விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பரிந்துரைகள்
- பரிந்துரைகளுக்கான தகுதிகள்
- இங்கு பரிந்துரைக்கும் தகவல் தமிழ் விக்கிப்பீடியாவில் ஏதாவது ஒரு கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும். குறுங்கட்டுரையாக இருப்பினும் ஏற்றுக் கொள்ளப்படும்.
- பரிந்துரைக்கப்படும் தகவல் எந்தத் தலைப்புடன் (துறையுடன்) தொடர்புடையதோ அந்தத் தலைப்பின் (துறையின்) கீழாக இடம் பெறச் செய்ய வேண்டும்.
- தமிழ்/தமிழர் சார்ந்த தகவல் ஒன்று ஒவ்வொரு வாரமும் இடம் பெறுவதால் அது குறித்த பரிந்துரைக்கு ஒவ்வொரு வாரமும் முக்கியத்துவமளிக்கப்படுகிறது. பிற தலைப்புகளிலான தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் சிறிது காலதாமதமாகலாம்.
- பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பாகவே உங்களுக்குத் தெரியுமா? பகுதியில் இடம் பெற்றிருக்கக் கூடாது. எனவே, பரிந்துரைக்கும் தகவல் இதற்கு முன்பு இடம் பெறவில்லை என்பதை உங்களுக்குத் தெரியுமா? காப்பகம் மற்றும் அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தையும் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பரிந்துரைக்கும் தகவல்கள் மாறுபட்ட செய்திகளைக் கொண்டதாக இருப்பது விரும்பப்படுகிறது. ஒரே செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக பல்வேறு தகவல்கள் இருக்கும் நிலையில் அதிலிருந்து ஒரு தகவல் மட்டும் காட்சிப்படுத்தப்படும். தொடர்புடைய பிற தகவல்கள் காட்சிப்படுத்தப்படுவதில் அதிகமான காலதாமதம் ஏற்படலாம் அல்லது காட்சிப்படுத்தாமலே விடப்படலாம்.
- பரிந்துரைக்கும் தகவலுக்கான மேற்கோள் அக்கட்டுரையில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- பரிந்துரைக்கும் தகவலுக்கான படம் முக்கியத்துவம் பெற்றிருப்பின் அதற்கான படத்தையும் பரிந்துரையில் இணைக்கலாம்.
தமிழர், தமிழ் சார்ந்தவைதொகு
வ. சுப்பையா - விடயம் என்ன?
அறிவியல்தொகு
கணிதம்தொகு
தொழினுட்பம்தொகு
- இணைய பெட்டகம் - விடயம் என்ன?
- டயமண்ட் சூத்திரா - டைமண்ட் சூத்ரா நூலின் முகப்பில் அச்சிடப்பட்ட ஓவியம்தான், உலகிலேயே அச்சிடப்பட்ட முதல் ஓவியமும் அட்டைப்படமும் ஆகும்
- பாபிரஸ், பண்டைய எகிப்தில், கிமு நான்காம் ஆயிரமாண்டில், நைல் ஆற்றின் கழிமுகத்தின் சதுப்பு நிலத்தில் விளையும் பாபிரஸ் எனும் நாணல் போன்ற செடிகளின் தண்டுகளைப் பிழிந்தெடுத்த வெள்ளைப் பசை போன்ற கூழிலிருந்து தயாரிக்கப்படும் தடித்த காகிதம் போன்ற எழுது பொருளாகும். இந்த தடித்த காகிதத்தை எகிப்தியர்கள் பாபிரஸ் என்றழைத்தனர். இந்த தடிமனான பாபிரசில் எகிப்திய மன்னர்களின் வரலாற்று குறிப்புகள், கணிதக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் மற்றும் பிரமிடு குறிப்புகள் எழுதி சேமித்தனர். ஆயிற்று
உயிரியல்தொகு
- வெச்சூர் மாடு (இது உலகின் சிறிய மாட்டினமாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பித்துள்ளது) ஆயிற்று
- வேர்ப் பாலம் உலகின் உயிருள்ள பாலம் - தெளிவில்லை - ஆயிற்று
- நாட்டு நாய் (உலகின் 15,000 ஆண்டுகள் பழமையான மூன்று நாயினங்களுள் ஒன்று) - மேற்கோள் கட்டுரையில் இல்லை. - ஆயிற்று
- சிருங்கதி இடப்பெயர்வு ஒவ்வோராண்டும் ஒரே நேரத்தில், ஆப்பிரிக்காவின் செரங்கட்டி சரணாலயத்திலிருந்து மசாய் மாரா என்ற இடத்துக்கு லட்சக்கணக்கான விலங்குகள் இடம் பெயரும் ஒரு நிகழ்வு.
- கல்பர் விலாங்கு இவற்றிற்கு தலையோடு, விலா எலும்பு, செதில், இடுப்புத் துடுப்பு போன்றவை கிடையாது. தன்னைவிட பெரிய இரையையும் பிடித்து உண்ணக்கூடியது. - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- புழுப்பாம்பு ஆண் துணையின்றி இனப்பெருக்கம் செய்பவை
- ஆப்பிரிக்கப் புதர் யானைகள், ஆப்பிரிக்க யானை இனங்களில் இவை மிகவும் பெரியதாகும். முன்னர் இவ்வின யானையும், ஆப்பிரிக்கக் காட்டு யானையும் ஒரே இனமாக ஆப்பிரிக்க யானைகள் எனும் பெயரில் அடையாளம் காட்டப்பட்டது. தற்போதைய ஆய்வுகளில் இரண்டும் தனித்தனி இனமாகப் பகுக்கப்பட்டுள்ளது. - தெளிவில்லை
- பாலைவன யானைகள் - ஆப்பிரிக்காவின் நமீபியா, மாலி மற்றும் சகாரா பாலைவனப் பகுதிகளை ஒட்டி தங்களது வாழிடங்களாகக் கொண்டுள்ளது. இவைகள் சிறு மரம், செடி, கொடிகள் அடர்ந்த புதர் பகுதிகளில் வாழ்கிறது. - தெளிவில்லை
- தும்பிப்பன்றி, தாவர உண்ணியான இப்பாலூட்டிகள் பன்றியைப் போன்று குட்டையாகவும், நீண்டும் காணப்படும். இதன் மூக்குப் பகுதி நீண்டும், எதையும் எளிதில் பற்றிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்த தும்பிக்கைப் போன்று காணப்படும். இவ்விலங்குகள் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காடுகளில் காடுகளில் காணப்படுகிறது.
- மதுரை வாலாட்டிப்பாம்பு மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தென்பகுதியில் பழநி மலைத்தொடர் உள்ளிட்ட சில இடங்குகளில் மட்டுமே காணும் உள்ளக விலங்கு.
இயற்பியல்தொகு
வேதியியல்தொகு
வங்க ரசாயனங்கள் மற்றும் மருந்துகள் லிமிடெட் ( இந்தியாவின் முதல் மருந்து தயாரிப்பு நிறுவனம்) - மேற்கோள் கட்டுரையில் இல்லை
பொறியியல்தொகு
பச்லுர் ரகுமான் கான் 1973 முதல் 1998 வரை உலகின் உயரமான வானளாவியாக இருந்த சியர்சு கோபுரத்தின் கட்டமைப்புப் பொறியாளர்..
வானியல், அண்டவியல், புவியியல்தொகு
- சோலிஸ்தான் பாலைவனம் - பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின், பகவல்பூரிலிருந்து முப்பது கிலோ மீட்டர் தொலைவில் இந்தியாவின் தார் பாலைவனத்தை ஒட்டி அமைந்துள்ளது. - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- சில்கா ஏரி - 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.
- தக்கீசு அணை ஆப்பிரிக்காவிலேயே உயரமானது.
- சில்கா ஏரி, கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல் ஆகும். சில்கா ஏரி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டம், குர்தா மாவட்டம் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களில் வங்காள விரிகுடாவை ஒட்டி 64.3 கிலோ மீட்டர் நீளத்தில பரந்துள்ளது. 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சில்கா ஏரி, உலகின் இத்தகைய உவர் நீர் ஏரிகளில் இரண்டாவது பெரிய ஏரியாகும்.
- ரூப் குண்டம், இந்தியாவின் வடக்கில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் சமோலி மாவட்டத்தின் வடக்கில இமயமலையின் பனி சூழ்ந்த நந்த குந்தி மலை மற்றும் திரிசூலி மலையடிவாரத்திற்கு இடையே, கடல் மட்டத்திலிருந்து 16,470 அடிகள் (5,020 m) உயரத்தில் அமைந்த மிகச்சிறிய ஏரி ஆகும். இந்த ஏரியைச் சுற்றிலும் பனிமலைகள் சூழ்ந்த இந்த ரூப் குண்டத்தை உள்ளூர் மக்கள் மர்ம ஏரி அல்லது எலும்புக் கூடு ஏரி என்று அழைப்பர்.
நலம்தொகு
- தட்டம்மை, தாளம்மை, மணல்வாரி ஆகிய மூன்று நோய்களுக்குமான தடுப்பு மருந்தும் கலந்து 1971ஆம் ஆண்டு முதல் எம்எம்ஆர் தடுப்பு மருந்து என்ற பெயரில் தரப்படுகிறது ஆயிற்று
மொழியியல்தொகு
- சராய்கி மொழி - பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பஞ்சாப் பகுதி மக்களால் பேசப்படும் இந்திய ஆரிய மொழிகளில் ஒன்றான பஞ்சாபி மொழியின் ஒரு வட்டார வழக்கு மொழியாகும். - தெளிவில்லை
திரைத்துறைதொகு
- தியாகராஜ சுவாமிகள் வாழ்க்கை வரலாறு பக்த ஸ்ரீ தியாகராஜா என்ற பெயரில் திரைப்படமாக 1937ஆம் ஆண்டு வெளியானது.
- ஒய். வி. ராவ் முதல் கன்னடப் பேசும் படத்தை இயக்கியவர். - மேற்கோள் கட்டுரையில் இல்லை தற்போது மேற்கோள் சேர்க்கப்பட்டுள்ளது--அருளரசன் (பேச்சு) 05:26, 16 செப்டம்பர் 2018 (UTC)
சமயம் / மெய்யியல்தொகு
- பன்னிருவர், சியா இசுலாம் - சியா இசுலாமின் ஒரு பிரிவாகும். முகமது நபியின் மருமகனும் கலீபாவுமான அலீக்குப் பின்னர் வந்த 12 இமாம்களை பன்னிருவர்கள் என்பர். - ஆயிற்று
- சங்கராச்சாரியார் கோயில் - இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இம்மலைக் கோயிலுக்கு இயேசு கிறித்து வருகை புரிந்தார். - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- லெண்யாத்திரி – இந்தியாவில் உள்ள 30 பௌத்த குடைவரைக் கோயில்களின் தொகுப்பாகும்.
- பக்கிரி – இறைவனைக் குறித்து ஆன்மிகத் தேடலில் வாழும் சூபி தத்துவத்தைக் கடைபிடிக்கும் இசுலாமியத் துறவிகள் ஆவார். - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- அஸ்வகோசர் - இந்தியத் தத்துவவாதியும், சமசுகிருத கவிஞரும், தருக்கவாதியும் ஆவார். இந்துவாகப் பிறந்து பின்னர் பௌத்த பிக்குவாக மாறியவர். குசானப் பேரரசர் கனிஷ்கரின் அரசவையில் அஷ்வகோசர் பௌத்த ஆன்மீகத் தலைவராக இருந்தவர்.
- இஸ்தர் கடவுள், மெசொப்பொத்தேமியாவின் பண்டைய சுமேரியப் பெண் கடவுள் ஆவார். புது பாபிலோனியப் பேரரசில் இப்பெண் கடவுளை பின்னர் இஸ்தர் என அழைத்தனர். அன்பு, காதல், அழகு, செழிப்பு, போர் மற்றும் வீரத்திற்கு இப்பெண் கடவுளே அதிபதி ஆவார். இஸ்தர் எனும் பெண் கடவுளுக்கு நிகராக இந்து சமயத்தில் துர்கையும், பண்டைய கிரேக்கத்தில் அப்ரோடிட்டும் குறிக்கப்படுகிறது. சுமேரியர்களுக்குப் பின்னர் மெசொப்பொத்தேமியாவை ஆண்ட அக்காடியர்களும், பாபிலோனியர்களும், அசிரியர்களும், இஸ்தர் தெய்வத்திற்கு கோயில்கள் கட்டி வழிபட்டனர். இஸ்தரை சொர்க்கத்தின் அரசி என்றும் நள்ளிரவின் இராணி என்றும் அழைக்கப்பட்டார். இக்கடவுள், வெள்ளி கோளுடன் தொடர்புறுத்தப்படுகிறார். இக்கடவுளின் சின்னங்களாக சிங்கம், எட்டு முனை நட்சத்திரம் அறியப்படுகிறது. பெண் கடவுளான இஷ்தரின் கணவராக தம்முசும், மெய்காவலராக சுக்கலும் அறியப்படுகிறார்கள்.
- என்லில், பண்டைய சுமேரியாவின் நிப்பூர் போன்ற பண்டைய அண்மை கிழக்கு நகர மக்களால் வழிபட்ட காற்றின் கடவுள் ஆவார். என்லில் கடவுள் காற்று, பூமி மற்றும் சூறாவளிக்கு அதிபதி ஆவார். சுமேரியக் கடவுள்களில், என்லில் கடவுள் தலைமைக் கடவுளாக இருந்தவர். என்லில் கடவுளை அக்காதியர்கள், பாபிலோனியர்கள, அசிரியர்கள், ஹுரியத் மக்கள் வழிபட்டனர். என்லில் கடவுளின் முதன்மை வழிப்பாட்டுத் தலம் நிப்பூரில் இருந்தது. கிமு 24-வது நூற்றாண்டில் கடவுள் என்லில், அனைத்து சுமேரியக் கடவுள்களுக்கு தலைமைக் கடவுளாக வணங்கப்பட்டார். என்லில் கடவுள், வானத்திலிருந்து பூமியை பிரித்தன் மூலம் உலகம் தனியாக இயங்கத் துவங்கியதாக சுமேரியர்கள் கருதினர். கிமு 1230-இல் ஈலாம் நாட்டினர் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய போது, என்லில் கடவுளின் வழிபாடும், முக்கியத்துவமும் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
- சுமேரியர்கள் வழிபட்ட உது எனும் சூரியக் கடவுளை, மெசொப்பொத்தேமியாவில் கிழக்கு செமிடிக் மொழிகள் பேசிய மக்கள் சமாஷ் எனும் பெயரில் வழிபட்டனர். உது அல்லது சமாஸ் எனும் சூரியக் கடவுள் நீதி, வாய்மை, சத்தியம், அறநெறி ஆகிய பண்புகளுடன் கூடியவர். இச்சூரியக் கடவுளின் முக்கியக் கோயில்கள் சிப்பர் மற்றும் லார்சா நகரங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமேரியர்களின் கில்கமெஷ் காப்பியத்தில், உது தேவனை சூரியக் கடவுளுடன் ஒப்பிட்டுள்ளது.
- பட்டிபிரோலு, இந்தியாவின் ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின், குண்டூர் மாவட்டத்தின், தெனாலி கோட்டத்தில் உள்ள பட்டிப்பிரொலு மண்டலத்தில் உள்ள தொல்லியல் கிராமம் ஆகும். பட்டிபிரோலு கிராமத்தில் உள்ள பௌத்தத் தூபி, பாதுகாக்கப்படவேண்டிய தேசிய முக்கியத்தவம் வாய்ந்த நினைவுச் சின்னங்களில் ஒன்றாக உள்ளது. சாதவாகனர்கள் ஆட்சிக் காலத்தில் பட்டிபிரோலு கிராமத்தின் உண்மையான பெயர் பிரதிபாலபுரம் ஆகும். இப்பகுதியை மன்னர் குபேரகன், கிமு 230ல் ஆட்சி செய்த காலத்தில் பட்டிபிரோலு கிராமத்தில், பௌத்த பிக்குகள் அறம் பயில பெருந்தூபிகள் எழுப்பப்பட்டது.
- கருடன், புராணகால காசிபர் - வினதை இணையருக்கு பிறந்த பறவை இனங்களின் அரசன். சூரியனின் தேரை ஓட்டும் அருணன் இவரின் தம்பி. காசிபர் – கத்ரு தம்பதியர்க்கு பிறந்த நாகர்கள், கருடனின் எதிரிகள். திருமாலின் வாகனமாக அமைந்தவர் கருடன். சமஸ்கிருத மொழியில் கருடன் என்பதற்கு பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள். வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். பெருமாள் கோயிலின் மூலவரை வணங்குவதற்கு முன்னர் கருடனை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும்.
விளையாட்டுதொகு
மிக இளவயதில் (பதினாறு வயது) பிரெஞ்சு ஓப்பன் பட்டம் பெற்றவர் மோனிகா செலசு. ஆயிற்று
டென்னிசில் ஓப்பன் காலம் தொடங்கிய பின் ஒரே ஆண்டில் (1970) கிராண்ட் சிலாமின் நான்கு கோப்பைகளையும் வென்ற முதலாம் வீராங்கனை மார்கரெட் கோர்ட்
பண்டைய வரலாறுதொகு
- அரராத்து இராச்சியம், விவிலியம் கூறும் அரராத்து மலைகளை மையமாகக் கொண்ட இராச்சியம் ஆகும். தற்கால ஆர்மீனியாவின் மேட்டு நிலங்களில் வளர்ந்த அரராத்து இராச்சியத்தின் ஹுரியத் மக்கள், தற்கால ஆர்மீனியா, அசர்பைஜான், ஜார்ஜியா, ஈரான், ஈராக் மற்றும் துருக்கி நாடுகளின் பகுதிகளை கிமு 858 முதல் கிமு 590 முடிய 268 ஆண்டுகள் ஆண்டனர்.
- தட்சசீலப் பல்கலைக் கழகம் கிமு ஆறாம் நூற்றாண்டிற்கு, கிமு ஏழாம் நூற்றாண்டிற்கும் இடையே, பண்டைய காந்தார நாட்டின் தலைநகரான தக்சசீலா நகரத்தில் நிறுவப்பட்ட உலகின் முதல் பல்கலைக்கழகம் ஆகும். அர்த்தசாஸ்திரம் எனும் அரசியல் நூல் எழுதிய சாணக்கியர் இப்பல்கலைக்கழத்தின் ஆசிரியாக இருந்தவர். சந்திரகுப்த மௌரியர், இப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சாணக்கியரிடம் அரசியல் மற்றும் போர்க்கலை பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிடாரைட்டுகள் பண்டைய பாக்திரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு, நடு ஆசியா மற்றும் தெற்காசியாவின் ஆப்கானித்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை கிபி 4ம் நூற்றாண்டு முதல் 5ம் நூற்றாண்டு முடிய ஆண்ட வம்சத்தினர் ஆவார். கிடாரைட்டு மக்களை, முன்னர் இந்தியாவில் ஹூணர்கள் என்றும், கிழக்கு ஐரோப்பாவில் சியோனிட்டுகள் என்றும் அழைக்கப்பட்டனர். சாசானியப் பேரரசு மற்றும் குசானப் பேரரசு காலத்தில், நடு ஆசியாவின், பாக்திரியாவில் கிபி 320-இல் ஆட்சியை நிறுவிய கிடாரன் எனும் நாடோடி மக்களின் மன்னரின் பெயரால், இவ்வம்சத்திற்கு கிடாரைட்டு வம்சம் எனப்பெயராயிற்று. சாசானியப் பேரரசின் கிழக்குப் பகுதியை கைப்பற்றி, கிடாரைட்டு இராச்சியத்தை ஆண்ட கிடாரைட்டு மன்னர்கள் கிபி 320 முதல் கிபி 500 முடிய ஆண்டனர். பின்னர் ஹூணர்களிடம் இராச்சியத்தை இழந்தனர்.
- பண்டைய அண்மை கிழக்கின் நகரங்கள், பண்டைய அண்மைக் கிழக்கின் தற்கால மத்திய கிழக்கு நாடுகளில், கிமு 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட பண்டைய நகர அரசுகள் இருந்தன. இப்பண்டைய நகர அரசுகளின் ஆட்சி, கிமு 6-ஆம் நூற்றண்டில் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசு மற்றும் கிமு நான்காம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாந்தரின் படையெடுப்புகளாலும், பின்னர் கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாமிய படையெடுப்புகளாலும் சிறிது சிறிதாக முடிவிற்கு வந்தது.
வரலாறு, நாடுகள், அரசியல், அமைப்புதொகு
- சபாவித்து வம்சம் நவீன ஈரானை 1501 முதல் 1736 முடிய ஆண்ட சியா இசுலாமியப் பன்னிருவர் பிரிவைச் சார்ந்த அரச வம்சமாகும். ஆயிற்று
- பகலவி வம்சம், ஈரான் நாட்டை 1925 முதல் 1979 முடிய ஆண்ட இறுதி அரச மரபாகும். பகலவி வம்சத்தின் பகலவ மக்கள் குறித்து இந்தியாவின் இதிகாசங்களில் குறிக்கப்பட்டுள்ளது. - தெளிவில்லை
- ஜம்மு காஷ்மீர் இராச்சியம் - இந்தியாவின் இராசபுத்திர குல டோக்ரா வம்சத்தவர்களால் 1846 முதல் 1952 முடிய ஆளப்பட்டது.
- ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் – ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை, இந்தியாவுடன் இணைக்கும், 26 அக்டோபர் 1947-ஆம் அண்டின் ஒப்பந்தமாகும்.
- காம்போஜ பால வம்சம் - வங்காளப் பகுதிகளை 10 முதல் 11-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்ட இவ்வம்சத்தின் இறுதி மன்னரை, முதலாம் இராசேந்திர சோழன் போரில் வீழ்த்தினார். - தெளிவில்லை
- பிரமிளா செயபால் அமெரிக்க கீழவைக்கு (பிரதிநிதிகள் சபை) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இந்திய அமெரிக்கர் ஆவார்.
- தஞ்சாவூர் மராத்திய அரசு சோழ மண்டலத்தை ஆண்ட மராத்தியர்களின் அரசாகும். இவர்களின் தலைநகரம் தஞ்சாவூர். போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி என்பவர், தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர். 1799ல் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வீழ்ந்த தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 வரை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 முடிய விளங்கியது.
- கைபர் பக்துன்வா, இதன் பழைய பெயர் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகும். வரலாற்றுக் காலத்திற்கு முன்னர் இப்பகுதியில் காந்தார நாடு செழிப்புடன் விளங்கியது. காபூல் மற்றும் சுவத் ஆறுகள் இப்பகுதியை வளப்படுத்துகிறது. இது பாகிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் சிறிய மாகாணமாகும். ஒன்றாகும். இதன் தலைநகரம் பெசாவர் நகரம் ஆகும். இம்மாகாணத்தின் எல்லைகள் மேற்கிலும், வடக்கிலும் ஆப்கானித்தானும், தென்மேற்கில் பாகிஸ்தான் அரசால் நேரடியாக நிர்வகிக்கபப்டும் பழங்குடிகள் பகுதிகள், தென்கிழக்கில் பஞ்சாப், தேசியத் தலைநகரம் இசுலாமாபாத், ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள், தென்மேற்கில் பலுசிஸ்தானுடன் பகிர்ந்து கொள்கிறது. பாகிஸ்தான் நாட்டின் மக்கள்தொகையில் 11.9%ம், பொருளாதாரத்தில் 10.5%ம், கைபர் பக்துன்வா பங்களிக்கிறது. கைபர் பக்துன்வா மாகாணத்தின் பெரும்பான்மையான மக்கள் பஷ்தூ மொழி பேசும் பழங்குடி பஷ்தூன் மக்கள் ஆவர்.
- நான்காம் ஆங்கிலேய மைசூர் போர், திப்பு சுல்தானின் மைசூர் இராச்சியத்திற்கு எதிராக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஐதராபாத் இராச்சியம் கொண்ட பிணக்குகளால் இப்போர் மூண்டது. இப்போர் ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் நான்காவதும், இறுதியானதும் ஆகும். போரின் முடிவில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார் அரச குலம் கீழ் கொண்டுவரப்பட்டது.
- எகிப்தின் மம்லுக் சுல்தானகம், மத்தியகால எகிப்து, லெவண்ட் மற்றும் ஹெஜாஸ் பகுதிகளை ஆண்ட இசுலாமிய அடிமைப் போர் வீரர்கள் ஆவார். மம்லுக் சுல்தானகத்தை, துருக்கியர்களின் ஒட்டமான் பேரரசினர் கைப்பற்றும் வரை, கிபி 1250 முதல் கிபி 1517 முடிய 267 ஆண்டுகள் ஆண்டனர்.
- ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்திற்க்கு இந்தியாவில் இருந்தபடியே போட்டியிட்ட ஒரே நாபர் சௌகத் உஸ்மானி . அவர் அந்தத் தேர்தலைகளை கான்பூர் போல்ஷிவிக் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு ஆகிய வழக்குகளில் சிறையில் இருந்தவாரே சந்தித்தார்.
- மிசாவில் , லாலு பிரசாத் யாதவ் கைது செய்யப்பட்தை முன்னிட்டு தனது மூத்த மகளுக்கு மிசா என்று 1976இல் பெயரிட்டார்.
கலைகள், பண்பாடு, தொல்லியல்தொகு
- எட்மோனியா லூவிசு ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் அமெரிக்க தொல் குடியினர் மரபில் பன்னாட்டு புகழும் உலக நுண்கலைகளில் பெயரும் பெற்ற முதல் பெண்மணி - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- பதான் அரண்மனை சதுக்கம், நேபாள நாட்டின் பதான் நகர மையத்தில் அமைந்துள்ளது. இவ்வரண்மனை சதுக்கம், யுனோஸ்கோ நிறுவனத்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றானது. இச்சதுக்கம் லலித்பூரை தலைநகராகக் கொண்ட நேபாள மல்ல மரபு மன்னர்களின் அரண்மனை எதிரில் கட்டப்பட்டதாகும். - தெளிவில்லை, நீளமாகவுள்ளது
- பசுபதி முத்திரை, மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட சிந்து வெளி நாகரீக காலத்தியதாகும். பசுபதி முத்திரையானது சோப்புக்கல்லில் வடிக்கப்பட்டது. காண்டாமிருகம், யானை, காளை, மான், புலி போன்ற விலங்குகளால் சூழப்பட்டும், பத்மாசனத்தில் யோக நிலையில் அமர்ந்திருப்பவர் தலையில் காளையின் கொம்புகள் மற்றும் திரிசூலம் பொறித்த முத்திரையை பசுபதி முத்திரை என்பர்.
- கர்லா குகைகள், பண்டய இந்தியாவின் பௌத்த சமயக் குடைவரைக் குகைகள் ஆகும். மூன்றடுக்கு கொண்ட இக்குகைகளின் வளாகம் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள லோணோவாலாவிலிருந்து 11 கீமீ தொலைவில் உள்ள கர்லி கிராமத்தின் மலையில் அமைந்துள்ளது. கர்லா குகைகள் புனே நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இக்குகைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பாதுக்காக்கப்பட்ட தேசிய நினைவுச் சின்னங்களாக பராமரிக்கிறது. இப்பௌத்தக் குடைவரைக் கோயில்களை, மேற்கு சத்ரபதி மன்னர் நகபானர் கிபி 160-இல் எழுப்பினார்.
- பீமரன் பேழை, தங்கத்தால் செய்யப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கௌதம புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட அழகிய சிறு பேழையாகும். இச்சிறு அழகிய பேழை, பாரம்பரிய தெற்காசியாவின் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இப்பேழை, ஆப்கானித்தான் நாட்டின் ஜலாலாபாத் நகரத்திற்கு 11 கிமீ தொலைவில் உள்ள பீமரன் தூபி எண் 2 அருகே, 1833 மற்றும் 1838ல் அகழ்வாய்வு செய்த போது கண்டுபிடிக்கப்பட்டது. பிரம்மா, இந்திரனுக்கு நடுவில் கௌதம புத்தர் உருவங்கள் பொறிக்கப்பட்ட இத்தங்கப் பேழையில் இந்தோ சிதியன் பேரரசு (கி மு 200 – கி பி 400) காலத்திய நாணயங்கள் இருந்தது. தற்போது பீமரன் பேழை பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- கனிஷ்கர் பேழை குசானப் பேரரசர் கனிஷ்கர், தற்கால பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகரத்திற்கு அருகில் உள்ள சாஜி கி தேரி எனுமிடத்தில் நிறுவிய கனிஷ்கரின் தூபி இருந்த இடத்தில் 1908 - 1909களில் அகழ்வாராய்ச்சி செய்த போது பௌத்தச் சின்னங்கள் கொண்ட அழகிய செப்புப் பேழை கிடைத்தது. அதற்கு கனிஷ்கர் பேழை எனப்பெயரிடப்பட்டது. பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்ட இப்பேழை பேரரசர் கனிஷ்கரின் ஆட்சிக் காலத்தில் கிபி 127ல் உருவாக்கப்பட்டது. கனிஷ்கரின் பேழையில் காந்தாரி எழுத்தில் குறிப்புகள் உள்ளது. பேழையில் இருந்த கௌதம புத்தரின் மூன்று புனித எலும்புத் துண்டுகள் மட்டும், மியான்மர் நாட்டின், மண்டலை நகரத்தின் மலைப்பகுதியில் உள்ள ஒரு பௌத்த விகாரையில் பௌத்தர்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. கனிஷ்கர் பேழை தற்போது பெசாவர் அருங்காட்சியக்தில் உள்ளது.
- இஷ்தர் கோயில் நுழைவாயில், தற்கால ஈராக் நாட்டின் பண்டைய பாபிலோன் நகரக் கோட்டையின் எட்டு நுழைவாயில்களில் ஒன்றில் அமைந்த இஷ்தர் தெய்வத்திற்கான கோயிலின் நுழைவு வாயில் ஆகும். இஷ்தர் கோயில் நுழைவாயிலை, கிமு 575ல் புது பாபிலோனியப் பேரரசர் இரண்டாம் நெபுகாத்நேசர் (ஆட்சிக் காலம்:கிமு 604 - 562) கிமு 575ல் 120 சிங்கங்கள், காளை மற்றும் யாழிகளின் சிற்பங்களுடன் கட்டினார். இஷ்தர் கோயிலின் நுழைவு வாயில், கிபி 1930ல் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்து. தற்போது இதனை சீரமைத்து பெர்லின் நகரத்தின் பெர்கமோன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
- காவி நிற மட்பாண்டப் பண்பாடு, வெண்கலக் காலத்தின் கிமு இரண்டாயிரத்தில், கங்கைச் சமவெளியில், கிழக்கு பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசம் பகுதிகளில் அறியப்பட்டது. காவி நிற மட்பாண்டப் பண்பாடு, துவக்க வேதப் பண்பாட்டுடன் தொடர்புடையது எனக்கருதப்படுகிறது. இக்கால மட்பாண்டங்கள் பெரும்பாலும் காவி நிறத்தில் இருந்தது. சில நேரங்களில் கறுப்பு வர்ணம் பூசப்பட்ட பட்டைகள் மற்றும் வடிவங்களுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
- ஜௌலியன் விகாரை தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சசீலாவின் பகுதியாக அருகமைந்த ஜௌலியன் எனுமிடத்தில், கிபி இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குகள் தங்கி, தியானம் செய்வதற்கு நிறுவப்பட்டதாகும். தற்போது ஜௌலியன் விகாரை பயன்பாட்டிற்கு உதவாத வகையில் சிதிலமடைந்துள்ளது. ஜௌலியன் விகாரைக்கு அருகில் மொகரா முராது விகாரை உள்ளது. ஜௌலியன் விகாரையை 1980-இல் யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
- சித்தாச்சல சமணக் குடைவரைகள், இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தின் குவாலியர் நகரத்தில் அமைந்த குவாலியர் கோட்டையினுள் சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்கு அர்பணிக்கப்பட்ட குடைவரைகள் ஆகும். இக்குடைவரைகள் குவாலியரை ஆண்ட தோமரா இராஜபுத்திர மன்னர்கள் கிபி 7-ஆம் நூற்றாண்டில் நிறுவத் தொடங்கினார்கள். பின்னர் ஆண்ட மன்னர்கள் இக்குடைவரைகளை கிபி 15-ஆம் நூற்றாண்டு வரை நிறுவி முடித்தனர். தற்போது இக்குடைவரைகளை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.
- இன்கா பாலம், தென் அமெரிக்காவின் பெரு நாட்டின், கன்காஸ் மாகாணத்தின், கியுகு மாவட்டத்தில், கூஸ்கோ பகுதியில் இரு மலைக்களுக்கிடையே பாயும் அபோரிமாக் ஆற்றின் மேல், இரு மலைகளை இணைக்க காய்ந்த புற்களை கயிறாக திரித்து, ஒவ்வொரு ஆண்டும் புதிய புற்களால் ஆன கயிறுகளைக் கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம் ஆகும். இப்பாலம் இன்கா பண்பாட்டுக் காலத்திலிருந்து 600 ஆண்டுகளாக ஆண்டுதோறும் கட்டப்படுகிறது. அறிவு, திறமை மற்றும் சடங்காக கடந்த 600 ஆண்டுகளாக பாரம்பரியமாகத் தொடர்ந்து பெரு மக்களின் கூட்டு முயற்சியால் கேஸ்வாசக்கா பாலம் நிறுவப்படுவதால், யுனெஸ்கோ நிறுவனம், இப்பாலத்தை தனது பதிவேட்டில் 2013-இல் பதிவு செய்துள்ளது.
- கிளியோபாட்ராவின் ஊசி, பண்டைய எகிப்தின், புது எகிப்திய இராச்சியத்தை ஆண்ட 18-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் தூத்மோஸ் மற்றும் 19-ஆம் வம்ச பார்வோன் இரண்டாம் ராமேசஸ் எழுப்பிய ஊசி போன்ற செங்குத்தான மூன்று கல்தூபிகள் ஆகும். கிபி 1819-இல் அலெக்சாந்திரியா, அல்-உக்சுர் மற்றும் ஹெலியோபோலிஸ் நகரங்களை தொல்லியல் அகழ்வாய்வு செய்கையில் கண்டெடுக்கப்பட்ட இக்கல்தூபிகளுக்கு பின்னர் பிரான்சு நாட்டவர்கள் கிளியோபாட்ராவின் ஊசிகள் எனப்பெயரிட்டனர்.
- பெருவயிறு மலையை துருக்கிய மொழியில் பானை வயிறு மலை இது தென்கிழக்கு அனதோலியா பிரதேசத்தில், துருக்கி நாட்டின், சான்லியூர்பா மாகாணத்தில் உள்ள ஓரென்சிக் நகரத்திற்கு வடகிழக்கே 12 கிமீ மீட்டர் தொலைவில், 15 மீட்டர் உயரம், 300 மீட்டர் சுற்றவளவுடன் கூடிய தொல்லியல் மேடு ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 760 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2008-இல் பெருவயிறு மலையின் தொல்லியல் மேட்டை யுனெஸ்கோ நிறுவனம் உலகப் பராம்பரியக் களமாக அறிவித்துள்ளது.
- சக்காரா நகரம் கீழ் எகிப்தில் உள்ளது. பழைய எகிப்து இராச்சியததை ஆண்ட ஜோசெர் மன்னரின் செவ்வக & படிக்கட்டு வடிவிலான பிரமிடு சக்கராவில் உள்ளது. இது உலகப் பாரம்பரியக் களமாக உள்ளது. எகிப்தின் துவக்க கால அரச மரபுகளில் ஒன்றான எகிப்தின் மூன்றாம் வம்ச மன்னர்களால், சக்காரா நகரத்தில் பார்வோன்கள் மற்றும் அரச குடும்பத்தினர்களின் கல்லறைப் பிரமிடுகள் கட்டப்பட்டது. சக்கரா நகரத்தின் வடக்கில் அபுசர் பகுதியும், தெற்கில் தச்சூர் தொல்லியல் நகரம் உள்ளது. இவ்வூரில் சக்காரா மன்னர்கள் பட்டியல் கல்வெட்டை பார்வோன் இரண்டாம் ராமேசஸ் நிறுவினார்.
- சைபீரிய பனி இளவரசி, கிமு 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணின் மம்மியை, 1993-இல் ருசியா நாட்டின் அல்த்தாய் குடியரசின் குர்கான் பகுதியில் பசிரிக் தொல்லியல் மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மம்மியானது இருபதாம் நூற்றாண்டில் இறுதியில், ருசியாவின் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் ஆகும். இப்பெண்ணின் மம்மியை 2012-இல் ருசியாவின் உகோக் பீடபூமியில் அமைந்த அல்த்தாய் குடியரசின் தலைநகரான கோர்னோ அல்தாயிஸ்க் நகரத்தின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
- நக்காடா பண்பாடு வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய பண்டைய எகிப்தின் வெண்கலக் காலத்தில் ஏறத்தாழ கிமு 4400 முதல் கிமு 3000 முடிய இத்தொல்லியல் பண்பாடு விளங்கியது. தெற்கு எகிப்தில் அமைந்த நக்காடா எனும் பண்டைய நகரத்தின் பெயரால் இப்பண்பாட்டின் பெயர் அமைந்தது. 2013- ஆம் ஆண்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கரிம கதிரியக்க ஆய்வில், நக்காடா பண்பாடு கிமு 3,800 - 3,700 காலத்தியது என முடிவு செய்துள்ளனர்.
பறப்பியல்தொகு
பெசி கோல்மன் ஓர் அமெரிக்க படைத்துறை சாராத வலவனும் வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்ணும், பன்னாட்டு வானூர்தியாளர் உரிமம் பெற்ற முதல் அமெரிக்கப் பெண்மணியும் ஆவார். ஆயிற்று
சமூகம்தொகு
- பிரெட் கோரெமாட்சு சப்பானிய அமெரிக்க மனித உரிமை போராளி, இரண்டாம் உலகப்போரில் சப்பானிய-அமெரிக்கர்களை அமெரிக்க அரசு தடுப்பு முகாம்களி்ல் அடைத்ததை எதிர்த்தார். - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- சிவப்பு தாழ்வாரம், இந்தியாவில் குறிப்பாக பிகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒரிசா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் நக்சலைட் - மாவோயிஸ்ட் போராளிகளால் அரசுக்கும், பொது மக்களுக்கும் பெரிதும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் பகுதிகளாகும்.
- மி டூ இயக்கம் அல்லது நானும் பாதிக்கப்பட்டேன் எனும் இயக்கம் உலக அளவில், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்களை, டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தும் முறையே இவ்வியக்கத்தின் நோக்கமாகும். மி டூ இயக்கத்தை அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும், சமூக ஏற்பாட்டாளுருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006 இல் "Me Too" எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார். பின்னர் ஹாலிவுட் நடிகை அலிசா மிலனோ என்பவர் தனக்கு யார்யாரால் பாலியல் துன்புறுத்தல்கள் நேர்ந்தது குறித்து, டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தினார்.
பிறதொகு
- மெலனியா திரம்ப் வெளிநாட்டில் பிறந்த இரண்டாவது அமெரிக்க முதல் பெண்மணியாவார்
- சாட் ஏரியின் 90% நீர் சாரி ஆற்றின் வழி வருகிறது - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- புதுவை தாவரவியல் பூங்கா - விடயம் என்ன?
- நாகார்ஜுனகொண்டா இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் நாகார்ஜுன சாகர் எனுமிடத்தில் அமைந்த வரலாற்று சிறப்புமிக்க பௌத்தப் புனிதத் தலம் ஆகும். ஆயிற்று
- பளிங்குக்கல் பாறைகள் - இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமான ஜபல்பூர் நகரத்தின் அருகில் உள்ள பேடாகாட் எனுமிடத்தில் காணப்படுகிறது. இச்சலவைக்கல் பாறைகள் சிற்பங்கள் செய்தவதற்கு வெட்டி எடுக்கப்படுகிறது - தெளிவில்லை, நீளமாகவுள்ளது
- பனி விடுதி பனிக்கட்டிகளால் ஒவ்வொராண்டும் புதியதாக கட்டப்படும் ஒரு தங்கும் விடுதி - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- தராவர் கோட்டை - பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் சோலிஸ்தான் பாலைவனத்தில் அமைந்துள்ள கோட்டைகளில் மிகவும் பெரியதாகும். - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- வணக்கமுறை - துவக்க காலத்தில் இராணுவத்தில் ஆயுத அசைப்பு அல்லது கொடியசைப்பு மூலம் வணக்க முறைகள் கடைபிடிக்கப்பட்டது. - மேற்கோள் கட்டுரையில் இல்லை
- கிருஷ்ணரின் வெண்ணெய்ப் பந்து - பெரிய கருங்கலால் ஆன உருண்டை, மாமல்லபுரத்தின் சிறு குன்றின் மீது கீழே விழும் நிலையில் உள்ளது.
- உவர் நீர் - என்பது நன்னீரும், கடல் நீரும் கலந்து உவர்ப்புத் தன்மை கொண்ட நீராகும். உவர் நீரில் நன்னீரை விட உப்புத் தன்மை கூடியதாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் காணப்படும். - தெளிவில்லை
- கொமோடோ தேசியப் பூங்கா 1991ஆம் ஆண்டு யுனெசுக்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. - தெளிவில்லை
- சில்கா ஏரி - இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டம், குர்தா மாவட்டம் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களில் வங்காள விரிகுடாவை ஒட்டி 64.3 கிலோ மீட்டர் நீளத்தில பரந்துள்ளது.
- சாத்தனூர் கல்மரம் - இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது.
- டெக்கான் முதுகலை கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனம், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலாத்தின் புனே நகரத்திற்கு அருகே கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியினரால் 1821ல் நிறுவப்பட்ட இக்கல்வி நிறுவனத்தில் தொல்லியல், மொழியியல், சமஸ்கிருதம் மற்றும் அகராதியியல் துறைகளில் முதுநிலைக் கல்வி பயிற்றுவிப்பதுடன், ஆய்வும் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது இந்நிறுவனம் 2011 முதல் சிந்து வெளி நாகரீகம் தொடர்புடைய ராகி கர்கி தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்து வருகிறது.
- ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா - ஸ்ரீநகர் பகுதிகளை, ஜம்முவுடன் இணைக்கும் 356 கிமீ நீளம் கொண்ட இருப்புப் பாதை ரூபாய் 10,000 கோடி மதிப்பில் அமைக்கப்படும் திட்டம் 2002-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த இருப்புப் பாதை அமைக்கும் திட்டம் முழுவதும் முடிவடைந்த பிறகு புதுதில்லியிலிருந்து - ஸ்ரீநகரை 14 மணி நேர பயண நேரத்தில் அடையலாம்.
- பச்சை பூட்சு என்பது இமயமலையின் எவரெஸ்ட்டு சிகரத்திற்குச் செல்லும் வழியில் கிடக்கும் ஒரு அடையாளம் தெரியாத பச்சை பூட்சு அணிந்த உடலைக் குறிக்கிறது. இது மலையேறுபவர்களுக்கு ஒரு செல்லும் வழியில் இடத்தை அடையாளத்திற்காகக் குறிப்பிடும் நிலக்குறியீடாக மாறிப்போனது.