வாருங்கள்!

வாருங்கள், Ksmuthukrishnan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில் 17:57, 18 நவம்பர் 2010 (UTC)Reply

Images தொகு

Hi, you do not need to copy images from Wikimedia Commons to this wiki. You can use them directly with [[File:Malacca 1630.jpg]] Nakor 02:55, 19 நவம்பர் 2010 (UTC)Reply

பில் கேட்ஸ் தொகு

முத்துகிருஷ்ணன்,

நீங்கள் ஏற்றியுள்ள பில் கேட்ஸ் பிசினஸ் மர்மம் என்ற கட்டுரை கலைகளஞ்சியத்துக்கு ஏற்புடையது அல்ல. செய்தி கட்டுரை போன்றிருப்பதால் வலைத்தளம்/ இதழ்களுக்கு மட்டுமே பொருத்தமானது. எனவே அதனை நீக்குகிறேன். விக்கியில் தகவல் கட்டுரைகளை மட்டுமே இடுகிறோம். விளக்கக் கட்டுரைகள், செய்திக் கட்டுரைகள், “ஏன் எப்படி” கட்டுரைகள் ஆகியவற்றை இடுவதில்லை. ஆனால் அக்கட்டுரையிலிருக்கும் பல தகவல்கள் பில் கேட்ஸ் கட்டுரையில் இடம் பெற பொருத்தமானவை (வெறும் தகவல்கள் மட்டும்). நீங்கள் அவற்றை மட்டும் பில் கேட்ஸ் கட்டுரையில் இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.--சோடாபாட்டில் 04:11, 19 நவம்பர் 2010 (UTC)Reply

மேலும் காமன்சில் படங்கள் இருந்தால், அவற்றை மீண்டும் இங்கு பதிவேற்றத் தேவையில்லை. அப்படியே இங்கு பயன்படுத்தலாம்.--சோடாபாட்டில் 04:11, 19 நவம்பர் 2010 (UTC)Reply

மேலும் விக்கிநடைக்கேற்றவாறு தங்கள் மலாக்கா கட்டுரையை சிறிது மாற்றி அமைத்துள்ளேன். விக்கி நடையில், மிகைச் சொற்கள் (”இவர் அரசியல் சாணக்கியத்தை நன்றாகத் தெரிந்து வைத்து இருந்தார்”) , ஆசிரியர் விளக்க நடை (”என்றும் நாம் சொல்லலாம்”, “இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்”, “அவருடைய நெஞ்சுக்குள் ஆழமாய்ப் பதிந்தது என்றே சொல்ல வேண்டும்”), போன்றவை இடம் பெறுவதில்லை. விக்கி நடைக்கையேடு இங்கு உள்ளது--சோடாபாட்டில் 04:31, 19 நவம்பர் 2010 (UTC)Reply

பாராட்டுக்கள் தொகு

வணக்கம் முத்துகிருட்டிணன், விக்கியில் உங்கள் பங்களிப்பு கன்டு மிக்க மகிழ்ச்சி. உங்கள் மலாக்கா கட்டுரை இங்குள்ள இன்பத் தமிழ் ஒலி வானொலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாகப் படிக்கப்ப்ட்டது. வாழ்த்துக்கள். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:18, 6 திசம்பர் 2010 (UTC)Reply

இது 24 மணிநேர உள்ளூர் வானொலி. சிட்னி, மெல்பேர்ண், கான்பராவில் மட்டுமே கேட்க முடியும். இணையத்திலோ அல்லது சிற்றலையிலோ ஒலிபரப்பப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 12:20, 6 திசம்பர் 2010 (UTC)Reply

மலாக்கா முத்துகிருட்டிணன், விக்கியில் சிறப்பான பங்களிப்புகள் செய்து வருகிறீர்கள் பாராட்டுகள். இன்பத் தமிழ் ஒலி வானொலியில் உங்கள் கட்டுரை படிக்கப்பட்டதுக்கு என் வாழ்த்துகள். --குறும்பன் 02:09, 8 திசம்பர் 2010 (UTC)Reply

வணக்கம் குறும்பன் அவர்களே, தங்களுடைய வாழ்த்துச் செய்திகள் மிகவும் உற்சாகம் அளிக்கின்றன. நன்றி ஐயா. தொடர்ந்து செயல் படுவோம். இப்போது மலேசியாவின் பேராக் மாநிலப் பக்கத்தில் தொகுப்புகள் நடைபெறுகின்றன. http://ksmuthukrishnan.blogspot.com/ எனும் வலைப் பக்கமும் வைத்துள்ளேன். தங்களின் ஆதரவுக்கு மீண்டும் நன்றிகள். --ksmuthukrishnan 03:24, 8 திசம்பர் 2010 (UTC)Reply


மீண்டும் வருக தொகு

சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி :-)--சோடாபாட்டில்உரையாடுக 19:07, 20 சனவரி 2011 (UTC)Reply

நன்றி தொகு

தங்களின் இனிய வரவேற்பிற்கு நன்றி.--ksmuthukrishnan 19:14, 20 சனவரி 2011 (UTC)Reply

வணக்கம் முத்துக்கிருஷ்ணன். பேராக் கட்டுரையை விரிவுபடுத்தி எழுதி வருவதற்கு பாராட்டுகள். உங்கள் வலைப்பதிவு பார்த்தேன். மிக அருமையான தகவல்களைத் தருகிறீர்கள். நல்ல முயற்சி. வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 10:18, 1 மார்ச் 2011 (UTC)

பேராக் கட்டுரை தொகு

தங்களின் கருத்துகளுக்கு நன்றி. பேராக் மாநிலக் கட்டுரையை விரிவாக எழுதி வருகிறேன். இந்த மாநிலத்தில் 20 ஆண்டு காலம் வாழ்ந்து வருகிறேன். அதனால் அங்கே என்ன நடக்கிறது என்பது ஓரளவுக்கு அறியப் பட்ட விஷயம். --ksmuthukrishnan 01:49, 2 மார்ச் 2011 (UTC)

படங்கள் தொகு

வணக்கம் ஐயா,

நீங்கள் பதிவேற்றும் படங்கள் நீங்கள் எடுத்தவையாக இருந்தால் மட்டும் {{GFDL}} என்ற பதிப்புரிமை வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள். நீங்கள் எடுக்காதவற்றுக்கு இதனை இட இயலாது. விக்கிப்பீடியா அமெரிக்க பதிப்புரிம விதிகளைப் பின்பற்றி செயல்படுவதால், சற்று கடுமையான பதிப்புரிமை விதிகளைக் கொண்டுள்ளது. நீங்கள் எடுக்காத மற்ற படங்களைப் பதிவேற்றினால் அவற்றின் மூலம் (வலைத்தளம்/புத்தகம்) போன்றவற்றைக் குறிப்பிடுங்கள். அவற்றுக்குத் தேவையான நியாயப் பயன்பாட்டுக் காரணங்களையும், தேவையான பதிப்புரிமை வார்ப்புருக்களையும் நான் இணைத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:06, 30 ஏப்ரல் 2011 (UTC)

பதிவேற்றும் படங்கள் தொகு

தங்கள் கருத்திற்கு நன்றி. எதிர்வரும் காலங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்கின்றேன். நன்றி.--ksmuthukrishnan 15:56, 30 ஏப்ரல் 2011 (UTC)

பாராட்டுகள் தொகு

முத்துகிருஷ்ணன் அவர்களே, சிபில் கார்த்திகேசு கட்டுரையைத் துவங்கியதற்கு நன்றி. தமிழர்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான ஆளுமை. பாராட்டுகளும் நன்றியும்.--சிவக்குமார் \பேச்சு 14:52, 5 மே 2011 (UTC)Reply

சிவக்குமார் அவர்களுக்கு தொகு

நன்றி. தங்களுடைய கருத்துகள் நலம் பயக்கின்றன. நல்ல நல்லக் கருத்துகள். புதிதாக ஒரு கட்டுரையை எழுதுகின்றேன்.மீண்டும் சந்திப்போம்.--ksmuthukrishnan 16:51, 5 மே 2011 (UTC)

மகிழ்ச்சி தொகு

தமிழர்கள் இலட்சக்கணக்கில் வாழும் மலேசியா, சிங்கப்பூரில் இருந்து குறிப்பிடத்தக்க தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் இல்லை என்ற குறை இருந்து வந்தது. எனவே, உங்கள் பங்களிப்புகளைக் கண்டு மிக மகிழ்ந்தேன். நூறாண்டு காலத்துக்கு மேலும் இப்பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழரின் வாழ்க்கை, மலேசியா, அதன் அருகமைப் பகுதிகள் பற்றிய விவரங்கள் தமிழில் பதியப்பட வேண்டும். தொடர்ந்து உங்கள் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். நன்றி--இரவி 01:47, 8 மே 2011 (UTC)Reply

தற்போது, சிபில் கார்த்திகேசு பற்றிய தங்கள் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்புப் பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.--இரவி 16:33, 8 மே 2011 (UTC)Reply

நன்றி சிவக்குமார் தொகு

வணக்கம் சிவக்குமார், சிபில் கார்த்திகேசுவின் வரலாற்றை விக்கிபீடியாவில் முதன்மை ஆகியதற்கு நன்றி. மறைந்தும் மறையாத ஒரு ஜீவனைப் பற்றிய ஒரு வரலாறு. இன்னும் சில ஆத்மாக்களைப் பற்றி எழுதுகின்றேன். உங்களைப் போல நல்ல மனிதர்களிடம் இருந்து நட்பின் இலக்கணத்தின் அரிச்சுவடிகள் தேவை. அடுத்து நேதாஜி அவர்களுடன் பர்மிய மரண சயாம் பாதையில் போராடிய ஆதி. நாகப்பன் அம்மையார் வரலாறு வருகிறது. நன்றி.--ksmuthukrishnan 17:00, 8 மே 2011 (UTC)

புந்தோங்(கு) கட்டுரையின் தலைப்பு தொகு

பேச்சு:புந்தோங் - இங்கு கட்டுரையின் தலைப்பை மாற்றும் எனது பரிந்துரையைப் பற்றி உங்கள் கருத்தை இடுமாறு வேண்டுகிறேன். -- சுந்தர் \பேச்சு 11:26, 20 மே 2011 (UTC)Reply

புந்தோங்(கு) / புந்தோங் தொகு

தங்களின் கருத்திற்கு நன்றி. தமிழ் எழுத்துகளில் ஈற்று எழுத்து பொதுவாக ‘ங்’ ‘ஞ்’ ‘ந்’ என்று முடிவு அடையா. தாங்கள் சொலவது போல ‘கு’ எனும் உயிர்மெய் சேர்ப்பது தான் முறை. சில சமயங்களில் மலேசியாவில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றும் போது அது எந்த ஊர் என்று தெரியாமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. மலேசியாவில் பல ஊர்களின் பெயர்கள் ‘ங்’ எனும் எழுத்தில் முடிவடைகின்றன.

எ.கா: பகாங், புலாவ் சாராங், தஞ்சோங் காராங், குனோங் மெராங், ரூமா வாரோங், பாஜு கூரோங், தாரோங், பெக்கான் பெண்டாங், செங்காங் கிராமம், என்று நிறைய சொற்கள் இருக்கின்றன. இவற்றை நாம் மாற்றினால் மலேசியர்களுக்கே தெரியாத ஊராக மாறி விடலாம் என்று ஐயப் படுகிறேன். புந்தோங் அல்லது குந்தோங் எனும் ஊரின் பெயர் 200 ஆண்டுகளாக அந்தத் தொனியில் அழைக்கப் பட்டு வருகிறது.

மலேசியர்கள் எப்படி அழைக்கிறார்களோ அப்படியே நானும் பயன் படுத்தினேன். மாற்றம் செய்தால் பெயர் தடுமாற்றம் ஏற்படலாம் என்பது நம்முடைய தாழ்மையான கருத்து. தங்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.--ksmuthukrishnan 06:25, 23 மே 2011 (UTC)

ஈப்போ தொகு

முத்துகிருஷ்ணன், ஈப்போ கட்டுரை முதற்பக்கத்தில் இவ்வாரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் உள்ள குறிப்பிடத்தக்க நபர்கள் பகுதியில் உள்ள மூவர் பற்றிய குறிப்புகளையும் தனித்தனிக் கட்டுரைகளாக்கி (குறுங்கட்டுரைகளானாலும் பரவாயில்லை) அவர்களின் பெயர்களை மட்டும் ஈப்போ கட்டுரையில் பட்டியலிடுவது நல்லது.--Kanags \உரையாடுக 07:06, 29 மே 2011 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் தொகு

வணக்கம் முத்துக்கிருஷ்ணன்,

தங்களைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு ஒன்றை விக்கியின் முதற் பக்கத்தில் காட்சிப்படுத்த விரும்புகிறோம். பின் வரும் இணைப்பில் உங்களைப் பற்றிய குறிப்புகள் + புகைப்படத்தை இணைக்க வேண்டுகிறேன்

 

மலாக்கா முத்துக்கிருஷ்ணன் மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர். கடந்த 40 ஆண்டுகளாக எழுதி வருகின்றார். பல ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகவும் பின் கணினித் துறையிலும் பணியாற்றியவர். தற்சமயம் இவர் மலேசிய நண்பன் நாளிதழின் ‘கணினியும் நீங்களும்’, ‘மாணவர் சோலை’ எனும் பகுதிகளுக்கு பொறுப்பாசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2009 ஆம் ஆண்டு தமிழ் விக்கிபீடியாவில் பங்களிக்கத் தொடங்கினார். மலேசிய நகரங்கள், நபர்கள், அமைப்புகள், வரலாறு, அரசியல், பள்ளிகள் ஆகியவற்றைவைப் பற்றி ஏறக்குறைய 150 கட்டுரைகளை எழுதியுள்ளார். சிபில் கார்த்திகேசு, ஈப்போ, பரமேசுவரா, கம்பார் நகரம், பேராக், தேசிய முன்னணி (மலேசியா). மலேசிய தமிழ்ப்பள்ளிகள், சுங்கை பட்டாணி போன்றவை அவற்றுள் சில. --சோடாபாட்டில்உரையாடுக 04:22, 13 சூன் 2011 (UTC)Reply

அறிமுகக் குறிப்பு தொகு

வணக்கம் சோடாபாட்டில் அவர்களே,

விக்கியின் முதல் பக்கத்தில் காட்சிப் படுத்தும் அளவிற்கு அடியேன் இன்னும் பங்களிப்புகள் செய்யவில்லை என்பது என்னுடைய தாழ்மையான எண்ணங்கள். கருத்துகளும் கூட. தவறாக நினைக்க வேண்டாம் அன்பரே.

உங்களுடைய உணர்வுகளை என்னால் கிரகித்துக் கொள்ள முடிகின்றது. ஒரு 23 கட்டுரைகளை எழுதியதற்காக என்னைப் பெரிது படுத்துவதில் எனக்கே உடன்பாடு இல்லை. 50 கட்டுரைகள் எழுதி பதித்த பிறகு அறிமுகம் செய்யுங்கள். இப்போது வேண்டாம் அன்பரே.

இன்னும் 27 கட்டுரைகள் எழுதிய பிறகு என்னை அறிமுகம் செய்யுங்கள். நன்றி.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்.

--மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 12:05, 13 சூன் 2011 (UTC)Reply

சரி ஐயா, இன்னும் 27 முடிந்த பின்னர் மீண்டும் வந்து உங்களை நச்சரிக்கிறேன் :-)--சோடாபாட்டில்உரையாடுக 12:10, 13 சூன் 2011 (UTC)Reply
அறிமுகக் குறிப்பை அளித்ததற்கு நன்றி முத்துக்கிருஷ்ணன். முதல் பக்க பகுதி அளவுக்கு ஏற்ப சுருக்கியுள்ளேன். டிசம்பர் 4 முதல் இரு வாரங்கள் முதல் பக்கத்தில் காட்சிப்படுத்தப்படும்.--சோடாபாட்டில்உரையாடுக 18:57, 16 நவம்பர் 2011 (UTC)Reply

ஜெலாப்பாங் தொகு

மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களை அறிமுகம் செய்வது. மலேசியாவில் தமிழர்கள் 12 நாடாளுமன்றத் தொகுதிகளின் உறுப்பினர்களாக உள்ளனர். ஆளும் கட்சியில் நால்வர். எதிர்க் கட்சியில் 9 பேர். அவர்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஒரு முழு அமைச்சர். ஐந்து துணை அமைச்சர்கள். மலேசியாவில் 116 தொகுதிகளின் வெற்றித் தோல்விகளின் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும் துருப்புச் சீட்டுகளாக மலேசியத் தமிழர்கள் விளங்குகின்றார்கள். மலேசியக் கட்டுரைகளைப் பற்றி விக்கிப்பீடியாவின் கருத்துகளை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ளது.

நன்றி.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 12:55, 13 சூன் 2011 (UTC)Reply

நபர்கள் பற்றிய கட்டுரைகள் தொகு

முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு, நல்ல பல ஆக்கங்களை விக்கிப்பீடியாவில் தருகிறீர்கள். நபர்கள் பற்றிய கட்டுரைகளை எழுதும் போது கவனிக்கத்தக்கவை சில: நபர்கள் பற்றிய தகவல்களை மட்டுமே தாருங்கள். அவர்களின் ஆக்கங்களைப் பட்டியல் படுத்தினால் போதுமானது. உ+ம்: அவர்கள் எழுதிய கவிதைகளை இங்கு வெளியிடுவது தேவையற்றது. அன்வரின் கட்டுரையில் சில மாற்றங்களைச் செய்துள்ளேன். பாருங்கள். அவரின் கவிதைகள் இணையங்களில் வெளி வந்திருந்தால் அவற்றின் இணைப்புகளைத் தாருங்கள். மேலும், தலைப்பிலும் விக்கி நடைமுறைக்கேற்ப மாற்றம் செய்திருக்கிறேன். மற்றும் படி, உங்கள் ஆக்கங்கள் அனைத்தும் அருமை. மலேசியத் தமிழ் அரசியல்வாதிகளை அறிமுகம் செய்யுங்கள். இப்போதுள்ள அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், முன்னாள் அரசியல்வாதிகளைப் பற்றியும் கட்டுரைகள் தாருங்கள். புன்னியாமீன் மலேசிய எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது கட்டுரைகளையும் பார்த்து மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், நீங்கள் இரண்டு பயனர் பெயர்களில் விக்கிப்பீடியாவில் பதிந்திருக்கிறீர்கள் போல் தெரிகிறது. ஒரு பயனர் பெயரை பயன்படுத்துவதே நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 00:54, 25 சூன் 2011 (UTC)Reply

பதக்கம் தொகு

  சிறப்புப் பதக்கம்
மலேசியத் தலைப்புகள் குறிந்த விரிவான, சுவையான கட்டுரைகளை எழுதி அரும்பணி ஆற்றிவரும் தங்களுக்கு இப்பதக்கத்தை வழங்குகிறேன். சோடாபாட்டில்உரையாடுக 09:57, 25 சூன் 2011 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

சிறப்புப் பதக்கம் தொகு

அன்பு சகோதரர்களே, உங்களுடைய அன்பான வாழ்த்துகளையும் அழகான பதக்கத்தையும் பெற்றுக் கொள்வதில் பெருமை கொள்கின்றேன்.

முடிந்தவரை நல்ல தரமான படைப்புகளைப் படைப்போம். மலேசியாவை உலகத்திற்கு அறிமுகம் செய்வோம். அந்த அறிமுகத்தில் ஆக்கபூர்வமான படைப்புகளாக இருக்க வேண்டும். அதுதான் நம்முடைய இலக்கு. மின்னல் எப்.எம். முடித்துவிட்டு மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பக்கம் பார்வையைத் திருப்புகின்றேன். உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 12:25, 25 சூன் 2011 (UTC)Reply

மின்னல் எப்.எம் தொகு

மலேசியா பற்றிய தங்கள் கட்டுரைகள் மிகச் சிறப்பாக உள்ளன. மின்னல் எப். எம் கட்டுரையைப் படித்த நேரத்தில் மின்னல் எப். எம் வானெலி நிலையத்துக்கு நான் சென்ற போது ஏற்பட்ட நினைவுகளை மீட்டுக் கொள்ள உதவியது. மின்னல் எப். எம். அறிவிப்பாளர்கள், ஊழியர்கள் விருந்தினரை வரவேற்பதில் உயர்ந்த உள்ளம் கொண்டோர். மலேசிய, இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய கட்டுரையைத் தொடர்ந்தும் எழுதுங்கள் ஐயா. தங்கள் இலக்கிய, விக்கிப்பணி குறித்த தகவல்களை விரைவில் இலங்கை ஊடகங்களில் நான் எழுதுவேன் --P.M.Puniyameen 12:53, 28 சூன் 2011 (UTC)Reply


அன்புள்ள சகோதரர்கள் சோடாபாட்டில், கனகு அவர்களுக்கு வணக்கம். மின்னல் எப்.எம் கட்டுரையைப் பற்றிய உங்களின் கருத்துகளைத் தெரிந்து கொள்ள விருப்பம் கொள்கிறேன். அடுத்து ’மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்’. நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 11:56, 28 சூன் 2011 (UTC)Reply

மலேசியா பற்றிய கட்டுரைகள் தொகு

நன்றி. புன்னியாமீன் அவர்களே, தங்களை நேரடியாகச் சந்திக்க முடியவில்லையே என்பது ஓர் ஆதங்கம். நீங்கள் செம்பருத்தி அலுவலகத்திற்கு வந்த போது நான் உங்களைத் தேடி மலாயா பல்கலைக்கழகத்திற்குச் சென்றேன். சந்திக்க முடியாமல் போய்விட்டது. இரண்டாவது முறையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அண்மையில் மலேசியத் தொலைக்காட்சியின் ’வசந்தம்’ நிகழ்ச்சியில் நேரலைப் பேட்டிக்கு என்னை அழைத்து இருந்தார்கள். அப்போதே மின்னல் எப்.எம் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆக, எழுதி முடித்தும் விட்டேன். அடுத்து மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய கட்டுரையை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 14:26, 28 சூன் 2011 (UTC)Reply

முத்துக்கிருஷ்ணன், உங்கள் வசந்தம் பேட்டி நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்திருக்கிறீர்களா? யூடியூப் போன்ற இணையத்தில் எங்காவது சேர்த்து வைத்திருக்கிறீர்களா?--Kanags \உரையாடுக 10:06, 30 சூன் 2011 (UTC)Reply

வசந்தம் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகு

வணக்கம் கனகு அவர்களே, அந்த நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை. இருப்பினும் மலேசியத் தொலைக்காட்சியுடன் தொடர்பு கொண்டு பெற முயற்சி செய்கிறேன். அதில் ஒரு சில படக்காட்சிகளைத் தங்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 12:39, 30 சூன் 2011 (UTC)Reply

வசந்தம் படத் தொகுப்பு தொகு

இப்படங்களை என் மூத்த மகன் முருகரசன் அவருடைய மனைவி நிவேதா (மூத்த மருமகள்) எடுத்துக் கொடுத்தார்கள். மலாக்கா முத்துக்கிருஷ்ணன் --ksmuthukrishnan 14:18, 30 சூன் 2011 (UTC)Reply

கலியபெருமாள் தொகு

முத்துக்கிருஷ்ணன், கா. கலியபெருமாள் அவர்கள் இறந்த செய்தி சுப.நற்குணனின் முகநூலில் இருந்து இப்போது தான் அறிந்தேன். அவரது கட்டுரையையும் இற்றைப்படுத்தியிருக்கிறேன். அவரைப் பற்றிய மேலதிக தகவல்கள் உங்களிடம் இருந்தால் அக்கட்டுரையில் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 22:49, 8 சூலை 2011 (UTC)Reply

தமிழ்க்குயில் கலியபெருமாள் தொகு

தமிழ்க்குயில் கலியபெருமாள், மலேசியாவில் மூத்த தமிழ் அறிஞர். நேற்று இரவு 10.00 மணிக்கு அவருடைய இல்லத்திற்கு சென்று வந்தேன். ஒரு சகாப்தம் ஓய்வு பெறுகிறது.

அவரைப் பற்றிய விக்கிப்பீடியா பக்கத்தை இற்றை செய்கிறேன். தயவு செயது விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் காட்சிப் படுத்துங்கள். அதுதான் மலேசிய இந்தியர்களுக்கு தாங்கள் செய்யும் நன்றிக்கடன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்-ksmuthukrishnan 23:17, 8 சூலை 2011 (UTC)Reply

எனது ஆழ்ந்த அநுதாபங்கள். முன்பக்கத்தில் செய்தி தந்திருக்கிறேன். அவரது படம் உங்களிடம் இருந்தால் தரவேற்றி கட்டுரையில் சேருங்கள். முதற்பக்கத்திலும் காட்சிப் படுத்துகிறேன். நன்றி.--Kanags \உரையாடுக 23:22, 8 சூலை 2011 (UTC)Reply

மன(த்)தின் இறுக்கங்கள் தொகு

பெரியவர் தமிழ்க்குயிலார் இறந்த நாளில் ஒரு தமிழ்ப் பெண் டத்தோ அம்பிகா சீனிவாசன்[1] [2] கைது செய்யப் பட்டார். ஒரு சில மணி நேரங்களில் விடுதலையானார். இப்போதைக்கு உலகமே அவரைப் பார்க்கின்றது.

ஒரு நாட்டையே தலைகீழாகப் புரட்டிப் போடும் ஆற்றல் மிக்கவர். இவரின் பின்னால் இருந்த 1000 க்கும் மேற்பட்ட மலாய், சீனர்கள், இந்தியர்கள் கைது செய்ய்ப் பட்டனர்.

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்-ksmuthukrishnan 13:39, 9 சூலை 2011 (UTC)Reply

Invite to WikiConference India 2011 தொகு

 

Hi Ksmuthukrishnan,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

என் மனைவி ருக்குமணியும் கலந்து கொள்ள விருப்பம். செலவுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

மலேசியாவைப் பற்றி தொகு

வணக்கம் முத்துக்கிருஷ்ணன் அவர்களே!

ஒரு வேண்டுகோள்

மலேசியா கட்டுரையில் தகவல் செறிவு குறைவெனக் கருதுகிறேன். எனவே விரிவாக்கி உதவவும். மலேசியா பற்றியும் அங்குள்ள தமிழர் பற்றியும் அறிய ஆவல்.--Prash 11:22, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அன்பு பிராஷ் அவர்களுக்கு தொகு

வணக்கம். தஞ்சோங் மாலிம் கட்டுரை எப்படி எழுதப் படுகின்றது என்பதைப் பற்றி என்னுடைய மாணவர் மருதையா அவர்களிடம் விளக்கம் சொல்லி வருகின்றேன். அதைப் பெரிது படுத்த வேண்டாம். விக்கிப்பீடியாவில் ஓர் ஐம்பது கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். ஆக, அடிப்படை முறைகள் நமக்குத் தெரியும். நல்ல படியாக செய்து முடிப்போம். அதெல்லாம் சரி. நீங்கள் எங்கே இருந்து அழைக்கிறீர்கள். சில மாதங்களாக விக்கிப்பீடியாவை விட்டுப் பிரிந்து போன வேதனைகள் நெஞ்சத்தின் விளிம்பில் ஆடுகின்றன. பிறகு சந்திப்போம். வாழ்க வளமுடன். --ksmuthukrishnan 13:23, 8 செப்டெம்பர் 2011 (UTC)

மலேசியா கட்டுரை தொகு

தாங்கள் சொல்லிய பிறகு போய்ப் பார்த்தேன். நேரடி மொழி பெயர்ப்பாக இருக்கின்றது. மாற்றம் செய்வோம். --ksmuthukrishnan 13:26, 8 செப்டெம்பர் 2011 (UTC)

மலேசியா கட்டுரை மாற்றங்கள் தொகு

தயவு செய்து ஒரு வேண்டுகோள். யார் இந்தக் கட்டுரையை எழுதியவர் என்று தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். ஒரு நாட்டைப் பற்றி எழுதும் போது அந்த நாட்டின் பண்பு நலன்களை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும். மன்னருக்கு முதல் மரியாதை செய்ய வேண்டும். எங்கள் மன்னருக்கு மலேசியாவின் மூன்று சமூகங்களின் மரியாதைகள் எப்போதும் இருக்கும். அதனால் மனதில் லேசான வருத்தம். லேசான வலிகள். இன்னும் இரண்டு நாட்களில் மலேசியா கட்டுரையை முழுமைப் படுத்தி விடுகிறேன். --ksmuthukrishnan 14:08, 8 செப்டெம்பர் 2011 (UTC)

முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு வணக்கம், உங்களை மீண்டும் இங்கு காணுவது மகிழ்ச்சியைத் தருகிறது. அத்துடன் உங்கள் மாணவருக்கும் நீங்கள் பயிற்சி தருவது இரட்டிப்பு மகிழ்ச்சி. மலேசியா கட்டுரையைத் திருத்துவது நல்ல முயற்சி. தங்களின் ஏனைய கட்டுரைகலைப் போலவே இதனையும் சிறந்த கட்டுரையாக உருவாக்கித் தருவீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. கட்டுரைகளைத் தொகுத்தவர்கள் பெயர்கள், அவர்கள் செய்த மாற்றங்கள் அனைத்தும் அக்கட்டுரையின் வரலாற்றுப் பகுதியில் விபரமாகக் காணலாம். மலேசியா கட்டுரையின் வரலாறு: [3]. நன்றி.--Kanags \உரையாடுக 21:11, 8 செப்டெம்பர் 2011 (UTC)Reply

தஞ்சுங் மாலிம் கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் ஒரு கேள்வி இட்டிருக்கிறேன். பதிலளிப்பீர்களா?--பாஹிம் 13:27, 9 செப்டெம்பர் 2011 (UTC)Reply

அன்பு கனகா அவர்களுக்கு தொகு

வணக்கம். தங்களை மறுபடியும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. எப்படி இருக்கிறீர்கள் கனகா. தங்களின் மனைவி மக்களுக்கு என்னுடைய ஆசீர்வாதங்கள். இங்கே இரு விக்கிபீடியா எழுத்தாளர்களை உருவாக்கிக் கொண்டு இருக்கிறேன். சற்று இழுபறியான முயற்சி.

மலேசியா கட்டுரையைத் திருத்திக் கொண்டு இருக்கின்றேன். இன்னும் ஒன்று. வல்லினத்தில் நம்மைப் பற்றி ஓர் எழுத்தாளர் எழுதி இருக்கிறார். படித்து விட்டு கருத்தைச் சொலுங்கள். நன்றி. http://www.vallinam.com.my/issue32/thevarajan.html .--ksmuthukrishnan 02:00, 9 செப்டெம்பர் 2011 (UTC)

மேற்கோள்கள் தொகு

வணக்கம் முத்துகிருஷ்ணன், விக்கி கட்டுரைகளில் மேற்கோள்கள் தரப்படுவதற்கு ஒரு முறையுள்ளது. மரு. ஜெயக்குமார் தேவராஜ் கட்டுரையில் நீங்கள் தந்துள்ள மேற்கோள்களை விக்கி நடைமுறைக்கேற்ப மாற்றியுள்ளேன். பாருங்கள். மற்றும் தங்களைப் பற்றிய வல்லினம் கட்டுரை படித்து தங்களைப் பற்றிய முழு விபரமும் அறிந்தேன். உங்கள் சேவை மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள். எனது பெயர் சிறீதரன் கனகரத்தினம்.--Kanags \உரையாடுக 07:50, 12 அக்டோபர் 2011 (UTC)Reply

கம்பார் தொகு

வணக்கம் முத்துகிருஷ்ணன், கம்பார் நகரம் கட்டுரையில் உள்ள கம்பார் தமிழ்ப்பள்ளி, துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளை எடுத்துத் தனிக் கட்டுரைகள் ஆக்கலாம் என்பது எனது கருத்து.--Kanags உரையாடுக 09:36, 16 அக்டோபர் 2011 (UTC)Reply

கம்பார் தனிக்கட்டுரைகள் தொகு

கம்பார் நகரம் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சி படுத்தியமைக்கு மிகவும் நன்றி. கம்பார் தமிழ்ப்பள்ளி, துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளை தனித் தனிக் கட்டுரைகளாக எழுத முயற்சி செய்கிறேன். முதலில் மலேசிய மாநிலங்களை முடித்து விடலாம் என்று நினைக்கிறேன்.

என்னுடைய மாணவர் முத்தையா அவர்கள் மலேசியப் பழங்குடியினரைப் பற்றி எழுதி வருகிறார். அவருக்கு விக்கிப்பீடியா பங்களிப்புகள் பிடித்துப் போய் விட்டன. நிரைய எழுதுவார் என்று எதிர்பார்க்கலாம்.--Ksmuthukrishnan--ksmuthukrishnan 11:52, 16 அக்டோபர் 2011 (UTC)Reply

ஆங்கில விக்கி இணைப்புகள் தொகு

முத்துகிருஷ்ணன் அவர்களுக்கு, உங்கள் கட்டுரைகளில் இடையிடையே ஆங்கில விக்கிக்கட்டுரைகளுக்கு மேற்கோள் சுட்டியிருக்கிறீர்கள். அவ்வாறு தருவது நல்லதல்ல. வெளி இணைப்புகளை மேற்கோள் சுட்டுவதே நல்லது. ஆங்கில விக்கிக் கட்டுரைகளில் தந்திருக்கும் வெளி இணைப்பு மேற்கோள்களை இங்கும் சுட்டலாம். அதில் தவறில்லை. உங்கள் கட்டுரையில் நான் செய்துள்ள சில மாற்றங்கள்: [4]. நன்றி.--Kanags \உரையாடுக 13:07, 22 அக்டோபர் 2011 (UTC)Reply

லாருட் மாத்தாங் செலாமா தொகு

தங்களின் கருத்துகளுக்கு நன்றி. கவனத்தில் கொள்கின்றேன். அடுத்து மலேசியாவைப் பற்றி எந்தத் தலைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அரசியல் தலைவர்களில் முக்கியமானவர்கள் ஒரு சிலர் உள்ளனர். அல்லது மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை வரலாறு.. தங்களுக்கு என் தீபாவளி வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.--ksmuthukrishnan 13:15, 22 அக்டோபர் 2011 (UTC)Reply

வேறு எந்த நாட்டுக் கட்டுரைகளும் மலேசியா கட்டுரைகள் போல இவ்வளவு தெளிவாக, நிறைவாக, யாரும் எழுதவில்லை. அந்த வகையில் உங்கள் கட்டுரைகள் சிறப்புப் பெறுகின்றன. எனவே நீங்கள் உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில் எழுதுங்கள். மலேசியத் தமிழர் வரலாறு குறித்தும் எழுதுங்கள். உங்களிடமே விட்டு விடுகிறேன்:).--Kanags \உரையாடுக 13:25, 22 அக்டோபர் 2011 (UTC)Reply

மலேசியக் கட்டுரைகள் தொகு

அன்புள்ள கனகா, தங்களின் கருத்துகளுக்கு நன்றி. மலேசியா நண்பன் நாளிதழில் ‘கணினியும் நீங்களும்’ எனும் கேள்வி பதில் பகுதியை ஞாயிறு இதழில் வாராவாரம் நடத்தி வருகிறேன். சென்ற வாரக் கேள்வி பதிலில் விக்கிப்பீடியாவில் எழுதச் சொல்லி ஆர்வம் ஊட்டினேன். இளம் எழுத்தாளர்கள் நிறைய பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், அவர்கள், நாட்டின் வெவ்வேறு மூலை முடுக்குகளில் இருக்கிறார்கள். அவர்களை ஒன்று சேர்த்து ஈப்போ, ஜொகூர் பாரு, குவாந்தான் போன்ற இடங்களில் ஒரு நாள் விக்கிப்பீடியா பயிற்சியரங்கை நடத்தலாம் என்று கருதுகிறேன். ஏன் என்றால் இந்த இடங்களில் எனக்கு இலவசமாக மண்டபங்கள் கிடைக்கும். கோலாலம்பூரில் இலவசமாகக் கிடைக்காது. கோலாலம்பூரில் சாதாரண ஒரு மண்டபத்தின் வாடகை 2,000 மலேசிய ரிங்கிட்.

மேலும் ஒரு விருப்பம். விக்கிப்பீடியா பொறுப்பாளர்கள் ஒருவர் இங்கு வந்து அந்தப் பயிலரங்குகளில் கலந்து கொள்ள முடியுமா. பெரிய அளவில் விளம்பரம் செய்து விடுகிறேன். ஏனெனில், ஊடக வசதிகள் நம்மிடம் உள்ளன. மலேசியாவில் உள்ள தமிழ் நாழிதழ்களின் ஆசிரியர்கள் அனைவரும் என்னுடைய நெருங்கிய நபர்கள். வானொலி தொலைக்காட்சித் தலைவர்களும் பழக்கமானவர்கள். முடிந்தால் நீங்கள் அல்லது புன்னியாமீன் வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.ksmuthukrishnan--ksmuthukrishnan 22:18, 22 அக்டோபர் 2011 (UTC)Reply

உங்களது இந்த செய்தியை தற்போதுதான் கவனித்தேன். நான் தற்போது கோலாலம்பூரில் இருக்கிறேன். சென்னையில் தவி பட்டறை அனுபவங்கள் உண்டு. இங்கு வந்தவுடன் மலேசியாவில் அதுபோன்ற நிகழ்வுகள் நடத்த எண்ணியிருந்த வேலையில் எப்படி யாரை அணுகுவது என்று எண்ணியிருந்தேன். நீங்களே முன்வந்துள்ளதால் மிகவும் எளிதாகியுள்ளது. (நான் மலேசியாவிற்கு முதல்முறையாக வந்துள்ளேன். இரண்டு மாதங்களே ஆகியுள்ளது) டிசம்பர் அல்லது சனவரி மாதங்களில் சனி,ஞாயிறு அல்லது அரசு விடுமுறை நாட்களில் பட்டறைகளை நடத்தலாமா?. கருத்துக்களை முதலில் மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளலாம். -- மாகிர் 05:14, 19 நவம்பர் 2011 (UTC)Reply

அன்பின் முத்துகிருஷ்ணன், உங்கள் செய்தியை இப்போது தான் பார்த்தேன். யாராவது மலேசியாவுக்கு வருகை தரும் போது முன்கூட்டியே உங்களுக்கு அறிவிக்க வேண்டுகிறேன். சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் விழாவில் கலந்து கொண்டீர்களா? விக்கிப்பீடியர் மு. மயூரன் இலங்கையில் இருந்து கலந்து கொண்டிருந்தார்.--Kanags \உரையாடுக 20:18, 8 நவம்பர் 2011 (UTC)Reply

இரண்டு பயனர் கணக்குகள் தொகு

முத்துகிருஷ்ணன், உங்கள் பெயரில் இரு பயனர் கணக்குகள் உள்ளன. பொதுவாக ஒருவர் இரண்டு பயனர் கணக்குகளை வைத்திருப்பது வரவேற்கப்படுவதில்லை. இரண்டையும் இணைக்கலாம். உங்களுக்கு விருப்பமிருந்தால் எந்தப் பெயரை வைத்திருக்க விரும்புகிறீர்கள் எனச் சொல்லுங்கள்.--Kanags \உரையாடுக 20:18, 8 நவம்பர் 2011 (UTC)Reply

ஊடகப் போட்டி தொகு

 

வணக்கம் முத்துக்கிருஷ்ணன்,

தமிழ் விக்கி ஊடகப் போட்டி ஒன்று தொடங்கியுள்ளது. அதற்கான வலைவாசல் - வலைவாசல்:ஊடகப் போட்டி. இது பற்றி மலேசியாவில் தாங்கள் சார்ந்திருக்கும் தமிழ் அமைப்புகளில் பரப்புரை செய்து உதவ வேண்டுகிறேன். மின்னஞ்சல் அனுப்ப, வலைப்பதிவில் இட, அச்செடுத்து தர ஏற்ற ஒரு ஒரு பக்கத் துண்டறிக்கை ஒன்றை உருவாக்கி வலப்புறம் இணைத்துள்ளேன் - உள்ளது. தங்கள் வலைப்பதிவிலும் இட்டு உதவ வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:06, 17 நவம்பர் 2011 (UTC)Reply

மலேசியாவில் ஊடகப் போட்டி பரப்புரை தொகு

வணக்கம் சோடாபாட்டில் அவர்களே, தங்களின் வேண்டுகோளின் படி இயன்றவரை முயற்சி செய்கிறேன். மலேசிய நண்பன் நாளிதழில் உடனடியாக பிரசுரிக்க ஏற்பாடு செய்கிறேன். அடுத்து, விக்கிப்பீடியா முதல் பக்கத்தில் என்னுடைய குறிப்புகளைக் காட்சி படுத்த தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய வலைப்பதிவை மலேசியர்கள் பலர் பார்க்கின்றனர். அதிலும் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியைப் பற்றி பரப்புரை செய்கின்றேன்.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் Ksmuthukrishnan--12:19, 17 நவம்பர் 2011 (UTC)Reply

மிக்க நன்றி ஐயா --சோடாபாட்டில்உரையாடுக 14:21, 17 நவம்பர் 2011 (UTC)Reply

தன் வரலாறு தொகுத்தல் தொகு

வணக்கம் முத்துக்கிருஸ்ணன். தன் வரலாறு தொகுத்தல் விக்கிக் கொள்கைகளுக்கு முரணானது. உங்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளை அறிவதில் ஆர்வமாயுள்ளோம். ஆயினும் கொள்கை முரண் காரணமாகவும் நடுநிலைத்தன்மையைப் பேணுவது குறித்தும் வேறொரு பயனர் உங்களைப் பற்றி தொகுப்பதுதான் முறை.--சஞ்சீவி சிவகுமார் 06:54, 2 திசம்பர் 2011 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் தொகு

தங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மகிழ்ச்சி. மலேசியத் தமிழர் பற்றி நீங்கள் எழுதிவரும் விரிவான கட்டுரைகள் மிகவும் அருமையானவை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 11:29, 4 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் மலாக்கா முத்துக்கிருஷ்ணன், தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன். தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்--P.M.Puniyameen 11:55, 4 திசம்பர் 2011 (UTC)Reply
வணக்கம் தங்களைப் பற்றி முதற்பக்க அறிமுகம் கண்டு தங்களைப் பற்றி அறிந்தேன். தங்களின் தமிழ்ப்பணி மேன்மேலும் சிறப்படைய இறைவனை வேண்டுகிறேன்.--Parvathisri 12:46, 4 திசம்பர் 2011 (UTC)Reply

வணக்கம் மலாக்கா முத்துக்கிருஷ்ணன், தங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் பார்த்தேன். பணி சிறக்க வாழ்த்துகள்.--சஞ்சீவி சிவகுமார் 15:47, 4 திசம்பர் 2011 (UTC)Reply

முதற்பக்க அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:53, 4 திசம்பர் 2011 (UTC)Reply

நன்றிகள் தொகு

வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். எதிர்காலத்தில், என்னால் இயன்ற அளவிற்கு விக்கிப்பீடியாவில் பங்களித்து வருவேன் என்று உறுதி கூறுகின்றேன். மலேசிய வரலாற்றில் சாதனை புரிந்த தமிழ் மைந்தர்களை ஒவ்வொருவராக அறிமுகம் செய்த பின்னர், மலேசியாவின் புவியியல் பக்கம் போகலாம் என்று நினைக்கின்றேன்.

வேலைப் பளுவின் காரணமாக என்னுடைய பங்களிப்புகள் சறுக்கல் அடைகின்றன. வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் மீண்டும் நன்றிகள்.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் Ksmuthukrishnan04:57, 7 திசம்பர் 2011 (UTC)Reply

ஜான்சி ராணி படையில் அதிகம் மலேசியத் தமிழர்கள் இருந்ததாக தெரிகிறது. அப்படையில் இருந்த வேறு எவரேனும் பெயர் தெரிந்து இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். தமிழகத்தில் இருந்து முத்துராமலிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர் என்றும் அதில் பெண்கள் சில பேர் இருந்தனர் என்றும் எங்கோ படித்ததுண்டு. மேலும் விபரங்களுக்கு,

கோவிந்தம்மாள் கூறியது, ஜான்சி ராணி படையின் உயரிய சேவையின் விருதான லாண்ட்சு நாயக் விருதைப் பெற்றவர்.

ஒருநாள் நானும் அப்பாவும் ரப்பர் தோட்டத்துக்கு போய்க்கொண்டிருந்தபோது தம்பின் மலாக்கா பிராந்தா ஏரியாவுல பெரிய கூட்டத்துல நேதாஜி பேசிக்கொண்டிருந்தார். தமிழர் ஒருவர் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.

இதில் தம்பின் மலாக்கா பிராந்தா என்பது தான் நீங்களிருக்கும் இடமா? தமிழர் ஒருவர் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார் என்பதிலிருந்தே அங்கு அதிகம் தமிழர்கள் இருந்ததாக தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 07:01, 23 திசம்பர் 2011 (UTC)Reply

தொகுப்பு 2 தொகு

ஜான்சி ராணி படையில் அதிகம் மலேசியத் தமிழர்கள் இருந்ததாக தெரிகிறது. அப்படையில் இருந்த வேறு எவரேனும் பெயர் தெரிந்து இருந்தாலும் தெரியப்படுத்துங்கள். தமிழகத்தில் இருந்து முத்துராமலிங்கம் தலைமையில் 100க்கும் மேற்பட்டவர்கள் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தனர் என்றும் அதில் பெண்கள் சில பேர் இருந்தனர் என்றும் எங்கோ படித்ததுண்டு. மேலும் விபரங்களுக்கு,

கோவிந்தம்மாள் கூறியது, ஜான்சி ராணி படையின் உயரிய சேவையின் விருதான லாண்ட்சு நாயக் விருதைப் பெற்றவர்.

ஒருநாள் நானும் அப்பாவும் ரப்பர் தோட்டத்துக்கு போய்க்கொண்டிருந்தபோது தம்பின் மலாக்கா பிராந்தா ஏரியாவுல பெரிய கூட்டத்துல நேதாஜி பேசிக்கொண்டிருந்தார். தமிழர் ஒருவர் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.

இதில் தம்பின் மலாக்கா பிராந்தா என்பது தான் நீங்களிருக்கும் இடமா? தமிழர் ஒருவர் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார் என்பதிலிருந்தே அங்கு அதிகம் தமிழர்கள் இருந்ததாக தெரிகிறது.--தென்காசி சுப்பிரமணியன் 07:01, 23 திசம்பர் 2011 (UTC)Reply

பதக்கம் தொகு

  முதற்பக்கக் கட்டுரைப் பங்களிப்புப் பதக்கம்


6 முதற்பக்கக் கட்டுரைகளில் உங்களது அபாரமான பங்களிப்பைப் பாராட்டி இப்பதக்கத்தைத் தங்களுக்கு வழங்குகிறேன். உங்களது பணி சிறக்க வாழ்த்துகள். :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக... 10:08, 18 சனவரி 2012 (UTC)Reply

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி தொகு

வணக்கம். பதக்கம் வழங்கியமைக்கு மிகவும் நன்றி.--ksmuthukrishnan 01:17, 24 சனவரி 2012 (UTC)

உங்களுக்கு தெரியுமா அறிவிப்பு தொகு


இவ்வார கூட்டு முயற்சி தொகு

வணக்கம். மலேசியா தொடர்புடைய கட்டுரைகளில் ஆர்வம் காட்டும் தாங்கள், இவ்வார கூட்டு முயற்சிக் கட்டுரையான மலேசியா கட்டுரையை மேம்படுத்தி உதவ வேண்டுகிறேன். நன்றி--இரவி (பேச்சு) 15:23, 20 சூன் 2012 (UTC)Reply

ஜான்சி ராணிப்படை தொகு

ஆர்.லட்சுமிதேவி, தேவயானி, ஜானகி, எம். எஸ். தேவர். பாப்பாத்தி, இஅவர்களெல்லாம் ஜான்சி ராணிப்படையிலிருந்த மலேசியத்தமிழ்ப் பெண்கள். இவர்களைப்பற்றி தங்களுக்குத் தெரிந்தால் கட்டுரை எழுதி உதவவும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:08, 24 சூலை 2012 (UTC)Reply

ஜான்சி ராணிப்படைத் தகவல்கள் தொகு

நிறைய தகவல்கள் உள்ளன. சென்ற வாரம் திரு.கல்யாணசுந்தரம், டாக்டர் பால் நியூமென் இருவரையும் ஈப்போவிற்கு அழைத்து தமிழர்களின் ஒற்றுமை பற்றிய சொற்பொழிவுகளைப் பல இடங்களில் நடத்தினோம். அதனால், விக்கிப்பீடீயா பக்கம் பார்வை குறைந்து விட்டது. மறுபடியும் எழுத ஆசைகள் வந்துவிட்டன. சற்று இடைவெளி கொடுங்கள். நன்றி.--ksmuthukrishnan 08:12, 29 சூலை 2012 (UTC)

மலேசியா தொடர்பான கட்டுரைகளுக்கு தொகு

வணக்கம் நண்பரே! உங்கள் பயனர்பக்கத்திலும், இப்பக்கத்திலும் தங்களைப் பற்றி அறிந்துகொண்டேன். :) எனக்கு தனிப்பட்ட தலைப்பில் விருப்பம் இல்லை. பொதுவாக, எது தோன்றுமோ அதைப் பற்றி மொழிபெயர்த்து எழுதுவேன். என் கட்டுரைகளில் நிறைய சொற்பிழைகள், கருத்துப்பிழைகள், தவறான மொழிபெயர்ப்புகள், ஒலிபெயர்ப்புகள் நிறைய இருக்கும் என்பதை அறிவேன். அவற்றை எல்லாம் திருத்த உங்களைப் போன்றோரை நாடுகிறேன். :) நான் தொடங்கும் மலேசியா தொடர்பான கட்டுரைகளை மட்டுமாவது, உங்கள் கவனிப்புப் பட்டியலில் சேர்த்து, அவ்வப்போது கவனித்து தவறுகளைத் திருத்தி உதவிடுங்கள். அறிவுரைகளையும் வழங்கிடுங்கள். தற்போதைக்கு, மலாக்கா சுல்தானகம், ஜொகூர் சுல்தானகம், மலேசியத் தெலுங்கர், வேதமூர்த்தி பொன்னுசாமி, திருமுருகன் வீரன், இராமசாமி பழனிச்சாமி, திலிப்_வர்மன், சிங்கப்பூர்_தமிழ்த்_திரைப்படத்துறை, மலேசியத்_தமிழ்த்_திரைப்படத்துறை, மணியம்_மூர்த்தி, தமிழ்_பதிப்பகங்கள்_பட்டியல்_(பகுதி_வாரியாக), சிங்கப்பூர்_இந்தியர், சிட்டி, மலேசிய_நடுவண்_வங்கி, சிப்பாங், தரங்கானு, மலாக்காவின்_துன்_அலி, பேராக்_சுல்தானகம் ஆகியவற்றை உங்கள் கவனிப்பு பட்டியலில் சேர்த்து திருத்தி உதவிடுங்கள் நன்றி! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 06:57, 8 செப்டெம்பர் 2012 (UTC)Reply

மகிழ்ச்சி தொகு

உங்கள் பேரன், பேத்திகளும் தமிழ் விக்கிப்பீடியாவை விரும்பிப் படிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. அவர்களையும் விரைவில் நேரடியாக விக்கிப்பீடியாவில் பங்களிக்கச் செய்துவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :) யாரும் வேண்டும் என்று ஊர்ப்பெயர்களைச் சிதைக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். சரியான தமிழ் ஒலிப்பு வரலாறு அறியாமையால் இருக்கலாம். தகுந்த இடங்களில் சுட்டிக்காட்டிவிட்டு மாற்றங்களைச் செய்து விடுங்கள். நன்றி--இரவி (பேச்சு) 19:49, 1 நவம்பர் 2012 (UTC)Reply

நன்றி தொகு

தங்களின் கருத்துகளுக்கு மிகவும் நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) --ksmuthukrishnan 01:15, 2 நவம்பர் 2012 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு தொகு


மகிழ்ச்சி.டான் ஸ்ரீ பி. சி. சேகர், மலேசியாவில் மட்டும் அல்ல, உலக அளவில் புகழ் பெற்ற ஒரு மாபெரும் அறிவியல் மேதை. அவரை முதல் பக்கத்தில் காட்சிப் படுத்தியமைக்கு நன்றி சொல்கின்றேன்.--ksmuthukrishnan 03:47, 18 நவம்பர் 2012 (UTC)


இந்தச் சிறைச்சாலை இப்போது இல்லை. இருந்தாலும் பெரிய சரித்திரம் படைத்தது. முதல் பக்கத்தில் காட்சி படுத்தியமைக்கு நன்றி.--ksmuthukrishnan 19:47, 13 அக்டோபர் 2012 (UTC)


ஐயா, காலம் தாழ்த்திய அறிவிப்புக்கு அருள் கூர்ந்து பொறுத்தருள்க.--Kanags \உரையாடுக 00:20, 13 சனவரி 2013 (UTC)Reply



தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு தொகு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:50, 26 நவம்பர் 2012 (UTC)Reply

இம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். அனுப்பப்படும் கட்டுரைகள் மாநாட்டு இதழிலோ (conference proceedings) அல்லது வெளிவரவுள்ள நூலகம் ஆய்விதழ் (journal) இலோ இடம்பெறலாம். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும்.

மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி, இலங்கையில் தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றை ஒப்பிட்டு ஒரு கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. குறிப்பாக இரண்டின் பாடநூல்த் தேவைகள், வரலாறு, அச்சுறுத்தல்கள் தொடர்பாக. நன்றி. --Natkeeran (பேச்சு) 19:46, 26 திசம்பர் 2012 (UTC)Reply

மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி தொகு

அழைப்புக்கு நன்றி. மலேசியாவில் தமிழ்வழிக் கல்வி பற்றி ஒரு கட்டுரை தயாரிக்கலாம். முயற்சி செய்கிறேன். நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் --124.13.188.41 02:18, 27 திசம்பர் 2012 (UTC)Reply


மறுமொழி தொகு

நீங்கள் என் பேச்சுப் பக்கத்தில் இட்ட குறிப்புக்கு மறுமொழி அளித்திருக்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 07:19, 14 சனவரி 2013 (UTC)Reply

மலேசியப் பயணம் தொகு

வணக்கம்! அலுவலகப்பணியை முன்னிட்டு தற்போது... 'ஜொகூர் பாரு' வந்துள்ளேன். உங்களின் இல்லத்தில் வந்து நட்பு முறையில் சந்திக்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் வரைபடத்தில் பார்க்கும்போது... உங்களின் வீடு உள்ள ஊர், தொலைவில் உள்ளது போலத் தெரிகிறது; வேலை அதிகம் இருப்பதால் என்னால் அங்கு வர இயலும் எனத் தோன்றவில்லை. உங்களின் முகவரியை என்னுடைய மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாமா? முடிந்தால் முன்கூட்டியே தெரிவித்துவிட்டு வருகிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:33, 21 சனவரி 2013 (UTC)Reply

செல்வசிவகுருநாதன் மலேசிய வருகை தொகு

அன்புள்ள சகோதரர் செல்வ சிவகுருநாதன் அவர்களுக்கு, வணக்கம். தாங்கள் மலேசியாவிற்கு வருகை தந்தது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. ஜொகூர் பாரு, ஈப்போவில் இருந்து ஏறக்குறைய 700 கி.மீ. தொலைவில் இருக்கிறது. இருப்பினும் மலேசியாவில் இருக்கும் நெடுஞ்சாலைத் திட்டங்களினால், 6 மணி நேரத்தில் ஈப்போவை வந்து அடையலாம். உள்நாட்டு விமானச் சேவைகளும் உள்ளன.

ஜொகூர் பாரு செனாய் விமான நிலையத்தில் இருந்து ஈப்போவிற்கு ஒவ்வொரு நாளும் நான்கு பயணங்கள் உள்ளன. கட்டணம் மலிவுதான். இரயில் சேவைகளும் உள்ளன. நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். எவ்வளவு காலம் இருப்பீர்கள் என்பதையும் சொல்லுங்கள். உங்களை வந்து பார்ப்பதற்கு முயற்சி செய்கிறேன். நீங்களே ஈப்போ வந்தால், எத்தனை நாட்கள் வேண்டும் என்றாலும் எங்கள் வீட்டில் தங்கலாம். என் இல்ல முகவரி:

2 - Pesiaran Rishah 1/5, Taman Buntong Ria, 30100 Ipoh, Perak.

கைப்பேசி எண்கள்: 012-4347 462; 010-3913 225 நன்றி.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 09:58, 21 சனவரி 2013 (UTC)Reply

சில தகவல்களை உங்களிடமிருந்து பெறுவதற்காக காத்திருக்கிறேன்; நேரம் கிடைக்கும்போது எனது கைபேசிக்கு அழைப்பு தரவும். நன்றி. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:05, 25 சனவரி 2013 (UTC)Reply

கைப்பேசி தொகு

மன்னிக்கவும். காலம் கடந்து தங்களுக்கு பதில் தருகிறேன். என்னுடைய கைப்பேசியை மகள் வீட்டில் விட்டு விட்டு வந்துவிட்டேன், அதனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. 010 3913 225 எனும் எண்களுக்கு அழையுங்கள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 17:23, 26 சனவரி 2013 (UTC)Reply

முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள் தொகு

வணக்கம். நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் மற்ற கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக இப்பக்கத்தில் தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 14:52, 31 சனவரி 2013 (UTC)Reply

மிகவும் சிரமப்பட்டு எழுதப்பட்ட கட்டுரைகள் தொகு

நன்றி. விக்கிப்பீடியாவில் நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். எண்ணிப் பார்க்கவில்லை. அவற்றுள் எனக்கு மிக மிகப் பிடித்தவை.

மிகவும் சிரமப்பட்டு எழுதப்பட்டவை. நிறைய ஆய்வுகள் செய்ய வேண்டி இருந்தது. அவற்றுள் சிபில் கார்த்திகேசுவின் கட்டுரையை எழுதுவதற்காக அவருடைய கல்லறைக்கே நானும் என் மனைவியும் சென்றோம். அங்கேயே உட்கார்ந்து அவரைப் பற்றி பேசினோம். அந்த நினைவலைகள் எங்களின் மனங்களில் இறுக்கமாகிப் போய் இன்னும் நிழலாடிக் கொண்டு இருக்கின்றன.

அடுத்து டோனி பெர்னாண்டஸ். ’தினக்குரல்’ நாளிதழின் ஆசிரியர் குழுவில் நான் இருப்பதால், இவருடைய நட்பு கிடைத்தது. நெருங்கிய நண்பராகி விட்டார். ஆக, நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 17:18, 31 சனவரி 2013 (UTC)Reply

//அவற்றுள் சிபில் கார்த்திகேசுவின் கட்டுரையை எழுதுவதற்காக அவருடைய கல்லறைக்கே நானும் என் மனைவியும் சென்றோம். அங்கேயே உட்கார்ந்து அவரைப் பற்றி பேசினோம். அந்த நினைவலைகள் எங்களின் மனங்களில் இறுக்கமாகிப் போய் இன்னும் நிழலாடிக் கொண்டு இருக்கின்றன. // இந்த அளவுக்கும் கூட ஒருவர் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஈடுபாடு காட்ட முடியுமா? உங்கள் பங்களிப்புக்குத் தலை வணங்குகிறேன். உங்களுக்குத் துணையாக இருக்கும் மனைவி, பேத்தி முதலியோருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்--இரவி (பேச்சு) 13:21, 3 பெப்ரவரி 2013 (UTC)

  விருப்பம்+1-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:28, 3 பெப்ரவரி 2013 (UTC)   விருப்பம்--குறும்பன் (பேச்சு) 18:07, 3 மார்ச் 2013 (UTC)

பணம் பொருளைத் தாண்டிய அர்ப்பணிப்புகள் தொகு

மயிரிழை மதிப்பைத் தாண்டிப் போகும், இந்த உயிரின் மதிப்பை அகலமாக்கி, விக்கிப்பீடியாவிற்குச் சேவை செய்கின்றேன். அது போதும். அந்த நினைவுகள் வாழ்நாள் சாதனைகளாக அமையட்டும் என்பது என்னுடைய பேத்தியின் வேண்டுகோள். இப்போது என்னுடைய தோழியாக இருப்பவர் என் பேத்தி ஹர்சித்ரா. அவருக்கு வயது பன்னிரண்டு. ஆக, என் வயதைச் சரி பார்ப்பதற்கு போதுமான வாய்ப்புகள் கிடைத்து இருக்கலாம்.

இதைத் தைப்பிங் சிறைச்சாலையில் பாதுகாவலர்களின் கண்காணிப்பில் எழுதுகின்றேன். மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தைப்பிங் சிறைச்சாலையில் இருக்கின்றேன். விடுதலை இன்னும் சில நாட்களில் கிடைக்கலாம். அதனால், விக்கிப்பீடியா அனபர் செல்வசிவகுருநாதன் அவர்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. மலேசியாவில் எங்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் போராடிக் கொண்டு இருக்கிறோம். நன்றி.--மலாக்கா முத்துக்கிருஷ்ணன் --ksmuthukrishnan 21:22, 2 பெப்ரவரி 2013 (UTC)

முத்துக்கிருஷ்ணன், செய்தி அறிந்து மனம் சஞ்சலம் அடைந்தேன். விரைவில் விடுதலையாகி வெளிவர இறைவனை இறைஞ்சுகிறேன். உங்கள் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துகள்.--Kanags \உரையாடுக 22:19, 2 பெப்ரவரி 2013 (UTC)
உங்கள் உரிமைப் போராட்டத்தில் வெற்றிபெற வாழ்த்துகள்--Nan (பேச்சு) 00:18, 3 பெப்ரவரி 2013 (UTC)
விரைவில் விடுதலை பெறவும், வேண்டிய உரிமைகள் பெற்றிடவும் வாழ்த்துகள். சிறையில் இருந்தும் விக்கிப்பீடியாவுக்குச் செய்தியைத் தெரிவிக்கும் உங்கள் ஈடுபாடு சிலிர்க்க வைக்கிறது. --இரவி (பேச்சு) 13:20, 3 பெப்ரவரி 2013 (UTC)
  விருப்பம்--Anton (பேச்சு) 14:42, 3 பெப்ரவரி 2013 (UTC)   விருப்பம்--குறும்பன் (பேச்சு) 18:15, 3 மார்ச் 2013 (UTC)
மலேசிய மண்ணில் தங்களின் உரிமைப் போராட்டம் வெற்றியடைந்திடவும், விரைவில் தாங்கள் விடுதலையடைந்திடவும் என் வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 13:38, 3 பெப்ரவரி 2013 (UTC)
மலேசியத் தமிழர் மட்டுமின்றி மலேசியா தொடர்பான பல கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிற்கு தமிழ் ஊடக உலகிற்கு அளித்துள்ளீர்கள். நன்றி! வெறுமனே குறுங்கட்டுரைகளை எழுதாமல், பல படங்களை இணைத்து பல நகரங்களைப் பற்றியும், பல நிகழ்வுகள், நபர்கள் பற்றியும் எழுதியுள்ளது கண்டு வியந்து மகிழ்கிறேன். பல ஆதாரங்களைச் சேர்த்து கட்டுரைகளை முழுமையடையச் செய்திருக்கிறீர்கள். பல மணி நேரங்கள் உழைத்திருக்கிறீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கும். விரைவில் விடுதலையடைந்து மலேசியாவில் தங்கள் உரிமைகள் நிலைபெற சக மனிதனாக வாழ்த்துகிறேன். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:08, 3 பெப்ரவரி 2013 (UTC)  விருப்பம்--குறும்பன் (பேச்சு) 18:15, 3 மார்ச் 2013 (UTC)
உரிமைப் போராட்டம் வெற்றியடையவும், விடுதலையடையவும் என் வாழ்த்துகள். --Anton (பேச்சு) 14:42, 3 பெப்ரவரி 2013 (UTC)
மலேசியாவைப்பற்றி எங்களுக்கு பல்வேறு விபரங்களை அறியத் தந்தவர் நீங்கள் அனைத்துமே முழுமையான நல்ல கட்டுரைகள். நீங்கள் சிறையில் இருப்பது வருத்தத்தையளிக்கிறது. சுயநல நோக்கின்றி பொதுநலத்தோடு மலேசியத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் தங்கள் போராட்டம் வெற்றியடையவும் விரைவில் விடுதலைபெற்று உரிமை பெறவும் இறைவனை வேண்டுகிறேன்-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 16:26, 3 பெப்ரவரி 2013 (UTC)

  விருப்பம்--குறும்பன் (பேச்சு) 18:15, 3 மார்ச் 2013 (UTC)

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் தொகு

மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் மிகக் கடுமையான சட்டங்களில் ஒன்றாகும். மலேசியாவில் உரிமைப் போராட்டங்கள் செய்பவர்களை விசாரணையின்றி தடுத்து வைக்கப் பயன்படுத்தப் படும் கொடிய வழக்கம். அதை அகற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்னும் நிறைவேற்றப்படவில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு விடுவித்துவிட்டார்கள். இது இரண்டாவது முறை.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீரைப் பற்றி 'செம்பருத்தி' இணையத் தாளிகையில் எழுதியதற்காக என்பது பின்னர் தெரிய வந்தது. ஆனால், என்ன, அப்படி எல்லாம் எழுதுவது இல்லை என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தால் போதும். மறுநாளே விடுதலை கிடைத்துவிடும். ஆனால், பறிபோன மலேசிய இந்தியர்களின் உரிமைகள் கிடைத்துவிடுமா.

அம்பிகா சீனிவாசன், வி. சிவகுமார், எம். குலசேகரன், ஜெயக்குமார் தேவராஜ் போன்றவர்கள் பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்கள். எனக்காகப் பிரார்த்தனை செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றிகள். உங்களுடைய வேண்டுதல்கள் காலத்தால் மறக்கப்பட முடியாதவை. கரைந்து போகும் உள்ளத்திற்கு, இனமான உணர்வுகளை அள்ளித் தெளிக்கும் ஈரமான கருத்துகள். ஆயிரம் நன்றிகள்.மலாக்கா முத்துக்கிருஷ்ணன்--ksmuthukrishnan 08:56, 6 பெப்ரவரி 2013 (UTC)

Return to the user page of "Ksmuthukrishnan/தொகுப்பு 1".