வாருங்கள்!

வாருங்கள், அரிஅரவேலன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


பயனர்:தகவலுழவன்/கையொப்பம்

உங்கள் பங்களிப்பு, அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து செயற்பட வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 18:53, 8 சூலை 2012 (UTC)

குமுகாயவியல்தொகு

குமுகாயவியல் என்னத்துறை? எழுத்துப்பிழையா?--தகவலுழவன் (பேச்சு) 13:57, 16 சூன் 2012 (UTC)

குமு > குமுகம் > குமுகாயம் என்பது வேர்ச்சொல் விரிவு. சமுதாயவியல் என்னும் சொல்லிற்கான தனித்தமிழ்ச் சொல் குமுகாயம். --அரிஅரவேலன் (பேச்சு) 15:33, 16 சூன் 2012 (UTC)

அறிந்தேன். நன்றி. விக்சனரிக்கு வந்து பங்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வணக்கம் .--தகவலுழவன் (பேச்சு) 15:40, 16 சூன் 2012 (UTC)
கும்முதல் (துணியைத் துவைக்கும்பொழுது சேர்த்துக் குவித்து வைத்து துவைத்தலைக் கும்மித் துவை என்பர்), கும்மி என்னும் ஆட்டம் (கோலாட்டம்), கும்பல் (பலர் சேர்ந்திருக்கும் கூட்டம்), குப்பையைக் குமித்து வைத்தல் (சேர்த்து வைத்தல்), பழங்கள் முதலியவற்றை (சேர்த்து) வைக்க குழியாக இருக்கும் கும்பா என்னும் ஏனம் (அண்டா என்பது பெரிய கொள்கலம், சந்தனக் கும்பா முதலியன சிறிய ஆனால் பாத்திரம்). கும்மாளம் என்பது பலர் சேர்ந்து களித்திருத்தல், குமுறு என்றால் பலவற்றையும் ஒருசேர நினைத்து பொங்குதல், குமுட்டி என்றால் கரியைச் சேர்த்து வைத்து சூடாக்கும் அடுப்பு (குமுட்டி அடுப்பு), குமட்டு என்றால் திரண்டு எழுந்து வரும் வாந்தி போன்றவை. பொதுவாக கும், குமு என்பது பல தமிழ்ச்சொற்களோடு தொடர்புடையது. குமுகம் = சேர்ந்திருக்கும் கூட்டம். குமுகாயம் = சமுதாயம். கும் என்பது குமிழி முதலான மிகப்பல சொற்களோடு தொடர்புடையவை. சமூகம், சமுதாயம் அப்படி தொடர்பு கொள்ளாத வேற்றுமொழிச்சொற்கள்.--செல்வா (பேச்சு) 19:20, 8 சூலை 2012 (UTC)

தங்கள் பயனர் பக்கம் பார்த்து தங்களைப்பற்றிய விவரங்களை அறிந்தேன். கல்வித்துறையிலிருந்து தாங்கள் வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி. விக்கியில் தங்களின் சிறப்பான பங்களிப்புகளினால் சிறந்த பல ஆக்கங்கள் கிடைக்கும் என நினைக்கிறேன். ஏதேனும் ஐயங்கள் ஏற்படின் தயங்காமல் அனுகவும். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 09:07, 15 ஆகத்து 2012 (UTC)

நன்றி பார்வதிஸ்ரீ! கட்டாயம் அணுகுகிறேன்..--அரிஅரவேலன் (பேச்சு) 15:06, 15 ஆகத்து 2012 (UTC)

மரைக்காடா? மறைக்காடா?தொகு

வணக்கம் அரிஅரவேலன். பரலி. சு நெல்லையப்பர் கட்டுரையில் மறைக்காடு என்பதனை மரைக்காடு என மீண்டும் திருத்தம் செய்துள்ளீர்கள். மேலும் மான்கள் நிறைந்த இடம் என விளக்கமும் தந்திருந்தீர்கள். இதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? வேதம்= மறை, ஆரண்யம்= காடு. எனதான் கேள்விப்பட்டுள்ளேன். தாங்கள் மரைக்காடு= வேதாரண்யம் என்பது புதிதாக உள்ளது. ஐயத்தைத் தெளிபடுத்த வேண்டுகிறேன். நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 17:47, 24 செப்டெம்பர் 2012 (UTC)

வணக்கம் பார்வதி. விளக்கங்கள் இதோ:
தேவநேயப் பாவாணர் தன்னுடைய நூல்கள் சிலவற்றில் இச்செய்தியைப் பதிவு செய்திருக்கிறார். அவற்றுள் ஒன்றைச் சான்றாகத் தருகிறேன்.
"மரையென்னும் மான்வகை மிக்க காடு மரைக்காடு எனப்பட்டது. அப் பெயரை மறைக்காடு என மாற்றி, ஆரிய மறைகளான வேதங்கள் வழிபட்ட இடம் என்று கதை கட்டப்பட்டுள்ளது. வேதங்கள் பண்டை நாளில் எழுதப்படவில்லை. எழுதப் பட்ட பொத்தகங்களும் அஃறிணையாதலால், ஓதுவாரன்றித் தாமாக வழிபடா. சிவன் வேதத் தெய்வமு மல்லன்" (மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை, தேவநேயப் பாவாணர்)[1]
"வேதாரண்யம் எனப்படும் திருமரைக்காடு. மரை என்றால் சதுப்பு நிலங்களில் வாழும் ஒருவகை மான். Marshdeer என்று இது ஆங்கிலத்தில் வழங்கப்படும். காவிரியின் கயவாயை அடுத்திருக்கும் இக்காடுகளில் இம்மான்கள் மிகுந்திருந்ததால் அதனை மரைக்காடு என்றனர் நம் முன்னோர். ரகரத்துக்கும் றகரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் மரை என்பதை மறை என்று கருதி திருமறைக் காடாக்கி அதனை வேதாரண்யம் என மொழி பெயர்த்தனர் சங்கதக்காரர்கள். வேதங்கள் மரங்களாக நின்றதால் அப்பெயர் வந்தது என்ற கதையையும் கட்டிவிட்டனர்"[2] என்கிறார் குமரிமைந்தன். (குமரிமைந்தன், சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் - 13. மொழி)
'இதன் தமிழ் பெயர் மரைக் காடு என்பதாகும்' என்கிறது வேதாரண்யம் என்னும் தலைப்பிலான் தமிழ்விக்கிப்பீடியா கட்டுரை--அரிஅரவேலன் (பேச்சு) 12:57, 10 அக்டோபர் 2012 (UTC)

சான்றடைவுதொகு

பாராட்டுகள்தொகு

நீங்கள் தமிழறிஞர்கள் பற்றி எழுதி வருவது கண்டு மிக்க மகிழ்ச்சியும் பாராட்டுகளும்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:24, 4 திசம்பர் 2012 (UTC)

நன்றி சுப்பிரமணியன் --அரிஅரவேலன் (பேச்சு) 14:49, 16 திசம்பர் 2012 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
நீங்கள் எழுதிவரும் தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகளுக்காக உங்களுக்கு இது மிகவும் தாமதமாக வழங்கப்படுகிறது. தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 15:27, 4 திசம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

  விருப்பம்--தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:42, 7 திசம்பர் 2012 (UTC)   விருப்பம்--மணியன் (பேச்சு) 15:21, 16 திசம்பர் 2012 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், அரிஅரவேலன்!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 11:34, 13 பெப்ரவரி 2013 (UTC)

பதக்கம்தொகு

  சிறப்புப் பதக்கம்
அருமையான, அரிய பல கட்டுரைகளை எழுதி வரும் தங்களுக்கு எனது பாராட்டுகள் சோடாபாட்டில்உரையாடுக 12:52, 17 மார்ச் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

"  விருப்பம்-தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:40, 17 மார்ச் 2013 (UTC)

நன்றி நண்பரே!--அரிஅரவேலன் (பேச்சு) 13:42, 17 மார்ச் 2013 (UTC)

மாதம் 100 தொகுப்புகள் மைல்கல்தொகு

வணக்கம், அரிஅரவேலன்!

நீங்கள் கடந்த மாதம் 100 தொகுப்புகளுக்கு மேல் பங்களித்துள்ளதற்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து இவ்வாறு பங்களித்து தமிழ் விக்கிப்பீடியாவின் முனைப்பான பங்களிப்பாளர் எண்ணிக்கையைக் கூட்ட உதவுமாறு விக்கித்திட்டம் 100 சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அடுத்து 250 தொகுப்புகளைத் தாண்டும் போது மீண்டும் உங்கள் பேச்சுப் பக்கத்துக்கு வருவேன் :)

குறிப்பு: வெறும் தொகுப்பு / கட்டுரை எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு நாம் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை நோக்குவதில்லை. ஆயினும், முனைப்பான பங்களிப்பாளர்களை இனங்காண உள்ள முக்கிய வழிகளில் தொகுப்பு எண்ணிக்கையும் ஒன்று. எனவே, வழமை போலவே எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் பயன் கருதி மட்டும் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

--இரவி (பேச்சு) 06:47, 2 ஏப்ரல் 2013 (UTC) நன்றி நண்பரே!----அரிஅரவேலன் (பேச்சு) 08:51, 2 ஏப்ரல் 2013 (UTC)

பதக்கம்தொகு

  செயல்நயம் மிக்கவர் பதக்கம்
குறிப்பிட்ட அனைத்து பணிகளையும் செவ்வனே செய்துவரும் தங்களுக்கு இந்த செயல்நயம் மிக்கவர் பதக்கத்தை வழங்குவதில் பெருமையடைகிறேன். உங்கள் பணி தொடர வாழ்த்துகள் அரி...  சூர்யபிரகாஷ்  உரையாடுக 16:57, 4 ஏப்ரல் 2013 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

பதக்கம் நல்கி ஊக்குவித்தற்கு நன்றி சூரியப் பிரகாஷ் --அரிஅரவேலன் (பேச்சு) 17:00, 4 ஏப்ரல் 2013 (UTC)

இன்றைய நாளில்தொகு

அரிஅரவேலன், கிருஷ்ணா டாவின்சி ஏப்ரல் 3 இல் இறந்ததாக முதல்பக்கத்தில் தந்திருக்கிறீர்கள். அவர் இறந்தது ஏப்ரல் 3 ஆ அல்லது 4 ஆ. கட்டுரையில் 4 எனத் தரப்பட்டிருக்கிறது.--Kanags \உரையாடுக 22:17, 4 ஏப்ரல் 2013 (UTC)

கிருஷ்ணா டாவின்சி இறந்தது ஏப்ரல் 4 ஆம் நாள்தான். நான் பதிந்ததும் ஏப்ரல் 4இல்தான். அது எப்படி ஏப்ரல் 3இல் பதிவானது எனப் புரியவில்லை. --அரிஅரவேலன் (பேச்சு) 09:55, 5 ஏப்ரல் 2013 (UTC)

முதற்பக்க அறிமுக வேண்டல்தொகு

வணக்கம், அரிஅரவேலன். உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். இது தொடர்பாக தாங்கள் ஏற்கனவே உருவாக்கியுள்ள விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/அரிஅரவேலன் பக்கத்தைச் சற்று மாற்றி பயன்படுத்திக் கொள்ள ஒப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 18:25, 10 ஏப்ரல் 2013 (UTC)

அறிமுகம் செய்ய விழைந்தமைக்கு நன்றி! மாற்றி பயன்படுத்திக்கொள்ள ஒப்புக்கொள்கிறேன்.--அரிஅரவேலன் (பேச்சு) 18:33, 10 ஏப்ரல் 2013 (UTC)
நன்றிங்க. உங்கள் பங்களிப்புகள் பெருகப் பெருக அதற்கேற்ப இப்பக்கத்தில் தகவல் சேர்க்கலாம். பயனர்களை அறிமுகப்படுத்துவதுடன் அவர்களின் விக்கிப் பங்களிப்புகள் பற்றிய பரந்த அறிமுகத்தையும் தருவதே இம்முயற்சியின் நோக்கம். அடுத்த இரு வாரங்களுக்கு முதற்பக்கத்தில் உங்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்கிறோம். தொடர்ந்து சிறப்பாக பங்களிக்க வாழ்த்துகள். அன்புடன்...--இரவி (பேச்சு) 18:58, 10 ஏப்ரல் 2013 (UTC)
ஊக்குவிப்பிற்கு மிகவும் நன்றி--அரிஅரவேலன் (பேச்சு) 19:07, 10 ஏப்ரல் 2013 (UTC)

பாராட்டுகள்தொகு

 • தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டேன். தங்களைப் போன்றோர் விக்கியில் பங்களிப்பது சிறப்பானது. தங்களின் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகள். -- பார்வதிஸ்ரீ (பேச்சு) 02:46, 11 ஏப்ரல் 2013 (UTC)
பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !!--மணியன் (பேச்சு) 03:42, 11 ஏப்ரல் 2013 (UTC)
நன்றி நண்பர்களே!--அரிஅரவேலன் (பேச்சு) 04:23, 12 ஏப்ரல் 2013 (UTC)
 • தங்களின் முதற்பக்க அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி. தங்களின் விக்கிப் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துகள்.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 05:53, 12 ஏப்ரல் 2013 (UTC)
உங்களைப் பற்றி மேலும் அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி. வாழ்க்கைத் திறன் கல்விக்குரிய கலைத்திட்டம் பற்றிய உங்கள் செயற்திட்டமும் வெற்றிபெற வாழ்த்துக்கள். --Natkeeran (பேச்சு) 05:00, 13 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம் முதற்பக்க அறிமுகம் கண்டேன். வாழ்த்துக்கள் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 05:20, 13 ஏப்ரல் 2013 (UTC)
மிக்க நன்றி நண்பர்களே!--அரிஅரவேலன் (பேச்சு) 10:17, 13 ஏப்ரல் 2013 (UTC)
எனது வாழ்த்துக்களையும் இங்கு பதிவு செய்கிறேன். மேலும் பல நல்ல கட்டுரைகளை எழுதி விக்கிக்கு பெருமை சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். --இராஜ்குமார் (பேச்சு) 09:51, 20 ஏப்ரல் 2013 (UTC)
  விருப்பம் நன்றி நண்பரே!--அரிஅரவேலன் (பேச்சு) 10:52, 20 ஏப்ரல் 2013 (UTC)

சங்க இலக்கியங்கள் பலவற்றுக்கு உரை தந்த புலியூர்க்கேசிகனாருக்கு கட்டுரை தந்ததற்கு நன்றிகள். முதற்பக்கத்தில் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:22, 21 ஏப்ரல் 2013 (UTC) நன்றி--அரிஅரவேலன் (பேச்சு) 06:37, 30 ஏப்ரல் 2013 (UTC)


செங்கைப் பொதுவன் செப்பியவைதொகு

பேச்சு:புகழேந்திப் புலவர் (அம்மானைப் பாடல்கள்)தொகு

அன்புள்ள அரிஅரவேலன் தங்களின் விரிவாக்கம் என்னை வியக்கவைக்கிறது. தாங்கள் குறிப்பிட்டுள்ள நூல் என்னிடமும் உள்ளது. அதனைப் பயன்படுத்த வேண்டும் என்று என் மண்டையில் தோன்றவே இல்லை. தாங்கள் பயன்படுத்தி என்னை ஆற்றுப்படுத்தி அசத்தியுள்ளீர்கள். பாராட்டி மகிழ்கிறேன். அன்புள்ள அடியவன் --Sengai Podhuvan (பேச்சு) 01:21, 22 ஏப்ரல் 2013 (UTC)

பாராட்டிற்கு நன்றி ஐயா--அரிஅரவேலன் (பேச்சு) 06:28, 30 ஏப்ரல் 2013 (UTC)

2013 மே 10 ஆம் நாள் விடுத்த மின்மடல்தொகு

podhuvan sengai

மே 10 (7 நாட்களுக்கு முன்பு)

பெறுநர்: எனக்கு

தக்க இடங்களில் தக்க படிமங்களை இணைத்துள்ளீர்கள். உங்கள் தொண்டுக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.

தன்னம்பிக்கை இதழ் குறித்து எழுதியதற்கு நன்றிதொகு

வணக்கங்க, தன்னம்பிக்கை இதழ் குறித்து எழுதியதற்கு மிகவும் நன்றி. உடனே இல. செ. கந்தசாமி பற்றிய கட்டுரையைத் தொடங்கி விட்டேன். இவர் என் அப்பாவின் மானசீக வழிகாட்டி. பல சிறுவயது நினைவுகளைக் கிளறி விட்டது உங்கள் கட்டுரை. பார்க்க: பேச்சு:இல. செ. கந்தசாமி.--இரவி (பேச்சு) 20:55, 13 மே 2013 (UTC)

நன்றி இரவி. இல. செ. கந்தசாமி 1980களில் எண்ணற்றவர்களுக்கு வழிகாட்டியத் திகழ்ந்தவர். --அரிஅரவேலன் (பேச்சு) 02:07, 14 மே 2013 (UTC)

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்புதொகு

விக்கித் திட்டம் சைவத்தில் பங்கேற்க அழைப்பு

வணக்கம், அரிஅரவேலன்!

 
தமிழால் சைவமும், சைவத்தால் தமிழும் வளரட்டும்

தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது தமிழ் விக்கிப்பீடியாவில் சைவம் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் சைவம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து சைவத்தினையும் தமிழினையும் செம்மைப்படுத்த தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இந்த திட்டத்தை பின்வரும் வழிகளின் மூலமாக மேம்படுத்தலாம்.

 • உருவாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் என்ற பட்டியலின் கீழுள்ள கட்டுரைகளை உருவாக்கி உதவலாம். குறுங்கட்டுரையாக தொடங்கி, தக்க ஆதாரங்களைச் சேர்த்து உதவலாம். படங்களை இணைத்து கட்டுரைகளை மேம்படுத்தலாம்.

--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 08:09, 24 சூன் 2013 (UTC)

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவுதொகு

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:04, 24 சூன் 2013 (UTC)

கட்டுரை வேண்டுதல்தொகு

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)

வாய்ப்பிற்கு நன்றி! முயற்சி செய்கிறேன்.--அரிஅரவேலன் (பேச்சு) 07:35, 12 ஆகத்து 2013 (UTC)

சுப.வீ படம்தொகு

சுப. வீரபாண்டியன் அவர்களை நேரில் பார்த்த பொழுது நமது விக்கிக்காக படம் ஒன்றைக்கேட்டேன். எடுக்க இசைந்தார். அதனை பொதுவகத்தில் ஏற்றி, இங்கு இணைக்கட்டுமா? அல்லது இப்பொழுது உள்ள படமே போதுமா? --≈ உழவன் ( கூறுக ) 17:36, 12 ஆகத்து 2013 (UTC)

தடையின்றி புதியபடத்தை இணைக்கலாம். --அரிஅரவேலன் (பேச்சு) 05:07, 13 ஆகத்து 2013 (UTC)

பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்புதொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--இரவி (பேச்சு) 20:03, 18 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்...தொகு

வணக்கம்! தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்பை மகிழும்வகையில் ‘பாராட்டுச் சான்றிதழ்’ வழங்க திட்டமிட்டுள்ளோம். பத்தாண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் உள்ளது. இங்கு தங்களின் விவரங்களை இற்றைப்படுத்த வேண்டுகிறோம். மிக்க நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 11:08, 27 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டிதொகு

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)


முதற்பக்கக் கட்டுரை அறிவிப்பு திட்டம்தொகு

படிமம்:DHALAVAI-SUNDARAM-25.jpgஇன் படிம அனுமதியின் சான்றில் சிக்கல்தொகு

 

படிமம்:DHALAVAI-SUNDARAM-25.jpg படிமத்தைப் பதிவேற்றியமைக்கு நன்றி. நீங்கள் இதில் சரியான பதிப்புரிமை வார்ப்புரு இணைத்திருந்தாலும் இக்கோப்பின் ஆக்குனர் இதை இவ்வுரிமத்தின் கீழ் வெளியிட ஒப்புக்கொண்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

நீங்கள் இக்கோப்பின் ஆக்குனராக இருந்து, இதை முன்னரே பிற இடங்களில் போன்ற இணைய தளங்களில்) வெளியிட்டுருந்தால், தயவு செய்து:

 • இக்கோப்பு வெளியிடப்பட்ட அந்த இடத்தில் இது CC-BY-SA அல்லது அதனை ஒத்த உரிமத்தின்கீழோ பயன்படுத்தலாம் என்பதைக்குறிக்கவும்; அல்லது
 • இதன் பதிப்பிடத்தின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு: இதன் பதிப்புரிமை உங்களது என்றும் இதனை கட்டற்ற உரிமத்தில் வெளியிட அனுமதிப்பதையும் குறிப்பிட்டு மின்னஞ்சல் செய்யவும். மாதிரி மின்னஞ்சலை இங்கு காணலாம். இதை நீங்கள் செய்தால் {{OTRS pending}} என்னும் வார்ப்புருவை இப்படிம பக்கத்தில் இணைக்கவும்.

நீங்கள் இதனை உருவாக்கவில்லை என்றால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு படிகளில் ஒன்றை கோப்பின் உறிமையாளர் செய்யவோ அல்லது அவர் முன்னரே உங்களுக்கு மின்னஞ்சல் வழியாக அனுமதி கொடுத்திருந்தால், அந்த அனுமதி அடங்கிய மின்னஞ்சலை தயவு செய்து permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு அனுப்பவும்.

உயிரோடு இருப்பவர்களின் படங்கள் நியாயப்பயன்பாட்டு விதிகளுக்கு உட்படாது என்பதை நினைவில் கொள்க.

பயன்பாட்டு விதிகளின் கீழ் படிம அனுமதியின் சான்று சரியாக இல்லாதப்படிமங்கள் ஏழு நாட்களில் நீக்கப்படும் என்பதை அறிக. நன்றி. --AntonTalk 17:27, 25 நவம்பர் 2014 (UTC)

தளவாய் சுந்தரம் இப்படத்தை விக்கிப்பீடியாவில் பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளித்து எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை permissions-en@wikimedia.org என்னும் முகவரிக்கு அனுப்பி இருக்கிறேன். அடுத்து என்ன செய்யவேண்டும்.--அரிஅரவேலன் (பேச்சு) 02:02, 26 நவம்பர் 2014 (UTC)
{{OTRS pending}} என்னும் வார்ப்புருவை இப்படிம பக்கத்தில் இணைக்கவும்.--AntonTalk 02:23, 26 நவம்பர் 2014 (UTC)


விக்கித்திட்டம் 100, சனவரி 2015 அழைப்புதொகு

வணக்கம் அரிஅரவேலன்!
தமிழ் விக்கிப்பீடியாவில் சிறப்பாக பங்களித்தமைக்கும், பங்களிக்கின்றமைக்கும் எனது நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் ஒரு மாதம் (சனவரி 2015) 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களை உருவாக்கும் இலக்கைக் கொண்ட ஓர் அரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. வரும் சனவரி மாதம் 100 தொகுப்புக்கள் செய்யும் 100 பயனர்களுள் ஒருவராக பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன். இலக்கை அடைபவர்களுக்கு பதக்கங்களும், முதல் நாளில் இலக்கை அடைபவர்களுக்கு சிறப்புப் பதக்கங்களும் வழங்கப்படும். :) :) . மேலதிக விபரங்களுக்கு திட்டப்பக்கம் வருக. நன்றி.

--ஆதவன் 03:59, 30 திசம்பர் 2014 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:27, 8 சூலை 2015 (UTC)

உதவி வேண்டல்: வாதிதொகு

@அரிஅரவேலன்:

 1. புதுவை சிவம் கட்டுரையில் அரசியல்வாணர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளீர்கள். வாணர் / வாணன் என்பதன் பொருளையும் பயன்பாட்டு முறைமைகளையும் அறிய விழைகின்றேன். வாதி / வாதம் என்பதற்குச் சரியான மாற்று வாணர்?
 2. பல விக்கி வார்ப்புருக்களில் பயன்படும் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம் என்ற தொடருக்கு மேலான மாற்று என்னவென்று அறிய உதவுங்கள் (வளர்ச்சியில் / வளர்ச்சிக்குப் பங்களிக்கலாம் / பங்கேற்கலாம்...) !!?
 3. தங்களின் தொண்டு விக்சனரிக்குப் பெருமளவு தேவை என்றெண்ணுகின்றேன். என்போன்றோர் நற்றமிழறிய உதவுங்கள் ! நன்றி ! - ʋɐɾɯnபேச்சு 14:39, 15 திசம்பர் 2015 (UTC)
வாது > வாதம் > வாதி என்பவை தமிழ்ச்சொல்கள் அல்ல எனக்கருதப்படுகிறது. எனவே அரசியல்வாதி என்பதற்கு மாற்றாக "அரசியல்வாணர்" என்னும் சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன். தமிழால், தமிழில், தமிழுக்காக வாழ்பவர் தமிழ்வாணன் என்றால் அரசியலால், அரசியலில் வாழ்பவர் அரசியல்வாணர் ஆகலாம் அல்லவா? --அரிஅரவேலன் (பேச்சு) 04:55, 9 சனவரி 2016 (UTC)
நல்லதொரு விளக்கம். நன்றி அரி அரவேலன். --மதனாகரன் (பேச்சு) 04:59, 9 சனவரி 2016 (UTC)
@Sengai Podhuvan, அரிஅரவேலன், மற்றும் மதனாஹரன்: நன்றி ! இவ்வுரையாடலைக் காண்க! வாதோ என்பது வடமொழிச் சொல்லோ என்ற என் ஐயத்தின் வெளிப்பாடே இவ்வினா. இந்த ஐயம் நீங்கினும் வேரா இலையா (தமிழ் - வடமொழி) என்ற முடிவிலாக் குழப்பத்தால் த(ட)ங்கி நிற்கிறேன். எனினும் வாணன் என்ற சொல்லைப்பற்றி மேலும் அறிய விழைகின்றேன். வாள் + நன் என்பதா இல்லை வாண் + அன் என்பதா? பிந்தையது எனில் வாண் என்பது எதைக்குறிக்கின்றது? - ʋɐɾɯnபேச்சு 07:15, 9 சனவரி 2016 (UTC)
வாணன் என்பது ஒரு மரூஉப் புணர்ச்சி. வாழ் + ந் + அன் = வாணன் (இணைப்பு). ழகரமெய்யின் முன் நகரம் வந்தால் இயல்பு புணர்ச்சியாகவே அமையவேண்டும். ஆயினும், வாணாள் (வாழ்நாள்), வாணன் போன்ற சில மரூஉச் சொற்களில் திரிபு நிகழ்வதுண்டு. --மதனாகரன் (பேச்சு) 13:12, 9 சனவரி 2016 (UTC)

உதவி...தொகு

வணக்கம்! அர்த்தமுள்ள இந்து மதம் (நூல்) எனும் கட்டுரையில் தங்களின் உதவி தேவைப்படுகிறது; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:32, 1 சனவரி 2016 (UTC)

முயற்சிசெய்கிறேன்--அரிஅரவேலன் (பேச்சு) 04:50, 9 சனவரி 2016 (UTC)

குறிப்பிடத்தக்கமை, நூல்கள்தொகு

கண்ணதாசன் கவிதைகள் (நூல்), குட்டிக்கதைகள் (நூல்) ஆகிய கட்டுரைகள் நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமைக்கு ஏற்ப எழுதப்படவில்லை. வழிகாட்டலின்படி, புத்தகம் தன்னகத்தே அல்லாமல், சுயாதீனமான பிரசுரிக்கப்பட்டதும் சாதாரணமற்றதுமான இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூலகங்களில் கூறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்விரு கட்டுரைகளும் "தன்னகத்தே" மடடும்தான் உசாத்துணையைக் கொண்டுள்ளன. எனவே கட்டுரைகளை முறையாக உசாத்துணையைக் கொண்டு எழுதுவது நன்று. --AntanO 20:36, 1 சனவரி 2016 (UTC)

பின்னூட்டத்திற்கு நன்றி அன்டன். நூல்களுக்கான குறிப்பிடத்தக்கமையின் 5ஆவது தகுதியாக, "நூலின் ஆசிரியர் மிகவும் வரலாற்றுச் சிறப்பு பெற்றவராக இருப்பின் அவருடைய எந்தவொரு எழுத்துப்படைப்பும் குறிப்பிடத்தகுந்ததெனக் கருதலாம். நூலின் ஆசிரியர் விக்கிபீடியாவின் தரத்துக்கேற்ப குறிப்பிடத்தகுந்தவர் என எண்ணாமல், நூலின் ஆசிரியர் பொதுவில் மிகச் சிறப்பு பெற்றவர் எனவே அவருடைய வாழ்க்கையும் எழுத்துப்படைப்புகளும் பரவலாக பயிலப்படலாம் என்ற வகையில் கருத்தில் கொள்ளலாம்" எனக்கூறுகிறது. கவிஞர் கண்ணதாசன் தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் திகழ்ந்தவர். அதனால் தமிழிலக்கிய வரலாற்றில் சிறப்பான இடத்தைப்பெற்றவர். எனவே இத்தகுதியின் கீழ் இவ்விருபதிவுகளும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன எனக் கருதுகிறேன். --அரிஅரவேலன் (பேச்சு) 04:49, 9 சனவரி 2016 (UTC)
ஏற்கெனவே நூல்கள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், புத்தகம் தன்னகத்தே உசாத்துணை கொண்டிருத்தல்' ஆகிய கருத்துக்களை தெரிவிக்க இக்குறிப்பை இட்டுள்ளேன். இங்கு இடப்பட்டுள்ள குறப்புக்களைக் கவனியுங்கள். --AntanO 08:54, 2 பெப்ரவரி 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள்தொகு

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1639 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   பாலாஜீ,   மாதவன் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். MediaWiki message delivery (பேச்சு) 16:13, 20 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016 பங்களிப்பாளர் பதக்கம்தொகு

 
விக்கிக்கோப்பை 2016 இல் பங்கு பற்றியதற்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
ஒருங்கிணைப்பாளர்கள். 20 சூலை 2016

MediaWiki message delivery (பேச்சு) 17:19, 20 சூலை 2016 (UTC)

விக்கிக்கோப்பை 2016தொகு

விக்கிக்கோப்பை முடிவுகளில் பிழை இருப்பதால், அதனை மீளவும் பரிசீலித்து முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும். நன்றி. --MediaWiki message delivery (பேச்சு) 00:46, 23 சூலை 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

 • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
 • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
 • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

விக்கிக்கோப்பை 2016 முடிவுகள் - திருத்தம்தொகு

விக்கிக்கோப்பையில் வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், இருக்கும் கட்டுரைகளை விரிவாக்கவும் நடத்தப்பட்ட போட்டியில் 49 பேர் போட்டியிட தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். அதில் 21 பேர் பங்குபற்றினர். இப்போட்டியின் மூலம் 1463 கட்டுரைகள் புதிதாக உருவாக்கப்பட்டதோடு, 80 கட்டுரைகள் விரிவாக்கப்பட்டன.

3305 புள்ளிகள் பெற்று விக்கிக்கோப்பை 2016 வாகையாளராக   எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (453 புதிய கட்டுரைகள்) திகழ்கிறார். 2810 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை   கி.மூர்த்தி (324 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். மூன்றாம் இடத்தை 1625 புள்ளிகள் பெற்ற   மணியன் (169 புதிய கட்டுரைகள்) பெறுகிறார். இவர்களை அடுத்து புள்ளிகளைப் பெற்ற   மாதவன்,   உலோ.செந்தமிழ்க்கோதை ஆகியோர் முதல் 5 இடத்திற்குள் இடம் பெறுகின்றனர்.

மேலதிக விபரங்களை இங்கே காணலாம். முன்னைய அறிவிப்பில் தவறுதலாக புள்ளிகள் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்மைக்கு வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். --MediaWiki message delivery (பேச்சு) 07:04, 31 சூலை 2016 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்புதொகு

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 07:54, 7 மார்ச் 2017 (UTC)

படிமம்தொகு

நீங்கள் தரவேற்றிய படிமம்:Abdul Rahman.jpg என்ற படிமத்துக்கான முறையான அனுமதி, மூலம் போன்ற விபரங்களைப் படிமப் பக்கங்களில் தாருங்கள்.--Kanags \உரையாடுக 08:04, 2 சூன் 2017 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்புதொகு

அன்புள்ள அரிஅரவேலன்,

நலமா?

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவுக்குத் தக்க பங்களிப்பு அளிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு சரியான வாய்ப்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ் விக்கிப்பீடியாவில் மீண்டும் முனைப்பாக பங்களிக்க விரும்புவீர்கள் எனில், இது ஒரு நல்ல வாய்ப்பு.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி.--இரவி (பேச்சு) 16:08, 24 மார்ச் 2018 (UTC)

அன்புள்ள இரவி,
நலமே விழைகிறேன்! தங்களின் நலத்தை அறிய அவா!
தங்களின் அழைப்பிற்கு நன்றி!
பல மணிநேரங்களையும் உழைப்பையும் செலவிட்டு பதிவேற்றப்படும் கட்டுரைகள், வெளியாரின் மேற்கோள் இல்லை என்பதனால் - அங்ஙனம் செய்வது பொருத்தமன்று என உடன்பதிவர்கள் சுட்டிக்காட்டிய பின்னரும் - நீக்கப்படுவதாலும் இங்கு பலரும் உழைத்து எழுதும் கட்டுரைகளை சிலர் அப்படியே படியெடுத்து நாளிதழ்களில் தமது பெயரில் வெளியிட்டுக்கொள்வதை தடுக்க முடியாததாலும் இங்கே பங்களிப்பதை நிறுத்தியிருக்கிறேன்.
அன்புடன் --அரிஅரவேலன் (பேச்சு) 06:49, 29 மார்ச் 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global surveyதொகு

WMF Surveys, 18:18, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia surveyதொகு

WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia surveyதொகு

WMF Surveys, 00:26, 20 ஏப்ரல் 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்புதொகு

வணக்கம்.

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:19, 3 நவம்பர் 2018 (UTC)

படிமம்:PTKS 0.jpgதொகு

படிமம்:PTKS 0.jpg என்ற படத்தை தாங்கள் பதிவேற்றியுள்ளீர்கள். அதற்கு 'படைப்பாக்கப் பொதுமங்கள் Attribution-ShareAlike 3.0 License.' என்ற உரிமையை குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படிமத்தில் மூலம் குறிப்பிடப்படவில்லை. இதில் குறிப்பிட்டுள்ள உரிமத்தை நிறுவ தங்களிடம் சான்று உள்ளதா? இருந்தால் குறிப்பிடவும். இல்லையென்றால் படம் காப்புரிமை மீறலினால் நீக்கப்படலமாம். அல்லது நியாயப் பயன்பாடு என்று குறிக்கலாம். நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:14, 9 சூலை 2019 (UTC)

பொ.திருகூடசுந்தரம் எழுதிய "குழந்தை எப்படிப் பிறக்கிறது?" என்னும் நூலின் பின்னட்டையில் அவரது உருவப்படம் இருக்கிறது. அதனை வருடி இங்கே பதிவேற்றியிருக்கிறேன். --அரிஅரவேலன் (பேச்சு) 04:39, 9 சூலை 2019 (UTC)
@அரிஅரவேலன்: தங்கள் பதிலுக்கு நன்றி. புத்தகத்தின் பதிப்பு, பதிப்பகம், ஆண்டு முதலிய விவரங்களைக் படிமத்தில் குறிப்பிடுக. மேலும் அப்படம் 'படைப்பாக்கப் பொதுமங்கள் Attribution-ShareAlike 3.0 License.' என்ற உரிமத்தில் எப்படி வருகிறது என்பதை நிறுவுக. நன்றி -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:13, 9 சூலை 2019 (UTC)

File:PTKS 0.jpg listed for discussionதொகு

A file that you uploaded or altered, File:PTKS 0.jpg, has been listed at Wikipedia:Files for discussion. Please see the discussion to see why it has been listed (you may have to search for the title of the image to find its entry). Feel free to add your opinion on the matter below the nomination. Thank you. பாலாஜி (பேசலாம் வாங்க!) 04:16, 9 சூலை 2019 (UTC)

Community Insights Surveyதொகு

RMaung (WMF) 15:54, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 19:34, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Surveyதொகு

RMaung (WMF) 17:29, 4 அக்டோபர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்புதொகு

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

படிமம்:Vallikannan-198x300.jpgதொகு

படிமம்:Vallikannan-198x300.jpg இப்படத்தின் மூலம் குறிப்பிடப்படவில்லை. இதில் உள்ள உரிமம் சரிதானா? -- பாலாஜி (பேசலாம் வாங்க!) 05:36, 15 பெப்ரவரி 2020 (UTC)

ந. மு. வேங்கடசாமி நாட்டார்தொகு

வணக்கம், இவர் பிறந்த தேதியை உறுதிப்படுத்த முடியுமா? ஏப்ரல் 12 அல்லது ஏப்ரல் 2?--Kanags \உரையாடுக 05:10, 11 ஏப்ரல் 2020 (UTC) {{subst:fdw-puf|1=மயிலை சிவமுத்து.jpg}} பாலாஜி (பேசலாம் வாங்க!) 19:33, 7 சூன் 2020 (UTC)

December 2020தொகு

  வணக்கம். நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா வழிகாட்டலின்படி அமையாததால் நீக்கப்படலாம்/நீக்கப்பட்டது. தயவுசெய்து மணல் தொட்டியைப் பயன்படுத்திப் பயிற்சி பெறுங்கள். காண்க: முதல் கட்டுரை. வெற்றுப் பக்கம் AntanO (பேச்சு) 02:08, 4 திசம்பர் 2020 (UTC)

வணக்கம், அரிஅரவேலன்!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. ஒரு கட்டுரையானது கலைக்களஞ்சியத்திற்கு (குறிப்பிடத்தக்கது, பதிப்புரிமை மீறல் அற்றது) உரியதாக உருவாக்கப்பட்டாலும் நீங்கள் கட்டாயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய சில அடிப்படைகளை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அவை பின்வருமாறு:


மேற்குறிப்பிட்டவை விடுபட்டிருந்தால், அதற்காக வார்ப்புரு இணைக்கப்படலாம். ஆகவே அவற்றை சரி செய்வது முக்கியம். அவ்வாறு சரி செய்தால், குறிப்பிட்ட வார்ப்புருவை நீங்கள் நீக்கிவிடலாம். குறிப்பு: குறிப்பிட்ட சிக்கலைச் சரி செய்யாமல் நீக்க வேண்டாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 02:08, 4 திசம்பர் 2020 (UTC)

நீங்கள் உருவாக்கிய பகுப்புகள் குழப்பமாக, தாய்ப்பகுப்பின்றி உள்ளன. சில நீக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே உருவாக்கியவற்றை முறையாக திருத்த வேண்டும். மேலும், பகுப்புகளை உருவாக்கும்போது இதனைக்கருத்தில் கொள்ளவும். en:Wikipedia:Categorization dos and don'ts --AntanO (பேச்சு) 02:22, 4 திசம்பர் 2020 (UTC)