விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/ஜனவரி 13, 2016
- கடல்களுக்கான உரோமானியக்கடவுள் நெப்டியூன் என்பவரின் பெயரே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோளான நெப்டியூன் கோளிற்கு சூட்டப்பட்டது.
- ஆசியா கண்டத்திலேயே அதிக கத்தோலிக்க பெருங்கோவில்களைக்கொண்ட நாடு இந்தியாவாகும்.
- வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி அவர்களுக்கு பிரிட்டனில் 1916 - 1919ல் ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் பெருமைக்குரிய "ரைட் ஹானரபில்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
- பேரோ லொபேஸ் டி சூசா என்பவர் போர்த்துகேய இலங்கையின் முதலாவது தேசாதிபதி ஆவார்.