தொகுப்பு

தொகுப்புகள்


1

பேச்சுப் பக்கங்களைத் தொகுத்தல்

தொகு

ஆம். /தொகுப்பு 02 என்ற குறியீட்டை உட்புகுத்தினால் துணைப்பக்கத்திற்கான சிவப்பு இணைப்பு உருவாகும். அதன்வழி சென்று தொகுப்பை உருவாக்கலாம். மேலும் பார்க்க: en:Wikipedia:How to archive a talk page. இயன்றால் இந்தப் பக்கத்தை மொழிபெயர்த்து விக்கிபீடியா:பேச்சுப் பக்கங்களைத் தொகுத்தல் எப்படி? என்ற பக்கத்தில் இடுங்கள். -- Sundar \பேச்சு 10:08, 15 பெப்ரவரி 2006 (UTC)

தகவலுக்கு நன்றி சுந்தர்--ஜெ.மயூரேசன் 10:29, 15 பெப்ரவரி 2006 (UTC)

இலங்கை தேர்தல்

தொகு

மயுரேசன், இலங்கை தேர்தல்களை பற்றி நீங்கள் தொகுத்திருப்பது நன்று. கலாநிதியும் சற்று விரிவு படுத்தியிருக்கின்றார். இப்பக்கத்தை தற்போதைய நிகழ்வுகள் பக்கத்திலும் சேர்க்கலாம். --Natkeeran 18:04, 17 பெப்ரவரி 2006 (UTC)

நன்றி நக்கீரன். அப்படியே செய்யலாம்.--ஜெ.மயூரேசன் 04:18, 19 பெப்ரவரி 2006 (UTC)

Lord of the Rings

தொகு

முதல் பாகத்தை மட்டும்தான் பார்த்தேன். நல்ல படம். இப்படிப்பட்ட படங்களில் நாம் துலைந்தே போகலாம். இத்தலைப்புக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பு பெயரையும் பரிந்துரையுங்களேன். அத்தோடு, தலைப்பில் (திரைப்படம்) என்று சேர்தீர்கள் என்றாலும் நன்று. --Natkeeran 14:18, 23 பெப்ரவரி 2006 (UTC)

இக்கட்டுரையின் தலைப்பை மொழிபெயர்க்காமல் எழுத்துப்பெயர்ப்பு மட்டும் செய்தால் போதுமானது என்று கருதுகிறேன். பெயர்சொற்களை மொழிபெயர்க்க வேண்டாம். கட்டுரையின் முதல் பத்தியில் மொழிபெயர்ப்பை அடைப்புக்குறிகளுக்குள் தரலாம். நற்கீரனும் அதைத் தான் குறிப்பிடுகிறாரோ? -- Sundar \பேச்சு 03:52, 24 பெப்ரவரி 2006 (UTC)
Yes, there is no need to translate the titles of English movies, but if some work is very famous, you could suggest a Tamil name that other can use to make reference to it. Moreover, even for the English title, you might still want to add (திரைப்படம்). --Natkeeran 12:39, 24 பெப்ரவரி 2006 (UTC)


3 பாகங்களையும் ஒரே நாளில் பார்த்து முடித்தேன் அத்தனை விறு விறுப்பு, மற்றது இங்கு நான் நாவலைப்பற்றியே கட்டுரையை எழுதியுள்ளேன். ஆகவே திரைப்படம் என எழுதுவது தேவையா? அல்லது திரைப்படம் பற்றி தனியான கட்டுரை எழுத வேண்டுமா?--ஜெ.மயூரேசன் 03:16, 26 பெப்ரவரி 2006 (UTC)

நன்றி நண்பரெ

தொகு

எனது பங்களிப்பை இன்றிலிருந்து தொடங்கி உள்ளென். தட்டச்சு செய்ய சிறிது சிரமம்மாக உள்ளது. இருபீனும் தமிழில் தட்டச்சு செயும் ஆர்வம் அதிகரிதுள்ளது (இதை எழுதுவதற்கு அரை மணி நெரம் ஆனது).

--M.arunprasad 07:01, 1 மார்ச் 2006 (UTC)

ஆரம்பத்தில் சிறிது சிரமமாக இருந்தாலும் போகப் போகப் பழகிவிடும்.--ஜெ.மயூரேசன் 09:59, 1 மார்ச் 2006 (UTC)

வாழ்க்கை வரலாறு எழுதல்

தொகு

வாழ்க்கை வரலாறு எழுதும் பொழுது ஒருவித உள்ளடக்க சீர்மையை கொண்டிருப்பது நன்று என்று நினைக்கின்றேன். பிறப்பு, இறப்பு, இடம், போன்ற விடயங்களை சுருக்கமாக சொல்வது சிறப்பு என்றும் நினைக்கின்றேன். இவ்விடயங்களை முன்நிறுத்தி ஒரு கையேடு வரைபில் (Wikipedia பேச்சு:வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு) இருக்கின்றது. உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. --Natkeeran 02:32, 29 மார்ச் 2006 (UTC)

வாசித்துப் பார்த்தேன். இனிமேல் அவ்வாறு பின்பற்றி எழுதுகின்றேன்.--ஜெ.மயூரேசன் 06:50, 29 மார்ச் 2006 (UTC)

விடுமுறை

தொகு

பல்கலைக் கழக முதலாம் ஆண்டு விடுமுறை இன்றுடன் அமுலுக்கு வருகின்றது. அதனால் இன்று மாலை நான் திருகோணமலைக்குச் செல்ல இருக்கின்றேன் (அதாவது வீடு செல்கின்றேன்). இதன் காரணமாக ஒரு மாதம் அளவிற்கு பங்களிப்பு குறைவாக இருக்கும். பணம் செலுத்தி இணையத்தில் உலாவுவது என்பது சாத்தியம் இல்லை. ஆயினும் அடிக்கடி வந்து சிறு சிறு மாற்றங்களை செய்து செல்ல்வேன் என்று உறுதி கூறுகின்றேன். --ஜெ.மயூரேசன் 07:22, 29 மார்ச் 2006 (UTC)

உங்கள் பங்களிப்புக்களுக்கு மிக்க நன்றிகள். பல ஆங்கில நாவல்கள், இலக்கியம் படிப்பீர்கள் போல தெரிகின்றது. பல நல்ல புதிய தகவல்களோடும், கட்டுரைகளோடும், அனுபவங்களோடும் மீண்டும் வர வாழ்த்துக்கள். --Natkeeran 07:35, 29 மார்ச் 2006 (UTC)

நன்றி நக்கீரன். நீங்கள் நினைப்பது போல ஆங்கிலத்தில் அவ்வளவு பாண்டித்தியம் இல்லை. ஓரளவு பரீச்சயம் உண்டு அவ்வளவுதான். ஆங்கில சிறுவர் இலக்கியங்கள் பல படித்துள்ளேன். அத்துடன் எளிமைப்படுத்தப்பட்ட ஆங்கில நாவல்கள் வாசிப்பதுண்டு ஆயினும் தற்போது இதற்கெல்லாம் நேரம் கிடைப்பதில்லை.--ஜெ.மயூரேசன் 05:27, 30 மார்ச் 2006 (UTC)

விருமுறை முடிந்துவிட்டதுபோல் தெரிகிறது. மீண்டும் வருக. -- Sundar \பேச்சு 06:28, 22 ஜூன் 2006 (UTC)

ஆமாம் சுந்தர் அவர்களே! நேற்று கம்பஸ் தொடங்கியது. 3 மாத விடுமுறை............--ஜெ.மயூரேசன் 08:07, 22 ஜூன் 2006 (UTC)

நுழைவாயில்கள்

தொகு

மயுரேசன், நுழைவாயில்கள் அமைப்பது பற்றி எனக்கு தெளிவான விளக்கம் இல்லை. தமிழ் விக்கிபீடியாவில் பயனர்:வைகுண்ட ராஜா தான் முறையான நுழைவாயில் (நுழைவாயில்:அய்யாவழி) (ஆங்கில விக்கிபீடியாவை பின்பற்றி) அமைத்துள்ளார் என்று நினைக்கின்றேன். அவரின் முன்மாதிரியை வைத்து பிற நுழைவாயில்களை அமைப்பது அவ்வளவு சிக்கலாக இருக்காது என்று நினைக்கின்றேன். --Natkeeran 16:28, 31 மார்ச் 2006 (UTC)

நன்றி நக்கீரன். நான் ஆங்கில விக்கிப்பீடியாவில் ஒரு நுழைவாயில் அமைத்துள்ளேன். அதைப்பற்றி இங்கும் ஒரு நுழைவாயில் அமைக்கலாம் என்று நினைக்கின்றேன். Portal for Sri Lanka--ஜெ.மயூரேசன் 12:44, 1 ஏப்ரல் 2006 (UTC)

பார்க்க

தொகு

பார்க்க பகுப்பு பேச்சு:த லோட் ஒவ் த ரிங்ஸ் கற்பனை உயிரினங்கள்--ரவி 12:02, 23 ஜூன் 2006 (UTC)

வலைவாசல் அமைத்தல்

தொகு

உங்கள் நுட்பங்களை பகிர்ந்தால் நன்று. --Natkeeran 05:37, 28 ஜூன் 2006 (UTC)

வலைவாசல் அமைப்பதற்கு ஆங்கில விக்கிப்பீடியா கையேட்டைப் பயன்படுத்தினேன். ஆனால் அங்கு இருந்த மாதிரி இங்கு வலைவாசல் அமைப்பது இலகுவாக இருக்கவில்லை. எனக்கு தெரிந்தவற்றை நாளை பல்கலைக்கழக கணணியில் இருந்து பகிருகின்றேன். இன்று நேரப் பற்றாக்குறையாக உள்ளது மன்னிக்கவும்.--ஜெ.மயூரேசன் 13:47, 2 ஜூலை 2006 (UTC)

நன்றி

தொகு

உங்களையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. --டெரன்ஸ் 07:21, 20 ஜூலை 2006 (UTC)

உதவி

தொகு

இரவி இதனைச் சரி செய்து விட்டார். கொஞ்சம் வேலையாக இருந்ததால் உடனே பார்க்க முடியவில்லை. --சிவகுமார் 09:41, 21 ஜூலை 2006 (UTC)

யார் செய்தா என்ன சரி செய்து விட்டால் சரி......--ஜெ.மயூரேசன் 11:04, 24 ஜூலை 2006 (UTC)

வாக்குச் சேகரிப்பு :)

தொகு

மயூரேசன்,

  • தமிழ் விக்கி மூலம் தளத்தை தொடங்குவதற்கான வாக்கெடுப்பு இங்கு நடக்கிறது. அதிகாரி பொறுப்புக்கும் என்னை சுய நியமனம் செய்து உள்ளேன். இன்னும் போதுமான வாக்குகள் கிடைக்கவில்லை. தங்கள் பொன்னான வாக்கை தவறாமல் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் :)
  • ஏப்ரல் 2006லேயே தமிழ் விக்கி செய்திகள் தளத்தை தொடங்குவது குறித்த வேண்டுதலை உமாபதி இங்கு விடுத்துள்ளார். எனினும் உரிய கவனம் பெறாததால் இன்னும் போதுமான ஆதரவு வாக்குகள் பெறாமல் இருக்கிறது. அங்கும் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

மேற்கண்ட தளங்களில் பயனர் பக்கங்களை உருவாக்கும் போது மறக்காமல் உங்கள் விக்கிபீடியா பயனர் பக்கங்களுக்கான இணைப்புகளை தாருங்கள். --ரவி 10:02, 2 ஆகஸ்ட் 2006 (UTC)

விக்கி மூலம் தளத் தொடக்கத்தை விரைவுபடுத்த இந்த வழு அறிக்கைக்கு வாக்களிக்கவும். நன்றி--ரவி 21:26, 25 ஆகஸ்ட் 2006 (UTC)

தங்க மனிதன்

தொகு

மயூரேசன், நான் தான் உங்களை இங்கு தங்க வைத்த தங்க மனிதன் என அறிந்து மகிழ்ந்தேன் ;)--ரவி 13:28, 10 ஆகஸ்ட் 2006 (UTC)

நான் சலிப்படைந்து இங்கிருந்து ஓய ஆரம்பித்த வேளையில் உற்சாகம் ஊட்டியவர் நீங்கள்தான்!!!! ;-)--ஜெ.மயூரேசன் 06:08, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

ஓ, கேட்க சந்தோஷமா இருக்கு..நன்றி--ரவி 07:09, 13 ஆகஸ்ட் 2006 (UTC)

mayooresan, if u have a skype/msn/yahoo/gmail chat id, please let me know. I am interested to catch u in chat sometime to discuss our projects :) :) ! Or u can let me know ur phone number if u wish. please send the details to ravidreams_03 at yahoo dot com--ரவி 10:45, 17 ஆகஸ்ட் 2006 (UTC)

மயூரேசன், இப்பொழுது நீங்கள் free என்றால் என்னால் அழைக்க இயலும். இல்லாவிட்டால், எந்த நாள் எந்த நேரம் என்று தெரியப்படுத்துங்கள். நேற்று தான் கோபியிடம் பேசினேன்.--ரவி 10:26, 22 ஆகஸ்ட் 2006 (UTC)


பகுப்பு பக்கங்கள்

தொகு

மயூரேசன், பகுப்பு பக்கங்களை உருவாக்க நிர்வாகி அணுக்கம் தேவையில்லை. நீங்களே செய்யலாம். பூட்டப்பட்ட பக்கங்களை தொகுப்பது, பக்கங்களை அழிப்பது, அழிகப்பட்ட பக்கங்களை மீட்பது, மீடியாவிக்கி பக்கங்களை தொகுப்பது ஆகியவற்றுக்கு மட்டுமே நிர்வாகி அணுக்கம் தேவை. பிற தொகுப்பு பணிகள் அனைத்தையும் நிர்வாகி அணுக்கம் அற்றோரும் செய்யலாம். பகுப்பு பக்கத்தில் அதன் தாய்ப் பகுப்புக்கான இணைப்பைச் சேர்க்கும் ஒரு சிறு தொகுப்பை செய்வதின் மூலம், பகுப்பு பக்கத்தை உருவாக்கி விட முடியும்.--ரவி 06:30, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

ஆரம்பத்தில் இருந்தே இதுதான் வழக்கமா? முன்பு என்னால் புதிய பகுப்புகள் உருவாக்க முடியாமல் இருந்ததாக ஞாபகம்?? --ஜெ.மயூரேசன் 06:49, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

தொடக்கத்தில் இருந்தே இப்படித்தான். கட்டுரைப் பக்கத்தில் ஒரு புதிய பகுப்பின் பெயரை இட்டவுடன் சிகப்பு இணைப்பு தான் வரும். அந்த இணைப்பை பின்பற்றி சென்று தொகுப்பு பக்கத்தில் ஏதாவது ;) எழுதி ஒரு தொகுப்பை சேமித்தால் பகுப்புப் பக்கம் உருவாக்கப்பட்டுவிடும்--ரவி 07:13, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

எங்கேயோ தவறான அபிப்பிராயம் கொண்டு இருந்திருக்கின்றேன். ஆயினும் தகவலுக்கு நன்றி --ஜெ.மயூரேசன் 07:15, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

மயூரேசன், இரண்டு பந்தி அளவுக்கு மேலுள்ள கட்டுரைகளுக்கு stub வார்ப்புரு இட வேண்டாம். அவற்றை நாம் குறுங்கட்டுரைகளாக கருதுவதில்லை. ஒலிம்பிக் விளையாட்டுக்கள் கட்டுரையில் stub வார்ப்புருவை எடுத்திருக்கிறேன். அது ஓரளவுக்கு வளர்ந்த கட்டுரை தான். பிறகு, புதிதாக வார்ப்புருக்களை உருவாக்கம்போது அனைத்தையும் சிற்றெழுத்துக்களில் எழுதுங்கள். எடுத்துக்காட்டுக்கு Sports-stub என்பதற்கு பதில் sports stub என்றிருக்க வேண்டும். தற்பொழுது உள்ள sports-stubல் பிற குறுங்கட்டுரை வார்ப்புருக்களில் இருப்பது போல் ஒரு சட்டம் (border) மற்றும் பின்னணி வண்ணமும் இருப்பது நன்று. இது கட்டுரை உரையில் இருந்து இதை வேறுபடுத்திக் காட்ட இயலும். மாற்றாக, வார்ப்புரு:stubrelatedto என்பதையும் அனைத்து துறைகளுக்கும் பயன்படுத்தலாம். அவ்வார்ப்புருவை இணைத்த பக்கங்களை நீங்கள் பார்வையிட்டால் அதை எப்படி பயன்படுத்துவது என்பது புரிய வரும்--ரவி 07:22, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நான் ஆங்கில விக்கிப்பீடியாவைப் பின்பற்றியே இதைச் செய்தேன். அங்குள்ள வார்ப்புருவையே பின்பற்றினேன். விளையாட்டு தொடர்பாக பெருமளவு கட்டுரைகள் உருவாக்கப்பட வாய்ப்புள்ள வேளையில் வார்ப்புரு:stubrelatedto என்பதைப் பயன்படுத்துவதைவிட இதையே பயன்படுத்தலாமே.

மற்றது குறுக்கட்டுரை பற்றிய விளக்கத்தற்கு நன்றி. இரண்டு பந்திகளுக்கு மேலிருப்பவற்றிற்கு நான் இனி வார்ப்புருவை இடவில்லை.. நன்றி தகவலுக்கு --ஜெ.மயூரேசன் 07:29, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நானும் stubrealtedto பயன்படுத்துவதை தனிப்பட்ட முறையில் விரும்புவதில்லை. உங்கள் தகவலுக்காக மட்டுமே சொன்னேன்.--ரவி 08:12, 23 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி

தொகு

தங்கள் வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்புருனோ மஸ்கரனாஸ் 13:05, 24 ஆகஸ்ட் 2006 (UTC)

பாராட்டுக்கள்

தொகு

மயூரேசன், மீண்டும் நீங்கள் முழுவீச்சில் பங்களிப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. பாராட்டுக்கள். --சிவகுமார் 09:30, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

நன்றி சிவகுமார் அவர்களே! இன்று பல்கலைக்கழகத்தில் கல்விசார் ஊழியர்கள் பணிநிறுத்தம் அதனால் மாலை 4 மணிவரை இணையத்தில் இருக்கலாம் எந்தத் தொல்லையும் இல்லை ;)--ஜெ.மயூரேசன் 09:32, 31 ஆகஸ்ட் 2006 (UTC)

விரைவில் குணமடைவீர்கள் என எதிர்பார்க்கின்றேன்

தொகு

எனது யாகூ 360 சிக்குன்குனியாவலைப்பதிவில் சிக்குன்குனியாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியொன்றை விட்டுச் சென்றுள்ளீர்கள். நீங்கள் விரைவில் சுகமடைய இறைவனை வேண்டுகின்றேன். --Umapathy 17:04, 24 நவம்பர் 2006 (UTC)Reply

என்னடா இது தமிழருக்கும் விக்கிபீடியர்களுக்கும் வந்த சோதனை ! சிக்குன்குனியா பாதித்த விக்கிபீடியர் என்று ஒரு பகுப்பு உருவாக்கும் நிலை வராமல் இருந்தால் சரி. விரைவில் குணமடைவீர்கள் மயூரேசன். என் அக்கா, அம்மா, சித்தி ஆகியோரையும் இந்நோய் தாக்கியது :( பிற இலங்கை, தமிழக விக்கிபீடியர்கள் கவனமாக இருக்க வேண்டுகிறேன்.--Ravidreams 18:24, 24 நவம்பர் 2006 (UTC)Reply

உமாபதி மற்றும் ரவி இருவருக்கும் நன்றிகள்!!

நான் பூரண சுகம் அடைந்துவிட்டேன்!! கடந்தவாரம் பல்கலைக்கழகம் மீள ஆரம்பித்து விட்டது... அதனால் இனி இங்கே அடிக்கடி தலைகாட்டலாம்!!! வீட்டில் இணைய வசதி எடுப்பதாக உத்தேசம் உள்ளது அப்படி எதிர்காலத்தில் எடுத்தால் என் பங்களிப்பு மிகவும் கூடலாம். நன்றி--ஜெ.மயூரேசன் 07:02, 5 டிசம்பர் 2006 (UTC)

ஆண்டு அறிக்கை

தொகு

மயூரேசன், படிப்பு சற்று ஓய்தவுடன், நேரம் கிடைக்கும் பொழுது, உங்களின் சற்று விரிவான பார்வையை இங்கு Wikipedia:2006 தமிழ் விக்கிபீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review முன்வைத்தால் நன்று. சற்று முன்னோக்கி சிந்தித்து, விமர்சித்து, சில ஆலோசனைகள் அல்லது செயல்திட்டங்களுடன் அந்தப் பார்வை அமைந்தால் நன்று. நன்றி. --Natkeeran 01:34, 8 டிசம்பர் 2006 (UTC)

Thanks for inviting me! I just published my view and expections on comming year 2007--ஜெ.மயூரேசன் 07:42, 15 டிசம்பர் 2006 (UTC)

தமிழில் தட்டச்சு இணைப்பைப் பற்றிய உங்களின் இணைப்பைத் தாருங்கள், ரவியும் தமிழ் 99 விசைப்பலகை பற்றி ஓர் வலைப் பதிவு எழுதியுள்ளார். இவற்றை விக்கிபீடியாவில் இருந்து இணைத்து விடுவோம். இதை நீங்களே இணைத்து விடலாம். கலாநிதியின் கவலை என்னவென்றால் இலங்கைத் தமிழர்களின் அதிகரிப்பு இத்தளத்தை இலங்கைப் பிரேதச வாதங்களை முன்னெடுக்குமோ என்ற பயமாக இருக்குமென்றே நினைக்கின்றேன்.--Umapathy 09:29, 15 டிசம்பர் 2006 (UTC)

சிறப்புக் கட்டுரை

தொகு

சிறப்புக் கட்டுரை முயற்சிகள் நன்று. ஆளுக்கு ஒரு கட்டுரையாக இப்படி மேம்படுத்தினால் கூட நன்றாக இருக்கும். நானும் செய்கிறேன்.--Ravidreams 10:52, 9 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி ரவி! மற்றவர்களுக்கு ஒரு விடயத்தைக் செய்து காட்டியதில் திருப்திதான்!! :)--ஜெ.மயூரேசன் 17:38, 9 பெப்ரவரி 2007 (UTC)

வணக்கம்

தொகு

நலமே உள்ளேன். நீங்கள் மீண்டும் பங்களிக்கத் தொடங்கியமை கண்டு மகிழ்ச்சி. பங்களிப்பைச் சற்று அதிகப்படுத்த வேண்டுகிறேன். :-) --கோபி 19:15, 11 பெப்ரவரி 2007 (UTC)

நிச்சயமாகக் கோபி அதிகரிக்கும் :)--ஜெ.மயூரேசன் 06:33, 13 பெப்ரவரி 2007 (UTC)

நூல் வார்ப்புரு உண்டு

தொகு

--Natkeeran 07:29, 21 பெப்ரவரி 2007 (UTC)

Yep!! thanks Nakeeran.. Then I'll try this infobox... BTW could you please delete dat infor box??? thanks --ஜெ.மயூரேசன் 07:31, 21 பெப்ரவரி 2007 (UTC)

செய்யலாம்.--Natkeeran 07:35, 21 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி--ஜெ.மயூரேசன் 08:03, 21 பெப்ரவரி 2007 (UTC)

Tamil Language article is to be removed of its FA, even after the extensive review process, please vote against it. Also, improve the article if you can. http://en.wikipedia.org/wiki/Wikipedia:Featured_article_review/Tamil_language

--Natkeeran 19:27, 8 ஏப்ரல் 2007 (UTC) OMG... how come!! I'll protest--ஜெ.மயூரேசன் 03:40, 10 ஏப்ரல் 2007 (UTC)

மீண்டும் நல்வரவு!

தொகு

நீண்ட காலத்துக்கப்புறம்...படுப்பில் தனிக் கவனம் செலுத்துவது நல்லதுதான். --Natkeeran 00:36, 5 மே 2007 (UTC)Reply

என்ன செய்வது.. படிப்புக்கொடுமை தலையை கருக்குகின்றது.. நக்கீரரே!!--ஜெ.மயூரேசன் 17:37, 15 மே 2007 (UTC)Reply
வருக...படிப்பு எப்பிடிப்போகுது? இலங்கையில் நடப்பவற்றை கேட்டாலே பயங்கரமாக இருக்குது... உங்களை இங்க மீண்டும் பார்க்க மகிழ்ச்சி. --Natkeeran 13:43, 8 அக்டோபர் 2007 (UTC)Reply

2007 ஆண்டு அறிக்கையும் கருத்து வேண்டுதலும்

தொகு

கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு இறுதியில் அந்த ஆண்டுச் செயற்பாடுகள் நோக்கிய ஒரு அலசலைச் செய்து தமிழ் விக்கிபீடியாவை மேலும் மேம்படுத்த பருந்துரைகள் செய்வது வழக்கம். இவ்வருட ஆண்டு அறிக்கை கீழே:

த.வி பற்றிய உங்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் அதன் பேச்சுப் பக்கத்தில் தந்தால் எமது பணிகளை ஒருங்கிணைக்கவும், மேம்படுத்தவும், மேலும் சிறப்பாக வளர்க்கவும் அவை உதவும். நன்றி.

--Natkeeran 00:47, 20 டிசம்பர் 2007 (UTC)

தொடர்ந்து பங்களியுங்கள்

தொகு

சிலகால இடைவெளியின்பின்னர் மீண்டும் வந்துள்ளீர்கள். தொடர்ந்து பங்களிக்க வேண்டுகிறேன். குறிப்பாக குறும்பக்கங்களை விரிவாக்கி த.வி.யின் தரத்தை உயர்த்த வேண்டியுள்ளதhஉ. நன்றி. கோபி 06:44, 19 பெப்ரவரி 2008 (UTC)

நிச்சயமாக கோபி!--ஜெ.மயூரேசன் 10:00, 21 பெப்ரவரி 2008 (UTC)

கனகாலம் கண்டு

தொகு

கனகாலம் கண்டு...நல்வரவு.

எனக்கு கூகிள் கருவி துப்பரவா வேலை செய்யவில்லை. சில தலைப்புகளை மாற்றுவது மட்டுதான்.

--Natkeeran 21:55, 10 ஜூன் 2009 (UTC)

எனக்கும் அப்படித்தான் துப்பரவாக வேலைசெய்யவில்லை.. சில தலைப்புகளை மட்டுமே மாற்றுகின்றது ;) தொடர்ந்து கொஞ்சநாளைக்குப் பங்களிக்கலாம் என உத்தேசம் --ஜெ.மயூரேசன் 04:20, 11 ஜூன் 2009 (UTC)

நன்றி

தொகு

நன்றி மயூரேசன். இலங்கை பட்டறையை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்--ரவி 05:16, 20 ஜூன் 2009 (UTC)

சேர்ந்தெடுப்பு பற்றிய கருத்து வேண்டல்

தொகு

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#சேர்ந்தெடுப்பு வேண்டுகோள் என்னும் பகுதியில் உங்கள் கருத்துகளை அருள்கூர்ந்து தர வேண்டுகிறேன் --செல்வா 23:40, 18 பெப்ரவரி 2010 (UTC)

தேவைப்படும் கட்டுரைகள்

தொகு

வணக்கம். வலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் பட்டியல் பக்கத்தில் தேவைப்படும் கட்டுரைத் தலைப்புகளைக் குவிக்க உதவ முடியுமா? நடக்க இருக்கும் கட்டுரைப் போட்டியை முன்னிட்டு இயன்ற அளவு வழமையை விடக் கூடுதலாக உங்களால் பங்களிக்க முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி--ரவி 11:49, 8 மார்ச் 2010 (UTC)

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் மயூரேசன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மயூரேசன் பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)Reply

மயூரேசன், எப்போது விக்கிசெய்தி தரப்போகிறீர்கள்:)--Kanags \உரையாடுக 13:59, 16 ஜூலை 2010 (UTC)

நீங்கள் மீண்டும் முனைப்புடன் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி. --ரவி 13:53, 28 ஜூலை 2010 (UTC)

நன்றி:

தொகு

நன்றி அண்ணா, இனி எழுதும் கட்டுரைகளில் அப்படியே செய்கிறேன். கார்த்திக்--Jenakarthik 14:32, 17 ஜூலை 2010 (UTC)

வார்ப்புரு

தொகு

{{Spoken Wikipedia boilerplate}} என்ற வார்ப்புரு காப்புச் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. ஆங்கிலப் பக்கத்தில் இருந்ததை அப்படியே இங்கு தருவிக்கப்பட்டதில் அதில் ஒட்டியிருந்த வார்ப்புருவும் சேர்ந்து வந்திருக்கிறது. அவ்வளவு தான்.--Kanags \உரையாடுக 11:52, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றி நண்பரே. மாற்றங்களைச் செய்துவிட்டேன் --ஜெ.மயூரேசன் 12:14, 6 ஆகஸ்ட் 2010 (UTC)

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

தொகு

வணக்கம் மயூரேசன். விக்கியில் நீண்ட கால அனுபவமும் ஈடுபாடும் உள்ள நீங்கள் மீண்டும் முனைப்புடன் பங்களிப்பது கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு விருப்பம் என்றால், நிருவாகப் பொறுப்புக்கு உங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி--இரவி 07:46, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

நிச்சயமாக இரவி. பொறுப்பை ஏற்க ஆர்வமாக உள்ளேன் :) --ஜெ.மயூரேசன் 10:08, 9 ஆகஸ்ட் 2010 (UTC)

Nanri Brother

தொகு

Hi J.Mayuresan,Thanks for sending message,Infact I was searching for someone to meet and talk how can I extend my Help on Tamil Wikipedia,Yeah I can read and write Tamil Script very well,I learnt a little bit Tamil due to Tamil Films :), If friends like you help me I will definitely help Tamil Wikipedia whenever and wherever possible.My Mother Tongue is Marathi and when I started learning about my mother tongue my curiosity took me to Thanjavur and Tamil language in my search in meantime,I got to know that both languages have a great history and connection since couple of thousand years.I would be glad and thankful If friend like you help me Edit my Personal Home page in Tamil :),Looking Forward to your reply.bye Prasannakumar 07:29, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

  • Nice to see your reply and also felt nice to know that you are from SriLanka :)(I would love to visit this place ,soon :)) Well,its rare to see inter wiki co-operation,nice that you have shown interest in mutual cooperation ,Thank you once again.Well to begin with I think we should sort out articles related to both languages,which in meantime I will pass on to you through mails,as I have mentioned in my information I would like to contribute more on Language,Culture,Films,and History so beginning with language I guess if we can create a bilingual or trilingual wiktionary project it would be a nice step to start ,I mean Tamil-Marathi(pron: Marhatti)-English or Vice versa kind of thing,because I am planning to create such word list on Marathi Wiki.Tell me your opinion on this.For all articles pertaining to Maharashtra n Culture you can always ask me about the words,pronounciation, meaning & realted information.OK.Waiting for your reply.Prasannakumar 13:08, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
  • Yes but sorry to say I don't understand Hindi Much ,I mean I can read what is written but does not understand proper meaning of the word in Hindi,Marathi and Hindi uses Devnagari Script but both are different in use.Marathi has more letters than Hindi language. In fact both have different rules of grammar,word,sentence formation and pronunciation of words.So I would not be in a position to help you regarding Hindi Language words.OK.Prasannakumar 17:32, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
  • One interesting thing I would like to tell here on that particular word "चाहना" (Chahana)OK.In Marathi "Chaha"Means Tea and "Na" means "No" that means it says like "No Tea" (Though it is not said like that,we say "Chaha Nako",Nako is a word used mostly in Hyderabad to show Negation.Nakko) ,see how much difference it makes if we took a simple word.OKPrasannakumar 17:39, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
  • Oh Yes,I am discussing with Selva too!Well he has proposed a work of building word-list,lets see how to go for it.

Hey by the way How to add words in Tamil Wiktionary,if you could help me start adding few words,I will do it on my own onwards.Since I am not fully familiar with all Tamil words at this moment, I need your help to start off.ok Cya soon.Prasannakumar 18:03, 12 ஆகஸ்ட் 2010 (UTC)

Helllo, good evening!

தொகு

My most sincere apologies, I don't speak nor read Tamil (I wish I could I love the way it is written) so I hope you'll forgive me for using English. My name is Claudi Balaguer (User Capsot from the Catalan and Occitan Wikipedias) and I'm currently working on a campaign to help our association "Amical de la Viquipèdia" in order to be accepted as a Chapter (some kind of intermediate superstructure between the Wikipedias and the Wikimedia Foundation), demand which has been rejected because Catalan is not a/one state language (I think we share the same problematic since Tamil is spoken in diverse countries). I'd like to begin a campaign here just like I did in the other Wikipedias but unfortunately I don't know your language, so if you had some spare time to translate it to your language and replace the Alemannic part of the template with it according to the English text, I would be extremely grateful and also the sentence "Category:Wikipedians giving their support to Wikimedia CAT". I wish all the best for you, your language and your nation. Have a wonderful and pleasant summer, take care Capsot 22:17, 16 ஆகஸ்ட் 2010 (UTC)


வாழ்த்துக்கள்

தொகு

மயூரேசன், விக்கியில் நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள். உங்கள் சேவை மென்மேலும் விக்கிப்பீடியாவுக்குத் தேவை.--Kanags \உரையாடுக 12:17, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

மயூரேசன், நெடுநாளைய விக்கிப்பீடியராகிய நீங்கள் செயலாட்சியராக (நிருவாகியாக) தேர்வுபெற்று, பங்களிக்க இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கூடுதலான பொறுப்புகளுடன் நடக்கவிருக்கும் உங்கள் பணியால் தமிழ் விக்கிப்பீடியா மேலும் சிறக்கும் என நம்புகிறேன். --செல்வா 12:54, 18 ஆகஸ்ட் 2010 (UTC)
நன்றி கனகு, செல்வா. சிறப்பாகப் பணியாற்ற இந்த நிருவாகி அணுக்கம் உதவும் என்பதில் ஐயம் இல்லை. வாக்களித்து ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி. --ஜெ.மயூரேசன் 17:18, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

தமிழ் வரைகதை

தொகு

நீங்கள் நிர்வாகியாக பெறுப்பேற்க முன்வந்தது மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் மயுரேசன்.

தமிழ் வரைகதை வாசகர் போல் தெரிகிறது. சிறு வயதில் மிகவும் ஈடுபாட்டுடம் இவற்றை வாசித்ததுண்டு. அப்போ ராணி காமிக்ஸ் மிகவும் பிரபலம். எல்லோரிடமும் பெற்று, பகிர்ந்து வாசிப்போம். அம்புலிமாமா, பாலமித்திரா, காமிக்ஸ் என்று பல.

இவற்றுள் தமிழ்நாட்டில் இருந்தும் ஒரு தமிழ் வரைகதை வெளிவந்தது. சிறுவன் சிறுமியர் தோன்றும் கதைகள். இவை தமிழ்நாட்டில் எழுதப்பட்டவை, வரையப்பட்டவை. இப்போ நினைவுக்கு வருகுதில்லை.

எப்படி இயல்பா தமிழ் படிச்சம்...அதோட ஐந்தாம் ஆண்டு புலமைச் சோதனை :-)

போதைக் கடத்தல் கதை படிக்கேக்க போதை எண்டா என்னெண்டு தெரியாது..)

--Natkeeran 02:37, 21 ஆகஸ்ட் 2010 (UTC)


ஏழு கழுதை வயதில் சித்திரக் கதை படிக்குது பாருங்கோ என்று அம்மா கிண்டல் பண்ண பண்ண இப்போதும் சித்திரக்கதைகளை வாசிப்பதுண்டு. தமிழில் சித்திரக்கதைகளின் பொற்காலம் முடிந்து விட்டது. ஆங்கிலத்தில்தான் இன்னமும் சளைக்காமல் ஏதோ ஓடிக்கொண்டிருக்கின்றது. திருமலை நூலகத்தில் சித்திரக்கதை, அம்புலிமாமா, பாலமித்ரா என்று பல வாசித்துத்தான் ஆர்வம் கூடியது. தமிழ் நாட்டில் இருந்து வந்தது என்று வாண்டுமாமாவின் சித்திரக் கதைகளைக் கூறுகின்றீர்களா?? பலே பாலு, கபீஷ் கதம்பம் போன்றவை அந்த தொடரில் பிரபலம். ஒம் ஒம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் ஏதோ பல்கலைக் கழகப் பரீட்சை மாதிரி ஆசிரியிர் பெற்றோரால் காட்டப்பட்டு நசுக்கப்பட்டதை மறக்கவில்லை. ஸ்கொலஷிப் இல்லை கொலை ஷிப் அது என்று அக்காலத்தில் (1993) இல் நண்பர்களுடன் பகிடி அடித்தது ஞாபகம் வருகின்றது.
நிர்வாகிப் அணுக்கம் கிடைத்தமைக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் நண்பரே. தொடர்ந்து வளர்ப்போம் விக்கியை --ஜெ.மயூரேசன் 08:01, 21 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றிகள்

தொகு

என்னுடைய பிறந்த நாளையொட்டி நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். --மயூரநாதன் 16:21, 8 செப்டெம்பர் 2010 (UTC)Reply

விக்கி மாரத்தான்

தொகு

விக்கி மாரத்தானில் கலந்து கொள்ள வாருங்கள்--இரவி 09:21, 27 அக்டோபர் 2010 (UTC)Reply

மீண்டும் விக்கிப் பணிக்கு வர வேண்டுகோள்

தொகு

வணக்கம் மயூரேசன். நலமா? கடந்த சில மாதங்களாகத் தமிழ் விக்கிப்பீடியா நன்கு வளர்ந்து வருகிறது. மூன்றே வாரங்களில் புதிதாக ஆயிரம் கட்டுரைகளை எழுதுகிறோம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் :) விரைவில் 50,000+ கட்டுரைகள் என்ற இலக்கை முன்வைத்து உழைக்க விரும்புகிறோம். இந்நேரத்தில் ஏற்கனவே தமிழ் விக்கியில் ஈடுபாடு காட்டிய உங்களைப் போன்ற பலரும் அவ்வப்போதாவது மீண்டும் வந்து விக்கிப்பணியில் இணைந்து கொண்டால் உற்சாகமாக இருக்கும். உங்களால் பங்கு கொள்ள இயலாவிட்டாலும், உங்கள் நண்பர்கள் வட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி எடுத்துச் சொல்லி புதிய பங்களிப்பாளர்களை ஈர்க்க உதவ இயலுமா? நன்றி--இரவி 13:08, 2 மே 2011 (UTC)Reply

ரவி சிறிது சிறிதாக எனது பங்களிப்பை மீளவும் வேகப்படுத்துகின்றேன். ஆமாம் ஒரேநாளில் இரண்டாயிரம் தொட்ட புண்யாமீன் பற்றியெல்லாம் வாசித்தேன். நண்பர் வட்டத்தில் இயலுமான வரை பரப்புரை செய்துவருகின்றேன். பலன்தான் கிடைக்குதில்லை. நிறையப்பேர் நிச்சயமா செய்யலாம் என்பார்கள் பின்பு கேட்டால் தலையைச் சொறிவார்கள். முயல்கின்றேன் தொடர்ந்தும். விரைவில் 50,000 + எட்டலாம். நன்றி. --ஜெ.மயூரேசன் 15:33, 3 மே 2011 (UTC)Reply

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்

தொகு



மரண மாளிகை (வரைகதை)

தொகு

மரண மாளிகை (வரைகதை) இக்கட்டுரையில் உள்ளடக்கம் போதாதென குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இடப்பட்டுள்ளது. அருள் கூர்ந்து இதனை விரிவு படுத்தும்படி வேண்டிக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:23, 6 சூலை 2011 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம்

தொகு

வணக்கம் மயூரேசன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பை விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மயூரேசன் பக்கத்தில் சேர்க்க வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 13:10, 7 சூலை 2011 (UTC)Reply

நன்றி எழுதியுள்ளேன். சரியா எனச் சரிபார்க்கவும் :) --ஜெ.மயூரேசன் 16:10, 7 சூலை 2011 (UTC)Reply

சரியாக உள்ளது. முதற்பக்கத்தில் காட்சி படுத்தியிருக்கிறேன் :-). இன்னும் இரு வாரங்கள் முதற்பக்கத்தில் இருக்கும்.--சோடாபாட்டில்உரையாடுக 05:57, 17 சூலை 2011 (UTC)Reply

வாழ்த்துகள்

தொகு

உங்களைப் பற்றிய முதற் பக்க அறிமுகம் கண்டு மகிழ்வடைகிறேன்.விக்கியில் உங்கள் பணி மேலும் சிறக்கட்டும். வாழ்த்துகள் மயூரேசன்--P.M.Puniyameen 08:22, 17 சூலை 2011 (UTC)Reply

நன்றி சோடா பாட்டில், புண்ணியாமீன் :) --ஜெ.மயூரேசன் 01:22, 18 சூலை 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011

தொகு
 

Hi ஜெ.மயூரேசன்,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

முதற்பக்க கட்டுரை அறிவிப்புத் திட்டம்

தொகு



தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு

தொகு

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

மீண்டும் உங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி. இணையத் தொழில்நுட்பங்களோடு ஆவணப்படுத்தலைத் தொடர்புபடுத்தி ஒரு கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. --Natkeeran (பேச்சு) 19:47, 26 திசம்பர் 2012 (UTC)Reply


கட்டாயம் பார்க்கின்றேன். அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் (பேச்சு) 02:46, 27 திசம்பர் 2012 (UTC)Reply

விக்கிப்பீடியர் சந்திப்பு ஏற்பாடுகள்

தொகு

கொழும்பில் வரும் ஏப்ரல் 27, 28 இல் நடைபெறும் தமிழ் ஆவண மாநாட்டில் பங்குபெற பல விக்கிப்பீடியர் வருவதாக உள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தும்வகையில் விக்கிப்பீடியர் சந்திப்பொன்றை நடாத்துவது குறித்து சிந்தித்தோம். ஆலமரத்தடியில் இது குறித்த உரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இலங்கைப் பயனர்கள் இதனைப் பயன்படுத்தி சந்திப்பில் கலந்து கொள்ளுவதும் விக்கி குறித்த மேம்பாட்டு முன்னெடுப்புகள் மற்றும் தொடர்புபட்ட விடயங்கள் பற்றி உரையாடுவதும் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கைப் பயனராகிய தங்களின் கருத்தை தெரிந்துகொள்ள விரும்புகின்றேன். நன்றிகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:45, 13 மார்ச் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

தொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:04, 24 சூன் 2013 (UTC)Reply

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு

தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)


அழைப்பிற்கு மிக்க நன்றிகள் இரவி. இம்முறை முடியவில்லை. --ஜெ.மயூரேசன் (பேச்சு) 15:27, 26 செப்டம்பர் 2013 (UTC)

இலங்கை வலைவாசலை மேம்படுத்தி தர வேண்டுகோள்

தொகு

வணக்கம் நண்பரே, தாங்கள் வலைவாசல்:இலங்கை என்பதை உருவாக்கி மேம்படுத்தியிருப்பதைக் கண்டேன். விக்கிப்பீடியாவின் முதல்பக்கத்தில் தற்போது வலைவாசல்கள் காட்சிபடுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தாங்கள் அந்த வலைவாசலில் சிறப்பு கட்டுரைகள், சிறப்புப் படங்கள் போன்றவற்றை மேலும் இணைத்து மேம்படுத்தி தர வேண்டுகிறேன். நன்றி. --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:13, 11 அக்டோபர் 2013 (UTC)Reply

வார்ப்புரு:நிகழும் செய்தி

தொகு

வார்ப்புரு:நிகழும் செய்தி இல் நீங்கள் செய்த திருத்தத்தால் கட்டுரைகளில் நாள் போடாமல் இட்டவற்றில் [[Category:]] என அனைத்துக் கட்டுரைகளிலும் கட்டுரை ஆரம்பத்திலேயே தெரிந்தது. என்னால் உடனடியாக அதனைத் திருத்த முடியவில்லை. இதனால் உங்கள் திருத்தத்தை மீளமைத்தேன். உங்களால் அதைத் திருத்த முடியுமானால் திருத்துங்கள்.--Kanags \உரையாடுக 06:09, 2 சனவரி 2014 (UTC)Reply

எனது சிற்றறிவிற்குப் புரியுமோ தெரியவில்லை முயன்று பார்க்கின்றேன் :) --ஜெ.மயூரேசன் (பேச்சு) 10:05, 2 சனவரி 2014 (UTC)Reply

வலைவாசல் அப்பிள் நிறுவனம்

தொகு

தாங்கள் உருவாக்கிய வலைவாசல் மிக மிக நன்றாய் உள்ளது. அதில் சில மாற்றங்கள் செய்துள்ளேன், ஏதும் பிழை இருந்தால் கூறுங்கள் மேலும் உதவிகள் தேவைப்பட்டால் கேளுங்கள். -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:38, 3 சனவரி 2014 (UTC)Reply

நீங்கள் செய்த மாற்றங்கள் அருமையாக உள்ளது. மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் (பேச்சு) 11:57, 3 சனவரி 2014 (UTC)Reply

நன்றி -- யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:03, 3 சனவரி 2014 (UTC)Reply

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், ஜெ.மயூரேசன்!

 

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--Anton·٠•●♥Talk♥●•٠· 14:56, 3 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம்-- யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:03, 4 சனவரி 2014 (UTC)Reply

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 09:39, 5 சனவரி 2014 (UTC)Reply


மாதம் 250 தொகுப்புகள் மைல்கல்

தொகு

வணக்கம், ஜெ.மயூரேசன்!

 

நீங்கள் கடந்த மாதம் 250 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்திருப்பதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இது பலருக்கும் உந்துதல் அளிப்பதாகவும் உதவியாகவும் இருக்கும். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 1000 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 07:56, 2 பெப்ரவரி 2014 (UTC)

  விருப்பம்--  ஸ்ரீகர்சன் (பேச்சு) 10:53, 3 பெப்ரவரி 2014 (UTC)

ஒரு வேண்டுகோள்

தொகு
 

வணக்கம் ஜெ.மயூரேசன்! தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள பல கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை சேர்க்கப்படவில்லை. இவ்வாறு உள்ள கட்டுரைகளை தரக்கட்டுப்பாட்டின் காரணமாக தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்து நீக்கப்படலாம். உங்களால் முடிந்தவரை இவற்றை சேர்க்க முயற்சிக்கவும். இதைப் பற்றிய தகவல்களைப் பெற சான்று சேர்க்கும் திட்டத்தை பார்க்கவும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிக்க வாழ்த்துக்கள்!

--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:46, 17 மே 2014 (UTC)Reply

விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு

தொகு
 
அனைவரும் வருக

வணக்கம் ஜெ.மயூரேசன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--♥ ஆதவன் ♥

。◕‿◕。 ♀ பேச்சு ♀ 07:16, 30 திசம்பர் 2014 (UTC)Reply

அருமை திட்டத்தில் பங்குபெறுகின்றோம் --ஜெ.மயூரேசன் (பேச்சு) 04:13, 4 சனவரி 2015 (UTC)Reply

வணக்கம் மயூரேசன், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன் மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--இரவி (பேச்சு) 08:26, 16 சனவரி 2015 (UTC)Reply
திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --இரவி (பேச்சு) 01:50, 30 சனவரி 2015 (UTC)Reply

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

தொகு

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:05, 4 சூலை 2015 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

தொகு
 
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:13, 8 சூலை 2015 (UTC)Reply

உளங்கனிந்த நன்றி!

தொகு
 

வணக்கம்!

விக்கி மாரத்தான் 2015 நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி!

- ஒருங்கிணைப்புக் குழு

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:36, 25 சூலை 2015 (UTC)Reply

உங்களுக்கு தெரியுமா அறிவிப்புத் திட்டம்

தொகு


{{subst:MFDWarning|1=படிமம்:Mayooresan.jpg}} ~AntanO4task (பேச்சு) 17:03, 31 சனவரி 2016 (UTC)Reply

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

தொகு
 

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

தொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)

தொழிற்கலைகள் செயற்திட்டம் முன்மொழிவு

தொகு

உங்கள் கருத்துக்களையும், ஆதரவையும், பங்களிப்பையும் இந்தச் செயற்திட்டத்துக்கு விக்கிப்பீடியா:இலங்கையின் கிழக்கு-வடக்கு-மலையக தொழிற்கலைகளை பல்லூடக முறையில் ஆவணப்படுத்தல் நல்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 21:44, 10 மார்ச் 2017 (UTC)

விக்கிமீடியா வியூகம் 2017

தொகு

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:33, 10 ஏப்ரல் 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

தொகு

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- இரவி, 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

தொகு

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 14:47, 18 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

தொகு

அன்புள்ள மயூரேசன்,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 18:28, 18 மார்ச் 2018 (UTC)

Your advanced permissions on ta.wikipedia

தொகு

Hello. A policy regarding the removal of "advanced rights" (administrator, bureaucrat, interface administrator, etc.) was adopted by community consensus in 2013. According to this policy, the stewards are reviewing activity on wikis with no inactivity policy.

You meet the inactivity criteria (no edits and no logged actions for 2 years) on this wiki. Since this wiki, to the best of our knowledge, does not have its own rights review process, the global one applies.

If you want to keep your advanced permissions, you should inform the community of the wiki about the fact that the stewards have sent you this information about your inactivity. A community notice about this process has been also posted on the local Village Pump of this wiki. If the community has a discussion about it and then wants you to keep your rights, please contact the stewards at the m:Stewards' noticeboard, and link to the discussion of the local community, where they express their wish to continue to maintain the rights.

If you wish to resign your rights, please request removal of your rights on Meta.

If there is no response at all after one month, stewards will proceed to remove your administrator and/or bureaucrat rights. In ambiguous cases, stewards will evaluate the responses and will refer a decision back to the local community for their comment and review. If you have any questions, please contact the stewards.

Yours faithfully. --علاء (பேச்சு) 19:05, 7 பெப்ரவரி 2021 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ஜெ.மயூரேசன்&oldid=3185340" இலிருந்து மீள்விக்கப்பட்டது