ருக்குமணி முத்துக்கிருஷ்ணன்

ருக்குமணி முத்துக்கிருஷ்ணன் (பிறப்பு: ஜூலை 10, 1948) மலேசியத் தமிழ் எழுத்தாளர். சிங்கை, மலேசிய வானொலிகளில் 100க்கும் மேற்பட்ட சமூக வானொலி நாடகங்களை எழுதியவர். மலேசியத் தமிழ்ப் பெண்களுக்கு விழிப்புணர்வு தொடர்பான பரப்புரைகளைச் செய்து வருகின்றார்.

ருக்குமணி
முத்துக்கிருஷ்ணன்
பிறப்புஜூலை 10, 1948
ஈப்போ, பேராக்,  மலேசியா
இருப்பிடம்தாமான் புந்தோங் ரியா, ஈப்போ, 30100 பேராக், மலேசியா
தேசியம்மலேசியர்
கல்விசெட்டியார் தமிழ்ப் பள்ளி
ஈப்போ பெண்கள் உயர்நிலைப்பள்ளி
பணிகுடும்ப மாது
அறியப்படுவதுமலேசியத் தமிழ் நாடக எழுத்தாளர்
சமயம்இந்து
வாழ்க்கைத்
துணை
மலாக்கா முத்துக்கிருஷ்ணன்
பிள்ளைகள்4 பிள்ளைகள்

ஸ்ரீ முருகரசன்
ஸ்ரீ முருகழகன்
ஸ்ரீ முருகமுதன்

ஸ்ரீ முருகப்பிரியா

குழந்தை வளர்ப்பு, சிறுவர் பராமரிப்பில் ஏற்பட்டு வரும் சமூகச் சிக்கல், சீர்கேடுகளைப் பற்றி அதிகம் எழுதி வருகின்றார். ஆதரவற்றக் குழந்தைகளின் இல்லங்களுக்குச் சென்று பணிவிடை செய்வதில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். இவருடைய கணவர் மலாக்கா முத்துக்கிருஷ்ணனும் ஓர் எழுத்தாளர்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1968 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய ஆக்கங்கள் மலேசியா, சிங்கப்பூர் தேசிய பத்திரிகைகளிலும், நாளிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. பல தொடர்கதைகளை எழுதியுள்ளார். வானொலி நாடகங்கள், தொடர் நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள் என் ஏறக்குறைய ஐநூறு படிவங்களைப் படைத்துள்ளார்.

நூல்கள் தொகு

  • பனியிலே வந்தவள் - நாடகத் தொகுப்பு (1978)
  • கணையாழிகளின் கதைகள் (1980)
  • நெஞ்சமெல்லாம் நீயே கண்ணா - நாவல் (1982)
  • நீங்காத கனவுகள் - தொடர்கதை
  • காலமகள் மடியினிலே - தொடர்கதை

பரிசுகளும், விருதுகளும் தொகு

  • சிறந்த எழுத்தாளர் விருதும், பணமுடிப்பு பரிசளிப்பும் - மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் (1986)
  • பாரதிதாசன் கலைவிழா - பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப் பட்டார் (1999)
  • தேசிய நாளிதழ்களின் சிறுகதைப் போட்டிகளில் பரிசுகள் - 1970 இல் இருந்து 2011 வரை

சாதனையாளர் விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு