காமா கதிர் வெடிப்பு
காமா கதிர் வெடிப்பு (Gamma-ray burst) என்பது உச்சகட்ட ஆற்றல் உள்ள விண்வெளி வெடிப்பின் போது சிதறும் காமா கதிர்கள் ஆகும். தொலை தூர விண்மீன் திரள்களில் நிகழும் இது நமது பேரண்டத்தில் நடக்க கூடிய அதிக ஒளிர்வுள்ள நிகழ்வு ஆகும்.
பெரும்பாலான காமா கதிர் வெடிப்புகள் புவியிலிருந்து பில்லியன் ஒளியாண்டு தொலைவிலேயே நிகழ்கின்றன. காமா கதிர் வெடிப்பின் சில நொடிகளில் வெளியாகும் ஆற்றல் சூரியன் தனது வாழ்நாளின் பத்து பில்லியன் ஆண்டுகளில் வெளியிடும் ஆற்றலுக்குச் சமம்.[1] They are very rare (a few per galaxy per million years).[2]
பால்வெளி மண்டலத்தில் இத்தகைய வெடிப்பு நடக்குமாயின் அது புவியை அழித்து விடக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது.[3] No such case is known.
கண்டறியப்படுதல்
தொகுஐக்கிய அமெரிக்க நாடுகள் விண்வெளியில் நிகழ்த்தப்படும் அணுக்கரு வெடிப்புச் சோதனைகளைக் கண்டறிவதற்கென நிறுவியிருந்த காமா கதிர் உணர்வான்கள் 02.07.1967 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட நேரம் 14:19 அளவில் இனங்கண்டறிய இயலா அணு ஆயுதங்களில் இருந்து வந்த காமா கதிர்களைக் கண்டறிந்தன.[4][5] இது குறித்து விசாரணைக்குழு அமைத்து விசாரிக்கப்பட்டது. கடைசியில் இக் கதிர்கள் பால்வெளி மண்டலத்திற்கு வெளியில் இருந்து வந்தது உறுதி செய்யப்பட்டது. ஆறு ஆண்டுகள் கழித்து இக்கண்டறிதல் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Frail D.A. et al (2001). "Beaming in Gamma-ray bursts: evidence for a standard energy reservoir". Astrophysical Journal Letters 562: L557–L558. doi:10.1086/338119. Bibcode: 2001ApJ...562L..55F.
- ↑ Podsiadlowski, Ph. et al. (2004). "The rates of hypernovae and gamma-ray bursts: implications for their progenitors". Astrophysical Journal Letters 607: L17. doi:10.1086/421347. Bibcode: 2004ApJ...607L..17P.
- ↑ Melott A.L. et al. (2004). "Did a gamma-ray burst initiate the late ஓர்டோவிசியக் காலம் mass extinction?". International Journal of Astrobiology 3: 55–61. doi:10.1017/S1473550404001910.
- ↑ Schilling, Govert (2002). Flash! The hunt for the biggest explosions in the universe. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-80053-6.
- ↑ Klebesadel R.W; Strong I.B. and Olson R.A. 1973. Observations of Gamma-ray bursts of cosmic origin. Astrophysical Journal (Letters) 182, L85 [1]
வெளி இணைப்புகள்
தொகு- காமா கதிர் வீச்சுக்கள் பிரபஞ்சத்தில் ஏலியன் வாழ்க்கையைத் துவம்சம் செய்து வருகின்றதாம்! பரணிடப்பட்டது 2015-02-03 at the வந்தவழி இயந்திரம்