வலைவாசல்:வானியல்/தகவல்கள்/1
- சூரியக் குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய துணைக்கோள் கனிமிடு (படம்) ஆகும்.
- புவி கோள வடிவமானது என முதன் முதலில் முன்வைத்தவர் பைதகரஸ்(கி.மு. 580 - கி.மு. 500) ஆவார்.
- நெப்டியூன் எனும் கோளுடைய பெயரின் கருத்து கடல்களின் ரோமானியக் கடவுள் என்பதாகும்.
- ஒலிம்பஸ் எனும் எரிமலைத்தொடரே விண்வெளியிலேயே அமைந்துள்ள மிகப்பெரிய எரிமலைத்தொடர் ஆகும். குறிப்பாக இது செவ்வாய்க்கோளிலேயே அமைந்துள்ளது.
- சூரியனைச் சுற்றி புவி வலம் வருகின்றது என்ற கொள்கையை முதன்முதலில் முன்வைத்தவர் அரிஸ்டாகஸ் ஆவார்.
- சந்திரனில் காணப்படும் ரைகோ குழி ரைகோ பிராஹேயின் பெயரைக் குறிக்கின்றது.