முனைவர் துரை.மணிகண்டன் எனும் நான் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றேன். எனது சிற்றூர் கச்சமங்கலம் ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், கரிகாலன் கட்டிய கல்லணையில் இருந்து 7கி.மீட்டர் அருகில் உள்ளது. எனது பள்ளிப்படிப்பை கச்சமங்கலத்தில் தொடங்கி, அகரப்பேட்டை, திருக்காட்டுப்பள்ளியில் (சர் சிவசாமி உயர்நிலைப்பள்ளி) முடித்துள்ளேன். கல்லூரிப் படிப்பை தூயவளனார் கல்லூரி திருச்சியில் நிறைவு செய்தேன். முனைவர் பட்டத்தைத் திருச்சி தேசியக் கல்லூரியில் முடித்தேன். எனது ஆய்வு நெறியாளர் முனைவர் கு. ராசரெத்தினம் ஆவர். நான் இணையம் தொடர்பான இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள், தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள், ஊடகவியல், ஒப்பிலக்கியப் படைப்பும் திறனாய்வும் என்கிற ஆறு நூல்களை எழுதியுள்ளேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Manikandand&oldid=2953500" இலிருந்து மீள்விக்கப்பட்டது