மேனகா (1935 திரைப்படம்)

இராசா சாண்டோ இயக்கத்தில் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

மேனகா 1935 என்பது ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது சமூகத் திரைப்படமாகும்.[2][3] வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்ற துப்பறியும் புதினத்தைத் தழுவி மேடையேற்றப்பட்ட டி.கே.எஸ்.சகோதரர்களின் மேனகா என்ற நாடகத்தையே திரைப்படமாக எடுத்திருந்தார்கள். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். என். எஸ். கிருஷ்ணன் இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.[4] பொறாமை கொண்ட சிலரின் செயல்களால் பிரியும் காதலர்கள், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு எப்படி இணைகிறார்கள் என்பதாக இதன் கதை உள்ளது.

மேனகா
சுவரிதழ்
இயக்கம்பி. கே. ராஜா சாண்டோ
தயாரிப்புஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கோ.
கதைகதை வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இசைடி. கே. முத்துசாமி
நடிப்புதி. க. சண்முகம்
தி. க. பகவதி
தி. க. சங்கரன்
தி. க. முத்துசாமி
என். எஸ். கிருஷ்ணன்
மொஹ்தீன்
எம். எஸ். விஜயால்
கே. டி. ருக்மணி
பிரெண்ட் ராமசாமி
வெளியீடுஏப்ரல் 6, 1935[1]
நீளம்17000 அடி
நாடுபிரித்தானிய இந்தியா
மொழிதமிழ்

படத்தின் திரைக்கதையைக் கந்தசாமி முதலியார் எழுதினார். 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியான இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இதன் வெற்றியானது, தமிழில் மேலும் சமூகப் படங்களை எடுக்க உந்து சக்தியானது.

நடிப்பு தொகு

இந்த பட்டியலானது பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவு தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.[1]

நடிகர்கள்

நடிகைகள்
 • மேனகாவாக எம். எஸ். விஜயாள்
 • நூர்ஜெகானாக கே. டி. ருக்மணி
 • டி. கே. ராஜசுந்தரி
 • டி. கே. விமலா

தயாரிப்பு தொகு

கோயம்புத்தூரில் தொழிலதிபராக இருந்த எம். சோமசுந்தரம் தன் பங்குதாரரான எஸ். கே. முகைதீனுடன் இணைந்து திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்தார்.[5] அவர்களின் முதல் படமாக டி. கே. எஸ் சகோதரர்கள் மேடை ஏற்றிவந்த மேனகா என்ற நாடகத்தைத் தழுவி திரைப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்தனர். அந்த நாடகமானது வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் புதினத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே அதன் கதை உரிமையைச் சோமசுந்தரம் ₹16,000க்கு வாங்கினார்.[6] இந்தப் படத்தில் ஒரு சிறப்பம்சமாக டி. கே. முத்துசாமி என்ற நடிகர் பெருந்தேவி என்ற கைம்பெண் பாத்திரத்தில் நடித்தார். ஏனென்றால் அப்போது எந்தப் பெண்ணும் தன் தலையை மொட்டையடிக்கத் தயாராக முன்வரவில்லை.[7]

நாடகத்தில் நகைச்சுவையான எதிர்மறை பாத்திரத்தில் நடித்த என். எஸ். கிருஷ்ணன் இந்த படத்தின் வழியாகத் திரைப்பட நடிகராக அறிமுகமானார்.[5] படத்தில் ஒரு காட்சியில் என். எஸ். கிருஷ்ணனையும் அவருடன் சேர்ந்து நடிக்கும் பெண்ணையும் சேர்த்துக் கட்டவேண்டும். இந்தக் காட்சியில் உடன் நடிக்கும் பெண்ணைத் தொடவேண்டும் என்பதால் முதலில் தயக்கம் காட்டினார். அதற்கு என். எஸ் கிருஷ்ணன், "கற்புடைய மனிதன், அவனுடைய மனைவியை மட்டுமே தொட வேண்டும்" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.[6] அப்போதிலிருந்துதான் ராஜா சாண்டோவுக்கும் என். எஸ். கிருஷ்ணனுக்கும் இடையில் நட்பு உருவானது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க பாம்பே ரஞ்சித் படப்பிடிப்பு வளாகத்தில் படமாக்கப்பட்டு மூன்றே மாதங்களில் ₹80,000 செலவில் (2021 விலையில் ₹16 கோடி மதிப்பில்) முடிக்கப்பட்டது.[5]


விருது தொகு

இப்படம் மதராஸ் மாகாண அரசின் விருதைப் பெற்றது.[5]

மறு ஆக்கம் தொகு

இப்படம் 1955 ஆம் ஆண்டு வி. சி. சுப்பராமனால் இதே தலைப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. 1935 பதிப்பில் நகைச்சுவை வேடத்தில் நடித்த கே. ஆர். ராமசாமி இந்தப் பதிப்பில் முக்கிய வேடத்தில் நடித்தார். இருப்பினும் இந்தப் பதிப்பு 1935 பதிப்பின் வெற்றியைப் மீண்டும் பெறவில்லை.[8]

மரபு தொகு

ஒரு புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் மேனகா ஆகும். மேலும் இப்படத்தின் வெற்றியானது தமிழ்த் திரையுலகில் சமூகக் கருப்பொருளைக் கொண்ட படங்கள் வரிசையாக வெளிவரத் தூண்டுகோலாக ஆனது. இந்தப் படமானது என். எஸ். கிருஷ்ணனைப் பிரபலமாக்கியது மேலும் அவர் தமிழில் பிரபலமான நகைச்சுவை நடிகராக மாறினார்.[9]

மேற்கோள்கள் தொகு

 1. 1.0 1.1 "1935 - மேனகா - ஸ்ரீ சண்முகானந்தா டாக்கி கம்பெனி" [1935 - Menaka - Sri Shanmuganandha Talkie Company]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 28 September 2017. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 2. "தமிழ்த் திரையில் முதல் நாவல்". பதிப்புத் தொழில் உலகம். சூலை 2004. 
 3. மேனகா தமிழில் வெளியான முதல் சமூகத் திரைப்படம், இந்து தமிழ் திசை, 6 ஏப்ரல் 2024
 4. ராண்டார் கை (4 சனவரி 2008). "Menaka 1935". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022401.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 5. 5.0 5.1 5.2 5.3 Guy, Randor (27 August 2010). "The making of 'Menaka'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170912005607/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/The-making-of-lsquoMenaka/article16146081.ece. 
 6. 6.0 6.1 Guy, Randor (4 January 2008). "Menaka 1935". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 September 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170928145337/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/menaka-1935/article3022401.ece. 
 7. Baskaran, S. Theodore (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. East West Books. p. 8.
 8. Guy, Randor (4 September 2011). "Menaka 1955". The Hindu இம் மூலத்தில் இருந்து 29 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20170629011224/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/menaka-1955/article2421868.ece. 
 9. Guy, Randor (20 November 2014). "Comedian by destiny". The Hindu இம் மூலத்தில் இருந்து 26 November 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141126213201/http://www.thehindu.com/features/friday-review/lighter-vein-column-ns-krishnan-part-2/article6618097.ece. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேனகா_(1935_திரைப்படம்)&oldid=3925772" இலிருந்து மீள்விக்கப்பட்டது