15, 11 சூலை 2015 (UTC)Reply
இரவி, உங்கள் பேச்சுப் பக்கத்தில் பதாகை தயாராக உள்ளது. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 05:31, 12 சூலை 2015 (UTC)Reply
மற்ற தமிழ் விக்கித் திட்டங்களிலும் மீடியாவிக்கி:Sitenotice ல் சேர்த்தாயிற்றா?--சண்முகம்ப7 (பேச்சு) 02:48, 13 சூலை 2015 (UTC)Reply
இல்லையென்று நினைக்கிறேன். மற்றைய விக்கித்திட்டங்களின் நிருவாகிகள் இதனைச் செய்ய முடியும். சண்முகம் உலகளாவிய நிருவாகி என்பதால் அவரே செய்ய முடியும். இற்றைப்படுத்திய பின், அவ்வவ்விக்கித் திட்டங்களின் மீடியாவிக்கி:Sitenotice id பக்கத்தில் உள்ள எண்ணுடன் 1ஐக் கூட்ட மறக்க வேண்டாம். --மதனாகரன் (பேச்சு) 08:38, 13 சூலை 2015 (UTC)Reply
@Shanmugamp7:, விக்சனரி, விக்கிமூலம், விக்கிநூல்கள் ஆகிய திட்டங்களின் தள அறிவிப்பில் பதாகையைச் சேர்த்து விட்டேன். விக்கிமேற்கோளில் நிருவாகி இல்லை. அங்கு சண்முகத்தின் உதவி தேவை. விக்கிசெய்திகளில் @Kanags: உதவ முடியும்.--இரவி (பேச்சு) 17:27, 15 சூலை 2015 (UTC)Reply

பதாகையில் பிழை தொகு

@மதனாஹரன்:; மதனாகரன் தற்பொழுது உள்ள பதாகையில் விக்கி மாரத்தன் என்று உள்ளது. விக்கி மாரத்தான் என்று திருத்திவிடுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 17:52, 13 சூலை 2015 (UTC)Reply
@மதனாஹரன்:, @Nan: பிழை திருத்தப்பட்டது.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:41, 14 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 08:43, 14 சூலை 2015 (UTC)Reply
வானூர்தி நிலையத்திலிருந்து கொண்டு படிமத்தை உடனடியாகச் சீர்செய்த தினேசுக்கு நன்றி. --மதனாகரன் (பேச்சு) 08:47, 14 சூலை 2015 (UTC)Reply

நாளிதழ் செய்தியில் பிழை தொகு

தி இந்து (தமிழ்) நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தகவற் பிழை இருக்கிறது. //விக்கி மாரத்தான் அன்று 1000 தன்னார்வலர்கள் தலா 10 கட்டுரைகளை எழுதினால், ஒரே நாளில் சுமார் 10,000 கட்டுரைகளை உருவாக்கிவிடலாம் // இவ்வாறாக நான் எங்குமே குறிப்பிடவில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:46, 17 சூலை 2015 (UTC)Reply

இன்னும் சில பிழைகள் உள்ளது. நான் அவர்களுடைய கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:25, 17 சூலை 2015 (UTC)Reply
இதழாளர்கள் நம்மிடம் பேசுவதில் புரிந்து கொண்டதை வைத்து இப்படித் தாமாகவே ஒருவர் சொன்னதாக வெளியிடுவது உண்டு. மிகவும் அடிப்படையான கொள்கை சார் பிழைகள் இருந்தால் ஒழிய இதழாளரிடம் சுட்டிக் காட்டுவதில்லை. நாளடைவில் இதழாளரிடம் உறவைப் பேணி வரும் போது, செய்திகளின் துல்லியம் கூடும். எனவே, இதனைப் பெரிது படுத்தத் தேவையில்லை. --இரவி (பேச்சு) 13:05, 19 சூலை 2015 (UTC)Reply

தொகுப்புகள் குறித்த தரவுகள் தொகு

நீச்சல்காரன் வடிவமைத்த தானியங்கி தரும் தரவுகளை இங்கு காணலாம்.

IP உச்ச வரம்பில் இருந்து விலக்கு தொகு

விக்கி மராத்தான் மற்றும் பயிற்சிப் பட்டறை திட்டமிடப்பட்டுள்ளதால் 10.224.191.71 என்கிற IP க்கு 6 பயனர்கள் என்ற உச்ச வரம்பில் இருந்து நாளை ஒரு நாள் மட்டும் விலக்கு வழங்க வேண்டுகிறேன். --Commons sibi (பேச்சு) 12:23, 18 சூலை 2015 (UTC)Reply

Commons sibi கணக்குக்கு, ஏற்கெனவே கணக்கை உருவாக்குவோர் அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் கணக்கில் புகுபதிந்து, சிறப்பு:CreateAccount என்ற பக்கத்தைப் பயன்படுத்திக் கணக்குகளை உருவாக்கிக் கொள்ளலாம். --மதனாகரன் (பேச்சு) 18:34, 18 சூலை 2015 (UTC)Reply
@Shanmugamp7: கவணிக்க வேண்டுகிறேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:04, 18 சூலை 2015 (UTC)Reply
10-12 பேர் கலந்து கொள்வார்கள் என சிபி கூறினார். அதிகபட்சம் 6 பேருக்கு கணக்கு உருவாக்க வேண்டும், இதற்கு கணக்கு உருவாக்குவோர் அணுக்கம் போதுமானது, மேலும் அது ஏற்கனவே metaவில் இருந்து வழங்கப்பட்டுள்ளது--சண்முகம்ப7 (பேச்சு) 04:11, 19 சூலை 2015 (UTC)Reply

யாழ் ஊடகங்களில் தொகு

யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், வலம்புரி மற்றும் தினக்குரல் பத்திரிகைகளில் செய்திக்குறிப்பாக வெளியிடுமாறு வேண்டியுள்ளேன். நாளைய பத்திரிகைகளில் வெளிவரும் என நம்புகிறேன். வெளிவந்தால் பத்திரிகைப் படிமங்களை இணைக்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:36, 18 சூலை 2015 (UTC)Reply

  விருப்பம், நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:37, 18 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம் -- மயூரநாதன் (பேச்சு) 15:41, 18 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம். யாழ் ஊடகங்கள் எதிலும் இதுவரையில் தமிழ் விக்கி பற்றிய தகவல்களோ கட்டுரைகளோ இதுவரையில் வந்ததாகத் தெரியவில்லை. கொழும்பு ஊடகம் ஒன்றில் சில ஆண்டுகளுக்கு முன்னர் முழுப் பக்கக் கட்டுரை ஒன்று வந்ததாக ஞாபகம். தமிழ் விக்கிப் பற்றிய விரிவான தகவல் அடங்கிய கட்டுரை ஒன்று அவசியம் யாழ் ஊடகம் ஒன்றில் வெளியிட ஆவன செய்ய வேண்டும்.--Kanags \உரையாடுக 22:55, 18 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம் --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 23:00, 18 சூலை 2015 (UTC)Reply

மூன்று பத்திரிகைகளும் வெளியிடாமை ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு பத்திரிகையில் விக்கிப்பீடியா என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் நிலையில் நான் சந்தித்த பத்திரிகையாளர் இருந்தார். எனினும் பிரசுரிப்பதாகக் கூறினார். யாராவது அறிமுகமானவர்கள் மூலம் அணுகவேண்டும். மீண்டும் முயற்சிப்போம். தமிழ் விக்கிப்பீடியா குறித்து கட்டுரை வெளியிடவும் விக்கி மாரத்தான் நடைபெற்றது என்றாவது ஒரு செய்தியையும் வெளியிட முடியுமா என்று பார்க்கிறேன்.--சிவகோசரன் (பேச்சு) 09:25, 19 சூலை 2015 (UTC)Reply

உலகம் முழுக்கவே விக்கிப்பீடியா குறித்த இதழாளர்களின் அணுகுமுறை இவ்வாறானதே. தொடர் நிகழ்வுகள், உரையாடல்களுக்குப் பிறகே ஓரளவாவது விழிப்புணர்வு பெறுவர். எனவே, கவலைப்பட வேண்டாம். யாழ் ஊடகங்களில் செய்தி வெளியிட முனைந்தமைக்கு நன்றி.--இரவி (பேச்சு) 13:03, 19 சூலை 2015 (UTC)Reply
  விருப்பம் --சிவகோசரன் (பேச்சு) 16:35, 19 சூலை 2015 (UTC)Reply
பத்திரிகையாளர்கள் இனிப்பு மிட்டாய்களாக மக்களைத் தூண்டும் செய்திகளில் மட்டும் ஆர்வம் காட்டுவதும், காத்திரமான உழைப்பு குறித்து அக்கறையில்லாதிருப்பது கவலையே.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 18:03, 19 சூலை 2015 (UTC)Reply

மாரத்தான் ஓட்டத்தின்போது நடந்த உரையாடல்கள் தொகு

வரவேற்பு தொகு

அனைவருக்கும் வணக்கம்; நல்வரவு! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:01, 19 சூலை 2015 (UTC) இன்றுReply
சரித்திர சாதனை ஒன்றைப் படைத்து
தமிழ்த் தாயின் தாகம் தணிபோம்.
விக்கி மாரத்தான் 2015 இல்
பங்கேற்கும் பயனர்கள் அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள். அன்புடன் --கி.மூர்த்தி 00:09, 19 சூலை 2015 (UTC)

எனது விக்கி மாரத்தான் அமீரக நேரம் மு. ப. 6.35க்குத் தொடங்கியுள்ளது. சுந்தர் தமிழ் விக்கியில் இனைந்து இன்று 11 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அவருக்கு ஒரு வாழ்த்துச் செய்தியுடன் தொடங்கியுள்ளேன். தமிழ் விக்கிக்கு அவரது பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டதன் அடையாளமாக இன்றைய எனது விக்கிமரத்தான் பங்களிப்புக்களை சுந்தருக்கு உரித்தாக்க விரும்புகிறேன். -- மயூரநாதன் (பேச்சு) 03:20, 19 சூலை 2015 (UTC)   விருப்பம்--மணியன் (பேச்சு) 04:30, 19 சூலை 2015 (UTC)Reply
பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்துகள் ! தமிழ் இணைய உலகிற்கு இது புது அனுபவமாக அமைகின்றது.. முன்னெடுத்துச் செல்லும் அன்பர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும் !! --மணியன் (பேச்சு) 04:30, 19 சூலை 2015 (UTC)Reply
மிக்க நன்றி, மயூரநாதன். :) -- சுந்தர் \பேச்சு 15:33, 19 சூலை 2015 (UTC)Reply

சென்னை பயிற்சிப் பட்டறை செய்திகள் தொகு

நானும் , புதிய இரண்டு நண்பர்களும் ( முகுந்தன் , மோகன் ராஜ் ) விக்கி மாரத்தான் ஓடத்திற்கு ஆயத்தம் ஆகிவிட்டோம் . அவர்களுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே , நானும் தொகுக்கிறேன் . 10.30 மணி போல் மேலும் இரண்டு பயனர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்கிறோம் .--Commons sibi (பேச்சு) 04:06, 19 சூலை 2015 (UTC)Reply

எங்கு நடைபெறுகிறது ?--மணியன் (பேச்சு) 04:30, 19 சூலை 2015 (UTC)Reply
@ மணியன்... விவரத்திற்கு, இங்கு காணுங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:37, 19 சூலை 2015 (UTC)Reply
மேலும் ஒருவர் இணைந்துள்ளார் . --Commons sibi (பேச்சு) 06:35, 19 சூலை 2015 (UTC)Reply

பங்களிப்புக் குறித்த முக்கியத் தரவுகளைத் தரும் விளக்கப்படங்கள் தொகு

2 மணிநேரத்துக்கு ஒருமுறை இற்றை செய்யப்படும் விளக்கப்படங்களை இங்கு காணலாம்.

4 ஆவது மணிநேர முடிவில்... 29 புதிய கட்டுரைகள், 327 மொத்தத் தொகுப்புகள் எனும் கணக்கில் ஓடிக் கொண்டிருக்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:33, 19 சூலை 2015 (UTC)Reply

6 ஆவது மணிநேர முடிவில்... 45 புதிய கட்டுரைகள், 585 மொத்தத் தொகுப்புகள் எனும் கணக்கில் ஓடிக் கொண்டிருக்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 19 சூலை 2015 (UTC)Reply

8 ஆவது மணிநேர முடிவில்... 67 புதிய கட்டுரைகள், 999 மொத்தத் தொகுப்புகள் எனும் கணக்கில் ஓடிக் கொண்டிருக்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:34, 19 சூலை 2015 (UTC)Reply

10 ஆவது மணிநேர முடிவில்... 83 புதிய கட்டுரைகள், 1205 மொத்தத் தொகுப்புகள் எனும் கணக்கில் ஓடிக் கொண்டிருக்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:34, 19 சூலை 2015 (UTC)Reply

12 ஆவது மணிநேர முடிவில்... 97 புதிய கட்டுரைகள், 1559 மொத்தத் தொகுப்புகள் எனும் கணக்கில் ஓடிக் கொண்டிருக்கிறோம்.--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 12:45, 19 சூலை 2015 (UTC)Reply

14 ஆவது மணிநேர முடிவில்... 129 புதிய கட்டுரைகள், 1758 மொத்தத் தொகுப்புகள் எனும் கணக்கில் ஓடிக் கொண்டிருக்கிறோம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:40, 19 சூலை 2015 (UTC)Reply


எத்தனைப் புதுப்பயனர்கள் பங்களித்தனர் ? புகுபதிகை செய்யாது எத்தனை பேர் பங்கேற்றனர் என்பது நமது பரப்புரைகளின் செயற்றிறனை வெளிக்கொணரும். --மணியன் (பேச்சு) 04:54, 20 சூலை 2015 (UTC)Reply

வாழ்த்துக்கள் தொகு

விக்கி மாரத்தானில் பங்களிக்க மிகவும் ஆர்வம் இருந்தாலும், பங்களிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். இதனைக் கைத்தொலைபேசியில் இருந்தே எழுதுகின்றேன். பங்களிக்க முடியாவிட்டாலும், விக்கி மாரத்தான் வெற்றிபெற வாழ்த்துக்கள். --கலை (பேச்சு) 09:21, 19 சூலை 2015 (UTC)Reply

நன்றி, கலை. நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து வழமை போல் பங்களியுங்கள்.--இரவி (பேச்சு) 13:06, 19 சூலை 2015 (UTC)Reply

விக்கிமேனியாவில் இருந்து தொகு

மெக்சிக்கோவில் விடிந்தது முதல் தொகுக்கத் தொடங்கி விட்டோம். மற்ற மொழி விக்கிப்பீடியர்களையும் தொகுக்கக் கோரியுள்ளோம். விக்கி மாரத்தான் மிகச் சிறப்பாக நடந்து வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி. நீச்சல்காரன் உதவியுடன் கிடைக்கும் விக்கி மாரத்தான் தரவு இற்றைகள் தமிழ் விக்கிப்பீடியர்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது. சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் செல்வசிவகுருநாதனுக்கும் தினேசுக்கும் பாராட்டுகள்.--இரவி (பேச்சு) 13:11, 19 சூலை 2015 (UTC)Reply

  விருப்பம்--சிவகோசரன் (பேச்சு) 16:35, 19 சூலை 2015 (UTC)Reply

மாரத்தான் வெற்றி தொகு

செல்வசிவகுருநாதன் எதிர்பார்ப்பைவிடக் குறைவாக இருந்தாலும், இன்றைய மாரத்தான் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. 5 புதிய கட்டுரைகள் துவக்கம், ஏறத்தாழ 100 தொகுப்புக்களுடன் இன்றைய எனது பங்களிப்பை நிறைவு செய்கிறேன். --சிவகோசரன் (பேச்சு) 16:35, 19 சூலை 2015 (UTC)Reply

  விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:39, 19 சூலை 2015 (UTC)Reply

இன்றைய மாரத்தான் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. என்னுடைய 15 மணிநேர ஓட்டத்தை நிறைவு செய்யும் நேரம் நெருங்குகிறது. இன்று பங்களிக்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிகழ்வின் வெற்றிக்காக உழைத்த எல்லோருக்கும் வாழ்த்துக்கள். --மயூரநாதன் (பேச்சு) 18:00, 19 சூலை 2015 (UTC)Reply

நிறைவு தொகு

UTC நேர அடிப்படையில், 24 மணிநேர மாரத்தான் நிகழ்வு நிறைவடைகிறது. பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 00:17, 20 சூலை 2015 (UTC)Reply

செல்வா, நிகழ்வைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தீர்கள். 24 மணிநேரமும் விக்கி மாரத்தான் தொடர்ந்து கொண்டேயிருந்தது. ஒரு சராசரி விக்கி நாளைவிடப் பல மடங்கு தொகுப்புக்களும், கட்டுரைகளும் கிடைத்தன. வாழ்த்துகள். -- மயூரநாதன் (பேச்சு) 03:08, 20 சூலை 2015 (UTC)Reply
செல்வகுருநாதன், மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தீர்கள் ! இந்த முதல் முயற்சி மேலும் இத்தகைய நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்ல தங்களுக்கு உற்சாகத்தை தர வாழ்த்துகிறேன் !!--மணியன் (பேச்சு) 04:35, 20 சூலை 2015 (UTC)Reply

நல்ல முயற்சி. விக்கி குழு/விக்கி அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்! --Photonique (பேச்சு) 04:43, 20 சூலை 2015 (UTC)Reply

நிறைவாக அமைந்தது! -- சுந்தர் \பேச்சு 06:15, 21 சூலை 2015 (UTC)Reply

இணைய வசதி இன்மையால் (காசு கட்டியும் கோளாறு) என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. மராத்தான் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:26, 21 சூலை 2015 (UTC)Reply

சூலை 19 இல் நிகழ்ந்த மாரத்தானில் யான் கலந்துகொண்டு 116 தொகுப்புகள் பங்களித்தேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். --Semmal50 (பேச்சு) 08:51, 22 சூலை 2015 (UTC)Reply

  விருப்பம் -- மயூரநாதன் (பேச்சு) 17:20, 23 சூலை 2015 (UTC)Reply

சிறு பரிசு தொகு

வணக்கம். விக்கி மாரத்தான் 2015 சிறப்பாக நடைபெற்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். விக்கி மாரத்தானில் பங்கேற்ற அனைவருக்கும் சிறு இலச்சினைகளை பரிசாக அளிக்க விரும்புகிறேன். இது இனிவரும் காலங்களில் விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அளிக்குமென நம்புகிறேன். இது குறித்து விக்கிமீடியா இந்தியாவின் இயக்குனரான, இரவியிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். பயனர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:07, 22 சூலை 2015 (UTC)Reply

  விருப்பம் -- மயூரநாதன் (பேச்சு) 17:05, 22 சூலை 2015 (UTC)Reply
தினேசு, முதலில் ஒரு வேண்டுகோள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு உடன் பங்களிப்பாளனாகத் தான் என்னை உணர்கிறேன். மற்றவர்களும் உணர வேண்டும் என்று விரும்புகிறேன், பரப்புரைக் களங்களிலும் கூட என்னை ஒரு நிருவாக அணுக்கம் உடைய பயனர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதில்லை. நெடுநாள் பங்களிப்பாளன் என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். நான் மட்டுமல்லன், நம்முடைய பெரும்பாலான பங்களிப்பாளர்களும் இத்தகையோராக இருப்பதாலேயே தமிழ் விக்கிப்பீடியா மற்ற பல விக்கிப்பீடியாக்கள் போல் அதிகாரத் தோரணைகளில் சிக்கிக் கொள்ளாமல் வீறு நடை போடுகிறது. எனவே, என்னைக் குறிப்பிடும் போது இரவி என்று மட்டுமே குறிப்பிடுங்கள். விக்கிப்பீடியா இந்தியாவுடனான தொடர்பாடல்களை நிறுவனப் பெயரை முன்வைத்தே குறிப்பிடலாம். நிற்க ! மொசில்லா போன்ற பயனர் சமூகங்கள் அளவுக்கு மிஞ்சி பரிசுப் பொருட்கள் பெற்றதால் மெய்யான ஊக்கம் குன்றியதாக அறிய முடிகிறது. எனவே, விக்கிப்பீடியாவிலும் அந்த நிலை வரக்கூடாது என்ற கவலையில் எல்லா செயற்பாடுகளிலும் பரிசுகளை முன்னிறுத்தாமல் ஒரு சில போட்டிகளை மட்டும் நடத்துகிறோம். எனினும், ஒரு செயற்பாடு முடிந்த பின் ஒரு பூங்கொத்து / வாழ்த்து போல சிறு அன்புப் பரிசுகளை அனுப்பி மகிழ்விப்பது ஏற்புடையதே. விக்கிமீடியா இந்தியாவில் இத்தகைய சிறு பரிசுகளை உற்பத்தி செய்து இருப்பில் வைக்க முனைந்து வருகிறோம். அவை கிடைத்தவுடன் அனைத்து மொழி விக்கிப்பீடியர்களுக்கும் அனுப்பி வைக்கலாம். அந்தந்த மொழிச் சமூகங்கள் தங்கள் தேவை, விருப்பத்துக்கு ஏற்ப இவற்றைப் பயன்படுத்தலாம். நன்றி.--இரவி (பேச்சு) 17:58, 22 சூலை 2015 (UTC)Reply

நன்றி, நிச்சயமாக --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 07:19, 23 சூலை 2015 (UTC)Reply

மாரத்தானில் பங்குபெறுவதாகத் தெரிவித்து, தொகுப்புகளைச் செய்த பயனர்களுக்கு அவர்களின் பேச்சுப் பக்கங்களில் நன்றி தெரிவித்துள்ளேன். பெயரினைப் பதிவு செய்யாமல், அன்றைய நாளில் தொகுப்புகளைச் செய்த நீண்டகாலப் பங்களிப்பாளர்கள் 3 பேருக்கு நமது நன்றியைத் தெரிவித்துள்ளேன். ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் என்பதால்... தினேசு, காமன்சுசிபி ஆகியோரின் பேச்சுப் பக்கங்களில் அறிவிப்பினை சேர்க்கவில்லை. வேறு எவராவது (நான் அறியாமல்) விடுபட்டிருந்தால், அவர்களின் பேச்சுப் பக்கங்களில் உரிய நன்றி அறிவிப்பினை இடுமாறு சக பங்களிப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:22, 25 சூலை 2015 (UTC)Reply

திறனுற பங்கேற்ற அனைவருக்கும் (காலதாமதமான) வாழ்த்துக்கள் :-) -சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:38, 9 நவம்பர் 2015 (UTC) சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 06:38, 9 நவம்பர் 2015 (UTC)Reply

Return to the project page "விக்கி மாரத்தான் 2015".