வலைவாசல்:வானியல்/உங்களுக்குத் தெரியுமா?
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் வானியல் வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் வானியல் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
- வடிவமைப்பு
[[Image:|right|100px]] * * * * * * {| class="noprint" width="100%" border="0" style="padding: 0; margin: 0; background-color:transparent" |- |<div style="text-align:right;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:வானியல்/உங்களுக்குத் தெரியுமா|...முன்மொழிய]]''' </div> |} <noinclude> [[பகுப்பு:தகவல்கள் - வானியல் வலைவாசல்]] </noinclude>
காப்பகம்
தொகு1
தொகு- சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய துணைக்கோள் கனிமிடு (படம்) ஆகும்.
- புவி கோள வடிவமானது என முதன் முதலில் முன்வைத்தவர் பைதகரஸ்(கி.மு. 580 - கி.மு. 500) ஆவார்.
- நெப்டியூன் எனும் கோளுடைய பெயரின் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.
- ஒலிம்பஸ் எனும் எரிமலைத்தொடரே விண்வெளியிலேயே அமைந்துள்ள மிகப்பெரிய எரிமலைத்தொடர் ஆகும். குறிப்பாக இது செவ்வாய்க்கோளிலேயே அமைந்துள்ளது.
- சூரியனைச் சுற்றி புவி வலம் வருகின்றது என்ற கொள்கையை முதன்முதலில் முன்வைத்தவர் அரிஸ்டாகஸ் ஆவார்.
- சந்திரனில் காணப்படும் ரைகோ குழி ரைகோ பிராஹேயின் பெயரைக் குறிக்கின்றது.
2
தொகு- பாரிய கற்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி உருவாக்கிய அமைப்புக்கள் வானியல் நோக்கங்களைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. "ஸ்டோன்ஹெஞ்ச்" (படம்) இத்தகைய அமைப்புக்களுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.
- பூமியின் நிலவு முதலாவதாக விண்வெளி ஆய்வுக்குட்படுத்தப்பட்ட விண்வெளிப் பொருள் (பூமி தன்னைத் தவிர) ஆகும்.
- சனி எனும் கோளுடைய பெயரின் கருத்து போருக்கான ரோமானியக் கடவுள் என்பதாகும்.
- மீயொளிர் விண்மீன் வெடிப்பு (supernova) என்பது அளவில் பெரிய விண்மீன்கள் தம் எரிபொருள் எரிந்து தீர்ந்தபின் மாபெரும் அளவில் ஒளியாற்றலை வீசி பேரொளியுடன் வெடிப்பதை குறிக்கும்.
- வானியல் அலகின் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நீளம் 149 597 870 691 ± 30 மீட்டர்கள் (150 மில்லியன் கிலோமீட்டர்கள் அல்லது 93 மில்லியன் மைல்கள்) ஆகும்.
- ஒரு சராசரி பேரடையில் 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் (107 முதல் 1012) வரையான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும்.
3
தொகு- பூமியின் அனைத்துப்பகுதியிலும் மார்ஸ் 21 அன்று மிகச் சரியாகப் பன்னிரண்டு மணி நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும்.
- சூரியக் குடும்பத்திலேயே ஈர்ப்பு விசையை அதிகமாகக் கொண்டுள்ள கோள் வியாழன் ஆகும்.
- எகிப்தியர்களே கோள்களின் பெயரை ஒவ்வொரு வார நாட்களுக்கும் வைத்தனர்.
- செவ்வாய்க் கோளில் இருந்து வானத்தை அவதானிக்கும் போது அது செம்மஞ்சள் நிறமாகவே தென்படும்.
- நீல் ஆம்ஸ்ரோங் (படம்) தனது இடது காலையே முதன் முதல் நிலவில் எடுத்து வைத்தார்.
- நாம் வாழும் பூமி சூரியக்குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய ஐந்தாவது கோளாகும்.
4
தொகு- சூரியன் பால்வழி மண்டலத்தின் மைய அச்சை ஒருமுறை சுற்றி வர அண்ணளவாக 225 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும்.
- சந்திரனின் ஒளி பூமியை வந்தடைய அண்ணளவாக ஒன்றரை நிமிடங்கள் எடுக்கும்.
- வானியல்த் துறையில் முதன் முதல் எழுதப்பட்ட நூல் ஆர்ய பாட்டியம் என்பதாகும்.
- சுழற்சிக் காலம் மிக வேகமாக உள்ள கோள் வியாழன் ஆகும்.
- புதிய நட்சத்திரங்கள் பல உருவாகும் இடம் நெபுலா (படம்) ஆகும்.
- அண்டம் எவ்வாறு உருவானது என்பதை விளக்க முயலும் கோட்பாடு பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும்.
5
தொகு- கிரேக்கப் புராணக்கதைகளில் நெப்டியூன் எனும் கடவுளின் மகன் தான்ன் ஒராயன். (படம்)
- விண்கற்கள் முழுவதும் கனியங்களால் ஆனவை.
- ஒரு கோளிலோ ஒரு நிலவிலோ விண்கல் ஒன்று அல்லது விண்கற்கூட்டம் மோதுவதால் ஏற்படும் பள்ளம் விண்கல் வீழ் பள்ளம் எனப்படும்.
- சிறுகோள்களிலேயே மிகவும் பெரியது சிரிஸ் ஆகும்.
- வியாழன் (Jupiter) எனும் கோளுக்கு ரோமானியக் கடவுள்களுக்கெல்லாம் அதிபதியான கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.
- டிஸ்கவரி எனும் விண்ணோடமே ஹபிள் தொலைக்காட்டியை விண்ணுக்குக் கொண்டுசென்றது.
6
தொகு- அகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது ஆகும்.
- குறு ஒளிர்வண்டம் என்பது சில பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு சிறிய விண்மீன் பேரடையாகும்.
- உலகம் இருக்கும் பால் வழிப் பேரடைக்கு அருகே இருப்பது அந்திரொமேடா பேரடை ஆகும்.
- அனைத்துலக வானியல் ஆண்டு 2009 என அறிவிக்கப்பட்டது.
- நண்டு வடிவ நெபுலாவின் விளிம்பில் காணப்படும் வரி இழைகள், நண்டின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. அதனால் அதை நண்டு வடிவ நெபுலா என்று அழைப்பர்.
- தெய்மொசு (துணைக்கோள்) (படம்) ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு சற்று தொலைவில் உள்ளதும் மிகச் சிறியதுமான துணைக்கோளாகும்.
7
தொகு- அகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது ஆகும்.
- குறு ஒளிர்வண்டம் என்பது சில பில்லியன் விண்மீன்களைக் கொண்ட ஒரு சிறிய விண்மீன் பேரடையாகும்.
- உலகம் இருக்கும் பால் வழிப் பேரடைக்கு அருகே இருப்பது அந்திரொமேடா பேரடை ஆகும்.
- அனைத்துலக வானியல் ஆண்டு 2009 என அறிவிக்கப்பட்டது.
- நண்டு வடிவ நெபுலாவின் விளிம்பில் காணப்படும் வரி இழைகள், நண்டின் கால்கள் மற்றும் உணர் கொம்புகள் போலத் தோன்றுகின்றன. அதனால் அதை நண்டு வடிவ நெபுலா என்று அழைப்பர்.
- தெய்மொசு (துணைக்கோள்) (படம்) ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு சற்று தொலைவில் உள்ளதும் மிகச் சிறியதுமான துணைக்கோளாகும்.
8
தொகு9
தொகு10
தொகுபரிந்துரைகள்
தொகுஇங்கு பரிந்துரைகளை இடவும்.