போட்டி மிகக் கடுமையாக இருந்தது. போட்டிக்காக ஆயிரக்கணக்கில் அருமையான கோப்புகள் பதிவேற்றப்பட்டன. இயன்ற வரை தகுதி வாய்ந்த சிறந்த ஆக்கங்களுக்கு பரிசளிக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பரிசுகளின் எண்ணிக்கையை கூட்டியுள்ளோம். இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற, ஆனால் பரிசு வெல்லாத ஆக்கங்கள் மதிப்பெண் அடிப்படையில் பரிசு வென்ற ஆக்கங்களுக்கு மிக மிக நெருக்கமாக அமைந்திருந்தன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு கோப்புகளை இங்கு காணலாம்
தொடர் பங்களிப்புக்காக நான்கு போட்டியாளர்கள் தலா 75$ பரிசினை வெல்கின்றனர். அவர்களது ஆக்கங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. (ஆங்கில அகரவரிசைப்படி நால்வரின் பெயர்கள் தரப்பட்டுள்ளன)