திமிங்கில வாந்தி

எண்ணைத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பில் உற்பத்தியாகும் பொருள்

திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris) எண்ணெய்த் திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும். எண்ணைத்திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை இத் திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்கவைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும். இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர் கிரீஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அம்பர் கிரீசை சிலசமயம் எண்ணெய்த் திமிங்கிலங்கள் மூலம் வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. சில எண்ணெய்த் திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.

அம்பர்கிரிஸ் (Ambergris) என அழைக்கப்ப்டும் எண்ணெய்த் திமிங்கிலத்தின் இறுகிய வாந்தி

எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலிலின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றிய வாந்தி, கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த வாந்தியை அம்பெர்கிரிஸ் எனும் பொருளாக உருவாக்குகின்றன. அம்பர்கிரிஸ் எனும் வாந்தி நறுமணப் பொருள்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது.[1]

திமிங்கில வாந்தி எனும் அம்பெர்கிரிஸ் கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருள் ஆகும். இது நீள் வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். இது கடல்நீரில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது.

எண்ணெய்த் திமிங்கலத்தின் தலையில் ஸ்பெர்மாசிட்டி எனப்படும் ஒரு உறுப்பு இருப்பதாக கருதப்படுகிறது. இது எண்ணெயால் நிரம்பியுள்ளது. இது திமிங்கிலத்தின் விந்து என்றும் நம்பப்பட்டது. எனவே இதற்கு விந்துத் திமிங்கிலம் எனப்பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இந்த உறுப்பு உண்மையில் ஒலி சமிக்ஞைகள் மற்றும் மிதப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.

திமிங்கில வாந்தியின் மணம் முதலில் கெட்ட நாற்றம் கொண்டதாக இருக்கும். ஆனால் நேரம் செல்லச் செல்ல, உலர்ந்த பிறகு அது நறுமணமாக மாறும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.[2] வாசனை திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாக கரைவதைத் தடுக்க அம்பெர்கிரிஸ் ஒரு நிலைப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. எண்ணெய்த் திமிங்கிலம் தனது உடலிலிருந்து வெளியேற்றிய அம்பரிஸ் எனப்படும் வாந்தி கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்.[3]

திமிங்கல வாந்தி எனும் அம்பர்கிரிஸ் எத்தனை பழையதோ, எத்தனை பெரியதோ அதற்கு அதிக விலை வழங்கப்படும். நாய்கள் அம்பெர்கிரிசின் வாசனையால் ஈர்க்கப்படுவதால், குஜராத்தின் கடலோரப் பகுதிகளில் அம்பெர்கிரிஸை வர்த்தகம் செய்யும் நபர்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற நாய்களை வைத்திருக்கிறார்கள்.[4]

திமிங்கல வாந்தி எனும் அம்பரிசின் பயன்பாடுகள்

தொகு

சீனாவில் பாலியல் திரவ மருந்து தயாரிக்க அம்பெர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக அம்பெர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேச பயணிகளான மார்கோ போலோ போன்றோரின் பயணக் குறிப்புகளிலும் அம்பெர்கிரிஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தைத் தவிர, யுனானி மருத்துவத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது. இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்சனைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. யுனானி மருந்தான மஜூன் மும்சிக் முகாவ்வி உடன் சர்க்கரை பாகு மற்றும் பிற மூலிகைகளுடன் அம்பெர்கிரிஸ் பயன்படுத்தப்படுகிறது. குழம்பி வடிவில் உள்ள இந்த மருந்து பாலியல் பலவீனத்திற்கு, பாலியல் செயல்திறனை மேம்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. திமிங்கல வாந்தியிலிருந்து தயாரிக்கப்படும் ஹப்பே நிஷாத் எனும் மருந்து விந்தணுக்கள் எண்ணிக்கையை பெருக்கவும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்தாகப் பயன்ப்டுகிறது.[5][6]

அம்பெர்கிரிஸ் அரிதாகவே கிடைக்கிறது. அரபு நாடுகளில் திமிங்கல வாந்தி எனும் அம்பரிசுக்கு பெரும் தேவை உள்ளது. எனவே, அதன் விலை மிக அதிகம். தங்கத்தின் விலையை விட அதன் விலை அதிகமாக இருப்பதால் இது 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. பன்னாட்டுச் சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் வரை மதிப்பிடப்படுகிறது.[7]

அம்பர்கிரிஸ் வணிகத் தடைச் சட்டங்கள்

தொகு

இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்ப கடலிலும், ஒடிசா கடலிலும் திமிங்கில வாந்தி எனும் அம்பரிஸ் சேரிக்கப்படுகிறது. இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் திமிங்கல வாந்தி வெளியிடும் எண்ணெய்த் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் தகுதியைப் பெற்றுள்ளன. 1986-ஆம் ஆண்டு முதல் வன பாதுகாப்புச் சட்டத்தின் 2 வது அட்டவணையின் கீழ் இந்தியாவில் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் அல்லது அவற்றின் உறுப்புகளை வர்த்தகம் செய்வது சட்டவிரோதமானது. எனவே திமிங்கல வாந்தி வணிகத்திற்கு உரிமம் பெறுவது கட்டாயம். அரபு நாடுகளில் திமிங்கல வாந்தி எனும் அம்பரிசுக்கு பெரும் தேவை உள்ளது.

எண்ணெய்த் திமிங்கலத்தின் எலும்புகள், எண்ணெய் மற்றும் வாந்தி ஆகியவற்றுக்காக அதிகம் வேட்டையாடப்படுகின்றன. இதனால் 1970-ஆம் ஆண்டு முதல் ஐரோப்பா, ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அம்பர்கிரிஸ் வணிகத் தடைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

இந்தியாவில் மிக நீளமான சுமார் 1,600 கிலோமீட்டர் கடற்கரை கொண்ட குஜராத்தில் உள்ளது. அதனால்தான் கடல் வாழ் உயிரினங்கள் அல்லது அதன் உறுப்புகளின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்கள் இங்குள்ள கடலோரப் பகுதிகளில் தீவிரமாக செயல்படுகின்றனர். குஜராத்தைத் தவிர, ஒடிஷா மற்றும் கேரள கடற்கரையிலும் அம்பெர்கிரிஸ் அவ்வப்போது காணப்படுகிறது.

திமிங்கில வாந்தி எனும் அம்பரிசின் வேதியியல்

தொகு

திமிங்கல வாந்திக்கு தடைசெய்த நாடுகள்

தொகு

ஆஸ்திரேலியா[8]ஐக்கிய அமெரிக்க நாடுகள்[9] மற்றும் ஐரோப்பா

திமிங்கல வாந்தி வர்த்தகத்திற்கு அனுமதித்த நாடுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Panten, J. and Surburg, H. 2016. Flavors and Fragrances, 3. Aromatic and Heterocyclic Compounds. Ullmann's Encyclopedia of Industrial Chemistry. 1–45.
  2. Burr, Chandler (2003). The Emperor of Scent: A Story of Perfume, Obsession, and the Last Mystery of the Senses. New York: Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-375-50797-7.
  3. "Ambergris". Britannica. 
  4. "Jovoy Paris 'Designed' for Fascinating Olfactory Experiences". Ikon London Magazine. பார்க்கப்பட்ட நாள் October 12, 2017.
  5. Kemp, Christopher (2012). Floating Gold: A Natural (and Unnatural) History of Ambergris. University of Chicago Press. pp. 12–13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-43036-2.
  6. Daley, Jason (14 April 2016). "Your High-End Perfume Is Likely Part Whale Mucus". Smithsonian. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  7. அம்பர்கிரிஸ்: ஸ்பெர்ம் திமிங்கலத்தின் வாந்தி தங்கத்தை விட விலை அதிகம் பெறுவது ஏன்? அதன் பயன் என்ன?
  8. "Whale and Dolphin permits – Ambergris". Environment.gov.au. 1979-06-28. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
  9. "Ambergris, Treasure of the Deep". Businessweek. 2012-01-12. பார்க்கப்பட்ட நாள் 2014-03-13.
  10. 10.0 10.1 10.2 10.3 "Ambergris: lucky, lucrative and legal?".

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிங்கில_வாந்தி&oldid=3805072" இலிருந்து மீள்விக்கப்பட்டது