வலைவாசல்:வானியல்/தேர்வுக் கட்டுரை/2
வால்வெள்ளி (Comet) (தமிழக வழக்கில்:வால்நட்சத்திரம்) சிறுகோளை ஒத்த அளவுள்ள, ஒப்பீட்டளவில் சிறியதொரு விண்பொருளாகும். எனினும் இது பெரும்பாலும் பனிக்கட்டியாலானது. நமது சூரியக் குடும்பத்தில், வால்வெள்ளிகளின் சுற்றுப்பாதை, புளூட்டோவையும் தாண்டிச் செல்கிறது. சூரியக் குடும்பத்தின் உட்பகுதிக்குள் வரும் வால்வெள்ளிகளுள் பெரும்பாலானவை மிக நீண்ட நீள்வளையச் சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளன. "dirty snowballs," என்று பெரும்பாலும் வர்ணிக்கப்படும் வால்வெள்ளிகள், பெருமளவு உறைந்த காபனீரொட்சைட்டு, மெத்தேன் மற்றும் நீர் என்பவற்றுடன் தூசி, கனிம (aggregates) என்பனவும் கலந்து உருவானவை.