மோர்ய கோசவி
மோர்ய கோசவி (Morya Gosavi) என்பவர் இந்து மதத்தின் பிரிவுகளுள் ஒன்றான கணாபத்திய சமயத்தைச் சேர்ந்த விநாயக பக்தர் ஆவார். அத்துடன் இவர் மோரய கோசவி[1][2] எனவும் மொரோபா கோசவி எனவும் அழைக்கப்படுகின்றார். கணாபத்தியத்தின் தலைமை ஆன்மீக மூலகர்த்தா எனக் கருதப்படுகின்றார். அத்துடன் பல்வேறு விநாயக பக்தர்கள் காணப்படுகின்ற போதிலும் இவரே மிகவும் பிரபலமான பக்தராகக் குறிப்பிடப்படுகின்றார்.[3]
மோர்ய கோசவி | |
---|---|
மோர்ய கோசவியின் தோற்றம் | |
பிறப்பு | கிபி 1375 பீதர், கருநாடகம் அல்லது மோர்கவோன் கணேசர் ஆலயம், மகாராட்டிரம், இந்தியா |
இறப்பு | கிபி 1561 சின்ச்வார்ட், மகாராட்டிரம் |
தலைப்புகள்/விருதுகள் | கணாபத்தியத்தின் தலைமை ஆன்மீக மூலகர்த்தா |
தத்துவம் | கணாபத்தியம் |
மோர்ய கோசவியின் வாழ்க்கைக் காலம் 13 ஆம் 17ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டதென ஊகிக்கப்படுகின்றது. மோர்கவோன் ஆலயத்திற்குச் சென்று வழிப்பட்டு வந்ததிலிருந்து இவர் விநாயக பக்தராக மாறத்தொடங்கியுள்ளார். மோர்ய கோசவியின் பக்தியில் பால் மயங்கிய விநாயகர் இனிமேல் சின்ச்வார்ட்டில் தன்னைச் சென்று வழிபாடுமாறு கனவில் கூறியதாகவும் அன்றிலிருந்து சின்ச்வார்ட்டில் விநாயகரை வழிபட்டு ஆலயம் ஒன்றையும் இவர் அமைத்ததாகவும் ஐதீகக் கதைகள் கூறுகின்றன. அவ்வாலய வளாகத்தினுள்ளேயே மோர்ய கோசவி சமாதி அடைந்தார். இவருக்கு ச்ந்தாமணி எனும் ஓர் மகன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அத்துடன் மோர்ய கோசவியின் சமாதியானது இன்றும் பல சின்ச்வார்ட், மோர்கவோன் ஆலயங்களுக்கு வந்து செல்லும் கணேச பக்தர்களைக் கவர்ந்து வருகின்றது.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Dhere, R C. "Summary of Prachin Marathichya Navdhara (Marathi book) chapter 2: Marathi literature of Ganesha cult". Official site of R C Dhere. பார்க்கப்பட்ட நாள் 12 January 2010.
- ↑ 2.0 2.1 "Culture and History". Pimpri Chinchwad Municipal Corporation (PCMC). 2008. Archived from the original on 22 பிப்ரவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 9 January 2010.
{{cite web}}
: Check date values in:|archivedate=
(help) - ↑ "Gāṇapatyas". Encyclopedia of Religion. Macmillan Reference USA, an imprint of the Gale Group. 2001. பார்க்கப்பட்ட நாள் 13 January 2010.