கானமயில்
கானமயில் | |
---|---|
![]() | |
மத்தியப்பிரதேசத்திலுள்ள கட்டிகாவுன் காப்பகத்தில் ஒரு கானமயில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம் |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பறவை |
வரிசை: | Gruiformes |
குடும்பம்: | Otididae |
பேரினம்: | Ardeotis |
இனம்: | nigriceps |
இருசொற் பெயரீடு | |
Ardeotis nigriceps (Nicholas Aylward Vigors, 1831) | |
![]() |
கானமயில், (Ardeotis nigriceps) இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பறவையாகும்.[2] இப்பறவை, வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின்படி 500க்கும் குறைவான கானமயில்களே உள்ளன. இப்பறவை இராசத்தான் மாநிலப்பறவையாகும்.
இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வாழ்ந்த இப்பறவை தென்னிந்தியாவில் அற்றுப் போய்விட்டது. இதற்கு காரணம் இவற்றின் வாழிடமான இயற்கைப் புல்வெளிகளின் அழிவும் வேட்டையும் ஆகும். மேலும் இவை தரையில் இடும் முட்டைகளை தெருநாய்கள் உண்டுவிடுவதும் இவற்றின் இனப்பெருக்கத்துக்கு ஊரு செய்வதாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் 1500 முதல் 2000 என்ற எண்ணிக்கையில் இருந்த இப்பறவைகள் தற்போது 150 என்ற எண்ணிக்கை என்ற அளவில் குறைந்துவிட்டன.
விளக்கம்தொகு
கானமயிலானது நீண்ட வெள்ளைக் கழுத்துக் கொண்டதாகவும், பழுப்பு நிற உடலைக் கொண்டதாகவும், சுமார் 15 கிலோவரை வளரக்கூடியதாக இருக்கும். இப்பறவை தரையில் முட்டையிடக்கூடியது. இப்பறவையே உலகில் பறக்கக்கூடிய பறவைகளில் எடை மிகுந்த பறவை ஆகும்.[3]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Ardeotis nigriceps". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 16 மார்ச் 2019 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தியடோர் சு.பாசுகரன் (திசம்பர் 2006). "சோலைபாடியும் கானமயிலும்". இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். பக். 103. ISBN 81-89912-01-1. "...கானமயில் என்று குறிப்பிடப்படும் பறவை எது? மயிலல்ல. தமிழ்நாட்டின் வறண்ட, நீரற்ற, புதர்க்காடுகளில் இருந்த The Great Indian Bustard தான் கானமயில்."
- ↑ சிட்டுக்குருவிக்கு உருகுகிறோம்; கானமயிலைத் தொலைத்துவிட்டோம்!, ஆதி வள்ளியப்பன், இந்து தமிழ் 2020. மார்ச். 21