வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் வானியல் வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்பு கட்டுரை என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் வானியல் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு பக்கங்களைப் பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவமைப்பு
{{வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/வடிவமைப்பு
  |படிமம்        =
  |படிம தலைப்பு =
  |உரை         =
  |இணைப்பு     =
  |முகப்பு       = வலைவாசல்:வானியல்/சிறப்புக் கட்டுரைகள்
}}

<noinclude>
[[பகுப்பு:சிறப்புக் கட்டுரை - வானியல் வலைவாசல்‎]]
</noinclude>

காப்பகம்

தொகு

வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/1

 
சூரிய குடும்பத்தின் கிரகங்கள் மற்றும் குள்ள கிரகங்கள். அளவுகள் அளவிடைப்படி உள்ளன.

'''சூரியக் குடும்பம்''' (Solar System) அல்லது கதிரவன் குடும்பம் என்பது சூரியனையும் சூரியனின் ஈர்ப்புவிசையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பருப்பொருட்களையும் உள்ளடக்கியது.கதிரவனைச் சுற்றி வரும் எட்டு கோள்களையும், இக்கோள்களின் 162 (இது வரை தெரிந்த கணக்கெடுப்பின் படி) துணைக்கோள்களையும், மூன்று குறுங்கோள்களையும், அக் குறுங்கோள்களின் ஐந்து துணைக்கோள்களையும் மற்றும் ஆயிரக்கணக்கான பிற பொருள்களையும் உள்ளடக்கியது. பிற பொருட்கள், வால்வெள்ளி, எரிகற்கள், விண்கற்கள் மற்றும் நாள்மீன்களுக்கு இடையே உள்ள விண்துகள்கள் ஆகும்.


வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/2

 
பல்வேறு பிரகாசமான வாயு மற்றும் தூசிச் சீறல்கள் தெரிகின்றன.

வால்வெள்ளி (Comet) (தமிழக வழக்கில்:வால்நட்சத்திரம்) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "dirty snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு, மெத்தேன் மற்றும் நீர் என்பவற்றுடன் தூசி, கனிம (aggregates) என்பனவும் கலந்து உருவானவை.


வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/3

நிலா (நிலவு, அம்புலி, திங்கள், மதி, சந்திரன் என்று பலவாறு கூறப்படும்) (இலத்தீன்: luna) எனப்படுவது பூமிக்கான ஒரேயொரு இயற்கைத் துணைக்கோளும் சூரியக் குடும்பத்திலுள்ள ஐந்தாவது பெரிய துணைக்கோளும் ஆகும். இரவிலே குளிர்வாக ஒளிதரும் இக்கோளத்தை வானிலே காணலாம். இது பூமியின் ஒரே இயற்கையான துணைக்கோள். இது பூமியைச் சுற்றி வர சராசரி 29.32 நாட்கள் ஆகின்றது. இந்த நிலா பூமியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றிவருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். பூமிக்கும் நிலாவுக்கும் சராசரி தொலைவு 384, 403 கி.மீ. ஆகும். புவியின் ஈர்ப்பைக் காட்டிலும் நிலவின் ஈர்ப்பு ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை அதிகமாக இருப்பதால் புவியில் ஒரு பொருளின் விடுபடு வேகம் (escape speed) அதிகம்; மேலும் புவிப்பரப்பு வெப்பநிலையும் அதிகம் இல்லை. இவ்விரு காரணங்களால் காற்று மூலக்கூறுகள் புவியின் ஈர்ப்பை விட்டு விடுபட முடியாது. சுருங்கக்கூறின், பூமியின் ஈர்ப்பு விசை வளி மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது.



வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/4

விண்வீழ்கல் (meteorite) என்பது ஒப்பீட்டளவில் சிறிய, பூமிக்கு வெளியிலிருந்து, பூமியின் மேற்பரப்பை அடையும் பொருளாகும். விண்வெளியில் இருக்கும்போது இது விண்கல் என அழைக்கப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பில்லியன் கணக்கில் சிறு கற்களும், உலோகப் பாறைகளும் நீந்திக் கொண்டிருக்கின்றன. இந்த விண்கற்கள் பூமியின் காற்று மண்டலத்திற் கூடாக, அதிவேகத்தில் வந்தடையும் போது, வளி மண்டலத்தின் உராய்வு வெப்பத்தினால் எரிந்து, ஒளிரும் பாதையை ஏற்படுத்துகின்றன. அப்பொழுது இவை எரிகல் அல்லது எரி நட்சத்திரம் (எரி வெள்ளி) என அழைக்கப்படுகின்றன. இவற்றில் சில முழுவதுமாக எரிந்து வளி மண்டலத்துடன் கலந்து விடுகின்றன. சில பூமியிலே விழுந்து, பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளன.



வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/5

தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration அல்லது NASA) எனப்படுவது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பாகும். இது அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மற்றும் வானூர்தியியல், விண்ணூர்தியியல் ஆராய்ச்சிகளின் கட்டுப்பாட்டு மற்றும் நிர்வாக அமைப்பாகும்.ஜூலை 29, 1958.இது 1958 ஜூலை 29 அன்று தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளிச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டது; இது இதற்கு முன் வானூர்தியியல் ஆராய்ச்சிகளுக்கா இருந்த, தேசிய வானூர்தியியல் ஆலோசனை செயற்குழுவைக் (நாகா) கலைத்து அதன் வடிவில் நிறுவப்பட்டது.



வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/6

சூரிய மண்டலத்திற்கு அப்பால், தூசு, ஐதரசன், ஹீலியம் மற்றும் ஏற்றமடைந்த வாயுக்களால் ஆன முகிலே நெபுலா (Nebula) ஆகும். வழமையாக நெபுலாக்களில் புதிய பலநட்சத்திரங்கள் உருவாகும். உதாரணமாக கழுகு நெபுலாவைக் குறிப்பிடலாம். இப்படியான அண்டவெளி முகில்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து நட்சத்திரங்களை உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத மீதி முகில் பிரதேசங்கள் விண்மீன்களின் ஈர்ப்பால் ஒன்றிணைந்து கோள்கள் உருவாகின்றன.



வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/7

ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகுஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு.

வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் (தூரங்கள்) மிகவும் பிரம்மாண்டமானவை. விண்மீன்கள், விண்மீன்களின் கூட்டங்களாகிய விண்மீன் திரள்கள் (நாள்மீன்பேரடைகள்) மற்றும் அண்டவெளியில் பரந்துகிடக்கும் விண்பொருட்களிடைத் தொலைவுகளை அளவிட மீட்டர், கிலோமீட்டர் போன்ற சாதாரண நீள அலகுகள் போதாது. இதனாலேயே மிக மிகப் பெரும் தொலைவுகளைக் குறிப்பதற்காக ஒளியாண்டு எனப்படும் புதிய நீள அலகு உருவாக்கப்பட்டது. ஒளியாண்டு என்பது ஒரு கால அளவல்ல.



வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/8

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. மேர்கூரித் திட்டம், ஜெமினித் திட்டம் ஆகிய வற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, ஐசனோவருடைய நிர்வாகத்தில், மேர்க்கூரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது.



வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/9

ஞாயிறு அல்லது சூரியன் (Sun) மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, ஞாயிற்று மண்டலத்தின் மையத்தில் உள்ள, ஞாயிற்று மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் ஞாயிற்றைச் சுற்றி வருகின்றன.ஞாயிற்றின் எடை மட்டுமே பரிதி மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . பரிதிக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். இத்தொலைவை ஒளி சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் பரிதி ஆற்றலேயாகும். ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் பரிதி ஆற்றல், பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும். மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் பரிதியைச் சார்ந்தே உள்ளன.



வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/10

பேரடை என்றும் விண்மீன் பேரடை என்றும் விண்மீன் திரள் (Galaxy) என்றும் குறிக்கப்பெறுவது பெரும் விண்மீன் கூட்டம் ஆகும். ஒரு சராசரி பேரடையில் 10 மில்லியன் முதல் ஒரு டிரில்லியன் (107 முதல் 1012) வரையான எண்ணிக்கையில் விண்மீன்கள் இருக்கும். இன்று கணக்கிடக்கூடிய பேரடைகள் நூறு பில்லியனுக்கும் (1011) மேல் இருக்கும். ஒவ்வொரு நாள்மீன் பேரடையும் சில ஆயிரம் முதல் பல நூறாயிரம் ஒளியாண்டுகள் அளவு விட்டம் கொண்டிருக்கும். பேரடைகளுக்கு இடையேயான வெளியில் மிகக்குறைவான அளவிலேதான் அணுப்பொருள்கள் இருக்கும். ஒரு கன மீட்டரில் ஓர் அணு என்னும் விதமாக மிக அருகியே விண்துகள்கள் இருக்கும்.



பரிந்துரைகள்

தொகு