வலைவாசல்:வானியல்


வானியல் வலைவாசல்
.
வானியல் வலைவாசல்
தொகு 

வானியல் - அறிமுகம்

வானியல் (Astronomy) என்பது விண்பொருட்கள் (அதாவது இயற்கைத் துணைக்கோள்கள், கோள்கள், விண்மீன்கள், விண்முகில்கள் மற்றும் விண்மீன் பேரடைகள்) பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை (உ-ம்: மீயொளிர் விண்மீன் வெடிப்பு, காமா கதிர் வெடிப்பு, விண்-நுண்ணலை-பின்புலம் (Cosmic microwave background) போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும். தொடர்புடைய, ஆனாலும் முற்றிலும் தனித்துவமான துறையான அண்டவியல் என்பது அண்டத்தைப் பற்றி முழுமையாக ஆய்வதாகும்.



தொகு 

சிறப்புக் கட்டுரை

இரவில் முழு நிலவின் தோற்றம்
நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.



தொகு 

உங்களுக்குத் தெரியுமா?


தொகு 

நீங்களும் பங்களிக்கலாம்

  • வானியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • வானியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • வானியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • வானியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • வானியல் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
  • வானியல் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.


தொகு 

விக்கி நூல்கள்

விக்கிமீடியாவின் ஒரு திட்டமான விக்கி நூல்களில் சிறுவர் நூல்கள் பகுதியில் இந்நூல்கள் உள்ளன. இது வானியலின் ஒரு பகுதியான சூரியக் குடும்பம் பற்றியது.

சிறுவர் நூல்கள்

தொகு 

முக்கிய செய்திகள்

தொகு 

சிறப்புப் படம்

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே உலகைச் சுற்றிவரும் ஒரு விண்நிலையம். பலநாடுகள் ஒன்றாக இணைந்து உருவாக்கிய, நெடுங்காலம் நிலைத்து விண்ணிலே இயங்கவல்ல ஒரு விண்வெளி நிலையம். இது புவியில் இருந்து 360 கி.மீ. உயரத்தில் வளிமண்டலத்தைத் தாண்டி உள்ள புற வெளியில் 92 நிமிடங்களுக்கு ஒருமுறை உலகைச் சுற்றி வருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது

தொகு 

பகுப்புக்கள்

தொகு 

விக்கித் திட்டங்கள்

தொகு 

தொடர்பானவை

தொகு 

தொடர்புடைய வலைவாசல்கள்

பௌத்தம்அறிவியல்
பௌத்தம்
ஜைனம்தொழினுட்பம்
ஜைனம்

பிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று

அய்யா வழிஇயற்பியல்
அய்யா வழி
சமயம்கணிதம்‎
சமயம்
இந்தியாஉயிரியல்
இந்தியா
அறிவியல் தொழினுட்பம் கணினியியல் இயற்பியல் கணிதம்‎ உயிரியல்


தொகு 

பிற விக்கிமீடியா திட்டங்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:வானியல்&oldid=1678607" இலிருந்து மீள்விக்கப்பட்டது