சிங்கப்பூர் தமிழ்த் திரைப்படத்துறை (Singapore Tamil Cinema) என்பது சிங்கப்பூர் நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய திரைப்படத்துறை ஆகும். 2008 ஆம் ஆண்டு வெளியான மை மேஜிக் என்ற திரைப்படம் சிங்கப்பூர் நாட்டின் சார்பில் 2009 ஆம் ஆண்டிற்கான கான் திரைப்பட விருதிற்கு அனுப்பப்பட்ட முதல் திரைப்படம் ஆகும்.[1] தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட சிங்கப்பூரில் தமிழ்த் திரைப்படத்துறை வளர்ச்சியடைந்து வருகிறது.[2]
சிங்கப்பூர்த் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
தொகு
பெயர் |
இயக்குநர்/நடிகர் |
குறிப்பு
|
மை மேஜிக் |
எரிக் கூ |
கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட சிங்கப்பூரின் முதல் திரைப்படம். மேலும் 2009 ஆம் ஆண்டிற்காக அனுப்பி வைக்கப்பட்ட சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ திரைப்படமும் இதுவே
|
பெயர் |
இயக்குநர்/நடிகர் |
குறிப்பு
|
குருஷேத்ரம் – 24 மணி நேரக் கோபம் |
- இயக்குநர் : தவமணி
- கதை : தவமணி, ச்சாங் ட்சீ சியென்
- நடிப்பு : விஷ்ணு, சிவக்குமார், மதியழகன், ராஜேஷ் கண்ணன், குணாளன்
|
- சிங்கப்பூரிலேயே தயரிக்கப்பட்ட முதல் முழுநீளத் தமிழ்த் திரைப்படம்
- இத்திரைப்படம் கோல்டன் வில்லேஜ் பிக்சர்சால் வினியோகிக்கப்பட்டது. இந்தியாவிலும் திரையிடப்பட்டது
- இத்திரைப்பட வெளியீட்டு விழாவில் சிங்கப்பூர் அதிபர் செல்லப்பன் ராமநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
|