மலேசியத் தெலுங்கர்
மலேசியத் தெலுங்கர் எனப்படுவோர் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இடம்பெயர்ந்த, தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஆவர். பெரும்பாலான மலேசியத் தெலுங்கர்கள் மலேசியாவிற்கு ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்டவர்களின் நான்காவது, ஐந்தாவது தலைமுறையினர் ஆவர். இவர்களின் தாயகம் சென்னை மாகாணம் (ஆந்திரப் பிரதேசமும் தமிழ்நாடும் இணைந்திருந்த பகுதி) ஆகும். சிலர் வங்காளத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் மலேசியாவிற்கு வந்தவர்களாவர்.
பிரபல அறிக்கை ஒன்று, மொத்தம் 1,17,000 தெலுங்கர்கள் மலேசியாவில் வசிப்பதாக குறிப்பிடுகிறது.[1] மலேசியாவில் வாழும் இந்தியர்கள் பெரும்பான்மையானோர் தமிழர்கள் எனினும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலையாளிகளும் தெலுங்கர்களும் சீக்கியர்களும் இங்கு வசிக்கின்றனர். ஒரு வகுப்பில் பதினைந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மொழியைத் தாய்மொழியாக படிக்க விரும்பினால் மலேசிய அரசு அதற்கான வசதிகளை வழங்கும். இவ்வகையில் மலேசியாவில் இயங்கும் சில பள்ளிகளில் தெலுங்கும் தாய்மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. [2]
இரண்டாம் தெலுங்கு மாநாடு
தொகுஉலகளாவிய இரண்டாம் தெலுங்கு மாநாடு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அப்போதைய மலேசியப் பிரதமர் மேதகு. மகாதீர் பின் முகமது கலந்துகொண்டார்.
மேலும் பார்க்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ ஜோசுவா திட்ட அமைப்பு - தகவல்
- ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "MIC". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-08-13.
- ↑ Najib Wishes for Telugu New Year