விண்வெளி அறிவியல்
விண்வெளி என்பது ஒப்பீட்டளவில், கோள்களின் காற்று மண்டலத்துக்கு வெளியேயுள்ள, பிரபஞ்சத்தின் வெறுமையான பகுதியாகும். இது பூமியின் மேற்பரப்பிலிருந்து கிட்டத்தட்ட 100 கி.மீற்றருக்கு மேலே ஆரம்பமாவதாகக் கொள்ளலாம். விண்வெளி அறிவியல், அல்லது விண்வெளி அறிவியல்கள், பின்வருவன போன்ற பல்வேறு துறைகளை அடக்கியுள்ளது.[1][2][3]
- வானியலும், வான்பௌதீகவியலும்
- Exobiology- புறவெளி உயிரியல்
- நுண்ணீர்ப்புச் சூழல் (Microgravity environment)
- பிளாஸ்மா பௌதீகவியல்
- விண்வெளிப் போக்குவரத்து
- ஏவுகணை உந்துகை (Rocket propulsion)
- ஏவுகணை ஏவுதற் தொழில்நுட்பம்
- கோள்களிடைப் பயணம்
- நட்சத்திரங்களிடைப் பயணம் (Interstellar travel)
- விண்கல உந்துகை (Spacecraft propulsion)
- விண்வெளிப் பயணம் (Space exploration)
- ஆளில்லா விண்வெளித் திட்டங்கள் (Unmanned space missions)
- ஆட்களுடனான விண்வெளித் திட்டங்கள் (Manned space missions)
- விண்வெளிக் குடியேற்றம்
இவற்றுடன், விண்வெளி அறிவியல்கள், விண்வெளிச் சூழலிலுள்ள நுண்ணுயி உயிரியலிலிருந்து, மற்றைய கோள்களினதும், விண்பொருட்களினதும் புவிச்சரிதவியல் வரையும்,அதுபோல், நட்சத்திரங்களிடை வெளிகளிலும், நட்சத்திரங்களுள்ளேயும் அணுப் பௌதீகவியலும் போன்ற, வேறு பல துறைகள்மீது தாக்கங் கொண்டோ அல்லது அவற்றுடன் தொடர்புபட்டோ உள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Space science – Define Space science", Dictionary.com
- ↑ "Space science – Definition of space science", Free Online Dictionary, Thesaurus and Encyclopedia
- ↑ "astrophysics". Merriam-Webster, Incorporated. பார்க்கப்பட்ட நாள் 2011-05-22.