சுடலைக் குயில்
சுடலைக் குயில் | |
---|---|
![]() | |
கம்பளிப்பூச்சியுடன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Cuculiformes |
குடும்பம்: | Cuculidae |
பேரினம்: | Clamator |
இனம்: | C. jacobinus |
இருசொற் பெயரீடு | |
Clamator jacobinus Boddaert, 1783 | |
![]() | |
அடர் பச்சை - ஆண்டு முழுவதும் காணப்படும் மஞ்சள்- வேனில் காலத்தில் மட்டும் நீலம்- பனிக்காலத்தில் cream – passage only | |
வேறு பெயர்கள் | |
Oxylophus jacobinus |
சுடலைக் குயில் அல்லது கொண்டைக் குயில் (Jacobin Cuckoo or Pied Cuckoo – Clamator jacobinus) ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் காணப்படும் குயிலினப் பறவை. பருவமழை வருவதை முன்கூட்டியே அறிவிக்கும் வண்ணம் இப்பறவையின் வருகை இருப்பதாக இந்தியாவில் ஒரு நம்பிக்கை உள்ளது. இதில் ஓரளவே உண்மை இருப்பதாக மைகிரண்ட் வாச்சின் ஆய்வின் மூலம் அறியப்படுகிறது [2]. இந்தியப் பழங்கதையியலில் இது சாதகப் பறவை எனவும் அறியப்படுகிறது. தொன்மங்களில் இப்பறவை மழை நீரை மட்டும் அருந்தும் என்றும், அதற்காக மேகத்தை நோக்கி வாயைத் திறந்து இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்பறவையாது தவிட்டுக் குருவி போன்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடக் கூடியது.[3]
உடல் தோற்ற விளக்கம்/கள அடையாளங்கள்தொகு
- சுடலைக் குயில் 13 inch அல்லது 31 cm – 33 cm நீளமுள்ளது; அதன் மேலுடல் சிறகுத்தொகுதி (தலை, கொண்டை உள்பட) கருப்பாக (சற்றே மினுமினுக்கும் பச்சை நிறங்கலந்து) இருக்கும்.
- பறத்தலுக்குதவும் சிறகுகள் கரும்பழுப்பாகவும் அதன் ஊடே அகன்ற வெண்பட்டையுடனிருக்கும்; நீண்ட வாலில் (18 cm) வெண்ணிற முனைகள் காணப்படும். அடியுடல் வெண்மையாகவிருக்கும்.
- அலகு கருப்பாகவும் கால் சற்றே நீலமாகவும் இருக்கும்.[4]
பரவல்தொகு
- ஆப்பிரிக்கா, இந்தியா, இலங்கை, மியன்மார் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது. இந்தியாவில் சமவெளிப் பகுதிகளிலும் மலைப்பகுதிகளிலும் (8000 அடி உயரத்திலும் கூட) காணப்படும்.
இந்தியாவில் காணப்படும் இரு உள்ளினங்கள்தொகு
- Clamator jacobinus என்ற உள்ளினமானது பெரும்பாலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் காணப்படுகிறது; இது உள்ளூர்ப் பறவையாகும்.
- Clamator jacobinus pica என அழைக்கப்படும் உள்ளினம் இந்தியாவின் பிறவிடங்களில் வெயில் காலங்களில் இடம்பெயர்ந்து வலசையாக வரும் பறவையாகும்; இது உள்ளூர் சுடலைக் குயிலை விட சற்று பெரியது. மேலும் இது ஆப்பிரிக்காவிலிருந்து வரலாம் என்று கருதப்படுகிறது[5].
மேற்கோள்கள்தொகு
- ↑ "Clamator jacobinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.
- ↑ மைகிரண்ட் வாச்-[1]
- ↑ பறவைகள்: நம்பிக்கைகளும் உண்மைகளும், இந்து தமிழ், 2020 பெப்ரவரி 15
- ↑ Popular Handbook of Indian Birds-Hugh Whistler-4 ed.-Norman Kinnear-1949-p. 324
- ↑ Popular Handbook of Indian Birds-Hugh Whistler-4 ed.-Norman Kinnear-1949-p. 324