வலைவாசல்:ஊடகப் போட்டி/அ.கே.கே

To view the FAQs in English, click here
முகப்பு   அறிமுகம்   விதிகள்   பங்கேற்க   முடிவுகள்   அ.கே.கே  

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

கோப்புக்கள் தொகு

  • பதிவேற்றக் கூடிய கோப்பு முறைகள் எவை?
காமன்சில் பயன்படுத்தப்படும் கோப்பு முறைகள்
  • mp3, mpeg, avi போன்ற கோப்பு முறைகளைப் பதிவேற்ற முடியாதா?
முடியாது. இவை திறமூல கோப்பு முறைகளல்ல. காமன்ஸ் திறமூல கோப்பு முறைகளையே ஏற்கிறது. ஆனால் இவற்றை தேவையான கோப்பு முறைகளுக்கு எளிதாக மாற்ற முடியும்.


ஒலிக்கோப்புகளுக்கு - .ogg (Ogg vorbis) மற்றும் .midi கோப்பு முறைகள் தேவை. நேரடியாக இவற்றை உருவாக்க இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. .mp3 போன்ற கோப்புகளை .ogg கோப்புகளாக மாற்ற Audacity என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தலாம். ஒலிக்கோப்புகள் பற்றி மேலும் உதவிக்கு இப்பக்கத்தைக் காணவும்
நிகழ்பட / காணொளி கோப்புகளுக்கு - .ogv (Ogg theora) கோப்பு முறைகள் தேவை. .avi, mpeg போன்ற கோப்புகளை .ogv கோப்புகளாக மாற்ற பல இலவச மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றைப் பயன்படுத்துவது பற்றிய உதவிக் குறிப்புகளுக்கு இப்பக்கத்தைக் காணவும்
ஒலி நிகழ்படம்/காணொளி
தேவையான கோப்பு முறை .ogg (Ogg vorbis) மற்றும் .midi .ogv (Ogg theora)
மாற்றும் இலவச மென்பொருள் Audacity ffmpeg2theora, Firefogg, Miro Video Converter
உதவிப் பக்கங்கள் ஒலிக்கோப்பு உதவி நிகழ்படக் கோப்பு உதவி
  • கோப்பினைப் பதிவேற்றிவிட்டேன். ஆனால் அது சரியாகப் பதிவேறியதா என்று ஐயமாக உள்ளது. என்ன செய்வது?
கோப்பை சரியாகப் பதிவேற்றியுள்ளீர்களா என்று ஐயமிருப்பின், உங்கள் பயனர் கணக்கின் பெயர் அல்லது பதிவேற்றிய கோப்பின் பெயரை tamil.wikipedia [at] gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்து விடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் அதனை ஆராய்ந்து உங்களுக்கு உதவுவர்.

சொந்த ஆக்கம்/பதிப்புரிமை தொகு

  • சொந்த ஆக்கம் என்றால் என்ன?
ஒருவர் தானாக உருவாக்கிய கோப்பே சொந்த ஆக்கம் எனப்படும் - ஒருவர் தானே எடுத்த புகைப்படம், நிகழ்ப்படம், பதிவுசெய்த ஒலிக்கோப்பு, உருவாக்கிய அசைப்படம் ஆகியவை சொந்த ஆக்கங்களாகும். ஏற்கனவே அச்சில் வெளியானவற்றை ஒளிநகல் எடுத்து உருவாக்கியவை, பிறரது கோப்புகளை ஃபோட்டோஷாப் போன்ற மென்பொருட்கள் கொண்டு மாற்றி உருவாக்கியவை சொந்த ஆக்கங்கள் ஆகா.
  • ஒருவரது சொந்த ஆக்கம், ஆனால் ஏற்கனவே வேறொரு ஊடகத்தில் பிரசுரமானது. அதை அவரே இப்போட்டிக்கு மீண்டும் சமர்ப்பிக்க முடியுமா? இது பதிப்புரிமை மீறலாகுமா?
ஊடகப் பிரசுரம் இருவகைப்படும்:
1) ஊடகத்தில் பிரசுரம் மட்டும் நடந்திருக்கும். குறிப்பிட்ட கோப்புக்கான உரிமையை கோப்புக்கு சொந்தமானவர் வைத்திருப்பார். அவ்வாறிருப்பின் அந்தக் கோப்பைப் பதிவேற்றலாம். அதாவது கோப்புக்கான உரிமையை கோப்பை ஆக்கியவர் விற்றிருக்காத பட்சத்தில் முன்பு பிரசுரமானதாக இருந்தாலும், அவர் அதனைப் பதிவேற்றலாம்.
2) படத்துக்கான உரிமைகளை ஊடகம் மொத்தமாக வாங்கிவிட்டு பின்னர் பிரசுரிக்கும். அப்படியான நிலையில், பிரசுரத்துக்கு விற்றபின்னர் அது அவருடைய “சொந்த ஆக்கம்” கிடையாது. அவற்றைப் பதிவேற்ற இயலாது.
  • பதிப்புரிமை அற்ற பழைய படங்களின் பிரதிகளை போட்டிக்குப் பதிவேற்றலாமா?
கூடாது. போட்டி முழுக்க சொந்த ஆக்கங்களுக்கு மட்டுமே.
  • ஏற்கனவே விக்கிப்பீடியா பொதுவில் பதிவேற்றிய ஆக்கங்களை மீளப் போட்டிக்குச் சமர்ப்பிக்கலாமா?
ஏற்கனவே விக்கிப்பீடியா பொதுவிலோ அல்லது யாதாயினும் விக்கிப்பீடியா தளத்திலோ பதிவேற்றிய ஊடகத்தை போட்டிக்காக மீளச் சமர்ப்பிக்க முடியாது. போட்டித்தொடக்க நாளான நவம்பர் 15 இலிருந்து போட்டிக்காக சமர்ப்பிக்கும் ஆக்கமே ஏற்றுக் கொள்ளப்படும்.

பரிசுகள் தொகு

  • ஒருவர் ஆகக் கூடியது எத்தனை பரிசுகளைப் பெறலாம்?
ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
  • ஒருவர் எத்தனை படங்களைப் பதிவேற்றலாம்? அவை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?
ஒருவர் எத்தனை படங்களை வேண்டுமென்றாலும் பதிவேற்றலாம்; உச்ச வரம்பு கிடையாது. ஒருவரது ஒரே போலுள்ள அல்லது ஒரே தொடரில் அமையும் கோப்புகள் (எ.கா, ஒருவர் 100 தமிழ் உச்சரிப்பு ஒலிப்பு கோப்புகளைப் பதிவேற்றினால் அவற்றுக்குப் பொதுவான ஒரே மதிப்பீடு, அல்லது ஒரே இடத்தை ஒருவர் பலமுறை படமெடுத்திருந்தால் அவை ஒரே முறை மதிப்பிடப்படும்) பொதுவில் மதிப்பீடு செய்யப்படும். மற்றவை அனைத்தும் தனித்தனியாக ஐந்து நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும்.
  • நடுவர்கள் யார்?
போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான விக்கியர்கள் - சோடாபாட்டில், நற்கீரன், கலை, சஞ்சீவி சிவகுமார், ஸ்ரீகாந்த் ஆகியோரே நடுவர்கள். அவர்களே பரிசு பெறும் ஆக்கங்களைத் தெர்ந்தெடுப்பர்.
  • நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாமா? அது ஆதாய முரண் ஆகாதா?
நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். ஆனால் அவர்களது கோப்புகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கோப்புகளும் பரிசுகளுக்குத் தகுதியற்றவை. எனவே நடுவர்கள் ஒப்புச்சப்பாணிகளாக மட்டுமே பங்கேற்கலாம்.

தொடர்புகொள்ள தொகு

  • ஏதாவது சந்தேகங்கள் ஏற்படின் யாரிடம் கேட்பது?
tamil.wikipedia [at] gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதினால் உதவி கிடைக்கும்.