அம்பாங் மக்களவைத் தொகுதி

(அம்பாங் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்பாங் மக்களவைத் தொகுதி[4] (மலாய்: Kawasan Persekutuan Ampang; ஆங்கிலம்: Ampang Federal Constituency; சீனம்: 安邦联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர், கோம்பாக் மாவட்டம்; மற்றும் உலு லங்காட் மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P099) ஆகும்.

அம்பாங் (P099)
மலேசிய மக்களவைத் தொகுதி
சிலாங்கூர்
Ampang (P099)
Federal Constituency in Selangor
சிலாங்கூர் மாநிலத்தில்
அம்பாங் மக்களவை தொகுதி

வாக்காளர் தொகுதிஅம்பாங் தொகுதி
முக்கிய நகரங்கள்அம்பாங்; அம்பாங் ஜெயா; கோம்பாக்
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
(2022)
மக்களவை உறுப்பினர்ரோட்சியா இசுமாயில்
(Rodziah Ismail)
வாக்காளர்கள் எண்ணிக்கை135,101 (2023)[1]
தொகுதி பரப்பளவு51 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022[3]




2022-இல் அம்பாங் மக்களவை தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:

  மலாயர் (51.57%)
  சீனர் (32.24%)
  இதர இனத்தவர் (6.54%)

அம்பாங் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அம்பாங் மக்களவைத் தொகுதியில் முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.

அத்துடன் 2004-ஆம் ஆண்டில் இருந்து அம்பாங் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

கோம்பாக் மாவட்டம் தொகு

கோம்பாக் மாவட்டம் கிள்ளான் பள்ளத்தாக்கில் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் பெருநகரம்; மற்றும் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள வேறு சில மாவட்டங்களும் இந்தக் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ளன.

கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற பகுதிகள்:

உலு லங்காட் மாவட்டம் தொகு

உலு லங்காட் மாவட்டம் சிலாங்கூர் மாநிலத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டம்; நெகிரி செம்பிலான்; சிலாங்கூர் மாநிலங்களுக்கும் இடையில் தென்கிழக்கு மூலையில் அமைந்துள்ள மாவட்டமாகும்.

இந்த மாவட்டம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறக் குடியேற்றங்களின் கலவையாகக் காணப்படுகின்றது. பெரும்பான்மையான மக்கள் கோலாலம்பூருக்கு அருகிலுள்ள நகரங்களில் குடியேறுகின்றனர். செராஸ், அம்பாங் போன்ற மக்கள் தொகை மையங்கள் பெருநகரப் பகுதிகளின் புறநகர்ப் பகுதிகளாக மாறி வருகின்றன.

உலு லங்காட் மாவட்டத்தின் முக்கிம்கள் தொகு

அம்பாங் மக்களவைத் தொகுதி தொகு

அம்பாங் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள்
(2004 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
(அம்பாங் ஜெயா மக்களவை தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
11-ஆவது P099 2004–2008 ரோசைடா தாலிப்
(Rozaidah Talib)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
12-ஆவது 2008–2013 சுரைடா கமாருதீன்
(Zuraida Kamaruddin)
பாக்காத்தான் ராக்யாட்
(பி.கே.ஆர்)
13-ஆவது 2013–2018
14-ஆவது 2018–2020[5] பாக்காத்தான் அரப்பான்
(பி.கே.ஆர்)
2020–2022 பெரிக்காத்தான் (பெர்சத்து)
2022 பங்சா
15-ஆவது 2022–தற்போது ரோட்சியா இசுமாயில்
(Rodziah Ismail)
பாக்காத்தான் அரப்பான்
(பி.கே.ஆர்)

அம்பாங் மக்களவைத் தேர்தல் முடிவுகள் தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
133,494 - -
வாக்களித்தவர்கள்
(Turnout)
104,432 78.23%   6.29
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
104,430 100.00% -
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
283 - -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
834 - -
பெரும்பான்மை
(Majority)
29,681 28.43%   26.38
வெற்றி பெற்ற கட்சி:   பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6]

அம்பாங் மக்களவை வேட்பாளர் விவரங்கள் தொகு

மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (செலாயாங் தொகுதி)
சின்னம் வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
  ரோட்சியா இசுமாயில்
(Rodziah Ismail)
பாக்காத்தான் (PH) 56,754 54.35% -16.59  
  சாசா லீனா அப்துல் லத்தீப்
(Sasha Lyna Abdul Latif)
பெரிக்காத்தான் (PN) 27,073 25.92% +25.92  
  ஐவோன் லோயி வென்
(Ivone Low Yi Wen)
பாரிசான் (BN) 11,509 11.02% -5.11  
  சுரைடா கமாருதீன்
(Zuraida Kamaruddin)
மலேசிய தேசிய கட்சி (PBM) 4,589 4.39% +4.39  
  நூருல் அசிகின் மாபவி
(Nurul Ashikin Mabahwi)
உள்நாட்டு போராளிகள் கட்சி (PEJUANG) 2,653 2.54% +2.54  
  லாய் வாய் சோங்
(Lai Wai Chong)
சபா பாரம்பரிய கட்சி (WARISAN) 1,423 1.36% +1.36  
  முகமது சியாபிக் இசுவான் யூனோஸ்
(Muhammad Syafiq Izwan Yunos)
சுயேச்சை 188 0.18% +0.18  
  எம் ராவின்
(M Raven)
சுயேச்சை 148 0.14% +0.14  
  டான் உவா மெங்
(Tan Hua Meng)
சுயேச்சை 93 0.09% +0.09  

மேற்கோள்கள் தொகு

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. https://www.mycensus.gov.my/index.php/census-product/publication/census-2020/myparlimen
  5. Wartawan, Oleh (2020-02-24). "Azmin, Zuraida dipecat". BH Online. பார்க்கப்பட்ட நாள் 2020-02-24.
  6. "RESULTS OF CONTESTED ELECTION AND STATEMENTS OF THE POLL AFTER THE OFFICIAL ADDITION OF VOTES PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SELANGOR" (PDF). ATTORNEY GENERAL’S CHAMBERS. பார்க்கப்பட்ட நாள் 16 February 2024.

மேலும் காண்க தொகு