பயனர் பேச்சு:ஜெ.மயூரேசன்/தொகுப்பு 1

விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது.ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள்.நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. -- Sundar \பேச்சு 08:54, 9 செப்டெம்பர் 2005 (UTC)Reply

மகிந்த ராஜபக்க்ஷ

தொகு

மகிந்த ராஜபக்க்ஷ கட்டுரையை உருவாக்கியதற்கு நன்றி. நீங்கள் மென்மேலும் பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள். ஒரு சிறு ஐயம் - அவர் சார்ந்துள்ளது "சுகந்திர கட்சியா?" அல்லது "சுதந்திர கட்சியா?" -- Sundar \பேச்சு 07:22, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply


சுதந்திர கட்சி என்பதே சரியானதாகும்.--ஜெ.மயூரேசன் 09:08, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நன்றி. கட்டுரையிலிருந்த தட்டச்சுப்பிழையை நீக்கியுள்ளேன். -- Sundar \பேச்சு 09:14, 13 செப்டெம்பர் 2005 (UTC)Reply

காப்புரிமை செய்தி

தொகு

நீங்கள் பதிவேற்றும் படிமங்கள் உங்களுடையதாக இருப்பின் வார்ப்புரு:GFDL, வார்ப்புரு:PD, வார்ப்புரு:Cc-by-sa போன்ற காப்புரிமை சிக்கல் இல்லாத உரிமைப் பட்டையத்தின் கீழ் பதிவேற்றுங்கள். எடுத்துக்காட்டாக, படிமம்:Polsiva.jpg என்ற பக்கத்தில் சென்று {{GFDL}}, {{PD}}, {{cc-by-sa}} ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு சரத்தை இணையுங்கள். -- Sundar \பேச்சு 06:19, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

மன்னிக்கவும் இதை எவ்வாறு செய்வதென்று எனக்குப்புரியவில்லை.நண்பனிடமிருந்து பெற்ற படங்கள், ஆகவே காப்புரிமைப்பிரைச்சனை எழ வாய்ப்பு இல்லை.--ஜெ.மயூரேசன் 06:39, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

படிமம்:Polsiva.jpg என்றை இணைப்பை சொடுக்குங்கள். அதன்பின் வழக்கமாக கட்டுரைகளைத் தொகுப்பதுபோல் தொகுத்து {{GFDL}}என்ற சரத்தைச் சேர்த்து விடுங்கள். -- Sundar \பேச்சு 06:51, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நன்றி மயூரேசன். -- Sundar \பேச்சு 06:55, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நன்றி அவ்வாறே செய்துள்ளேன்.--ஜெ.மயூரேசன் 06:59, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

மேலும் ஒரு குறிப்பு. முழுமையாக காப்புரிமை விலக்கு பெற்ற படிமங்களை இங்கு பதிவேற்றுவதற்கு மாறாக காமன்ஸில் பதிவேற்றினீர்கள் என்றால் இங்கும் பயன்படுத்திக் கொள்ளலாம், பிறமொழி விக்கிபீடியாக்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். -- Sundar \பேச்சு 08:00, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply


எதிர் வரும் காலங்களில் அவ்வாறே செய்கிறேன்.--ஜெ.மயூரேசன் 05:01, 24 செப்டெம்பர் 2005 (UTC)Reply

வணக்கம்

தொகு

வணக்கம், மயூரேசன். இலங்கை தொடர்புடைய கட்டுரைகளில் உங்கள் பங்களிப்பு கண்டு மகிழ்கிறேன்..உங்கள் முகம் அறிய முடிந்ததிலும் மகிழ்ச்சி..அப்புறம் இந்த முகாமைத்துவம் என்றால் என்ன என்று எனக்குப் புரியவில்லை. விளக்குவீர்களா..?நன்றி--ரவி (பேச்சு) 09:31, 21 செப்டெம்பர் 2005 (UTC)Reply

வணக்கம் ரவி,முகாமை என்பது Management. நான் கற்பது Management and Information Technology.

ஓ ! அப்படியா ? தமிழ் நாட்டில் மேலாண்மை என்பார்கள். இது போன்று இலங்கையில் பிரசித்தமாக இருக்கும் சொற்களை நீங்கள் விக்சனரியில் சேர்க்கலாமே..அப்புறம், உங்கள் விரிவான பயனர் பக்கம் கண்டு மகிழ்ந்தேன். நன்றி--ரவி (பேச்சு) 10:19, 25 செப்டெம்பர் 2005 (UTC)Reply

"மேலாண்மை" என்றால் "overseer" என்ற மாதிரியல்லவா பொருள் படும்?? - சுரேன்

தமிழ்நாட்டில் supervisorக்கு மேற்பார்வையாளர் என்பார்கள். மேலாண்மை என்பது எல்லோராலும் Management என்றே புரிந்துக்கொள்ளப்படும்--ரவி (பேச்சு) 14:56, 25 செப்டெம்பர் 2005 (UTC)Reply

நீங்கள் சொல்வது சரியாகவேபடுகின்றது. ஆயினும் தமிழக தமிழிலும் இலங்கைத்தமிழிலும் கலைச்சொற்கள் வேறுபடுவதை நான் பலதடவைகள் அவதானித்து இருக்கின்றேன். உதாரணமாக வேதியியலை இலங்கையில் இரசாயணவியல் என்பர்.--ஜெ.மயூரேசன் 02:37, 28 செப்டெம்பர் 2005 (UTC)Reply

முகாமை என்பது காரணப் பெயரா என்று தெரியவில்லை. அவ்வாறு இருப்பின் யாராவது அதன் கூறுகளை விளக்குங்கள். சுரேனின் கேள்விக்குப்பிறகு எண்ணிப் பார்க்கையில் மேலாண்மை என்பது ஒரு குறிப்பிட வகை படிநிலை முகாமையையே குறிப்பதாகத் தோன்றுகிறது. -- Sundar \பேச்சு 04:57, 28 செப்டெம்பர் 2005 (UTC)Reply

முகாமை என்பது காரணப்பெயராக இருக்கக் கூடும். உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் இலங்கையில் இது பரவலாகப் பயன் படுத்தப்படும் சொல் தான். Management என்பதை முகாமைத்துவம் என்றும், Manager என்பதை முகாமையாளர் என்றும் இலங்கையில் மொழிபெயர்ப்பார்கள். Agent என்பதற்கு முகவர் என்று இலங்கைத் தமிழில் எழுதப்படுகிறது. இந்த இரண்டு சொற்களிலுமுள்ள முக என்பது ஒரே பொருள் தருவதாயும் இருக்கக் கூடும். இது பற்றி மேலும் அறிய முயற்சிக்கிறேன். Mayooranathan 17:24, 28 செப்டெம்பர் 2005 (UTC)Reply

தமிழ்நாட்டிலும் கூட முகவர் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. இவ்விரண்டு சொற்களுக்குமிடையே தொடர்பிருப்பின் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. -- Sundar \பேச்சு 03:48, 29 செப்டெம்பர் 2005 (UTC)Reply

வருக

தொகு

வாங்க மயூரேசன்...

விக்கிபீடியாவில் இந்த "மயூர" க்களின் ஆதிக்கம் ரொம்ப அதிகமாகிக்கொண்டே வருது ;-))

என்னை தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். மாமா வீட்டில் தானா இருக்கிறீங்க?

இவ்வளவு விரைவாக தமிழ் கணினி இயலிலும் இணையத்தமிழிலும் பரிச்சயமாகிக்கொள்வீர்கள் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை சந்திக்க விரும்புகிறேன். என்னுடைய பயனர் பக்கத்தில் தொடர்பு விபரம் இருக்கிறது. முடிந்தால் உங்கள் தொடர்பு விபரத்தை இங்கே தாருங்கள் உங்களுக்கு அழைப்பு எடுக்கிறேன் --மு.மயூரன் 09:03, 19 அக்டோபர் 2005 (UTC)Reply

பரீட்சை காரணமாக பலகாலம் இங்கு வரவில்லை.எனது செல்லிடத்தொலைபேசி இலக்கம் 072- 2772648. இன்று நான் யாழ்ப்பாணம் செல்ல இருக்கிறேன் ஆகவே அடுத்த வாரமளவில் சந்திக்கலாமே--ஜெ.மயூரேசன் 10:58, 29 அக்டோபர் 2005 (UTC)Reply

சிறு குறிப்பு

தொகு

மயூரேசன், பயனர் srihariயை நீங்கள் வரவேற்றதைக் கண்டேன். இது போன்று புதுப்பயனர்களை வரவேற்கும்போது {{new user}} அல்லது {{புதுப்பயனர்}} போன்ற வார்ப்புருக்களை பயன்படுத்துங்கள். வார்ப்புருக்களை பயன்படுத்துவதால், அவ்வார்ப்புருவில் செய்யப்படும் மாற்றங்கள் தானாக எல்லா பக்கங்களிலும் இற்றைப்படுத்தப்படும். இது குறித்து சிவக்குமாரின் பேச்சுப்பக்கத்தில் தரப்பட்டுள்ள விளக்கத்தையும் காணலாம். --ரவி (பேச்சு) 09:04, 4 நவம்பர் 2005 (UTC)Reply

தங்கள் பயனுள்ள தகவலுக்கு நன்றி. இனி அவ்வாறேசெய்கிறேன்.நன்றி--ஜெ.மயூரேசன் 09:41, 5 நவம்பர் 2005 (UTC)Reply

mayuresan, just a small note again. recently u have welcomed user miaow miaow..but it seems he is a interwiki user who might not know tamil :) usually one could guess whether the user understands tamil from his user name. or generally experienced interwiki users leave a message that they cannot understand tamil. lets not welcome them with tamil welcome template or we should make a welcome template in english. thanks a lot for contributing in wikipedia site administration. If you are interested in becoming administrator in tamil wikipedia, please let me know. I will nominate u formally. With the increasing growth of activities in this site, we need experienced and trusted people like u to take care of the maintenance here. Thanks--ரவி 15:33, 3 டிசம்பர் 2005 (UTC)

Once again thanks for your use full information. Is there any English template for interwiki users?. Mr.Ravi, I'd likt to be a administrator, but still I don't know what I wanna do once I become a administrator. could you please let me know that? Please.... Thanks --ஜெ.மயூரேசன் 08:13, 6 டிசம்பர் 2005 (UTC)

வார்ப்புருக்கள்

தொகு

இங்கு தமிழ் விக்கியில் உள்ள அனைத்து வார்ப்புருக்களின் பட்டியல் உள்ளது. மாறாக, வார்ப்புருக்களைப் பற்றி நீங்கள் பொதுவாக அறிந்து கொள்ள விரும்பினால் ஆங்கில விக்கியில் உள்ள இக்கட்டுரையைப் படிக்கவும். முடிந்தால், அதைத் தமிழில் மொழிபெயர்த்து விக்கிபீடியா:வார்ப்புரு என்ற பக்கத்தில் உள்ளீடு செய்யுங்கள். உங்கள் பங்களிப்புகளுக்கு நன்றி. -- Sundar \பேச்சு 09:26, 1 டிசம்பர் 2005 (UTC)

உடனே பதில் வழங்கியமைக்கு நன்றி.--ஜெ.மயூரேசன் 09:35, 1 டிசம்பர் 2005 (UTC)


ஆங்கில விக்கிபீடியாவில் இருக்கும் படிமங்களை எப்படி பாவிப்பது?

தொகு

ஆங்கில விக்கிபீடியாவில் இரண்டு விதமான படிமங்கள் உண்டு. ஒன்று விக்கி கொமன்ஸ் இலிருந்து பாவிக்கப்பட்டவை, மற்றது ஆங்கில விக்கிபீடியா தரவு தளத்தில் சேமிக்கப்பட்டவை. ஆங்கில தளத்தில் இருப்பவையை நீங்கள் தரமிறக்கி, உங்கள் கணினியில் தற்காலிகமாக சேகரித்து, தமிழ் விக்கிபீடியாவிற்க்கு ஏற்ற வேண்டும். விக்கி கொமன்ஸ் அல்லது பொதுவில் இருப்பவையை நேரடியாகவே பாவித்து கொள்ளலாம். இத் தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன். --Natkeeran 17:56, 10 டிசம்பர் 2005 (UTC)

பயனுள்ள தகவலுக்கு நன்றி நக்கீரன் --ஜெ.மயூரேசன் 08:19, 11 டிசம்பர் 2005 (UTC)

If the image in en wiki is in public domain or copyright free (this information is given in the image page), then u can check whether it is available in commons. If it is present there then u can use it directly without uploading in Tamil wikipedia. Then it saves server space in Tamil wikipedia. If u have any copyright free images u can upload them to commons to instead of Twiki. Images in commons can be accessed by all language wikimedia projects. If the copyright info of images in en wiki is doubtful, then u can download them and upload again at tamil wikipedia. In this case, please mention the source of the image or whatever info is available abt the copyright of the image. In future, please post similar general questions seeking help in Wikipedia:ஒத்தாசை பக்கம், so can every one see the question and u can get a quick response. also the answers will be available as source of reference for future users.--ரவி 12:47, 11 டிசம்பர் 2005 (UTC)
மயூரேசன், உடல்நலக்குறைவு காரணமாக நான்கு நாட்கள் பங்களிக்க முடியவில்லை. அதனால் தான் உங்கள் மின்னஞ்சலுக்கு விரைவான மறுமொழி அளிக்க முடியவில்லை. ஆனால் தக்க நேரத்தில் நற்கீரனும் ரவியும் தகவல் தந்துள்ளார்கள் போலிருக்கிறது. -- Sundar \பேச்சு 08:32, 13 டிசம்பர் 2005 (UTC)

நன்றி சுந்தர். தற்போது நீங்க்கள் நலமென நம்புகிறேன்.--ஜெ.மயூரேசன் 09:41, 13 டிசம்பர் 2005 (UTC)

ஆம், தற்போது உடல்நிலை நன்கு தேறியுள்ளது. நன்றி. -- Sundar \பேச்சு 09:48, 13 டிசம்பர் 2005 (UTC)

administrator

தொகு

administrator access mainly gives u added user rights to delete unwanted pages, block spamming users, easy way of reverting edits. u can read more at Wikipedia:நிர்வாகிகள் abt what admins can do. but by becoming adnin we don expect that u always shd spend time in site maintenance. but if u wish to do some maintenance work, u can use these rights. currently sundar, natkeeran, sivakumar and I are mainly organising the site. With increasing activity in tamil wikipedia, we would like to give such rights to more users who can be trusted that they will use it in constructive way only. If u don feel like becoming admin now but would consider it later, u can apply anytime at Wikipedia:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள். I will be very glad to support u.--ரவி 12:56, 11 டிசம்பர் 2005 (UTC)

I'd like to apply for administrator post after 2 or 3 moths bcos I feel that I wanted to learn more in this site. When I apply for the post I'll notify you also. Thanks ravi --ஜெ.மயூரேசன் 09:11, 12 டிசம்பர் 2005 (UTC)

ok. Thats fine..--ரவி 13:33, 12 டிசம்பர் 2005 (UTC)

Sri Lanka National Anthem - Tamil

தொகு

Hello

Do you know who wrote the Sri Lankan National Anthem in Tamil?? If you do can you please update "ஸ்ரீ லங்கா தாயே" page. Thanks - Suren

Tamil Sri Lankan national anthem is just a translation of Sinhala anthem. So there was no tamil anthem writer. --ஜெ.மயூரேசன் 10:03, 20 டிசம்பர் 2005 (UTC)

It is a translation, i want to know who translated it. the name was in the "tamil language" school book(i dont know which year, probably 8 or 9), but i can't remember now. Thanks - Suren

Ok I'll try my best to find that. --ஜெ.மயூரேசன் 02:56, 21 டிசம்பர் 2005 (UTC)

தேர்வுகள்

தொகு

தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று தேறிவர வாழ்த்துக்கள். -- Sundar \பேச்சு 05:18, 26 ஜனவரி 2006 (UTC) Thanks sundar--ஜெ.மயூரேசன் 10:08, 26 ஜனவரி 2006 (UTC)

please see the two links given at Wikipedia:வகைபடுத்துதல். It may help answer your question--ரவி 12:05, 30 ஜனவரி 2006 (UTC)

Thanks Ravi--ஜெ.மயூரேசன் 04:41, 31 ஜனவரி 2006 (UTC)

நன்றிகள்

தொகு

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் மயூரேசன். தமிழ் விக்கிபீடியாவில் என்னுடைய முயற்சிகளை ஒரு ஒழுங்கமைவுக்குள் கொண்டுவரும் முயற்சியாகவே இந்த இலக்கை ஏற்படுத்தியுள்ளேன். இதற்காக ஒதுக்கும் நேரத்தை ஆக்கபூர்வமானதாகச் செலவிட இது உதவும் என நம்புகிறேன். Mayooranathan 06:13, 2 பெப்ரவரி 2006 (UTC)

நீங்கள் கூறுவது உண்ண்மையெ அனைத்தும் நினைத்தபடி நடந்து 10000 கட்டுரைகள் கொண்டபட்டியலில் தமிழும் இணையட்டும். நன்றி--ஜெ.மயூரேசன் 09:00, 2 பெப்ரவரி 2006 (UTC)

Return to the user page of "ஜெ.மயூரேசன்/தொகுப்பு 1".