பிரண்ட் ராமசாமி

(பிரெண்ட் ராமசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரண்ட் ராமசாமி (10 ஏப்பிரல் 1914 - 23 நவம்பர் 1971) என்றறியப்பட்ட கே. ராமசாமி பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.

பிரண்ட் ராமசாமி
பிரண்ட் ராமசாமி 50களின் இறுதியில்
பிறப்பு(1914-04-10)10 ஏப்ரல் 1914
கொடுங்கல்லூர், கேரளம்
இறப்புநவம்பர் 23, 1971(1971-11-23) (அகவை 57)
அறியப்படுவதுநகைச்சுவை நடிகர்
வாழ்க்கைத்
துணை
காமாட்சி
பிள்ளைகள்காஞ்சனா, கனகா, ரத்னா

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இராமசாமி கேரளம், கொச்சி இராச்சியத்தில் கொடுங்கல்லூர் என்ற ஊரில் கிருஷ்ணன் மேனன், கல்யாணி ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தார். தனது ஒன்பதாவது அகவையில் வட்டரங்கு கம்பனி ஒன்றில் சேர்ந்தார். பின்னர் 1925-இல் டி.கே.எஸ் நாடகக்குழுவில் என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். சுவாமிநாதன், சுந்தரய்யர் போன்றவர்களுடன் சேர்ந்து நடித்தார். இவரது முதல் திரைப்படம் மேனகா 1935-இல் வெளிவந்தது. 1949 இல் டி .கே.எஸ். சகோதரர்களின் மனிதன் என்ற நாடகத்தில் "பிரண்ட்" என்ற பாத்திரத்தில் எல்லோருக்கும் நல்ல "நண்பராக" நடித்து பலரதும் பாராட்டைப் பெற்றார். அன்றில் இருந்து இவரை பிரண்ட் ராமசாமி என்று அழைக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர், 1960 இல் பிரேம் நசீர் கதாநாயகனாக நடித்த தங்கம் மனசு தங்கம் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.[1]

மறைவு

தொகு

1971 நவம்பர் 23 இல் தனது 57-ஆவது அகவையில் காலமானார். இவரது மனைவி பெயர் காமாட்சி. இவருக்கு காஞ்சனா, கனகா, ரத்னா என்ற 3 பெண்கள்.

நடித்த திரைப்படங்கள்

தொகு
 1. மேனகா (1935)
 2. பில்ஹணன் (1948) [2]
 3. ராஜாம்பாள் (1951) [3]
 4. குமாஸ்தா (1953)
 5. லட்சுமி (1953)
 6. மனம்போல் மாங்கல்யம் (1953)
 7. அன்பு (1953) [4]
 8. எதிர்பாராதது (1954) [5]
 9. கூண்டுக்கிளி (1954) [6]
 10. பணம் படுத்தும் பாடு (1954)
 11. போன மச்சான் திரும்பி வந்தான் (1954) [7]
 12. வைரமாலை (1954) [8]
 13. கோமதியின் காதலன் (1955)
 14. கணவனே கண்கண்ட தெய்வம் (1955) [9]
 15. பெண்ணின் பெருமை (1956)
 16. ராஜ ராஜன் (1957)
 17. பொம்மை கல்யாணம் (1958)
 18. அடுத்த வீட்டுப் பெண் (1960)
 19. பார் மகளே பார் (1963)
 20. கல்லும் கனியாகும் (1968)

மேற்கோள்கள்

தொகு
 1. ஃபிரண்ட் ராமசாமி
 2. ராண்டார் கை (16 பிப்ரவரி 2013). "Bilhanan 1948". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/bilhanan-1948/article4422120.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016. 
 3. ராண்டார் கை (3 சனவரி 2009). "Rajambal 1951". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/rajambal-1951/article654523.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016. 
 4. ராண்டார் கை (18 ஏப்ரல் 2015). "Anbu 1953". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/anbu-1953/article7117006.ece?secpage=true&secname=entertainment. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016. 
 5. ராண்டார் கை (17 நவம்பர் 2012). "Ethirpaaraathathu 1955". தி இந்து. http://www.thehindu.com/news/cities/chennai/chen-cinema/ethirpaaraathathu-1955/article4105473.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016. 
 6. ராண்டார் கை (10 அக்டோபர் 2008). "Goondukili 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023424.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016. 
 7. ராண்டார் கை (14 டிசம்பர் 2013). "Pona Machaan Thirumbi Vandhaan (1954)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/pona-machaan-thirumbi-vandhaan-1954/article5459568.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016. 
 8. ராண்டார் கை (25 டிசம்பர் 2011). "Vaira Maalai 1954". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/vaira-maalai-1954/article2745464.ece. பார்த்த நாள்: 12 நவம்பர் 2016. 
 9. ராண்டார் கை. "Blast from the past: Kanavaney Kankanda Deivam". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 12 நவம்பர் 2016.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரண்ட்_ராமசாமி&oldid=4016764" இலிருந்து மீள்விக்கப்பட்டது