பேச்சு:புந்தோங்

முத்துக்கிருட்டிணன், தமிழ் முறைப்படி இக்கட்டுரையின் தலைப்பை புந்தோங்கு என மாற்றலாமா? ஙகர ஒற்றில் சொல் முடியலாகாது. இறுதியில் இணைக்கும் கு என்ற குற்றியலுகரம் குறுகி ஒலிப்பதால் ஒலிப்பு நெருக்கமும் இருக்கும். -- சுந்தர் \பேச்சு 04:07, 20 மே 2011 (UTC)Reply

காட்டாக பினாங்கு --மணியன் 05:09, 20 மே 2011 (UTC)Reply
பொருத்தமான காட்டு ஒன்றைச் சுட்டியதற்கு நன்றி, மணியன். :) -- சுந்தர் \பேச்சு 09:04, 20 மே 2011 (UTC)Reply

புந்தோங் / புந்தோங்கு

தொகு

வணக்கம். ஐயா. தங்களின் கருத்திற்கு நன்றி. தமிழ் எழுத்துகளில் ஈற்று எழுத்து பொதுவாக ‘ங்’ ‘ஞ்’ ‘ந்’ என்று முடிவு அடையா. தாங்கள் சொலவது போல ‘கு’ எனும் உயிர்மெய் சேர்ப்பது தான் முறை. சில சமயங்களில் மலேசியாவில் உள்ள இடங்களின் பெயர்களை மாற்றும் போது அது எந்த ஊர் என்று தெரியாமல் போகும் வாய்ப்புகள் உள்ளன. மலேசியாவில் பல ஊர்களின் பெயர்கள் ‘ங்’ எனும் எழுத்தில் முடிவடைகின்றன.

எ.கா: பகாங், புலாவ் சாராங், தஞ்சோங் காராங், குனோங் மெராங், ரூமா வாரோங், பாஜு கூரோங், தாரோங், பெக்கான் பெண்டாங், செங்காங் கிராமம், என்று நிறைய சொற்கள் இருக்கின்றன. இவற்றை நாம் மாற்றினால் மலேசியர்களுக்கே தெரியாத ஊராக மாறி விடலாம் என்று ஐயப் படுகிறேன். புந்தோங் அல்லது குந்தோங் எனும் ஊரின் பெயர் 200 ஆண்டுகளாக அந்தத் தொனியில் அழைக்கப் பட்டு வருகிறது.

மலேசியர்கள் எப்படி அழைக்கிறார்களோ அப்படியே நானும் பயன் படுத்தினேன். மாற்றம் செய்தால் பெயர் தடுமாற்றம் ஏற்படலாம் என்பது நம்முடைய தாழ்மையான கருத்து. தங்களின் கருத்துகளையும் தெரிந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.

பினாங் என்பதை பினாங்கு என்று அழைக்கிறார்கள். அதே போல புந்தோங் என்பதைப் புந்தோங்கு என்று மாற்றுவதில் தப்பு இல்லை. எனக்கு எந்த இடையூறும் இல்லை. மலேசிய மக்கள் அதுவும் புந்தோங் மக்கள் என்ன சொல்லப் போகிறார்களோ அது தான் தெரியவில்லை. ‘இவன்களுக்கு வேறு வேலை இல்லை. மனுஷன் பேரை மாற்றி கடைசியில் ஊர் பேரையே மாற்றுகிறார்கள்’ என்று சொன்னாலும் சொல்வார்கள். இங்கு உள்ளவர்களைக் கேட்டுப் பார்க்கிறேன். தற்சமயத்திற்கு புந்தோங் என்று இருக்கட்டும்.

நன்றி. மலாக்கா முத்துக்கிருஷ்ணன் --ksmuthukrishnan 06:37, 23 மே 2011 (UTC)Reply

நீங்களும் தமிழ் முறைப்படி எழுத வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி. இந்த ஒலிபெயர்ப்பு மாற்றத்தைப் பெயர் மாற்றமாகக் கருத வேண்டாம் என உங்களிடம் கேட்பவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். மக்கட் பெயரானாலும் சரி, ஊர்ப்பெயரானாலும் சரி வெவ்வேறு மொழிகளில் வெவ்வேறு வகையில் எழுதவும் ஒலிக்கவும் செய்வது வழக்கமான ஒன்றுதான் என்றும் தெரிவியுங்கள். எப்படி 'ja' ஒலியே இல்லாத இடாயிச்சு மொழியை ஆங்கிலத்தில் German என்று அழைக்கிறார்களோ, எப்படி மதுரை என்பதை ஆங்கிலேயர் மெஜுரா என்று அழைத்தனரோ, Hanuman என்பவரை வழக்கில் தமிழர் அனுமன் என்று எப்படி அழைக்கிறார்களோ அது போல புறப்பெயர்கள் உலக வழக்கில் புதிதல்ல என்றும், புத்தோங்கு என்று அழைப்பதில் தவறில்லை என்றும் விளக்குங்கள். புத்தோங்கு எனுஞ்சொல் புதிதாய் ஓங்குவது என்று கூட வளர்முகமான பொருள் கொள்ளத் தக்கது என்றும் சொல்லுங்கள். :) -- சுந்தர் \பேச்சு 07:14, 23 மே 2011 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புந்தோங்&oldid=773091" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "புந்தோங்" page.